Pages

Sunday, June 24, 2012

64 A crow poses to photo


ஒருகாக்கை,போட்டோவுக்குப்போஸ் தருகிறது!

போஸ்டுகம்பியில்அமர்ந்திருந்தஎன்னிடம்,
"கா,கா" என்றான், ஒருமனிதன்; கவண்
வில்லைப் போல,கருப்பாகக் கையில்
இருந்ததைப்பார்த்துப்பயந்து, பறக்க
எத்தனித்தபோது, "பயப்படாதே!
உன்னைத்தான்" என்றான்!







"கியா?" என்றேன்!




"இதுகேமிரா!
"போஸ்கொடு! 
போட்டோஎடுக்கிறேன்" என்றான்!







"ஆ!கா! போட்டோவா?" என்றுவாயைத்திறந்த என்னை, இப்படிப்புரட்டிப்புரட்டிஎடுக்கிறான்!






"நன்றாகக்குனிந்துகொஞ்சம்கொஞ்சமாக, நிமிரவேண்டும்,என்றான்!








இன்னும்கொஞ்சம்";" 










"சர்க்கஸில்புலியைக்கூடஇந்தப்பாடு படுத்தமாட்டார்கள்!"







"ஓ! கே! இன்னும் கொஞ்சம்மட்டும்" என்றான்!







"யப்பாவ்! போதுமா?"
" good! போதும்; போதும்!
 நிமிர்ந்துகொள்" என்றான்!









" இனிகஷ்டமில்லை! மேலேபார்!" என்றான்!





கீழேபார்!" என்றான்!
இரைதேடக்கூட
இப்படிப்பார்த்ததில்லை!





                                                   " நிமிர்ந்து,

"நேராய்நில்", என்றான்!










"சாய்ந்துநில்", என்றான்!










"அப்படித்திரும்பு!", என்றான்!









"வாயைத்திற", என்றான்!










"இன்னும்நன்றாக", என்றான்!


"கம்பத்திலிருந்து, பறப்பதைப்போல", என்றான்! "அப்படியெல்லாம்கொடுக்கமுடியாது! சிறகை விரித்தவுடன், வேகமாய்ப்பறந்துவிடவேண்டும்! இல்லையென்றால், காற்றின்வேகத்தில், பேலன்ஸ்இல்லாமல், தவறிக்கீழேவிழுந்துவிடுவோம்! நான் பறக்கும்போது, முடிந்தால்எடுத்துக்கொள்", என்றுசொன்னேன்! "இவ்வளவுதெரிந்துவைத்திருக்கிறாயே! என்கையிலிருப்பது, கேமிராஎன்றுதெரியவில்லையா?" என்றான்! "தெரியும்! இப்போதெல்லாம், அதற்குள்துப்பாக்கியைஒளித்துவைத்திருக்கிறார்கள், என்றும்தெரியும்", என்றுசொல்லிவிட்டு,இவனிடம்மாட்டி, போட்டோ, எடுப்பதைவிட, "ஆளைவிட்டால்போதும்சாமி" என்று, விருட்டென்று பறந்தேன்! எடுத்தானாஇல்லையாஎன்றுதெரியவில்லை!



Friday, June 22, 2012

63 en aasai nhiRaivERumaa?

என்ஆசைநிறைவேறுமா?






"
நான்இறந்தபிறகுஎன்உடல்எரியூட்டப்பட்டு,
அந்தசாம்பல்,நம்அன்னைநாடாம்இந்தியாவின், ஆறுகளிலும்,வயல்களிலும்தூவப்படவேண்டும்,
என்று விரும்புகிறேன்!"--பண்டிதஜவஹர்லால்நேரு.
மறைந்தநம்முன்னாள்பாரதப்பிரதமர்,ஆசியஜோதியின்இந்தஆசை, 
அவருடைய அளவிடஇயலாதநாட்டுப்பற்றைக்காட்டும்அதே
சமயம்,   இயற்கையை எந்த அளவுக்கு அவர்நேசித்தார் என்ப தையும் தெளிவாகக்காட்டுகிறது!மதம், மறுஜென்மம் ஆகிய வற்றில், நம்பிக்கைஇல்லாதவர் என்றுஅவரைப்பற்றிச்சொல்வார்கள்!ஆனாலும் அவருடையசாம்பலைஆறுகளிலும்வயல்களிலும்
தூவவேண்டும், என்றுஆசைப்பட்டிருக்கிறார்!

நான்இயற்கையைநேசிக்கிறேன்! இயற்கைஎனக்குள்அடக்கம்! நான்  இயற்கையினுள்அடக்கம்! இயற்கையிலிருந்துபிரிந்தேன்! மறுபடியும் 
இயற்கையிலேயேகலப்பேன்! நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்ச பூதங்களின் தொகுப்பே இயற்கை! அதுபோலவே, நானும் பஞ்சபூதங்க ளாலேயே ஆக்கப்பட்டிருக்கிறேன்! இந்தஉடல், நிலம்! அதில்ஓடும்குருதி, நீர்! உடலின்வெப்பம், நெருப்பு! என்சுவாசம், காற்று! உள்ளே இருக்கும் வெற்றிடம், ஆகாயம்!இதையேநமதுமூதாதையரும் பித்தம்(நிலம்) வாதம்(காற்று, ஆகாயம்) சிலேட்டுமம்(நீர்,நெருப்பு) என்னும் மூன்று நாடிகள்நம்உடம்பைஆட்டிவைக்கின்றனஎன்றார்கள்! இயற்கையும்அதுவே! எதிலி ருந்துவந்தேனோ, அதைநான்விரும்புவதில், என்னவியப்பு?
அதனால் தானோ, என்னவோ, நமதுமுன்னோர்இயற்கையேஇறைவன் என்றனர்! அந்தஇயற்கையில்கலப்பதும், இறைவனில்கலப்பதும்ஒன்றுதான்!




விண்ணைமுட்டும்இமயமலையின், எண்ணற்றசிகரங்களில்ஏதேனும்ஒன்றாக இருக்கநான்ஆசைப்படுகிறேன்!







   கண்ணைமுட்டும்அம்மலை
எங்கும்பரவிக்கிடக்கும்
சில்லென்றபனிச்
சிதறலாகஇருக்கநான்ஆசைப்படுகிறேன்!




அங்கேவான்நோக்கி,உயர்ந்து
வளர்ந்த, மரங்களில்ஒன்றாக
இருக்கநான்ஆசைப்படுகிறேன்!





அம்மரங்களின்உச்சிஒன்றில், எட்டாதஉயரத்தில்அமர்ந்திருக்கும், பறவைகளுள்ஒன்றாக இருக்கநான்ஆசைப்படுகிறேன்!





பாய்ந்துவரும்கங்கையின்
நடுவே, மூழ்காமல்தலை
காட்டும், பாறைகளுள் ஒன்றாக
இருக்கநான்ஆசைப்படுகிறேன்!

அப்பாறைகளில்வளர்ந்து,
வண்ணமலர்களைத் தாங்கி இருக்கும்,
 பசுமைமாறாச் செடி களில்
ஒன்றாகஇருக்கநான்ஆசைப்படுகிறேன்!

காட்டின்நடுவே, கருமேகம்சூழ்ந்தஒருகுன்றின்மேல், மழையில்குளித்தபடி, பனியில்
நனைந்தபடி, திரியும்ஒரு
விலங்காகஇருக்க நான்ஆசைப்படுகிறேன்!




பரந்தகடலின்நடுவே,ஏகாந்தமாய் மிதக்கும்தீவுகளில்ஒன்றாகஇருக்கநான் ஆசைப்படுகிறேன்!




அக்கடலின்ஆழத்தில்,அலுப்பின்றி
நீந்தும் மீன்களுள்ஒன்றாக
இருக்கநான்ஆசைப்படுகிறேன்!






விண்ணில்மிதந்து, சுதந்திரமாகஓடும், 
வெண்மேகங்களுள் ஒன்றாகஇருக்க
நான்ஆசைப்படுகிறேன்!



அவ்விண்ணிலிருந்து, இவ்வுலகை
ரசித்தபடி, உயரத்தில்கண்
சிமிட்டும், தாரகைகளுள்
ஒன்றாக இருக்கநான்ஆசைப்படுகிறேன்!


மலைச்சாரலின் ஓரத்தில்
அமைதியாகத் தவழும்,
நதியோடு பேசும், மெல்லிய
பூங்காற்றாக அலைய, நான்
ஆசைப்படுகிறேன்!





மழைபெய்யும்போதுவீசும்
மண்ணின்வாசமாக
இருக்கநான்ஆசைப்படுகிறேன்!




மலர்ந்துபரப்பும்மலர்களின்மணமாக
இருக்கநான் ஆசைப்படுகிறேன்!




கண்ணையும்கருத்தையும்கவரும்அதன் வண்ணங்களுள்ஒன்றாகஇருக்கநான் ஆசைப்படுகிறேன்!





குடிசையில்என்றாலும், ஒளிவீசி
மகிழும்தீபங்களுள் ஒன்றாகஇருக்கநான்
ஆசைப்படுகிறேன்!







அந்தத்தீபஒளியில்தூங்கிக்கொண்டிருக்கும், மழலையின்மொழியாகஇருக்கநான்ஆசைப் படுகிறேன்!







அனைத்துக்கோள்களையும்தாங்கிப்பிடிக்கும்
ஆகாயத்தின்ஒரு பகுதியாகஇருக்க
நான்ஆசைப்படுகிறேன்!






நிலத்தின்பொறுமையாக, நீரின்
தண்மையாக, நெருப்பின்
வெம்மையாக, காற்றின்உயிர்மையாக,
ககனத்தின் பெருமையாகஇருக்கநான்
ஆசைப்படுகிறேன்!



இரவுநேரத்தில், தனிமையாகஇருக்கும்
போது, மௌனமாகநிலவுமே
ஒருநிசப்தம்! அந்தநிசப்தமாக இருக்க
நான்ஆசைப்படுகிறேன்!




     நாம்  பிறந்தது முதலே மருந்து மாத்திரைகளாலேயே  இந்த உடம்பு பேணப்பட்டு ,வந்திருக்கின்றது !  அதற்கு, நன்றிக்கடனாக , மருத்துவத்துறைக்கு ஏதேனும் செய்ய ஆசைப்படுகிறோம் ! ஆகையால், நானும் ,என் மனைவியும் ,இறந்த பிறகு எங்கள்  உடலை, மருத்துவ ஆய்வுக்கு தானமாக அளிக்க ஆசைப்படுகிறோம் ! இதையே எங்கள் ஒப்புதலாகவும் உறுதி அளிக்கிறோம் !


ஆசை நியாயமாக இருந்தால், அது நடக்கும் என்பார்கள்! என் ஆசை நடந்தால், அது  நியாயமாக இருக்கும்!





என் ஆசை நிறைவேறுமா?  




Sunday, June 17, 2012

62 paRavaikaL orE vidham





பறவைகள்ஒரேவிதம்






வாடி இருக்குமாம் கொக்கு, என்று பாடிய வள்ளுவர், இந்தப் புறாக்களைப் பார்க்கவில்லை!












பூனைதன்னைப்பிடிக்கும்இடம்
என்றுபுரியாமல்
தனக்குள்தலைமறைத்துக்
கொண்டமூடம்!




சிறகை விரித்துப் பறக்கத் தயாராகும் பறவைகள்!














      


இரைதேடும்பறவைகள்















கூடுகட்டப்போகிறோம்!

















எங்களுக்கும்காதல்வரும்!
உங்களுக்கு, சமதளத்தில்;
எங்களுக்கோ, அந்தரத்தில்!
!


















அங்குமிங்கும் அலைந்து
இரையைக் கண்டது தாய்!
அதை வாங்கி உண்ணத் தன்
வாயைத் திறந்தது சேய்!















தாய்மை, தூய்மையானது!