கணக்குப்பார்ப்போமா?கணக்கு!
ஆண்டுக்குஒருமுறைஎன்றகணக்கிலேதான்பூமிசூரியனைச்சுற்றிக்
கொண்டிருக்கின்றது!
அந்தக்கணக்கிலேதான்பருவகாலங்களும்மாறிமாறிவந்துகொண்டிருக்
கின்றன!
அதேகணக்கிலேதான்கல்விநிலையங்களில்தேர்வுகளும்நடந்துகொண்
டிருக்கின்றன!
மாதத்துக்குஒருமுறைஎன்றகணக்கிலேதான்சந்திரன்பூமியைச்சுற்றிக்
கொண்டிருக்கின்றது!
அந்தக்கணக்கிலேதான்அமாவாசையும்பௌர்ணமியும்அடுத்தடுத்து
வந்துகொண்டிருக்கின்றன!
அதேகணக்கிலேதான்தொழிலாளர்களுக்குமாதஊதியமும்வழங்கப்
படுகின்றது!
வாரத்துக்குஇத்தனைமுறைஎன்றகணக்கிலேதான்வகுப்பில்பாடங்கள்
நடத்தப்படுகின்றன!
நாளுக்குஒருமுறைஎன்றகணக்கிலேதான்பூமியும்தன்னைத்தானேசுற்றிக்
கொள்கிறது!
நாளுக்குஒருமுறைஎன்றகணக்கிலேதான்குளித்துக்கொண்டிருக்கின்றோம்!
இரண்டுமுறைஎன்றகணக்கில்குளிப்பவர்களும்உண்டு!
உடம்பில்அழுக்கேஇல்லைஎன்றகணக்கில்குளிக்காதவர்களும்உண்டு!நாளுக்கு மூன்றுமுறைஎன்றகணக்கிலேதான்நாம்சாப்பிட்டுக்கொண்டிருக்
கிறோம்!
சாப்பிடுவதற்குஎன்னகணக்கு? என்றகணக்கில்சிலர்பலமுறைசாப்பிட்டு
மலைப்பாம்புக்கணக்காய்அசையாமல்இருப்பவர்களும்,
சாப்பிடஒன்றுமேயில்லைஎன்றகணக்கிலும்,பசியேஇல்லைஎன்றகணக்
கிலும்சாப்பிடாதபடியால்,அசையாமல்இருப்பவர்களும்உண்டு!
இதேகணக்கிலேதான்திரையரங்குகளில்திரைப்படங்களும்ஓட்டப்
படுகின்றன!
ஓட்டல்களில்கல்லாப்பெட்டியில்இருக்கின்றமுதலாளி"இவர்சாப்பிட்ட
தற்குஎன்னகணக்கு" என்றுகேட்டுவிடக்கூடாதேஎன்றகணக்கில்தான்,
சப்ளையர்கள்அதைக்கணக்காகஒருதுண்டுசீட்டிலேஎழுதிக்கொடுத்து
விடுகிறார்கள்!
எதிலும்கணக்குவேண்டுமேஎன்றகணக்கில்பூசணிக்காய்போனகணக்கை
விட்டுவிட்டு,கடுகுபோனகணக்குக்குகணக்குக்கேட்பவர்களும்உண்டு!
ஐந்துரூபாய்போனகணக்குக்காகஐந்தாயிரம்செலவளிக்கும்,கணக்குகளும்,
உண்டு;
மணிக்குஅறுபதுநிமிடங்கள்என்றகணக்கிலேதான்நேரமும்
போய்க்கொண்டேயிருக்கிறது!
அதேமணிக்குஇவ்வளவுவேகம்என்றகணக்கிலேதான்வண்டிகளும்
சாலைகளில்ஓடிக்கொண்டிருக்கின்றன!
கிலோவுக்கும்மீட்டருக்கும்இத்தனைரூபாய்என்றகணக்கிலேதான்
பொருட்களைவிற்கிறார்கள்;நாமும்வாங்குகிறோம்;
நூற்றுக்குஇவ்வளவுஎன்றகணக்கிலேதான்பள்ளிகளில்தேர்வுக்கு
மதிப்பெண்கள்வழங்கப்படுகின்றன;
அதேகணக்கிலேதான்பணத்துக்குவட்டியும்வாங்கப்படுகின்றது;
தலைக்குஇவ்வளவுஎன்றகணக்கிலேதான்அரசாங்கத்தால்உணவுப்பங்கீடு
செய்யப்படுகின்றது!
உடுத்துவதற்குஇவ்வளவுநீளம்என்றகணக்கிலேதான்சேலைகள்நெய்யப்
படுகின்றன;
இருப்பதற்குஇவ்வளவுபோதும்என்றகணக்கிலேதான்வீடுகள்கட்டப்
படுகின்றன!
இவ்வளவுநேரத்துக்குப்புறப்பட்டால்,இவ்வளவுநேரத்துக்குள்போய்ச்
சேரலாம்என்றகணக்கிலேதான்நாம்பயணங்களைமேற்கொள்கின்றோம்;
ஐந்தாண்டுகளுக்குஒருமுறைஎன்றகணக்கிலேதான்பொதுவாகத்தேர்தல்
கள்நடத்தப்படுகின்றன;என்றாலும்,
சிலசமயங்களில்ஐந்தாண்டுகளுக்குள்,பலமுறைஎன்றகணக்கில்நடப்பதும்
உண்டு;
ஆறுமாதங்களுக்குஒருமுறைஎன்றகணக்கிலேதான்வங்கிகளில்
இருப்புகள்சரிபார்க்கப்படுகின்றன!
நாம்இருவர்,நமக்குஒருவர்என்றகணக்கிலேதான்குடும்பநலத்திட்டங்கள்
தீட்டப்படுகின்றன;
வருமானத்தின்கணக்கிலேதான்பச்சை,சிவப்பு,மஞ்சள்என்றகணக்கில்
குடும்பஅட்டைகள்வழங்கப்படுகின்றன;
வயதுபதினெட்டுஎன்றகணக்கிலேதான்வாக்களிக்கும்உரிமைவழங்கப்
படுகின்றது;
வயதுக்குக்கணக்குஇல்லாமல்உயரம்என்றகணக்கிலேதான்பேருந்துகளில்
சிறுவர்களுக்குப்பாதிஎன்றகணக்கில், டிக்கட்டுகள்அளிக்கப்படுகின்றன;
வட்டிக்கணக்குஎதுவுமில்லாமல்வீட்டுக்குஆள்வேண்டுமேஎன்றகணக்கிலே
தான்கிராமங்களில்பிள்ளைகளுக்குதிருமணங்கள்நிச்சயிக்கப்படுகின்றன;
வேலைக்காரிவேண்டும்என்றுபெண்கேட்டால்யாரும்தரமாட்டார்கள்என்ற
கணக்கோடுவருகின்றமருமகளும்கோபித்துக்கொள்வாளேஎன்றகணக்கும்
இதில்இருக்கிறது!
வீட்டில் அதைச் செய்தேன்,இதை வாங்கினேன் என்ற கணக்கிலே தான்
பெண்கள் பெருந்தொகையைச் சேர்த்து வைக்கிறார்கள்;
இருந்தால் ஒரு அவசரத்துக்கு உதவும் என்ற கணக்கோடு, நமக்குத் தெரிந்து
சேமித்தால், நாம் அதைச் செலவளித்து விடுவோம் என்ற கணக்கும் இதில்
அடக்கம்;
ஏனென் றால் வரவுக்குள் செலவு என்ற கணக்கிலே தான் நாம் வாழ
வேண்டியிருக்கின்றது!
என்றாவது ஒருநாள் உயர்வோம் என்ற கணக்கிலேதான் நம்பிக்கையோடு
நாம் உழைத்துக் கொண்டிருக்கிறோம்!
இத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை என்ற கணக்கிலேதான் வால் நட்சத்
திரங்கள்வந்துகொண்டிருக்கின்றன;
எப்போதாவது ஒரு நாள் என்ற கணக்கிலே தான் நானும் வந்து இப்போது
உங்களை அறுத்துக் கொண்டிருக்கின்றேன்!
எப்போதாவது ஒருமுறைதானே என்ற கணக்கிலே தான் நீங்களும் என்னை
நொந்து கொள்ளாமல், இதைப் பொறுத்துக் கொண்டிருக்கிறீர்கள்!
"திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்;திறமைகள் பெருக்கப்பட வேண்டும்;
தேவைகள் கூட்டப்பட வேண்டும்;தேவையற்றவை கழிக்கப் பட வேண்டும்."
என்ற கணக்கிலே தான் நமது முன்னோர்,நாளுக்கு இரண்டு,வாரத்துக்கு
இரண்டு,மாதத்துக்கு இரண்டு,வருடத்துக்கு இரண்டு என்று நாம் கணக்காகச்
செய்ய வேண்டிய சிலவற்றை ஒரு கணக்காகவே எழுதி வைத்தார்கள்!
அது கணக்காக இருப்பதால் யாரும் அதைச் செய்து பார்ப்பதில்லை;ஏனென்
றால் நான் கணக்கில் சூரப்புலி என்று சொல்லி, போட்டுப்பார்த்து ஒருவேளை
கோட்டை விட்டுவிடுவோமோ?என்ற கிலி!
கணக்கில் நூறு மதிப்பெண்கள் வாங்கிய ஒரு பையனிடம் ,"தம்பி !சதுரத்தின்
பரப்பளவு எவ்வளவு?"என்றேன்.அவன் ஏதோ ஒரு கணக்காய் என்னைப்
பார்த்தான்;எனக்குத் தெரியவில்லை,அதனால் தான் கேட்கிறேன் என்ற கணக்
கிலாவது,அல்லது அவனுக்குத் தெரிகிறதா?பார்ப்போம் என்ற கணக்கிலே
தான் கேட்கிறார் போலும் என்ற கணக்கிலாவது சொல்லி இருக்கலாம்;
ஆனால் ,அவன் எந்தக் கணக்கும் இல்லாத கணக்கில்,"அந்தக் கணக்கு
உங்களுக்கு எதற்கு?" என்றான்!
எப்படியோ தேர்வுக் கணக்குகளை,ஏதோ ஒரு கணக்கில் கணக்காகப்
போட்டுவிட்டான்,என்பது தான் கணக்கு!
இப்படித்தான்! சிலருக்கு பிறரிடம்கணக்குக்கேட்பதென்றால்பிடிக்கும்;ஆனால்
அவர்களிடம் யாராவது கணக்குக் கேட்டால்,அது அவர்களுக்குப் பிடிக்காது!கணக்கின் அடிப்படையிலே தான் பல கட்சிகளும் தோன்றி, வளர்ச்சி
யடைந்துள்ளன, என்ற கணக்கைப் பார்க்கும்போது,கணக்கின்அடிப்படையிலே
மட்டும் தான் நாடும் வீடும் கூடக் கணக்காகவளரும்என்பதுஒருகணக்காகவே
புரியும்!
சிலர்கணக்கைப்பார்ப்பார்கள்!ஆனால்போடத்தெரியாது!எட்டும்எட்டும் பதி
னாறு என்பதற்குப் பதிலாக பதின்மூன்று, என்று கணக்கிருந்தால், சரி என்ற
கணக்கோடுவந்துவிடுவார்கள் கணக்கைப்பார்த்தார்கள்,போடத்தெரிய
வில்லை;சரி,என்றகணக்கோடுவந்துவிட்டார்கள்!அப்படித்தான்,என் அலுவல
கக் கணக்கும்!கணக்கிலிருந்தரூபாய்இருபது ஐம்பதிலிருந்து,இருபதுஎடுத்து செலவு செய்து விட்டேன், செலவு போக மீதி ஐம்பதுபைசா,என்று
கணக்கெழுதாமல் மறதியாகமீதி ரூபாய் ஐந்து என்று எழுதி விட்டேன்!கணக்குப் பார்ப்பவர் வந்தார்!கணக்கைப் போட்டே பார்த்தார்!"ஐம்பது பைசா
எங்கே?"என்றார்!"ஐயா,மீதி ஐந்து ரூபாய் வராது! ஆனால்,வந்திருக்கிறது!நீங்கள் கேட்ட அந்த ஐம்பது பைசா இந்த ஐந்து ரூபாயில்
இருக்கிறது!,என்றுவைத்துக் கொள்ளுங்களேன்!" என்றேன்!"அதெல்லாம்
எனக்குத் தெரியாது!அந்த ஐம்பது பைசாவுக்குக் கணக்கு வேண்டும் என்ற
கணக்கில் அடம் பிடித்தார்!;அவரது பிடிவாதக் கணக்கால்,வேறு
வழியில்லாமல் என் பைக்கணக்கிலிருந்து ஒரு ஐம்பது பைசா கணக்கைக்
கழித்தேன் ! இது ஒரு தப்புக் கணக்கு!கணக்குப் பார்ப்பதோடு ,அது
எப்படிப்பட்ட கணக்கு என்றும் பார்க்க வேண்டும்;மொத்தத்தில் கணக்குப்
பார்க்கவும் கணக்கைப் பார்க்கவும் ,அதோடு கணக்குப் போடவும்
தெரியவேண்டும்!சிலர் இருப்புக் கணக்கைப் பார்த்து,கணக்குப்
போட்டு,கணக்கில் ஏதோ குறைகிறதே என்று கையைப் பிசைவார்கள்!என்னசெய்தோம் ,ஏன் குறைகிறது என்ற கணக்கை மறந்துவிடுவார்கள் !அதனால் கணக்குக்கு ஞாபகமறதிஎன்ற கணக்கு கூடவே கூடாது !அடேயப்பா
இத்தனை கணக்குகளா? என்று திகைத்து ,நீங்கள் வாயைத்திறக்கும் கணக்கு
எனக்கு நன்றாகவே தெரிகிறது!ஒரு கணக்கில் அது மூன்று அங்குல
நீளமா?,உயரமா? அல்லது அகலமா? என்ற கணக்கு தான் புரியவில்லை!அதனால் அது மூன்று அங்குலம் மட்டுமே என்ற கணக்குத் தெரியும்போது
இதற்கு மேலும் கணக்குகள் இருக்கிறது,என்று நான் சொன்னால் அந்த மூன்று
அங்குலக் கணக்கிற்கு மேல் வாயைத் திறக்கும் கணக்கு இல்லை என்பதால்
உங்கள் மேல் பரிதாபப் பட்டு இந்த புள்ளி விபரக் கணக்கு போதும் என்று
நினைக்கிறேன்!உங்கள் கணக்கைக் கேட்ட என் பிள்ளைக்கு வாய் கிழிந்த
கணக்கு,என்ன கணக்கு என்று கேட்டு,உங்கள் பெற்றோர்,என்னோடு
சண்டைக்கு வந்தால்,என் கணக்கு என்னாவது?என்ற கணக்கில் எனக்காக
நான் போட்ட பரிதாபக் கணக்கும் இதில் அடங்கும்!

எனவே,எங்கு பார்த்தாலும் கணக்கு!எப்படிப் பார்த்தாலும் கணக்கு!எல்லாவற்
றிலுமேகணக்கு!எதில்எல்லாம்கணக்கு இருக்கிறது என்றுகணக்குப்போட
முடியாது!
ஆனால்,எதிலாவதுகணக்குஇல்லாமல்இருக்கிறதாஎன்றுகணக்குப்போடுவதுஎளிது!"நமக்குள்என்னய்யாகணக்கு?"என்பார்கள்,சிலர்!அங்குதான்நாம் கணக்
காக இருக்க வேண்டும்!இல்லைஎன்றால்,கணக்கேஇல்லாதகஷ்டத்தில்,
நம்மை சிக்க வைத்துவிட்டுஅவர்கள் போய்விடுவார்கள்!
எனவே கணக்கின்படி,பூமி சூரியனைச் சுற்றாமல் விட்டால்,
கணக்கின்படி,சந்திரன் பூமியைச் சுற்றாமல் விட்டால்,
கணக்கின்படி,பூமி,தன்னைத்தானே சுற்றிக் கொள்ளாமல் விட்டால்,
கணக்கின்படி,நாமும் நடந்து கொள்ளாமல் விட்டால்,
கணக்கே இல்லாமல்,பிள்ளைகளைப் பெற்ற கணக்கால் கஷ்டப்பட்டு,
குசேலன்,கண்ணனைத் தேடிப் போன கணக்காய்,
நல்லதங்காள் கிணற்றைத் தேடிப்போன கணக்காய்,
ஆன முதலில் அதிகம் செலவானால்,
மானம் அழிந்து மதிகெட்டுப் --போனதிசை
எல்லார்க்கும் கள்ளனாய் எழுபிறப்பும் தீயனாய்,
நல்லார்க்கும் பொல்லனாம் நாடு ------என்ற பழைய வரவு செலவுக் கணக்கின்
படி ,கணக்குகளே இல்லாமற்போய், செயல்களில்சுணக்கங்கள் ஏற்பட்டு,அத
னால் பிணக்குகளும் ஏற்பட்டு,நல்ல இணக்கங்கள் வேறுபட்டு,கணக்கே இல்
லாத, கஷ்டங்கள் ஏற்பட்டு, வணக்கத்துக்குரிய நமது வாழ்க்கை பெரிதும்
பாதிக்கப்பட்டு, விளையும் தயக்கத்தால், வருத்தப்பட்டு நாம் மயக்கம் போட்டு
விழவும் நேரிடும்! எனவே, உங்கள் கணக்கில் நீங்கள் கணக்காக
இருக்கவேண்டும் என்ற கணக்கை,கணக்காகக்காலத்தில் சொல்கிறேன்!"இது
ஒரு கணக்கா?" என்று நான் சொல்வதை நீங்கள் கணக்கில் கொள்ளாமல்
விட்டால், அதை தப்புக் கணக்கு என்று தான் நான் சொல்லவேண்டி
இருக்கும்!"என்னடா? இவன் கணக்கு ,கணக்கு என்றுஅறுக்கின்றானே! இவன்
கணக்காக இருக்கின்றானா? என்ற கணக்கில் நான் பேசுவது என்ன கணக்கு?என்று நீங்கள் ஒரு கணக்குப் போட்டுப் பார்ப்பதற்கு முன்னால் நானே ஒரு
கணக்கோடு இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்!
கணக்குப் பார்த்துக் கொடுத்து, கணக்கைப் பார்த்துப் பார்த்து,
கலக்கம் அடைவார்கள் சிலர்!
கணக்குப் பார்க்காது வாங்கி, கணக்கே பார்க்காமல்,
கலங்கவே மாட்டார்கள் பலர்!
அதனால் தான் ஒருசிலர்,அந்தக் கணக்கே வேண்டாம் என்பார்கள்!
ஏனென்றால், அவர்கள் கணக்கு, போட்டு,பார்த்தவர்கள் ! நன்றி ! வணக்கம் !
