Pages

Wednesday, May 30, 2012

58 The flight



A flight is getting ready





Neither pain, nor gain to earn,
Either sun or rain, we run. 
A reason to stay away, you seek;
No reason to stop prey, we seek.

We land down every time, we need;
And take off in time, we finished.
None are our captains to command;
That tell us obey only demand.

Now too, thundering clouds are gathering;
Watery whirl wind's whistling;
But our hungry young ones are whispering.
To take off so, we are waking.

Yes! This take off  is for another landing down.




Tuesday, May 29, 2012

57 The love doves

                        
                               
                                                     The love of doves






Nature Loves creatures

creatures love each other!

Here a dove loves her darling


Love makes every thing to forget, to say forget me not!  
The climax of love!

56 Theriyum;anaal theriyaadhu!l



1-தெரிந்தது தான் ! ஆனால் புரிந்து கொள்ள முயன்றதில்லை ! நாம் அன்றாடம் செய்கின்ற சில செயல்களின் பின்னால் , ஒரு விஞ்ஞான விதி அடங்கி இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியுமா ? நடைபெறுகின்ற காரியங்கள் எல்லாம் ஒரு காரணத்தோடு தான் நடக்கின்றன ; காரணம் இல்லாமல் காரியம் இல்லை காரியம் இல்லாமல் காரணமும் இல்லை ; விஞ்ஞானம் என்றால் என்ன ? காரியம் ஒன்று உண்டானால் காரணமும் உண்டு ; அந்த காரணம் எதுவென்று கண்டறிவது தான் விஞ்ஞானம் ; ஆமாம் : சரி தான் ; அந்த காரணத்தை ஏன் கண்டறிய வேண்டும் ? வேண்டாமா ? துன்பத்துக்கான காரணம் எதுவென்று கண்டால் தானே , அதை தீர்ப்பதற்கான வழியைத் தேட முடியும் ? வள்ளுவரும் அதைத்தானே சொன்னார் ? நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் என்று அவர் பாடவில்லையா ? முதலில் என்ன நோய் என்று பார்க்க வேண்டும் ; பிறகு அந்த நோய் ஏன் வந்தது என்று (அதாவது நோய் வந்ததற்கான காரணம் என்னவென்று) பார்க்க வேண்டும் ; அதற்கு என்ன செய்யலாம் என்று தீர ஆராய்ந்து , அதை சரியாகச் செய்ய வேண்டும் ; அப்படிச் செய்தால் தான் நோய் தீரும் ! 2- தெரிந்தது தான் ! ஆனால் புரிந்து கொள்ள முயன்றதில்லை ! பசிக்கிறது ! காரியம் ! காலையில் நீ சாப்பிடவில்லை ! இது காரணம் ! இப்பொழுது சாப்பிடு ! அது தான் தீர்வு ! கால் வலிக்கிறது ! காரியம் ! அதிகமாக நடந்திருப்பாய் ! இல்லையென்றால் காலில் அடிபட்டிருக்கும் இது காரணம் ! ஒன்று நடையை நிறுத்த வேண்டும் ; இல்லையென்றால் , அடிபட்ட இடம் எதுவென்று பார்த்து மருந்து போட வேண்டும் இது தீர்வு ; வெயில் அடிக்கிறது ; காரியம் ! வானத்தில் சூரியன் கொளுத்துகிறது ! இது காரணம் ; குடை பிடித்துக் கொள் ! இது தீர்வு ! வெயில் குறைவாக இருக்கிறதே ? காரியம் ! மேகமூட்டமாக இருக்கிறது ! காரணம் ! மழை வந்தாலும் வரும் ! இதற்கும் குடை தான் கொண்டு போக வேண்டும் ! தீர்வு ! விளையாடப் போன பையன் அழுகிறான் ! காரியம் ! யாராவது அடித்திருப்பார்கள் ! இல்லையென்றால் கீழே விழுந்திருப்பான் ; இது காரணம் ; சென்று பார்த்து , ஆறுதல் சொல்லி அவனைத் தேற்ற வேண்டும் ; இது தீர்வு ! இதெல்லாம் சரி ; உட்கார்ந்திருக்கிறோம் ! ஒரே புழுக்கமாக இருக்கிறது ; ஃபேனைப் போட கரண்ட் இல்லை ! விசிறியால் வீசுகிறோம் ! காற்று ஏன் வருகிறது ? 3- தெரிந்தது தான் ! ஆனால் புரிந்து கொள்ள முயன்றதில்லை ! விசிறியால் வீசினால் காற்று வருகிறது ; ஏன் ? இது என்னய்யா கேள்வி ? விசிறியால் வீசினால் , காற்று வராமல் வேறு எது வரும் : காற்று வரத்தானே செய்யும் என்பீர்கள் !தெரிந்தது தான் ! ஆனால் புரிந்து கொள்ள முயன்றதில்லை !கேளுங்கள் ! கடவுளாவது இல்லாத இடம் இருக்கலாம் ! ( சும்மா ஓரு பேச்சுக்கு ) ஆனால் காற்று இல்லாத இடமேயில்லை ; அதற்குக் காரணமே , காற்றைப் பற்றிய இந்த விதி தான் ; வெற்றிடத்தை ( vacuum ) நோக்கிக் காற்று வீசும் என்பதே அந்த விதி ! வெற்றிடத்தை நீ நிரப்ப வேண்டும் என்று இறைவன் காற்றுக்கு இட்ட கட்டளை என்று தான் கூற வேண்டும் ! சமநீதி சமநீதி என்றெல்லாம் பேசுகிறார்களே , நமது அரசியல்வாதிகள் ! ஆனால் காற்றுக்கு இருக்கின்ற இந்த சமநீதிக் கொள்கை , எந்த ஒரு நல்ல அரசியல்வாதிக்கும் கூட இருக்குமா என்பது சந்தேகம் தான் ! அதாவது தான் இல்லாத இடம் என்று எதுவும் இருக்கக் கூடாது என்பதுவே காற்றின் நிலையான ஒரே கொள்கை ; காற்றுக்கு சமயத்துக்கு ஏற்றமாதிரியான கொள்கை எல்லாம் கிடையாது ; அதனாலேயே வெற்றிடத்தை நோக்கி காற்று வீசுகிறது ! இதை நாம் அறியாமலேயே , விசிறியை இப்படியும் அப்படியும் அசைத்து , நமக்கு முன்னே , இருக்கின்ற சொற்ப அளவு காற்றையும் வெளியேற்று கிறோம் ! அதனால் , அங்கே ஒரு வெற்றிடம் ஏற்படுகிறது ! அந்த வெற்றிடத்தை நோக்கி , அதிக அளவு காற்று வேகமாகப் பாய்ந்து வருகிறது ! அவ்வாறு வருகின்ற காற்றின் குளுமையை அனுபவித்து மகிழ்கிறோம் ! மெதுவாக நாம் கையால் செய்கின்ற இந்த வேலையை , மின்விசிறி நமக்காக வேகமாகச் செய்கின்றது ; 4- தெரிந்தது தான் ! ஆனால் புரிந்து கொள்ள முயன்றதில்லை ! முழுமையாக நிரப்பப் பட்ட மைப்பேனாவை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு ஒரு உயரமான இடத்துக்குச் செல்கிறோம் ; அங்கே மை கசிந்து சட்டை கறையாகிறது ; ஏன் ? ( உயரத்தில் போகும்போது அலுங்காமல் குலுங்காமல் அப்படியே நடக்க முடியுமா ? ஆடி , அசைந்து நடந்து செல்வதால் , பேனா குலுங்கி குலுங்கி மை கொட்டுகிறது ; இது கூடவா தெரியாது என்பீர்கள் ! ) கொட்டும் என்று வேண்டுமானால் தெரிந்து இருக்கலாம் ; அதற்கும் மைப் பேனாவோடு மலை உச்சிக்குப் போயிருக்க வேண்டும் : ஆனால் ஏன் கொட்டுகிறது என்று பார்ப்போம் ! குறிப்பிட்ட ஒரு கன அளவில் , அடைபடும் ஒரு பொருளின் திண்மை யானது , ( அடர்த்தி ) ( density ) அங்கே நிலவும் அழுத்தத்திற்கு ( Pressure ) ஏற்ப மாறுபடும் என்பது விதி ! உயரம் கூடக்கூட அழுத்தம் குறையும் என்பதும் உயரம் குறையக் குறைய அழுத்தம் கூடும் என்பதும் விதியாகும் ! அதாவது உயரமும் அழுத்தமும் எதிர் ( தலைகீழ் ) விகிதம் எனவே , கீழே அதிக அழுத்தத்தில் நிரப்பப் பட்ட மை , மேலே செல்லச் செல்ல , உயரத்தில் அழுத்தம் குறைந்து , அதனால் திண்மையும் குறைந்து அது அடைபட்டுள்ள கன அளவின் பற்றாக்குறையால் இடம் போதாமல் மை வெளியேறுகிறது ! அக்கசிவினால் , சட்டை கறையாகிறது ! அழுத்தம் என்றால் என்ன ? திண்மை என்றால் என்ன ? என்று பார்ப்போம் ; 5- தெரிந்தது தான் ! ஆனால் புரிந்து கொள்ள முயன்றதில்லை ! ஒரு கூடையும் , அதை நிரப்புவதற்குத் தேவையான பஞ்சும் எடுத்துக் கொள்வோம் ; சாதாரணமாக கையில் பஞ்சை எடுத்து , கொஞ்சம் கொஞ்சமாகக் கூடையில் மேலே வரும் அளவுக்கு போடுவோம் ; கொஞ்சம் போட்ட உடனே கூடை நிறைந்து விடும் ; பஞ்சின் மேல் எந்த அழுத்தமும் இல்லை ; அதனால் பஞ்சில் திண்மையும் இல்லை ; கூடையில் அதிகமான பஞ்சும் இல்லை ; இது சாதாரணமான அழுத்தம் நிலவும் நிலை ! அடுத்தபடியாக , பஞ்சை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்துப் போட்டுப் போட்டு , ஒரு கையால் அழுத்திப் பிடித்துக் கொண்டே இருந்தால் , அதிகப்படியான பஞ்சை அந்த கூடையில் நிரப்பலாம் ; இப்போது பஞ்சின்மேல் அதிகமான அழுத்தம் இருக்கிறது ; பஞ்சில் அதிகமான திண்மையும் இருக்கிறது ; கூடையில் அதிகமான பஞ்சும் இருக்கிறது ; இந்நிலையில் கொள்கலனின் கொள்ளளவு குறைவாக இருந்தால் போதும் ; இதுதான் கீழே உயரம் குறைவான இடங்களில் அழுத்தம் நிலவும் நிலை ; அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்கின்ற கையை , மேலே தூக்கத் தூக்க பஞ்சும் மேலே மேலே வந்து கொண்டிருக்கும் ; அதாவது அழுத்தம் குறையக் குறைய திண்மை குறைந்து கொண்டே வருகிறது ; இந்நிலையில் கொள்கலனின் கொள்ளளவு அதிகமாக இருக்க வேண்டும் ; இல்லையென்றால் பஞ்சு வெளியே வரத்தான் செய்யும் ; இந்த திண்மை இயற்கையாகவே அதிகமாக உள்ள பொருட்களும் இருக்கின்றன ; குறைவாக உள்ள பொருட்களும் இருக்கின்றன ; இப்படித்தான் உயரத்தில் மைப் பேனா கசிந்து கொட்டுகிறது ! 6 தெரிந்தது தான் ! ஆனால் புரிந்து கொள்ள முயன்றதில்லை !வெய்யில் காலத்தில் வெட்டி நடப்பட்ட ஒரு மரக்கிளையை விட , மழைக்காலத்தில் வெட்டி நடப்பட்ட கிளை விரைவாகத் துளிர்க்கிறது ; ஏன் ? ( வெய்யில் காலத்தை விட , மழைக்காலத்தில் அதிக தண்ணீர் கிடைக்கும் என்பீர்கள் ! ) ஒரு வகையில் அது உண்மைதான் ; அதனால் என்ன ஆகின்றது என்று தெரிய வேண்டுமல்லவா ? மனிதனுக்கும் பல்வேறு உயிரினங்களுக்கும் எப்படி அவற்றின் உறுப்புகள் பலவகைகளில் பயன்படுகின் றனவோ அதைப்போலவே , தாவரங்களுக்கும் அவற்றின் இலை கிளை பூ தண்டு வேர் போன்ற பாகங்கள் உதவுகின்றன ;தாவரங்கள் தங்கள் இலைகளின் மூலமாக ஒளிச்சேர்க்கை என்ற செயலின் மூலமாக உணவைச் சேர்த்து வைக்கின்றன என்பதோடு , முக்கியமாக அந்த இலைகள் தாங்கள் உயிர்வாழத் தேவையான , நீராவிப் போக்கு ( transpiration ) என்னும் செயலைச் செய்ய வேண்டும் என்பது விதியாகவே வகுக்கப் பட்டிருக்கிறது ! இது தமக்குக் கிடைக்கும் நீரின் அளவை சம நிலையில் வைத்துக் கொள்வதற்காக ஆகும் ; ( அவ்வாறு சம நிலையில் வைத்துக் கொள்ளவில்லை என்றால் , செடி அழுகி இறந்து விடும் இதையும் மீறி அழுகி விடுவதும் உண்டு ) நீராவிப்போக்கு இலைகளின் வழியாகத்தான் நடைபெறுகின்றன , என்பதால் , தேவை கருதி இலைகளை அதிகமாக்குவதும் குறைப்பதுவும் ஆகிய நடவடிக்கைகளை தாவரங்கள் தங்கள் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்கின்றன 7-- தெரிந்தது தான் ! ஆனால் புரிந்து கொள்ள முயன்றதில்லை ! வெய்யில் காலத்தில் எவ்வளவு நீர் ஊற்றினாலும் , சுற்றுப்புறத்திலுள்ள வெப்பத்தின் காரணமாக , நீரின் அளவு அதைப் பாதிப்பதில்லை ; ஏனென்றால் கிடைக்கின்ற நீர் போதுமானதாக இல்லை ; அதோடு அதிக இலைகள் இருந்தால் , இருக்கின்ற நீரையும் அவை வெளியேற்றிவிடும் ; இதனாலேயே கோடைகாலத்தில் இலைகள் பழுத்து உதிர்கின்றன ; இலையுதிர்காலம் என்று நாம் சொல்கிறோம் இதை தாவரங்கள் தங்கள் இலைகளை உதிர்க்கும் காலம் என்று தான் சொல்ல வேண்டும் ஆனால் மழைக்காலத்தில் நிலைமை வேறு ; தங்கள் பாதுகாப்புக்காக சுற்றுப்புறத்திலும் , வேருக்கு அடியிலும் தேங்கி நிற்கும் தண்ணீரை , அவை வெளியேற்ற வேண்டிய கட்டாயத்தில் உள்ளன; இல்லையென்றால் , விரைவில் அவை அழுகிவிடும் எனவே இலைகளை அதிகப்படியாக வெளிவிட்டு அவற்றின் வழியாக நீரை வெளியேற்றுகின்றன ; அதனால் தான் வெய்யில் காலத்தைவிட மழைக் காலத்தில் தாவரங்கள் விரைவாகத் துளிர்க்கின்றன. அதன் காரணமாக தாவரங்கள் பசுமையாகக் காட்சியளிக்கின்றன ஒரு கிலோ பஞ்சு , மற்றும் ஒரு கிலோ இரும்பு ஆகியவற்றில் எது அதிக கனமாக இருக்கும் என்று கேட்டால் என்ன சொல்வோம் ? இரண்டுக்கும் உள்ள வேறுபாடு என்ன ? ஏன் ? பஞ்சை விட இரும்பு கனமாக இருக்கும் என்போம் !ஒருவேளை நீங்கள் அப்படிச் சொல்லாமல் இருக்கலாம் ! இரண்டும் ஒரே எடை தானே ; அதனால் ஒரே கனம் தான் ; 8-- தெரிந்தது தான் ! ஆனால் புரிந்து கொள்ள முயன்றதில்லை ! ஆனால் , இரும்பை அடைக்கத் தேவைப்படும் இடத்தை விட , பஞ்சை அடைக்க அதிக இடம் தேவை ! ஏனென்றால் பஞ்சின் அடர்த்தியை விட , இரும்பின் அடர்த்தி அதிகம் ! இது இயற்கையாக அமைந்த அடர்த்தி ; பஞ்சை எடை போடும் படிக்கல் சிறிதாகவும் , பஞ்சு மூட்டை பெரிதாகவும் இருப்பதை பார்த்திருப்பீர்கள் ஆனால் இந்த எடை உயரே செல்லச் செல்ல கொஞ்சம் குறையும் ; ஏனென்றால் ஈர்ப்பு விசையும் மாறும் , பொருட்களுக்கு எடை தருவது ஈர்ப்பு விசை என்றும் ஒரு விதி இருக்கிறது ; ஈர்ப்பு விசை இல்லை என்றால் எடையும் இல்லை ; அதனாலேயே , மேலிருந்து உருட்டி விடப்பட்ட பாறை கீழே வர வர வேகமாக உருள்கின்றது மேலே வீசப்பட்ட பந்து கீழே வருவதற்கும் , மரத்தில் பழுத்த பழங்கள் கீழே விழுவதற்கும் இந்த ஈர்ப்பு விசையே காரணம் ; இல்லாவிட்டால் பந்தும் பழமும் மேலேயே போய்விடும் ; இல்லை , அப்படியப்படியே தொங்கும் ; பேரண்டத்தில் , அந்தரத்தில் கிரகங்கள் தொங்குவதற்கும் இந்த ஈர்ப்பு விசைதான் காரணம் ; ஒவ்வொரு கிரகத்துக்கும் வெவ்வேறு அளவில் ஈர்ப்பு விசை இருக்கிறது ; பத்துப் பதினைந்து பேர் வட்டமாகச் சுற்றி நின்று கொண்டு , ஒருவர் கையை மற்றோருவர் கோர்த்துக் கொண்டு அப்படியே மல்லாந்து சாய்ந்தால் யாரும் விழ மாட்டார்கள் ; ஒருவர் பிடி விலகி விட்டால் எல்லோரும் விழுவார்கள் ; இந்த பிடியைப் போன்றது தான் கிரகங்களின் ஈர்ப்பு விசையும் ; 9-- தெரிந்தது தான் ! ஆனால் புரிந்து கொள்ள முயன்றதில்லை ! இது ஒரு கணக்கு 100 மீட்டர் தூரத்திலுள்ள ஒரு இடத்துக்கு , 10 நிமிடத்தில் செல்ல வேண்டுமானால் , ஒரு வண்டியின் சக்கரம் 100 சுற்றுகள் உருள்கிறது : அதே இடத்துக்கு , அதே வண்டியில் 5 நிமிடத்தில் செல்லவேண்டுமானால் , அந்த வண்டியின் சக்கரம் எத்தனை சுற்றுகள் உருளும் ? எப்படி ? ( 200 சுற்றுகள் , அல்லது 50 சுற்றுகள் என்பீர்கள் கணக்கு போட்டுப் பார்த்தால் அப்படி சொல்ல மாட்டோம் ) தெரிந்தது தான்! ஆனால் புரிந்து கொள்ள முயன்றதில்லை ! அதே 100 சுற்றுகள் தான் என்பது விடை ! எப்படி என்று பார்ப்போம் ! அந்த சக்கரம் ஒரு சுற்று உருளும்போது , அது எவ்வளவு தூரம் நகரும் ? அதன் சுற்றளவு எவ்வளவு இருக்கின்றதோ அவ்வளவு தூரம் தானே நகரும் ; அந்த கணக்கில் பார்த்தோமானால் , அந்த இடம் 100 சுற்றுகள் தொலைவிலே தான் இருக்கிறது ; அதாவது 100 மீட்டர் தொலைவில் உள்ள அந்த இடத்துக்குச் செல்ல 100 சுற்றுகள் உருள்கிறது ; ஆக , ஒரு சுற்றுக்கு 1 மீட்டர் செல்கிறது ( இது அதன் சுற்றளவு ) ; ஆகவே அந்த இடத்தை , எவ்வளவு நேரத்தில் அடைய வேண்டும் என்றாலும் அது 100 சுற்றுகள் தான் உருள வேண்டும் ; குறைவான எண்ணிக்கையில் உருண்டால் அந்த இடத்தை அடைய முடியாது ; அதிகமான எண்ணிக்கையில் உருண்டால் அந்த இடத்தைத் தாண்டி விடும் ; ஆனால் , செல்லும் வேகம் மாறுபடும் ! 10 நிமிடத்தில் சென்ற தூரத்துக்கு 5 நிமிடத்தில் செல்ல வேண்டுமானால் , முன்பு சென்ற வேகத்தை விட , இரண்டு மடங்கு வேகத்தில் செல்ல வேண்டும் ! அதாவது முன்பு 10 கிலோமீட்டர் வேகம் என்றால் இப்போது 20 கிலோமீட்டர் வேகத்தில் செல்ல வேண்டும் ; இது விதி அல்ல ! கணக்கு ! ஆனால் , கணக்கும் விதியும் ஒன்று தான் ;

Monday, May 28, 2012

55 ThaanthonReeswarar





அருள்மிகுஸ்ரீஅமிர்தவல்லிசமேத
ஸ்ரீதான்தோன்றீஸ்வர
ஸ்தோத்திரப்பதிகங்கள்
========================



விநாயகர் துதி
===========
வெள்ளையாடை அணிந்தோய் போற்றி!
விஷ்ணுவுக்கு உகந்தோய் போற்றி!
நிலவு போன்ற நிறத்தோய் போற்றி!
நான்கு புஜங்கள் உரித்தோய் போற்றி!
புன்னகை தவழும் முகத்தோய் போற்றி!
இன்னல் யாவும் தீர்ப்பாய் போற்றி!
ஒற்றைக் கொம்பை உடையாய் போற்றி!
செற்றோர் அழிக்கும் செல்வா போற்றி!
அரவம் அணிசெயும் இடையோய் போற்றி!
அமிர்த வல்லியின் புதல்வா போற்றி!
தான்தோன்றி ஈசனின் தனயா போற்றி!
தாள்பணிந் தோமே போற்றி போற்றி!
1
முக்கண்ண! உன்தேரை ஒடித்தாண்டு முடிவினில்
மூண்டபகை போக்கியருளும்,
முப்பத்து முக்கோடி தேவர்தமைக் காப்பதில்
முதல்வனென் றாகியருளும்,
எக்கணமும் துதிப்போர்க்கு ஏற்படும் இடரெனில்
எதிர்நின்று நீக்கியருளும்,
இளையவருந் தம்பியின் மணவினை உதவியினில்
யானைவடி வேற்றுவருளும்,
தக்கனென மாங்கனியைப் பெற்றிந்த  வாழ்வினில்
தாய்தந்தை உலகென்றருளும்,
தந்திமுகக் கணபதியும் முந்திவரும்  பாங்கினில்
தவக்கோலம் பூண்டசிவனே!
தக்கவல யாம்செயினும் தடைகடீர்த் தாள்வதில்
தான்முந்தி ஒரகையருளும்
தான்தோன்றி ஈசனே! அமிர்தவலி உடனுறையும்
தம்பதிச மேதபோற்றி!
2
பழம்வேண்டி நின்றானும்  பழமாக ஆனவனும்,
பண்புடன் முன்பு நிற்கும்,
பணிவோர்க்கு உற்றகுறை தீர்த்திடற் கேயெனினும்,
பறந்துவந் தெதிரில்நிற்கும்,
அழவேண்டி என்பிறவி அமைந்ததே தானெனினும்,
அஞ்சலென வேலெடுக்கும்,
அழிவுற்ற தறிவற்ற சூரர்கள் தாமெனினும்,
அவருக்கும் அருள்கொடுக்கும்,
பழிநீக்கி இந்திரனின் பரிவாலே மருகனெனும்,
பதவிக்கு இசைவுதந்தும்,
பாடிவரு வள்ளியவள் பால்கொண்ட நேசமெனும்
பழமையால் வாழ்வுதந்தும்,
தொழுவோரைக் காப்பவன்  சுடர்தந்த வாறுமுகம்
சுப்ரமணி யிடமிருக்கும்,
தான்தோன்றி ஈசனே! அமிர்தவலி உடனுறையும்,
தம்பதிச மேதபோற்றி!
3
ஊன்தோன்றி அன்னையவள் உடல்வலியில் நான்தோன்றி,
ஓய்வின்றி தந்தையுறவும்,
உற்றாரும் மற்றாரும் உதவிடான் என்றிகழ,
உற்றவகை யற்றபோதும்,
ஏன்தோன்றி னோமென்று இம்சையில் வாடுவகை,
எம்பிறவி யளித்தபோதும்,
இயலாமை பிணிமூப்பு பசிக்கொடுமை வறுமையென,
எத்தனை துயர்களெனினும்,
வான்தோன்று முனதுகரு ணையமுது உண்டிங்கு,
வாழுநெறி உதவுதற்காய்,
வழிசெய்ய வேண்டுமென வறியரெமைக் காக்கவென,
வன்காட்டில் தேடிடாமல்,
தான்தோன்றி லிங்கமென  தமியரிடை யங்கமென ,
தாங்கொரகை தங்கியருளும்,
தான்தோன்றி ஈசனே! அமிர்தவலி உடனுறையும்,
தம்பதிச மேதபோற்றி!


4
அற்றதெது வறாததெது அன்புக்குத் தேவையெது
என்பதறி யாதுபடித்தேன்;
அம்மையப்பர் பணியில் அகத்தைச் செலுத்திடா
அறியாமைக் கல்விபடித்தேன்;
உற்றதைச் செய்யாது உறாததைச் செய்கவெனும்
உபாயமறி யாமல்படித்தேன்;
உள்ளொன்று மறைத்துவைத் துதடுபே சும்மென்ற
உலகநெறி தனைப்படித்தேன்;
கற்றதன் படியொழுகி நடவா திருக்கவெனும்
கற்பனை தனைப்படித்தேன்;
கல்நெஞ்சு கொண்டுபிறர் கண்ணீரில் மல்கவெனும்
கயமைவழி தனைப்படித்தேன்;
தெற்றிதெனத் தெரிந்தேயத் தீமையது  படித்ததால்
மற்றுநீ வரத்துடித்தேன்;
தான்தோன்றி ஈசனே அமிர்தவலி உடனுறையும்
தம்பதிச மேத போற்றி!
5
தந்தைக்கு நிகராக வழிகாட்டவருமெவரும்
தயங்கிடும் படிவளர்ந்தேன்;
தாலாட்டும் அன்னையின்  ஈடில்லா அன்புக்குத்
தவித்திடும் படிவளர்ந்தேன்;
நிந்தைக்கு ஆளாகா நெறிகாட்டிக் கற்பிக்கும்
நியமமில் லாதுவளர்ந்தேன்;
நியாயமனி யாயமெது என்பதனை ஓர்ந்தறியும்
மதியதி லாதுவளர்ந்தேன்;
வந்தேய்த்து வருந்தற்கு வாதம்செய் வாருரைக்கும்
வாக்குநம் பியும்வளர்ந்தேன்;
வாராத இடர்களிலை; சேராத துயர்களிலை;
வருவதினி ஒன்றுமில்லை;
தந்தையே நீயாக தாள்காட்டு வாயாக
தானென்று சரணடைந்தேன்;
தான்தோன்றி ஈசனே அமிர்தவலி உடனுறையும்
தம்பதிச மேதபோற்றி!


6
நன்மையிது தீமையெனும் அறிவிலா வாழ்வுதனை
நன்றென்று நானும்வீழ்ந்தேன்;
நல்லோர்கள் நீதிமுறைச் சொல்லேதும் கேட்காத
நயவஞ்ச னாகவீழ்ந்தேன்;
பன்மையிற் பேசுபண் பாடினை இகழ்ந்துவரும்
படியொருமை பேசிவீழ்ந்தேன்;
பல்லோரும் பரிதவிக்கப் பாவியென் றெனையழைக்கப்
படுகொலைகள் செய்துவீழ்ந்தேன்;
எண்ணிலாச் சொத்துக்கு இதுவுமொரு வழியென்று
கொள்ளைகள் செய்துவீழ்ந்தேன்;
ஏழையரும் கோழையரும் ஏங்கிநிதம் அழுதிருக்க
ஏதங்கள் செய்துவீழ்ந்தேன்;
தன்மையதி லாதபடி தருக்கனாய் வாழ்ந்தபடி
யாலுன்னைத் தேடுகின்றேன்;
தான்தோன்றி ஈசனே! அமிர்தவலி உடனுறையும்
தம்பதிச மேதபோற்றி!




7

காலாலே மிதித்தவனைக் கண்ணப்ப எனவழைத்து,
கருணைமழை யில்நனைத் தாய்!
கல்லாலே எறிந்தவனைக் கடைக்கண் விழிதிறந்து,
கவினருளில் பொலியவைத் தாய்!
கோலாலே அடித்தவனைக் குறையொன்றும் சொல்லாது,
குடிமக்கள் புகழவைத் தாய்!
வில்லாலே எய்தவனை வீரனே எனவியந்து,
வேண்டியதை நீயளித் தாய்!
ஏலேலோ பாடிநிதம் கயல்விற்ற பெண்மகிழ,
என்னவளே எனவழைத் தாய்!
ஏகடியம் பேசிடினும் ஏலாமை ஆற்றிடினும்,
என்னையும் நேர்செய்கு வாய்!
தாலேலோ பாடுநிகர் தாயன்பின் தூயவநின்
தண்ணருட் தாள்பணிந் தேன்!
தான்தோன்றி ஈசனே! அமிர்தவலி உடனுறையும்
தம்பதிச மேதபோற்றி!


8
பசியாலே பதறியது பச்சிளம் சிறுவனெனப்
பாலமுது தந்தாற்றினை!
பழியுற்ற தக்கனாம் தந்தையைத் திருத்தவெனப்
படைகொண்டு போராடினை!
நிசியென்று என்மனது மசியா திருக்கவென
நெடுஞ்சூல மேற்றாண்டனை!
நெறிகெட்ட சூரர்தமக் கறிவூட்ட வேண்டுமென
நின்சக்தி வேலளித்தாய்!
வசைவந்தி டாவாழ்வு வாழுதற் காவதென
பசைமஞ்சள் பூசவைத்தாய்!
வாட்டுகிற நோயறவும் வீடும்நிறை வாகுமென
வேம்புவை நுகரவைத்தாய்!
இசைகேட்டு ஆடுகிற எழில்மயிலை வெல்லுமென
விசையாக ஆடுநிலவே!
இன்னமுது எனுமுனது அருளீய வருகவென
அமிர்தவலி வேண்டுகின்றேன்!


9
நிலவுநீ! கதிரும்நீ! நிறைவாக ஒளிருகிற,
விண்மீனும் நீயல்லவோ!
நினைக்கின்ற தூரமும் நீங்காது படருகிற,
நெடுவானும் நீயல்லவோ!
குலவுகிற தென்றல்நீ! கொடிதாகச் சுழலுகிற,
கொடும்புயலும் நீயல்லவோ!
குன்றுநீ! மலையும்நீ! குளிர்தருக்கள் சூழுகிற,
கொடுங்காடும் நீயல்லவோ!
அலைதவழ் கடலும்நீ! அகலாது விரிகின்ற,
அகண்டமும் நீயல்லவோ!
ஆதிநீ! அந்தம்நீ! அனைத்தையும் சுமக்கின்ற,
ஆதிபரா சக்தியலவோ!
கலைமகளும் அலைமகளும் கனிவாக வணங்குகிற,
மலைமகளும் நீயல்லவோ!
கதியுனது பதகமலம் காக்குமெனப் போற்றுகிறேன்!
கண்பாரும் அமிர்தவல்லீ!

10
சக்திநீ! சலங்கையுடன் எத்திசையும் நடனமிடும்,
சர்வாம்பி கையுமலவோ!
சாத்திரம் காணாத சரித்திரம்  சான்றுசொலும்,

மூத்தவளும் நீயல்லவோ!

முக்திநீ! நத்தியுனை முனைவார்க்கு அருள்புரியும்,
சித்தியவள் நீயல்லவோ!
மூலிநீ! நீலிநீ! மூவுலகும் காத்திருக்கும்
காளியவள் நீயல்லவோ!
பக்திநான் செய்திடவும் பரமனடி எய்திடவும்,
பரிவதுவும் நீயல்லவோ!
பணிவோர்க்கு அருளுவதும் பாவங்கள் நீக்குவதும்,
பார்வதி நீயல்லவோ!
திக்கிலா ஏழைநான் தொழுகிறேன் அன்னையுன்
தூவடி போற்றிதாயே!
தான்தோன்றி ஈசனின் உடனுறையும் தேவியே
தயவீயும் அமிர்தவல்லீ!


Wednesday, May 23, 2012

54 ariyum aranum







அரியும்அரனும்
+++++++++++++++++++
பொன்னேரி திரு ஆயர்பாடியுறை
ஸ்ரீ சௌந்தர்யவல்லி சமேத ஸ்ரீ கரிகிருஷ்ண மற்றும்
பஞ்சேஷ்டியுறை ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீ அகத்தீஸ்வர
ஸ்தோத்திரப் பாசுரங்கள்!
---------------------------------------

கணபதி துதி
---------------
கரிமுகத்துக் கனவானே! கணபதியாம் குணவானே!
கரிகிருஷ்ணன் மருமகனே! கவினறிவின் தலைமகனே!
அரியவர்க்கும் அரியவனே! அகத்தீசன் திருமகனே!
அருளெமக்குத் தருபவனே! அடிபணிந்தோம் தூயவனே!



இருவர் துதி
-----------
கரிகாலன் கோவிலிலே காட்சிதரு பெருமாளே!
அரியவனாம் அகத்தியனால் அன்னைஉமை ஆண்டவனே!
அருந்தவத்தார் இருமுனிகள் ஆவலினால் சேர்ந்துவரும்,
பெரியமனம் கொண்டவரே! ஹரிஹரரே! போற்றுகிறோம்!
===============================================


ஓம் நமோ நாராயணா!
-------------------------------------
பொன்னேரி திரு ஆயர்பாடியுறை
ஸ்ரீ சௌந்தர்யவல்லி சமேத ஸ்ரீ கரிகிருஷ்ணப் பெருமாள்
ஸ்தோத்திரப் பதிகங்கள்
------------------------------------------
கண்ணீரில் மிதக்கவரும் கஷ்டம் நீங்கி,
களிக்கின்ற நாளென்று வருமென் றேங்கி,
சென்னீரை வியர்வையென ஆறாய்ச் சிந்தி,
செய்துவரும் முயற்சியெலாம் வென்று ஓங்கி,
என்னேரம் வாழ்விலினி இடர்தீரு மென்பார்,
இனிதாகத் தான்வாழும் நிலைவேண்டு மென்பார்,
முன்னேர நன்னேரம் நெருங்கிவரும் போதில்,
மூடிவரும் குளம்மீள ஏங்கிவரும் மீன்கள்,
தண்ணீரைத் தான்தேடி வருகின்ற தகைபோல்,
தக்காரின் மொழிகேட்டு, கரிகிருஷ்ணன் ஆளும்,
பொன்னேரி தான்தேடி வருகைதரு வாரே!
புன்னகையும் மிகப்பெற்று பொலிவுபெறு வாரே!
---------------------------------------------------------------


1
கரிகாலன் கட்டியதால் கரிகிருஷ்ணன் ஆனாயோ?
கரியுன்னைக் காட்டியதால் கரிகிருஷ்ணன் ஆனாயோ?
கரிபோலே நிறமுனக்கு! அதனாலப் பேர் உனக்கா?
கரிமேகம் போன்றவனே! கருணைமழை பொழிபவனே!
2
சுற்றும் வினைகளெமைச் சூழாது தடுத்திடவும்,
சற்றும் மனந்தளரா சன்மார்க்கம் கொடுத்திடவும்,
புற்றும் கரைந்துருகப் பெரிதாகத் திரிந்தவனே!
சுற்றம் நீயென்றே சூழுகிறோம் கரிகிருஷ்ணா!
3
அஞ்சுபவர் வாழ்விலினி அச்சங்கள் நீங்கிடவும்,
வஞ்சகர்கள் சூழுகிற எச்சங்கள் தீர்ந்திடவும்,
வழுத்தும் எம்வாழ்வில் வளங்கள் ஓங்கிடவும்,
வருவாய் அருள்தருவாய்! வண்ணா! குலமன்னா!
4
ஆசு ரந்தபால் ஆதி உண்டவன்!
ஆதி சேஷன்மேல் பள்ளி கொண்டவன்!
நாசு ரந்தபா நாளும் பருகுவன்!
பாசு ரங்களைப் பாடி வருகவே!
5
ஆயர் பாடியுறை ஆயர்கள்கண் டெடுத்தவனே!
ஆயர் குலத்துதித்து ஆனிரைகள் சேர்த்தவனே!
நேயம் தழைத்திடவே வேய்ங்குழலை எடுத்தவனே!
மாயம் அழித்தெமது வாழ்விலிடர் தீர்ப்பவனே!
6
சாய்ந்தாலும் சாயாத ஆயக் கண்ணன்!
சாய்ந்தாரைச் சாய்க்காத அபயக் கண்ணன்!
மாய்ந்தாரை வாழ்விக்கும் மாயக் கண்ணன்!
பாய்ந்தோடி வருகின்ற நேயக் கண்ணன்!
7
பெருமாளின் தலத்தினிலே மகிழ மரம்!
வருகின்றோர் நலத்தினிலே மகிழு மரம்!
வாடினுமே நறுமணமே திகழு மரம்!
வாடியவர் குறைதீர்ந்தே புகழு மரம்!
8
தீங்குவரின் தாங்கவரும் நீல வண்ணன்;
தீயவரை மாய்த்தொழிக்கும் ஆழிக் கையன்;
தூயவளாம் துரோபதையின் அன்பு அண்ணன்!
துயர் துடைத்து நமைக்காக்க முந்தும் ஐயன்!
9
கதிரவன் கிரணம் கருவறை தவழும்;
மதிமுகம் தன்னில் புன்னகை திகழும்;
நின்றகோ லத்தில் திருமகள் தரிசனம்;
சென்றபேர்க் கெல்லாம் நன்மைகள் நிதர்சனம்!

10
சௌந்தர்ய வல்லியால் சௌந்தர்யம் கூடும்;
சௌந்தர்ய வல்லியால் சம்பத்து நாடும்;
சௌந்தர்ய வல்லியால் சங்கடம் தீரும்;
சௌந்தர்ய வல்லியால் சகலமும் சேருமே!

====================================

ஓம் நம சிவாய
===============
பஞ்செட்டி என வழங்கும்,பஞ்சேஷ்டியுறை
ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத ஸ்ரீஅகத்தீஸ்வர
ஸ்தோத்திரப் பதிகங்கள்
_____________________________________________

ஊரெட்டும் நமைச்சுற்றி வருவ தன்றி,
ஓரெட்டுச் சித்திகளும் தருவ தென்ன?
ஈரெட்டாய் எந்நாளும் வாழ்வ தன்றி,
ஈரெட்டுப் பேறுகளால் விளைவ தென்ன?
மூவெட்டில் மண்ணளந்தான் மைத்து னர்க்கு,
முன்வந்து வணங்கற்கு மயக்க மென்ன?
நாலெட்டுப் பல்போன பிறகு நம்மால்,
நடந்துவரல் அரிதென்றே அருகே நான்கு
அஞ்செட்டில் அமைதிதரும் பாங்கில் நாளும்,
அயராமல் அமர்ந்துஅருள் பொங்க ஆளும்,
பஞ்செட்டித் தலமுடையான் பரிந்து வந்தால்,
பக்தர்நமின் பாவவினை பறந்தி டாதோ?
--------------------------------------------------------------- 



1
சோழர்கள் காலத்தில் ஆலயமே கண்டவனே!
சுகமாக வில்வத்தின் நிழலடியைக் கொண்டவனே!
ஆழியிலே எழுந்திட்ட ஆலத்தை உண்டவனே!
அன்பான உமையவளால் அற்புதமாய் மீண்டவனே!

2
அகத்தியன் அறிவுரையால் ஆன்றதவம் செய்யவென்று,
அன்னையாம் உன்கரத்தால் அன்றெழுந்து வரப்பெற்று,
அகத்தீஸ் வரனென்றே அதனாலே பேர்பெற்று,
அல்லல் அகன்றதனால் ஆனந்த வ(ல்)லியானாய்!
3
அஞ்சும் நிலைவிடுத்து, அறத்தைக் கையெடுத்து,
அகந்தை அறுத்தெறிந்து, அகத்தில் நிறுத்துதற்கு,
அகத்தைத் திருத்தியுந்தன், அருளைப் பெறுவதற்கு,
அகத்தீஸ் வரவுன்னை அனுதினம் வேண்டுகிறோம்!
4
ஆழியில் எழுந்த ஆலத்தை உண்டவன்!
அரவம் மாலையாய்க் கோலத்தில் கொண்டவன்!
காளையில் அமர்ந்தே ஞாலத்தில் ஊர்பவன்!
காரணன் அரனைப் பரவியே வருகவே!
5
உமையவள் பூஜித்த உமையொரு பாகன்;
உணவென யாசித்த யாகஅவிர்ப் பாகன்;
சூரரைத் தண்டித்த தீரதேர்ப் பாகன்;
குறைமதி கண்டித்த பிறைதலைப் பாகன்!
6
திருத்தொண்டு செய்திடவே தவமேற் கொண்ட
கருத்தின்றி செய்தஉமை அவமே கண்டு,
கொதித்ததனால் பதிஈசன் கொடுத்த சாபம்,
கெடுத்ததுதான் ஆனந்த தீர்த்த மாகும்!
7
பெருமானின் கோவிலிலே அக்னி தீர்த்தம்;
பௌர்ணமியில் மூழ்கையிலே துக்கம் தீர்க்கும்;
நெய்யினிலே விளக்கேற்றின் மிகசி லாக்யம்;
கையினிலே அளிப்பானே சகல பாக்யம்!
8

தீங்குகளைச் சுட்டெரிக்கும் வெற்றிச் சித்தன்;

ஏங்கிவரு வோரணைக்கும் பெற்றிப் புத்தன்;
நீறணிந்த மேனியனாய் அலையும் பித்தன்;
நித்தமொரு நாடகமே ஆடும் எத்தன்!
9
பௌர்ணமி நிலவின் பனிக்கதிர் தவழும்;
பனிக்கதிர் படிந்தே பொற்குளம் திகழும்;
பொற்குளம் மூழ்கின் உமையவள் வருவாள்;
உமையவள் வருகை உயர்வினைத் தருமே!
10
ஆனந்த வல்லியாள் ஆக்கமே தருவாள்;
ஆனந்த வல்லியாள் ஊக்கமே தருவாள்;
ஆனந்த வல்லியாள் ஆனந்தம் தருவாள்;
ஆனந்த வல்லியாள் அனந்தமும் தருவாள்!






Thursday, May 17, 2012

53 jeeva haruNyam

ஜீவஹாருண்யம்
----------------------



                                                         
அன்பே கடவுள்! வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்!
God is love! Love is god! Where love is; There God is!
உயிர்களிடத்து அன்பு வேண்டும், என்பதை வெளிப்படுத்தும் சொற்றொடர்கள் இவை! அனைத்து உயிர்களிடமும் அன்பு காட்ட வேண்டும், என்பது அவசியம் தான்! ஆனால் அதில், நடைமுறையில், சில விதிவிலக்குகளும் இருக்கின்றன, என நாம் உணர வேண்டும்!
முதலில் நமது முன்னோர்கள், உயிர்களிடம் எவ்வாறு அன்பு காட்டினார்கள், என்று பார்ப்போம்!

இரைக்காக, பருந்து விரட்டி வந்த புறா ஒன்று, அடைக்கலம் என்று கூறி, மன்னன் சிபியின் மடியில் விழுந்தது! புறாவைத் தூக்கி எடுத்த சிபி, புறாவையும் காப்பாற்ற வேண்டும்; பருந்தின் பசியையும் போக்கவேண்டும் என்று, தன் தொடையிலிருந்து தசையை அரிந்து கொடுத்துப் பருந்தின் பசியைப் போக்கினான்!

"அன்பிலார் எல்லாம் தமக்குரியர்; அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு"
வேடனின் அம்பு பட்டு, வீழ்ந்த புறாவுக்கு மருந்திட்டுக் கட்டி, காயத்தைக் குணமாக்கி, பறக்கவிட்டு மகிழ்ந்தவர் புத்தர்!
அதோடு, பலியிடுவதால், பலன் ஒன்றுமில்லை! பாவம் தான் வரும், என்று எடுத்துக் கூறி, ஒரு மன்னன், யாகத்தில் பலியிடக் கொண்டு சென்ற மாடுகளைக் காப்பாற்றியவர், புத்தர் பெருமான்!
"அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்,
உயிர்செகுத் துண்ணாமை நன்று"
ஆடுகளை மேய்த்துப் பசிநீக்கி, நடக்கமுடியாத ஆடுகளைத் தன் தோளில் சுமந்து மகிழ்ந்தவர் இயேசு பெருமான்!
வைகுண்டம் சென்ற வழியில், நோயுற்றுத் தள்ளாடி, அவல நிலையில் இருந்த ஒரு நாயை, அதன் காயங்களிலிருந்து வடிந்த சீழையும் பொருட்படுத்தாமல், தன் தலையில் தூக்கிச் சுமந்தவன், பாண்டவ தர்மன்!
"விருந்து புறத்ததாத் தானுண்டல்; சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று"


பசுவின் கன்றை, தேர்க்காலில் நசுக்கிக் கொன்றவன், தன் மகன் என்றும் பாராமல், அதே தேர்க்காலை ஏற்றி, நசுக்கித் தன்மகனைக் கொன்று நீதியை நிலை நாட்டியவன், மனுநீதிச் சோழன்! இவ்வாறு உயிர்கள் அனைத்துக்கும், கருணை காட்டியவர்கள்தான் நமது முன்னோர்!
தற்போது, மிருக வதை கூடாது என்பதை வலியுறுத்த பல்வேறு அமைப்புகள் தோன்றியுள்ளன. அவற்றுள் பிரபலமானது, S.P.C.A.(Society for Prevention of Cruelty to Animals) எனப்படும், மிருக வதை தடுப்பு சங்கம் ஆகும்!
செல்லமாக வளர்க்கும் பிராணிகளை நல்முறையில் வளர்க்கவேண்டும்!
வண்டியிலோ, ஏர்களிலோ பூட்டப்படும் மாடுகளைத் துன்புறுத்தக் கூடாது! அவற்றை, நல்ல முறையில் உணவிட்டுப் பராமரிக்க வேண்டும்!
சுதந்திரமாகத் திரியும் பறவைகளையும் விலங்குகளையும் பிடித்துக் கூண்டில் அடைக்கக் கூடாது! அப்படிப் பிடித்து அடைத்தாலும், அவற்றை நல்லபடியாகக் கவனிக்க வேண்டும்!
போன்ற விதிமுறைகளை வகுத்துள்ளன!
எல்லாம் சரிதான்! ஆனால் நமக்குத் துன்பம் தருபவற்றைக்கூட ஒன்றும் செய்யக்கூடாது, என்று விநோதமான கட்டுப்பாடுகளையும் விதிக்க ஆரம்பித்துள்ளன! அதாவது மனித உயிர்களை விட விலங்குகளின் உயிர்கள் மேலானது என்று ஆகிவிட்டது!

தெருநாய்கள் கூடி ஒரு சிறு பையனை இழுத்துச் சென்று தின்று விட்டது!
ஒரு நாய் கடித்துக் குதறி, ஒரு குழந்தையைக் கொன்று விட்டது!
நள்ளிரவில் கிராமத்துக்குள் புகுந்து, பலபேரைக் கடித்து சிறுத்தை அட்டகாசம்!
வயல்களில் பயிரிடப்பட்டிருந்த, கரும்பு, வாழைப் பயிர்களை அழித்து யானைகள் அட்டகாசம்!

சாலைகளின் குறுக்கே நின்று யானைகள் மறியல்!
போன்ற செய்திகள், நம் மிருக வதைக் கொள்கைக ளில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதை உணர்த்துகின்றன என இவர்கள் ஏன் இன்னும் உணரவில்லை என்பது வியப்பளிக்கிறது!
"வேங்கை வரிப்புலி நோய் தீர்த்த விடதாரி, ஆங்கதனுக் காகாரம் ஆனாற்போல்" என்கிறது ஒரு நாலடியார் பாடல்!
ஒரு மனிதன் கொடுஞ்செயல் செய்தால் தவறு! ஆனால் அதை ஒரு விலங்கு செய்தால், தவறில்லையா?
தன்னைக் கொல்லவரும் பாம்பைக் கொல், என்கிறது ஒரு பழைய மொழி!
"கொலையிற் கொடியாரை வேந் தொறுத்தல், பைங்கூழ் களைகட் டதனொடு நேர்" என்றும் வள்ளுவம் கூறுகிறது!இது மனிதருக்கு மட்டு மல்ல; விலங்குகளுக்கும் பொருந்தும்!மன்னராட்சியில் மன்னர்கள் வேட்டைக்குச் சென்றது, பொழுது போக்குக்காக அல்ல! விலங்குகளை ஒரு கட்டுப்பாட்டில் வைக்கத்தான்! இன்று அத்தகைய பயம் விலங்குகளுக்கு இல்லாமற் போய்விட்டது!
ஜீவஹாருண்யம், இப்படி ஆகிவிடக் கூடாது!
ஒரு துறவியார் இருந்தார்! உயிர்களிடத்து அன்பு செயல் வேண்டும் என்னும் கொள்கை உடையவர் அவர்! எந்த உயிரையும் வருத்தமாட்டார்! அவை
வருந்துவதைப் பார்க்கச் சகிக்கவும் மாட்டார்!
நண்பகற்பொழுதில், நல்ல வெயிலில், ஊருக்கு வெளியே குளக்கரையிலிருந்த ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்து, தன்னை ஆசுவாசம் செய்துகொண்டிருந்தார்!
பக்கத்தில் ஒரு புற்றில், எறும்புகள், சாரை சாரையாகத் தங்கள் வாயில் இரைகளைக் கவ்வி எடுத்துசென்ற காட்சியைக் கண்டு மகிழ்ந்தார்!
குளத்தில் அவர் பார்வை திரும்பியது! அந்தோ! ஒரு எறும்பு நீரில் விழுந்து தவித் துக் கொண்டிருந்தது! திடுக்குற்ற துறவி யார், நீளமாகத் தான் வளர்த்திருந்த தாடி யின் நுனியை, நீரில் கிடந்த எறும்பின் பக்கத்தில் தொங்கு மாறு செய்தார்! எறும்பு தாடியின் முனையைப் பற்றிக் கொண்டது! மனம் மகிழ்ந்த துறவியார், அப்படியே எறும்போடு, புற்றுக்கு அருகில் வந்து, எறும்பு இறங்கிச் செல்லட்டும் என்று, தன் தாடி முனையை புற்றின் மேல் தொங்கவிட்டார்! தாடியிலிருந்த எறும்பு இறங்கிச் செல்வதற்குப் பதிலாக, புற்றிலிருந்த எறும்புகள் வரிசையாக அவர் தாடியில் ஏறி அவரைக் கடிக்கத் தொடங்கின! வலி பொறுக்காமல் உதறிப் பார்த்த துறவியார், அவை இறங்காமல், மேலே மேலே ஏறியதால், இருகைகளையும் தாடியோடு சேர்த்துத் தேய்த்து, நசுக்கி, எறும்புகளைக் கொன்றார்! அவருடைய ஜீவஹாருண்யம் கடைசியில் இந்த நிலைக்கானது! இதனால், அவர் ஜீவஹாருண்யம் இல்லாதவரென்று பொருளல்ல! அதிலும் சில விதி விலக்குகள் உள்ளன என்று புரிந்து கொள்ளாத ஜீவஹாருண்யம்!                                                    



உலகில் நாம், உற்பத்தி செய்கின்ற மொத்த உணவுப் பொருளில், பதினைந்து சதவீதத்தை, எலிகள் நாசம் செய்கின்றன, என்ற கணக்கு நம்மைக் கவலை அடையச் செய்கிறது! ஒரு எலியைக் கொன்றால், பத்து ரூபாய் என்று வரும் அளவுக்கு அதன் தொல்லை அதிகரித்திருக்கிறது!




ஆஸ்திரேலியாவில்,கங்காருக்களின்எண் ணிக்கை அந்நாட்டு மக்கள் தொகையை விட அதிகமாகி விட்டபடி யால், அதற்கு என்ன தீர்வு அவற்றை என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள்!

கொலை செய்த ஒருவனைத் தூக்கில் போடலாமா? என்று யோசித்துக் கொண்டிருக்கிறோம்! ஏனென்றால், அது ஜீவஹிம்சை!

ஐந்து வயதுச் சிறுமியைக் கற்பளித்து, அவளைக் கொன்றும் புதைத்துவிட்ட ஒரு காமுகக் கொலைகாரனுக்கும் கருணை காட்ட வேண்டும்?
"பகைவனுக் கருள்வாய் நன்னெஞ்சே" என்று, பாரதி இதைத்தானா பாடினான்?
நூறு பேரைக் கொன்ற ஒரு தீவிரவாதிக்கு வாதாட, மனித உரிமைக் கழகம், வரிந்து கட்டி வருகிறது! அவனால் நூறு குடும்பங்கள் நாசமானதைப் பற்றி அவர்கள் கவலைப் படவில்லை! இன்று தீவிரவாதிகள் நம்மவர்களையே பணயக் கைதிகளாகப் பிடித்துச் சென்று நமக்கே சவால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்! வளர்ப்புப் புறாவைத் தாக்கிக் கொல்லப் பாய்ந்து வருகிறது ஒரு பூனை! கருணை எதற்குக் காட்ட வேண்டும்? பூனைக்கா? புறாவுக்கா? விலங்குகளிடம் கருணை காட்ட வேண்டும் என்றால் எந்த விலங்குக்கு?
கொள்ளையடித்து விட்டுத் தப்பிச்செல்லும் ஒரு திருடன் காவலர்களைத் தாக்கிக் கொன்றாலும் கவலை இல்லை! அவனைச் சுடக்கூடாது என்று அவனுக்குத் துணை போகின்றன, இந்த ஜீவஹாருண்ய சங்கங்கள்!
அவர்கள் பார்வையில், கொலை செய்பவர்கள், கொள்ளையடிப்பவர்கள் மற்றும் பெண்களைக் கற்பளிப்பவர்கள் ஆகியோர்தான் பரிதாபப் படத்தக்க மனிதர்கள்! அவர்களுக்குத்தான் கருணை தேவை!
உணவுக்காக உயிர்களை வதைக்கலாம்! ஆனால் உபத்திரவம் செய்கின்ற அவற்றை தண்டிக்கக் கூடாது! கருணை, விலங்குகளுக்கு மட்டுமே! காட்டப் படவேண்டும்! மனிதர்களுக்கு அது தேவையில்லை! இதுதான் இன்றைய ஜீவஹாருண்யம்!
"துஷ்ட நிக்ரஹம்; சிஷ்ட பரிபாலனம்" என்று கீதை சொன்னதை, மறந்து விட்டோம்!
இவ்வுலகில் அனைத்து உயிரினங்களும் ஒரு சம நிலையில் இருக்கவேண்டும் என்று தான் ஒன்றுக்கு மற்றொன்று என்ற கணக்கில் படைக்கப் பட்டுள்ளன! நிலைக்கு ஏற்றவாறு, காரண காரியத்தோடு, என்ன செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்து, நம் ஜீவஹாருண்யத்தைத் தொடர்ந்து, மனித உயிர்களையும், மற்ற உயிர்களையும் மதித்துக் காப்போமாக! காரண காரியம் இல்லாத எந்தச் செயலுக்கும் அர்த்தம் இல்லாமற் போய்விடும்!
"இளைதாக முள்மரம் கொல்லுக; களையுனர்,
கைகொல்லும் காழ்த்தவிடத்து" -------குறள்