கலங்காதே
1
பரந்து விரிந்த கடலில் ,
பயணம் செய்வதற்கு ,
பாதையா சமைக்க வேண்டும் ?
சிறு படகு ஒன்று போதும் !
பயணம் செய்வதற்கு ,
பாதையா சமைக்க வேண்டும் ?
சிறு படகு ஒன்று போதும் !
2
சுழன்று வரும் சூரியனின் ,
சுட்டெரிக்கும் வெயிலும் ,
சின்னக் குடை மறைத்தால் ,
செயலற்றுப் போகும் !
3
சுட்டெரிக்கும் வெயிலும் ,
சின்னக் குடை மறைத்தால் ,
செயலற்றுப் போகும் !
3
காட்டையும் புரட்ட வரும்
பேய்க்காற்றில் மீள ,
கல்லைச் சுமக்க வேண்டாம் ;
கவிழ்ந்து படுத்தால் போதும் !
4
பேய்க்காற்றில் மீள ,
கல்லைச் சுமக்க வேண்டாம் ;
கவிழ்ந்து படுத்தால் போதும் !
4
பனி சூழும் மலையிலும் ,
பாய்ந்தேறும் வலிவுடைய
பணியரை நன்கு நோக்கு ;
பயம்தனைப் போட்டுத்தாக்கு !
5
பாய்ந்தேறும் வலிவுடைய
பணியரை நன்கு நோக்கு ;
பயம்தனைப் போட்டுத்தாக்கு !
5
பாலை வன மெனினும் ,
காலைச் சுடுமெனினும் ,
கலக்கமே அவர்க்கு இல்லை !
இலக்கமே அவர்க்கு எல்லை !
6
காலைச் சுடுமெனினும் ,
கலக்கமே அவர்க்கு இல்லை !
இலக்கமே அவர்க்கு எல்லை !
6
ஐயோ ! மலையா ? என்று மலைத்து நிற்காதே !
கையில் உளி எடுத்துச் செதுக்கு !
மலையும் சிலநாளில் சிறு குன்று ஆகும் !
குன்றும் முடிவில் ஒன்றுமில்லாமல் போகும் !
கையில் உளி எடுத்துச் செதுக்கு !
மலையும் சிலநாளில் சிறு குன்று ஆகும் !
குன்றும் முடிவில் ஒன்றுமில்லாமல் போகும் !


No comments:
Post a Comment