Pages

Tuesday, September 16, 2014

85-oru aathmaa pEsukiRadhu-2


                                ஒருஆத்மாபேசுகிறது! -2 


                               ( இதன்  முதல் பகுதியை 29-ல் காண்க)

(சாதாரணமான ஒன்றைக் குறிப்பிட, உயிரெழுத்துச் சொல்லுக்கு 
முன்னால், ஓர் என்றே குறிப்பிட வேண்டும்; ஆத்மா ,அசாதாரண\
மான ஒன்று ,ஆகையால் ,இங்கே, அசாதாரணமாக , "ஒரு ஆத்மா"
என்று குறிப்பிடப் பட்டுள்ளது.)   



ஏ! மனிதா! உனக்குள்ளே தான் நான் இருக்கிறேன் ,என்றாலும்,

உன்னோடு நான் பேசி, பல நாட்கள் ஆகிவிட்டன, இல்லையா?
சில நாட்களுக்கு முன்னால், ஒரு சாவு வீட்டுக்குச் சென்று வந் 
தோமல்லவா?  அங்கே வந்தவர்கள், பேசிக் கொண்டதை, நான்
கேட்டேன்! இறந்த அந்த மனிதன் நல்லவன் என்றார்கள் சிலர்!   இப்போதுதான் பார்த்துப்  பேசிவிட்டுப் போனேன்,     அதற்குள் 
இப்படிப்    போய்விட்டானே! என்றார்கள், வேறு  சிலர்! அவர்
ளின் பேச்சுத்தான் என்  மௌனத்தைக்  கலைத்தது! அந்தமனி
தனிடம் நான் பேச முடியாதல்லவா? ஆகையால் அந்த மனித
னாக உன்னை நினைத்து, உன்னைக் கேட்கிறேன்!  நான் இருக்
கும் நிலையில்,  நீ   வேறா? என்று கேட்காதே!      இதைத்தான் 
ஆத்ம  விசாரம் என்பார்கள்!  விசாரம் என்றால் கவலை!   உன் 
கவலையும், என் கவலையும் ஒன்று தானே? கேள்! 
      

போன நிமிஷத்தில் நீ, அப்பா!  நீ, அம்மா!  நீ, தாத்தா!  நீ,  பாட்டி!
நீ, மாமா!        நீ, அத்தை!  நீ, அண்ணன்!  நீ, அக்கா!   நீ, அத்தான்! 
நீ, தம்பி!  நீ, !  தங்கை!  நீ, மனைவி! மற்றும் நீ , குழந்தை! இந்த 
நிமிஷத்தில்,  நீ,   சடலம்!   அவர்கள்   சொன்னது,      body!  Post 
mortum ஆகி body வந்தாச்சா? என்றுதானே கேட்டார்கள்! அப்பா
வாக இருந்த உன்னை body ஆக மாற்றியது  எது? என்ன கொடு
மை! அத்தனை உறவு முறைகளையும்  அழித்துவிட்டு,   சடல
மாக  மாற்றிய அது எது? உன் ஆத்மாவாகிய நானா ? இல்லை,
நீயா? நீதான் ஜடமாயிற்றே! உன்னால் என்ன செய்ய முடியும்?
வேறு ஏதோ ஒன்றா?  அது,  நான்    இல்லை என்று   நான் அறி 
வேன்!  என்றும்  நிலைத்திருக்கும் ஆத்மாவாகிய எனக்கு  இத்
தனை   உறவு முறைகளா?    இந்த உறவு   முறைகளெல்லாம்   
இந்த உலகோடு முடிந்து  விடுவதில்லையா? இல்லை,   அந்த 
உலகிலும் தொடருமா? 

தொடரும் ,என்றால், இங்கே நான்அப்பாவாக ,  இருந்து ,செய்த

பாவத்துக்கு,  தண்டனை  அனுபவிப்பது, ஆத்மாவாகிய ,  நான்  
என்றால், மற்ற உறவுகளில் இருக்கின்ற அந்த ஆத்மாக்களெல்
லாம் கூட ,தண்டனை  அனுவிக்க வேண்டுமா? 
நான் பாவமே செய்யவில்லை   என்றாலும், மற்ற உறவுகளில்  
இருக்கின்ற, ஏதோ  ஒன்று, பாவம் செய்தால், அந்த தண்டனை
யை, சுமக்க வேண்டுமா? இது என்ன  நியாயம்? எண்ணிப்பார்! 
ஏனென்றால்,அனைத்து ஆத்மாக்களும் பரமாத்மாவின்  ஒரே  
கிளைகளல்லவா?  ஒரே ஆத்மாவுக்கு  இத்தனை உறவு முறை
என்றால்,நினைக்கவே, ஒரு மாதிரியாக,  அதாவது  கூச்சமாக
இருக்கிறது!  இப்படி   நினைத்துப் பார்!  இன்று   என்   மனைவி,
நாளை என்   தாய்!   இது      பரவாயில்லை!  இன்று   என் தாய், 
நாளை மனைவி? இன்று  என்    தங்கை,  நாளை    மனைவி?   
இன்று என் மகள்  நாளை  என் மனைவி? 




ஒரு ஆத்மாவுக்கு  இத்தனை பிறவிகள்  என்றால், ஆத்மாவுக் கும், விலங்குகளுக்கும் என்ன வேறுபாடு? உயிர்கள்  அத்தனை

யும் பரமாத்மாவிலிருந்து  தான் வந்தது,  என்றால்,   அந்த உயிர்கள்   அத்தனைக்கும்    ஒரே  உறவு முறை அல்லவா இருக்க வேண்டும்?  
ஒரு தத்துவம் அதாவது theory, சரியானதுதான் என்றால், அது,தர்க்க
ரீதியாகவும் ( logic ஆகவும் )ஒப்புக்   கொள்ளக் கூடியதாக  இருக்க 
வேண்டும்! 
எதிலும் நம்பிக்கை வேண்டும் என்பார்கள்! நம்ப  முடிந்ததை நம்ப
லாம்!  கடவுள்   இருக்கிறது   என்றார்கள்; நம்பினேன்; நம்புகிறேன்!  
ஏனென்றால் , விதை இல்லாமல் செடி, முளைக்காது!   செலுத்துப
வன் இல்லாமல், எதுவும் நகராது! வண்டி ஓட ,ஓட்டுபவன் வேண்
டும்! Remote ஆவது வேண்டும். எனவே   கடவுள் உண்மைதான்! 
ஆனால் ஆத்மாவாகிய  நான் யார்? மனிதனாகிய உனது தொடர் 
பில்  எனது   பங்கு என்ன? என்   தன்மை என்ன? நான் என்ன செய்ய 
வேண்டும்? எதற்காக நான்  படைக்கப் பட்டேன்? நான் படைக்கப் 
பட்டதன்   நோக்கம் என்ன?எதுவும் என் கையில்  இல்லை,    என்
கின்ற போது, நான்  என்ன செய்ய முடியும்?  சொல் மனிதா! சொல்!  
கண்டவர் விண்டிலர்; விண்டவர் கண்டிலர் என்பார்கள்! சொல்லாத
அவனைக் கண்டவன் என்று எப்படிக் கண்டார்கள்?  காணாத  ஒரு
வன் எப்படி விண்டவனாக முடியும்?  ஒன்றைப்  பாராமல், அல்லது 
அதைச் சுவைக்காமல், அதன் தன்மை இத்தகையது என்று எப்படிச்
சொல்ல முடியும்?


 

உலகிலுள்ள    அனைத்து           பிம்பங்களும்      மாயை  என்பார்கள் ! 
மாயை  என்றால், நிழல்;  நிழலுக்கு நிஜம்  வேண்டும்; அந்த    நிஜத்
துக்கும் , ஒரு நேரத்தில், ஒரு  நிழல்  தான்  உண்டு !       பல  நேரங்க
ளில்  பல      நிழல்கள்  தெரியலாம்!  ஆனால், இங்கு  ஒரே  நேரத்தி
லல்லவா , பல  உறவுகள்  இருக்கின்றன! இது     ஒரே ஆத்மாவின் 
பல பிரதிபிம்பங்கள்  என்றால் , முரண்பாடாக இல்லையா?



என்ன மனிதா! எனது சந்தேகங்களில்,    முரண்பாடு  எதுவும் இருக்
கிறதா? நீ எங்கே சொல்லப் போகிறாய்! பரமாத்மாவிலிருந்து  வந்த 
எனக்கே தெரியாதபோது, வெறும்  ஜடமாகிய உனக்கு எங்கே, தெரி
யப்  போகிறது! நீயும்  நானுமாகப்  பேசி , முடிவு  காணும்     விஷய
மாக இது  தெரியவில்லை! சரி! உன் வேலையைப் பார்! பிறகு பேசு
வோம்!