விருதை.தி.ரெங்கசாமிப்புலவரின்,
முருகன்தசமத்திருப்புகழ்மற்றும்திருப்பதிகப்
பாமலர்கள்
-----------------------------------------------------------------------------------------------------------
தசமத்திருப்பதிகமலர்கள்
------------------------------------
(1)
கருதைத் தொருபத் தெனுதிங் கள்கழிந்
துருவைத் துமகன் மகளென் றிட வுற்
றிருளொற் றிடபற் பலவின் னல்களு
மறுதற் கருளாய் விருதைக் கரசே!
(2)
கதமுற் றகரக் கொடிகுக் குடனே,
இதமுற் றுனையென் புருகத் தொழவே,
மதமுற் றிடுவஞ் சகலா மயல்சேர்,
விதமற் றிடுவித் தகமெய்க் குருவே!
(3)
மழலைக் குறுமாண் புடைனன் மனமோ,
குழலுக் குனைவேண் டுவதோர் வரமே,
விழலுக் கழிவார் தகுவேன் கணுவந்
தழலொப் பிணியா றவருட் குழகா!
(4)
சுரருற் றசிறைக் களைசுப் பிரம
ணிரவுற் றவிலுக் கிணைநேர்க் குழகா!
அரபுத் திரவச் சுதனின் மருகா!
விரதர்க் கறிவீ விருதைக் குரியாய்!
(5)
பயிலாப் பருவத் திடையென் மனமோ,
அயிலொக் ககளைப் புகுமஃ தறிவேன்!
மயிலுக் கரணிற் பதமா கையிலோ,
வெயிலொக் கவினைக் களைவேர் களையாய்!
(6)
மஞ்சக் கரமா மெனுமா தவர்கள்,
நெஞ்சக் கரவோ டுறுநீள் வினைகள்,
துஞ்சக் கரவேல் விருதைக் குரியாய்!
அஞ்சக் கரவா றுமுகப் பொருளே!
(7)
பணிமிக் குயர்பட் டணியப் பருவம்,
துணிவுற் றமையற் கொழுனெஞ் சினனாய்,
அணியுற் றவயிற் றில்புகுந் துழலா,
மணியொத் துழைமல் கழுதொக் குமரா!
(8)
அடவிக் கிணையா மெனுமிக் கொடிய,
புடவிக் குளலைப் படுசொற் புழுவேன்,
திடவிக் ரமவீ ரகுகா வெனவே,
நடவித் தருளா யிறைநா யகனே!
(9)
கிழமுற் றுபொறிப் புலனிங் கவையே,
கழலுற் றுயிர்கா லர்பினே குமுனம்,
தொழவெற் குனிணீ டருடா டருவாய்!
வழமுற் றவிரு தையில்வாழ் மணியே!
(10)
கருதற் கரிதா யவெழுத் தெண்ணே!
பெருதற் கியலா மனமுட் பிசகன்,
உருதற் குனதீர் பதமே தருவாய்!
விருதைப் பதிமே வியவிண் மணியே!
தசமத்திருப்புகழ்மலர்கள்
-------------------------------
(1)
(1)
வாரிகுவ டாகாய பூமிகா லங்கிவான்
மற்றுமுள வற்றுநீயே!
மதியிரவி கோள்கனீ திதிகரண யோகனீ!
மன்னுபக லிரவென்பனீ!!
தேரின்வரு டங்களொடு ராசிகிர கங்கனீ!
திரிபுவன முண்டவனுனீ!
திகழ்கின்ற பல்லுயிர்க் குயிருனீ அட்டகரி,
திசைகளது மாயவனுனீ!
பாரினன் நயமல்ல நயமாகு பவனுனீ!
பன்னிறப் பேதநீயே!
பகர்கின்ற மெய்வாய் செவிக்கண்க நாசிதம்
பண்பினொளி ரானிற்குனீ!
கூரினின் னருளல்ல தில்லைநற் கோவிலெழில்
கொண்டவிரு தைப்பதியில்வாழ்,
குகசரவ ணாகந்த பகவதிசு தானந்த
குருசுப்ர மண்யதேவே!
(2)
தவநெறியி யற்றுதவ ருற்றசிறை யற்றிடச்
சரவணை யுகந்தமணியே!
தரணிமிசை குன்றுதோ றாடல்புரி தன்யனாம்
சண்முகத் தூயமணியே!
அவமென்று ஆக்குதொழில் கர்த்தனைச் சிறையுற்று
அகமன்பு கூருமணியே!
அன்றுகை லாயனுக் குறுதிபெறு வாய்மையை
அறைந்துபுக ழுண்டமணியே!
நவமான தொருசதத் தொருதசத் தீரண்ட
ராஜனுடல் கீண்டமணியே!
நயமிகு படைத்தவயி ராவதன் வேண்டசுர
நாகமென் கனிகொண்மணியே!
குவலயம் இன்புறக் கத்துசங் கொலிக்குமெழில்
கோநகர் விருதைவாழும்
குகசரவ ணாகந்த பகவதிசு தானந்த
குருசுப்ர மண்யதேவே!
(3)
பிண்டம் பிடித்துமொரு குழவியென வீராறு
பின்காம வெறிபிடித்தேன்!
பின்காம வெறிபிடித்தேன்!
பெரியோ ரிடத்தணுகி நல்லவல் லதையோரும்
புத்தியென் பதைவிடுத்தேன்!
புத்தியென் பதைவிடுத்தேன்!
கண்டமெத் தனையுள்ள தோவெற் கிதற்குமுன்
கண்டகன வோகணக்கில்!
கருதவரு பொருடேட கபடுவஞ் சம்பொய்மை
கடைப்பிடித் தேயொழுகினேன்!
பண்டைய ருரைத்தனூ னூனுளே னென்னுபண்
பாகுமொழி தனைமறந்தேன்!
பலதாயும் பலசேயும் அம்மாவை யோவென்ன
படுகொலை களும்புரிந்தேன்!
குண்டனம கண்டமிடி துண்டவினை சண்டனெனை
கொள்வதினி எவ்வாறதோ?
குகசரவ ணாகந்த பகவதிசு தானந்த
குருசுப்ர மண்யதேவே!
படுகொலை களும்புரிந்தேன்!
குண்டனம கண்டமிடி துண்டவினை சண்டனெனை
கொள்வதினி எவ்வாறதோ?
குகசரவ ணாகந்த பகவதிசு தானந்த
குருசுப்ர மண்யதேவே!
(4)
கற்றமர வியலாத கடையனைக் கசடனைக்
கன்னெஞ்ச முறுசோம்பனைக்
கடுகடுத் தேசிடினும் கணமேனு முன்கருணை
கடைவிழித னானோக்குவாய்!
கன்னெஞ்ச முறுசோம்பனைக்
கடுகடுத் தேசிடினும் கணமேனு முன்கருணை
கடைவிழித னானோக்குவாய்!
உற்றவுற வோர்சுற்ற மற்றையரு முனையன்றி
உற்றதுணை எனக்காவரார்?
உனைநம்பு மெளியேனுக் குதவுமரு ளப்பனே
உத்தமர்த மக்கதிபனே!
உற்றதுணை எனக்காவரார்?
உனைநம்பு மெளியேனுக் குதவுமரு ளப்பனே
உத்தமர்த மக்கதிபனே!
பெற்றதாய் தந்தைகுரு தெய்வனீ யல்லாது
பிறிதுலகி லெவருமுண்டோ?
பிறிதுலகி லெவருமுண்டோ?
பிழையுற்ற நாயினேன் பிழைகடீர்த் துன்பாத
பெற்றியை எனக்களிப்பாய்!
பெற்றியை எனக்களிப்பாய்!
குற்றமல் குறுமசுரர் கிளைவே ரறுத்தவா
கொடிநகர நடுவானவா!
குகசரவ ணாகந்த பகவதிசு தானந்த
குருசுப்ர மண்யதேவே!
(5)
தனமாடு மாடுமனை மக்கள்சுற் றம்உறவு
தம்மின்மன மூழ்கிநொந்தேன்!
தமியேனு முலகமிசை உண்மைநிலை செல்லாது
சஞ்சலமி குந்துநொந்தேன்!
முனமேதி கழ்ந்ததவ யோகஞா னஞ்சிறிது
மொன்றாதி டிந்துநொந்தேன்!
முற்றுமதி யாயன்பி நெறிபெற்று உய்யுமோ
ருபாயமறி யாதுநொந்தேன்!
வனமாகு மிருண்மனமு முட்புதரெ னாங்கார
மமதையென் பதனினொந்தேன்!
வண்டனெனை யாட்கொள்வ துன்பார மாதலால்
வையமிசை யாருண்டுகொல்?
குணமாலி காபரண னேமாட கூடனிறை
கொடிவிருதை யம்பதியில்வாழ்,
குகசரவ ணாகந்த பகவதிசு தானந்த
குருசுப்ர மண்யதேவே!
கொடிநகர நடுவானவா!
குகசரவ ணாகந்த பகவதிசு தானந்த
குருசுப்ர மண்யதேவே!
(5)
தனமாடு மாடுமனை மக்கள்சுற் றம்உறவு
தம்மின்மன மூழ்கிநொந்தேன்!
தமியேனு முலகமிசை உண்மைநிலை செல்லாது
சஞ்சலமி குந்துநொந்தேன்!
முனமேதி கழ்ந்ததவ யோகஞா னஞ்சிறிது
மொன்றாதி டிந்துநொந்தேன்!
முற்றுமதி யாயன்பி நெறிபெற்று உய்யுமோ
ருபாயமறி யாதுநொந்தேன்!
வனமாகு மிருண்மனமு முட்புதரெ னாங்கார
மமதையென் பதனினொந்தேன்!
வண்டனெனை யாட்கொள்வ துன்பார மாதலால்
வையமிசை யாருண்டுகொல்?
குணமாலி காபரண னேமாட கூடனிறை
கொடிவிருதை யம்பதியில்வாழ்,
குகசரவ ணாகந்த பகவதிசு தானந்த
குருசுப்ர மண்யதேவே!
(6)
மண்டமகி ழுற்றுயான் வாழவேண் டும்மனமு
மாறாதி ருக்கவேண்டும்!
மனுவாதி புற்பூண்டு சகலஉயிர் தம்மினும்
மாகருணை யுற்றல்வேண்டும்!
தெண்டமென் றுற்றகுறை சொல்லிவரு மேழைதுயர்
செய்கையாற் தீர்த்தல்வேண்டும்!
சேய்பெண்டு தாய்தந்தை சோதரர்கள் மற்றுதம்
சுற்றமகிழ் வித்தல்வேண்டும்!
தண்டமென் றெண்ணாது தன்குட்சி வாதையைத்
தணியவித் திடுதல்வேண்டும்!
ததிவேண்டு மன்பாகு நிதிவேண்டு முனதுபத
கதிவேண்டு மென்னையனே!
கொண்டநிகர் பொழில்சூழும் குளிர்சோலை கள்தவழும்
கொற்றவிரு தையின்முதலே!
குகசரவ ணாகந்த பகவதிசு தானந்த
குருசுப்ர மண்யதேவே!
(7)
ஆன்மாநி லத்திலுற் றசரசர மாயுலகு
அனைத்துமொன் றாயிலங்கும்,
அதினுட் பிறப்பிறப் பெனுமுடம் பெழுவகைத்
தாகுபே தங்களென்ப
கோன்மாநி லைக்கற்கு சரவத்து வாமதன்
குறியிலக் கோமேலதாம்;
குறையிலா மானிடப் பிறவிகொண் டிங்ஙனம்
குறையுண் டிருப்பதென்னோ?
குறையிலா மானிடப் பிறவிகொண் டிங்ஙனம்
குறையுண் டிருப்பதென்னோ?
தோன்மாந ரம்பென்பு தசைமூளை நிணமாக
சேர்வித்த நின்கழற்கே
தொக்குநெறி பெற்றுயா னுய்யவும் கருணைபொழி
தோன்றலே! சுகவாரியே!
கூன்மாற னுக்குவிட நோய்தீர்த்த பண்டிதா
குமரனே விருதைமேவும்
குகசரவ ணாகந்த பகவதிசு தானந்த
குருசுப்ர மண்யதேவே!
(8)
கொண்டல்தரு உன்னொப்பு மாகுமோ ஈவதில்
கோதிலா நின்னருளினால்;
கொண்டாடு மன்பரிடர் திண்டாடு நேர்மைசெய்
குணமஞ்ச னற்றழகனே!
கண்டமரு ஞானிகட் கிடர்தீர்க்கு தேனேசெங்
கரும்பேசெ ழும்பாகுசேர்,
கனிமதுர மே!பழக் கசடுற்று வாடுமென்
கதியிதய வாதையுற்று,
விண்டலரு மெளியேனைத் துயருறுதல் வேண்டற்க
வென்றுரைவி ளம்பலரிதோ?
வென்றுரைவி ளம்பலரிதோ?
விண்ணிலவெ ரிக்குமெழில் பன்னயமு ரைக்குமுனை
வேண்டினே னீண்டருளுவாய்!
குண்டலருத் ராட்சமொடு குளிர்கடம் பும்புனையும்
கூர்வெற்றி வேல்கொண்டவா!
குகசரவ ணாகந்த பகவதிசு தானந்த
குருசுப்ர மண்யதேவே!
(9)
மாரியும் தெய்வமும் மாண்பாகு மேல்தருண
மாழ்கிடா துதவநெறியோம்!
மனமுடைந் துறுதிகெட் டுயிர்போய பின்னுதவ
வந்தெனை? வராதுமென்னை?
கோரியுரு சேய்க்கன்னை யாம்பசிக் குணவீயும்
கொள்கைநீ யறியாததோ?
கொடும்பாவி வன்னெஞ்சன் குணமிலே னெனினுமுன்
குரைகழற் காளாக்குவாய்!
பாரினின் புகழ்பேசு மருணகிரி கீரற்கு
பதவாழ்வு தந்தாண்டனை!
பலவந்த மாமுன்ப ழக்கவிபொய் யாமொழியை
பக்திமா னென்றேற்றனை!
கூரியம னக்கணுற் றென்னைநேர் செய்குவாய்!
குபேரபுரி விருதையாளும்
குகசரவ ணாகந்த பகவதிசு தானந்த
குருசுப்ர மண்யதேவே!
(10)
மானிடர்க் கேவுய்யு மார்க்கமென் றுண்மைமொழி
மன்னுபல மறைபுகலுதே!
மாயையிற் பிணிபட்டு உழலாது உன்னினைவில்
மனமுருகு மார்க்கமுன்னால்
தானிடவதிற்செல்லு தகவுளே னாகையுன்
தயைவேண்டு மென்னையனே!
ததியுனது பதகமல தண்டே னளித்தின்ப
சன்மார்க்க நன்மார்க்கமே,
பூணிட வரத்துங்க போதகா பொய்மைனிறை
தானிடவதிற்செல்லு தகவுளே னாகையுன்
தயைவேண்டு மென்னையனே!
ததியுனது பதகமல தண்டே னளித்தின்ப
சன்மார்க்க நன்மார்க்கமே,
பூணிட வரத்துங்க போதகா பொய்மைனிறை
புந்திதொலை விக்குபுனிதா!
பொல்லாத வள்ளியவள் தேவானை யுடன்தோன்றி
பொல்லாத வள்ளியவள் தேவானை யுடன்தோன்றி
பதிவிருதை மேவியருளும்
கோனிடம தாயுறையும் அன்பர்கள் கொண்டாடு
குமரகுரு பரதேசிகா!
குகசரவ ணாகந்த பகவதிசு தானந்த
குருசுப்ர மண்யதேவே!
குமரகுரு பரதேசிகா!
குகசரவ ணாகந்த பகவதிசு தானந்த
குருசுப்ர மண்யதேவே!

.jpg)



No comments:
Post a Comment