Pages

Tuesday, March 27, 2012

33 UzhaippOm vaarungaL

உழைப்போம்!வாருங்கள்!!



வஞ்சம் யாவும்வழி எஞ்சிப் போகவென,
வாழ்வில் உழைக்கலாம்;வாருங்கள்!
வளமை சேரவெனக் கடமை ஆற்றவென,
வருகவே!எவரும் கேளுங்கள்!
அஞ்சிச் சாவதினை அடிமை வாழ்வுதனை,
அருமை அன்றுஎனத் தேருங்கள்!
அந்த கன்வருவ தெந்தநேர மென,
அறிந்த வர்ஒருவர் கூறுங்கள்!
நெஞ்சி னூடுருவு நேர்மை கூறுவன,
நெறிக ளாகுமென அறியுங்கள்!
நெறி மறந்துவிடின் நீதிகூற்ற மென,
நொடியில் சாய்க்குமென அறையுங்கள்!
மிஞ்சு வார்முடிவிற் கெஞ்சுவார்கள் வினை,
முடித்தி டார்களெனத் தெளியுங்கள்!
மிடியி லாடுலகு கடுகி மீளுமென,
மறந்தி டாதபடி உழையுங்கள்!





             

No comments:

Post a Comment