Pages

Thursday, March 22, 2012

23 Vaayppuk kodungaL


                                                                                                                                      
                                                 
        வாய்ப்புக்கொடுங்கள்!
வாழ்ந்துகாட்டுவார்கள்!!


அங்கத்தில் குறை எனிலும் அவர்களுக்கும் இதயம்
ண்டு !உள்ளத்தில் தெளிவுஉண்டு!உடலில் துணிவு உண்டு;தெம்பும்உண்டு,ஆனாலும் அவர்களை நாம்
கணக்கில்எடுத்துக் கொள்வதில்லை! என்ன வேண்டு
மென்று நாம்இவ்வாறு எண்ணுகிறோம்?என்றும்
தெரியவில்லை!
சூரியனில் கரும்புள்ளி ! சந்திரனில்மேடு பள்ளம்!
ஊனமென்று யாரும் ஒதுக்குவதில்லை !
ஒதுக்கினால்உலகுக்கு ஒளியேதுமில்லை !       
கோணலாய் ஓடும் ஆறுகள் ! குளிர் நீர் தந்து , நாட்டுக்கு ,
வளம்சேர்க்கின்றன!
கூனல் தென்னைகள் ! குடித்து மகிழக் கோடையில் ,
இளநீர்தருகின்றன !
வளைந்த கால்களுடன் கழுதைகளும் , நெளிந்தமுதுகுகளுடன்ஒட்டகங்களும் சுமையைச்
சுமக்கின்றன !
பேசத் தெரியாத நாய்களும் ,பூனைகளும் ,-----பாசத்
துடன்நம்மை வளைய வருகின்றன !
பறக்க முடியாத பெங்குவின்கள் ! -பார்க்க முடியாத
வவ்வால்கள் ! இவற்றை ஊனமுற்றவை ----என்று
யாரும் ஒதுக்கி விடுவதில்லை !------ வியப்பையும் ,
திகைப்பையும் அவை ஊட்டுகின்றன !
விஞ்ஞானத்துக்கே அவை வழி காட்டுகின்றன !
கால்கள் இல்லாத திமிங்கலங்கள் கருத்தைக் -கவர்
கின்றன !காதுகள் இல்லாத பாம்புகள் ,கண்ணைக்
கவர்கின்றன !
சந்தமாய்க் கவிபாட ஒரு அந்தகக் கவி !
நந்தமிழ் வளர்க்க இரு பைந்தமிழ் வித்தகர்கள் !------
இரட்டையராய் - கண்ணற்றவர் சுமந்து நடக்க ,
காலற்றவர் அமர்ந்து வழி காட்ட ,
வெண்பா பாடி அவர்கள் வியக்க வைக்கவில்லையா ?
கண்ணற்ற ஹெலன் கெல்லர் ---------நமக்கெல்லாம்
வழிகாட்டி !அரசியல் திறமையில் ஜெய்பால் ரெட்டி !
அரசுப் பணியில் ராமகிருஷ்ணன் !
விளையாட ஒரு மாலதி கிருஷ்ணமூர்த்தி !
உடற்குறை இருந்தும் உயர்ந்தார் திறமை காட்டி !
உடலின் குறையை ஊனமென்று சொன்னால் ,
உள்ளத்தின் குறையை என்னவென்று சொல்வார் ?
கையிருந்தும் தன்மேல் நம்பிக்கை இல்லாமல் ,
கார் கேட்டு ,சீர்கேட்டுக் கசக்கிப் பிழியும் ------கயமை
உள்ளத்தின் குறையை என்னவென்று சொல்வார் ?
கண்ணிருந்தும்கண்டதே காட்சி----என்றும்--- கொண்டதே
கோலம் என்றும் , கருத்தழிந்து திரியும் கயமை உள்
ளத்தின்குறையை என்னவென்று சொல்வார் ?
நல்லதைக் கேட்காது ,நரம்புகளை-- முறுக்கேற்றும்
நாராசச் சொல்லதைக் கேட்கும் காது நன்றாக இருந்
தும் பயன் யாது ? லஞ்சம் கேட்க வஞ்சகம் -----பேசும்
வாய் ;கொடுமை கண்டு பொங்காமல்-- ,அநீதி கண்டு ,
அஞ்சி ஓடும் கால்கள் இருந்தென்ன லாபம் ? தீமை
யைக்கண்டு ,தீமையைப் பேசி ,தீமையே ----செய்யும்
உள்ளத்தின் குறையை என்னவென்று ---சொல்வார் ?
உடற்குறை உடையோர் ஊனமுற்றோர்---- என்றால் ,
உள்ளத்தில் குறையுடையோர் யார் ? --------பரிகாசம்
வேண்டாம் !திறமையை எடை போடுங்கள் !அனுதா
பம்வேண்டாம் ! அன்பு காட்டுங்கள் ! ----உண்பதற்கு
ரொட்டி வேண்டாம் !உழைப்பதற்கு வாய்ப்பு --வழங்
குங்கள் ! " நிற்பதற்கு இடமொன்று -------தாருங்கள் !
நெம்புகோல் கொண்டு ,இந்த உலகைப் ------புரட்டுகி
றேன்" என்றான் கலீலியோ !" உழைப்பதற்கு மட்டும்
வாய்ப்பு ஒன்று தாருங்கள் !ஊன்று--------கோலோடு
சாதித்துக் காட்டுகிறோம்" , என்கிறார்கள்-- இவர்கள் !
ஆம் !சாதித்துக் காட்டுவார்கள் ! சரித்திரம்-
படைப்பார்கள் !
வாழ்க்கையில் சாதிப்பதற்கு வரம்பெதுவும் இல்லை !
வரம்பென்று இருந்தால் ,வானமே எல்லை !
 




                                                                          

    

No comments:

Post a Comment