1
வானத்தில்பகலினிலேகதிரின்ஆட்சி;
வட்டநிலாபவனிவரல்இரவின்காட்சி;
ஏனத்தில்கொட்டிவைத்தமணிகள்போலே;
இருளினிலேகண்சிமிட்டும்விண்மீன்மேலே!
விரித்திட்டநீலநிறப்பட்டுப்போலே,
விழிஎங்கும்நீளுகிறவானம்மேலே!
சிரித்திட்டசிறுகுழந்தைபோலேநன்றே,
செய்தவன்யார்? அறிவியலைவென்றோம்என்றோம்!
2
கானத்தில்நமைமயக்கும்புள்ளின்கூட்டம்;
கண்கவர்ந்துமணம்வீசும்மலர்கள்தோட்டம்;
கானகத்தேதினம்நடக்கும்விலங்கின்ஆட்டம்;
காண்போரைத்திருப்பிடுமா? வேறுநாட்டம்!
விண்ணெட்டும்மலைமுகட்டில்பனிப்பாறைகள்!
வியப்பூட்டும்அதில்வழியும்நீர்த்தாரைகள்!
கண்ணெட்டும்வரைவிரிந்தமரங்கள்என்றே,
காட்டியவன்யார்? உலகைவென்றோம்என்றோம்!
3
வானத்துமுகிற்கூட்டம்ஒன்றாய்ச்சேர்ந்து,
வாரியதால்தண்ணீரைமேகம்என்றும்,
முகிலூடுஉருவாகும்ஒளியும்பாய்ந்து,
மண்நோக்கிவருவதனால்மின்னல்என்றும்,
ஒளிதொடரக்கடிதுவரும்ஒலிகள்தோய்ந்து,
உறுமுவதால்கிலியூட்டும்இடியாமென்றும்,
ஒலிதொடரப்பொழிவதனால்மழையாமென்றும்,
வகுத்தவன்யார்!அறிவியலைவென்றோம்என்றோம்!
4
பெய்தமழைநீர்கூடிஓடையானால்,
ஓடையெலாம்ஒன்றாகிநதிகள்ஆகும்;
நதிகளெலாம்பலவாறாய்மடுவிற்பாய்ந்தால்,
மடுவதுவேபெரிதாகிக்கடலாய்மாறும்;
விண்ணின்றுபொழிவதுதான்மழையாம்என்றால்,
வியப்பூட்டும்இவைநிகழச்செய்தான்யாராம்?
கண்கொண்டுகளிக்கின்றோம்கணிக்கின்றோமா?
கற்பனையால்,இவ்வுலகைவென்றோம்என்றோம்!
5
தாகத்தைத்தணித்தற்குநீரைவைத்தான்;
தக்கபடிபயனூட்டநெருப்பைவைத்தான்;
தேகத்தின்மூச்சுக்குக்காற்றைவைத்தான்;
திகைக்காமல்நாமிருக்கநிலத்தைவைத்தான்;
வேகத்தால்வலம்வரவேவானைவைத்தான்;
விருப்பத்தால்இவையெல்லாம்இணைத்துவைத்தான்;
விவேகத்தால்இவையனைத்தும்ஆள்கின்றோம்தான்!
விவேகத்தைவைத்தவன்யார்?வென்றோம்என்றோம்!
6
இரவுக்குஒளிகூட்டநிலவைவைத்தான்;
இதுபோலேபகலுக்கும்கதிரைவைத்தான்;
எல்லையிலாக்கடலுக்கும்அலையைவைத்தான்;
இமையெட்டும்வரைநீலவானம்வைத்தான்;
விண்ணெட்டும்சிகரமுடைமலையைவைத்தான்;
விழுவோமோஎனமிரட்டும்மடுவைவைத்தான்;
எண்ணில்லாக்கணக்குடையஎல்லாம்வைத்தான்;
இமைமூடி,இவ்வுலகைவென்றோம்என்றோம்!
7
பருவநிலைமாறியதால்வளிவந்ததா?
பருவநிலைமாறியதால்முகில்சேர்ந்ததா?
பருவநிலைமாறியதால்மழைஓய்ந்ததா?
பருவநிலைமாறியதால்வெயில்காய்ந்ததா?
பருவநிலைமாறியதால்வெயில்காய்ந்ததா?
பருவநிலைமாறியதால்பனிபெய்ததா?
பருவநிலைமாறியதால்மலைதேய்ந்ததா?
பருவநிலைமாறியதுஇயற்கைஎன்றால்,
இயற்கையினைவகுத்தவன்யார்? எண்ணிட்டோமா?
8
வானத்தில்ஊர்தியதுபறந்துசெல்லல்,
வளிதன்னைக்கீறியதில்கணைகள்செல்லல்,
வகைவகையாய்எந்திரங்கள்பணிகள்செய்தல்,
வரம்பின்றிநாம்நுகரும்பயன்கள்எல்லாம்,
வகுப்பானின்துணையின்றிநடவாதென்றே,
வழுத்துவதேவிஞ்ஞானக்கோட்பாடென்னும்,
வழிநின்றுஉலகுதனைஇயக்கம்தன்னில்
வைப்பவன்தான்இறைவனெனவகுத்திட்டாரே!
9
எல்லையிலாவானத்தில்விண்மீன்கூட்டம்;
எழிலார்ந்தமின்மினியாய்கண்ணைச்சிமிட்டும்;
சொல்லாமல்இரவினிலேநிலவுமண்ணில்,
சொர்க்கத்தைஒளியாகக்கொண்டுசேர்க்கும்;
பொல்லாதசூரியனும்கீழ்வானத்தில்,
பொறுப்பாகக்காலையிலேமீண்டுபூக்கும்;
நில்லாமல்பூமியதுநித்தநித்தம்,
நெடியதொருபம்பரமாய்நின்றுசுற்றும்;
10
விண்மீனைமினுமினுக்கத்தொட்டதாரோ?
ஒண்ணிலவைஒளிவீசச்செய்ததாரோ?
மண்மீதுசூரியனைவிட்டதாரோ?
மந்திரத்தால்பூசூழலஎய்ததாரோ?
எல்லாமேஇயங்குகிறஎந்திரங்கள்;
என்னிலவைஇயங்குவதுகாரியங்கள்;
வல்லானேஇயக்குகிறகாரணம்ஆம்,
விஞ்ஞானம்விளக்குவதும்அதைத்தானாமே!
11
உலகமெலாம்அனைத்துயிரும்நிறையவைத்து,
உயிரனைத்தும்உருவத்தால்பொலியவைத்து,
உருவத்தைநமக்களித்தஇறைவன்நூறு,
உருவத்தில்திகழ்வதிலேஎன்னதவறு?
அரூபத்தில்சொரூபத்தைவைத்துஎங்கும்,
ஆண்டவனாய்,ஆள்பவனாய்உள்ளான், என்றும்;
உருவமிலான், உருவமுளான்என்னும்உண்மை,
உள்ளத்தில்தெளிவுவரின்உதயமாகும்!
12

No comments:
Post a Comment