Pages

Tuesday, December 3, 2019

100-STUDENTS'S ROLE


                                          ROLE OF STUDENTS




Let us swear that
let us be obedient to our parents
let us respect our elders
let us follow the teachings of teachers
let us be away far from politics and
let us avoid all irregular activities
that is only our duty to complete our studies successfully
let us be aware of cleanliness of environment that contains
breathing air, drinking water and food and nature
And let our people know the importance of all of these
these are our main duties  in building our nation.

 

Wednesday, October 30, 2019

99- thoughts.followed on teacher's day


         ஆசிரியர் தினத்தன்று தொடங்கிய சிந்தனைகள்!


ஆசிரியர் கற்றுக் கொடுப்பவராக இருந்தால் மட்டும் போதாது; கற்றுக்  கொள்பவராகவும் இருக்க வேண்டும்.
அறவுரை கூறினால் மட்டும் போதாது; அதன்படி நடக்கவும் வேண்டும்.
நம்மை மாதிரியாகக் கொண்டே மாணவர்கள் நடப்பர் என்பதால். நல்ல முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.
கனவுகள் வண்ண மயமாக இருக்கலாம்.                       எண்ணங்கள் வண்ணமில்லாமல் சுத்தமாக இருக்க வேண்டும்.
எண்ணங்கள் சுத்தமாக இருக்கலாம். செயல்கள் சத்தமாக இருக்க வேண்டும்.
சுத்தமில்லாத செயல்கள்தான், சத்தமில்லாமல் இருக்கும்.
உறங்கும்போது கனவுகள் வரலாம்;. உழைக்கும்போது உறக்கம் வரக்கூடாது..
பேசுவது சுத்தமாக இருக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகள் விதித்தால்,மொழி வளராது.
கட்டுப்பாடு விதிச்சி கலப்படமில்லாம பேசணும்னு சொன்னா பேச்சே வராது. வெறும் காத்துதான் வரும். ( அப்பறம் மொழி எப்பிடி வளரும்? )
கட்டுப்பாடில்லாமல் சுதந்திரமாகப் பேசலாம் என்றால் சமுதாயம் வளராது.
சுதந்திரம் கொடுத்து கட்டுப்பாடில்லாம பேசலாம்னு சொன்னா, அமைதி வராது; வம்புச்சண்டைதான் வரும்.(அப்பறம் சமுதாயம் எப்பிடி வளரும்? )
ஒரு மனிதனின் சிந்தனை தாய் மொழியில் விசாலமடைகின்றது. பொதுவான மொழியில் அதை வெளிப்படுத்தும்போது, பிரபலம் அடைகின்றது.
அவரவர் நம்பிக்கை அவரவர்களுக்கு. அதில் அடுத்தவர் தலையிடுவது எதற்கு?
மதம் மனிதர்களை நல்வழிப் படுத்தத்தான் ஏற்படுத்தப் பட்டது. அவனை மதம் பிடித்தவனாக்கி ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொள்வதற் காக அல்ல