Pages

Friday, March 23, 2012

25 Sudhandhiram-highlight


சுதந்திரம்!!!







                 


                                                                               
எங்கள் தலைவர்களே!

தங்கம் நிகர் தாய்நாட்டு விடுதலைக்குப் பாடுபட்டு ,உங்கள் அங்க
மிழந்து ,ஆவியிழந்து ,அத்தனையும் இழந்து இன்று ,அமரர்களாகி
விட்ட ,எங்கள் தியாகத்தளைவர்களே ! வணங்குகிறோம் ! ஒர்ஆண்
டின் இந்த ஒரு நாளிலாவது உங்களை ,நினைத்துக் கொள்கிறோம் !
ஏன் என்றால் இன்று நீங்கள் இல்லை ! இருந்திருந்தால்,
என்றோமறந்திருப்போம் !ஆம் இதற்காகவா?பெற்றோம் என்று
நீங்கள்ஏங்க,அது கண்டு பொறாத நாங்கள் உங்களை மறக்கத்தான்
எங்களுக்கு சுதந்திரம்இருக்கிறதே !கட்டுப்பாடற்ற நிலையில் ;
யாரும் தட்டிக் கேட்க முடியாத நிலையில் ! சுதந்திரத்திலே என்ன
கட்டுப்பாடு ? என்று நீங்கள் கேட்கமாட்டீர்கள் ! ஆனால் இவர்கள்
கேட்கிறார்கள் !என்ன ?சுதந்திரத்திலே ஒரு கட்டுப்பாடா ?என்று !
ஆம் !எங்கள் தலைவர்களே ! எதையும் செய்வதே சுதந்திரம் என்பதற்
காக எதையெல்லாமோ செய்கிறார்கள் ! சாலையில் நடக்க ,சுதந்
திரம் உண்டு என்பதற்காக , அடுத்தவர் நடக்கத் தடையாக அடைத்
துக்கொண்டே நடப்பேன் என்கிறார்கள் ! பணம் சேர்ப்பது சுதந்திர
மாம் ! அதனால் பகற்கொள்ளை யடித்து ,பிறர் தம் உடமைகளைப்
பறிப்பேன் என்கிறார்கள் ! எம்மதமும் சம்மதமே என்னும் மத சுதந்
திரம் உண்டு ,என்பதால் ,மற்ற மதத்தானைக் கேலி செய்து தூற்றி,
என் மதத்தை ஏற்றுக்கொள் என்று கட்டாயப் படுத்துகிறார்கள் ! மத
சார்பற்ற நாடு என்பதற்கு என்ன பொருள் என்று எங்களுக்கு விளக்
குவீர்களா எங்கள் தலைவர்களே ! நள்ளிரவிலே ,தன்னந்தனிமை
யில் ,ஒரு பெண் அச்சமில்லாமல் நடக்கும் நிலை என்று வருகின்
றதோ , அன்றுதான் உண்மையான சுதந்திரம் கிடைத்தது ,என்பேன்
என்றார் மகாத்மா ! ஆனால் எங்கள் தலைவர்களே ! இரவில் அல்ல ;
பகலிலும் கூட :ஒரு பெண் அல்ல ; ஆண்கள் கூட்டமே கூட ;பய
ணம்செய்ய முடியாத நிலை இன்று ! இது சுதந்திரமா ?



வன் முறைகள்
வேடிக்கையாகி விட்டன !வழிப்பறிகள் வாடிக்கையாகி விட்டன !
கொலைகள் கலைகளாகி விட்டன ! கற்பழிப்புகள் அன்பளிப்புக
ளாகி விட்டன ! இந்நிலை வரவா அன்னியரை விரட்டினோம் ?
பேச்சைக் குறைக்கச்சொன்னீர்கள் ! நீங்கள் ! உழைப்பைக் குறைத்
துக் கொண்டோம் நாங்கள் ! வேலை இல்லாமையைப் போக்குவ
தற்கு மாறாக ,வேலை வாய்ப்பையே போக்கிக் கொண்டிருக்கி
றோம் ! மக்களுக்கு உழைப்பதற்காக பதவிக்குச் சென்றவர்கள் தங்களுக்காகவும் ,தங்கள் மக்களுக்காகவும் உழைப்பதே சுதந்திரம்
என்கிறார்கள் !உரிமை கேட்கிறோம் என்ற பெயரில் ,தீப்பந்தம்
ஏந்திக் கொளுத்துவதே சுதந்திரம் என்கிறார்கள் ! அஹிம்சை வழி
காட்டினீர்கள் நீங்கள் !இம்சையே வழி என்கிறார்கள் இவர்கள் !
எளிமையாக வாழ்ந்து காட்டினீர்கள் நீங்கள் ! ஆடம்பரமாக,
வாழ்ந்து கொண்டு , எளிமையாக வாழுங்கள் என்று எங்களுக்குச்
சொல்கிறார்கள் இவர்கள் ! பொய் பேசத் தெரியாது உங்களுக்கு !
உண்மை பேசத்தெரியாது இவர்களுக்கு ! பிற மாதர்களைத் தங்கை
யராக எண்ணச் சொல்வது அடக்கு முறையாம் ! அனைவரையும்
தம் மனைவியராக நடத்துவதே அறிவுடமையாம் ! நம் வீடு ,நம் நாடு
என ஒன்றுபடுவது மடமையின்பாற்பட்டதாம் ! என்வீடு ,தனி நாடு
எனக் கொடி பிடித்துக் குழப்புவதே அறிவின் வெளிப்பாடாம் ! பொதுச்
சொத்துக்களும் நமது சொத்துக்களே என்பதற்காக ,அவற்றை சேதப்
படுத்துவதும் எங்கள் சுதந்திரமே என்கிறார்கள் ! நமது கண்கள் தான்
என்பதற்காக ,யாரும் அதைக் குத்திக் கொள்வார்களா எங்கள் தலை
வர்களே ! நாடு இரவில் தான் சுதந்திரம் கிடைத்தது என்பதற்காக ,
இன்னும்நாம் உறங்கிக் கொண்டேதான் இருக்க வேண்டுமா ?
விழிக்க வேண்டாமா ? அந்நிய ஆதிக்கத்திலிருந்து விடுதலை ,
பெற்றுத்தான் இருக்கின்றோம் ! அனைத்துத் துறைகளிலும்
முன்னேற்றம் எட்டித்தான் இருக்கின்றோம் !உலகினர் முன்னே
ஓர் உன்னத நிலையை அடைந்து தான் இருக்கின்றோம் !
ஆனால் ,நமக்காகவே என்று ஒரு நெறியை வகுத்துக் கொண்
டிருக்கின்றோமா ? அந்த நெறி நின்று நாம் வாழ்ந்து கொண்டி
ருக்கின்றோமா ? அதற்காக முயன்று பார்த்திருக்கின்றோமா ?
முன்னேற்றத்தின் முழுப்பயனையும் நுகர ,நாம் பெற்ற இந்த ஒரு
விடுதலை போதுமா ? வறுமையிலிருந்து விடுதலை பெற்று விட்
டோமா ?வன்முறையிலிருந்து விடுதலை பெற்று விட்டோமா ?
இனவெறியிலிருந்து விடுதலை ,மொழி வெறியிலிருந்து விடுதலை,
சாதி வெறியிலிருந்தும் ,தீண்டாமை வெறியிலிருந்தும் ,ஆகிய
விடுதலைகளைப் பெற வேண்டாமா ? அதற்காக நாம் முயல
வேண்டாமா ? அவ்வாறு முயல முனைய வேண்டாமா ? அந்த
முயற்சியைத் தொடங்கும் நாளே ,சுதந்திரத் தென்றல் வீசத் தொடங்
கும்நன்னாளாகும் ? அந்நாளே முன்னேற்றத்தை நோக்கி நாம் பீடு
நடைபோடும் பொன்னாளாகும் ? அந்நாள் விரைந்து வருதற்கும்,
அம்முயற்சியை இன்றே தொடங்குவதற்கும் , இப்பொன்னாளிலே
நாங்கள் உறுதி ஏற்றுக் கொள்கிறோம் ?அதற்கு எங்களைவாழ்த்
துங்கள் !எங்கள் தலைவர்களே !
வணக்கம் ! வாழ்க சுதந்திரம் ! வெல்க பாரதம் !
         
     


                
                                                                                                                                                   

No comments:

Post a Comment