Pages

Thursday, March 22, 2012

24 anbuth thirumakanE

அன்புத்திருமகனே! 

                                                                         
ராஜீவ் !
நீ அமரனாகி விட்டாய் !
வானத்தில் பறந்து திரிந்த நீ புகழ் வானத்திலும் பறக்க ,
அன்னையின் அடிச்சுவட்டில் அரசியலுக்கு வந்தாய் !
இந்த அன்னை மண் காப்பதற்காக
அந்த அன்னையின் அடிச்சுவட்டிலேயே ,
குண்டுகளையும் ஏற்றாய் ,உன் மேனி எல்லாம் !
இன்று நீ அமரனாகி விட்டாய் !
ஏழையர் துயரம் நீங்கவேண்டும் என்பதற்காக ,
திட்டங்கள் தீட்டினாய் !
கோழையரும் எழுச்சி கொள்ளும் வண்ணம் ,
சட்டங்கள் இயற்றினாய் !
இன்னலில் வாடும் இலங்கைத் தமிழருக்காக ,
ஒப்பந்தமும் செய்தாய் !
இன்னமுதம் எனும் இத்திருநாடு உயர ,
என்னென்னவோ செய்தாய் !
எனினும் ,எங்களை விட்டு நீ பிரிந்து சென்று விட்டாயே !
உலகின் தலைவர்களை எல்லாம் ,
ஒருசிலர் சுற்றிவந்தபோது , அந்தத் தலைவர்களையே
உன்னைச் சுற்றிவரச் செய்யும் சக்தி உனக்கிருந்தது !
ஆனால் ,உன்னையே சுற்றிக்கொண்டிருந்த
எங்களுக்கு ,உன்னைக் காக்கின்ற சக்தி
இல்லாமற் போய்விட்டதே !
அன்புவழி சொன்னவர்களும் ,
அமைதிக்கு வித்திட்டவர்களும் ,
பண்புநெறி நின்றவர்களும் ,
பரிவோடு உழைப்பவர்களும் ,
உன்னைப்போல் ,இப்படித்தான் கொல்லப்பட வேண்டுமா ?
இது வெல்லப்பட வேண்டாமா ?
அமைதிப்பூங்கா அமைக்க அடித்தளம் அமைப்போம் !
அதன்மேல்
அன்பெனும் மாபெரும் மாளிகை சமைப்போம் !
வளர்க ! ராஜீவ் புகழ் !



                                                                                  
                                                                        

No comments:

Post a Comment