Pages

Monday, March 26, 2012

29 oru aathma pEsukiRadhu !


ஒருஆத்மாபேசுகிறது!


                                                                     

  ஏ!மனிதா!நான்,உன்,உயிர்,ஆத்மா பேசுகிறேன்!நான்,நீயாக இருந்தால் ,எல்லோரும் என்னை,நீங்கள், என்று அழைப்பார்கள்!உன்னை விட்டு நான் பிரிந்தால்,உன்னை,ஜடம் என்பார்கள்!நீயாக, நீ இருக்கின்ற போது,நீ யார்?ஜடமா?இல்லை,ஆத்மாவா?ஜடம்,என்றால் உன்னால் பேச முடியாது!ஆத்மா என்றால் உன்னைப் பார்க்க முடியாது!உன்னை நீயாக்குவது எது?ஜடமா?இல்லை நானா?உன்னுள் நான் உடலாக இருக்கின்றேன்!ஜடம் என் சட்டையாக இருக்கின்றது!நீ தினம் ஒரு சட்டையை மாற்றுகிறாய்!என்னால் அப்படி முடியாது!எனக்கு வழங்கப் பட்டது ஒன்றே ஒன்றுதான்!என்ன மாயமோ?இல்லை,மந்திரமோ?இது,நான் வளரும்போது ,தானும் வளர்கின்றது!உன் சட்டையோ நீ வளரும்போது சிறிதாகின்றது!ஆனால் உன் சட்டை கிழிந்தால்,அதை-நீ-தூக்கி எறிவாய்!என் சட்டை கிழிந்தால் அது என்னைத் தூக்கி எறியும்!நான்,உன்உயிர் (ஆத்மா)பேசுகிறேன் ! என் சட்டை இப்போது கிழிந்த நிலையில் இருக்கிறது!எனக்குத் தெரியும்,விரைவில் அது என்னைத் தூக்கி எறியும் என்று!அந்த நாளை ஆவலாக ,நான் எதிர்பார்க்கிறேன்!ஏன் தெரியுமா?சட்டை கிழிந்தவனை யாரும் மதிக்கமாட்டார்கள்!என்னையும் அப்படித்தான்;யாரும் மதிக்கவில்லை!அதனாலேதான்,என் சட்டையைக் கெஞ்சிக் கொண்டிருக்கிறேன்!விரைவில் என்னைத் தூக்கி எறி என்று! பிறகு எனக்கும் ஒரு புதுச்சட்டை கிடைக்கும்!சிறிதாகத்தான் இருக்கும்!இருந்தாலும்,அதைப்போட்ட பிறகு என்னை எல்லோரும் கொஞ்சி மகிழ்வார்கள்!நான் அவர்களை மிதிப்பேன்!அவர்கள் கோபப்படாமல் என்னை,மதிப்பார்கள்! ஏ!மனிதா!நான் உன் உயிர் (ஆத்மா)பேசுகிறேன்!நானும் ஜடமும் கலந்ததுதான் நீ,என்றாலும் இன்று நீ,மனிதன்!நான், ஆத்மா!இல்லை!இல்லை!ஆவி!இன்னும் கேள்!

                                                   
                                                                       
                                                             
ஏ!மனிதா!உன் ஆத்மா,பேசுகிறேன்!பொய்யாகப் போகும் உன் உடலை மெய்யென்றாய்!மெய்யாய் இருக்கின்ற நான்,பொய்யா?நான் உலவ,எனக்கு ஒரு ஜடம் தேவை!ஜடத்துக்குள் நிறையும்போது நான்,நீயாகி விடுவேன்!அப்போதுதான்,நீ மனிதன்!உன்னிலிருந்து நான் பிரிந்தாலும்,என்னால் உன்னைப் பார்க்க முடியும்!உன்னால் என்னைப் பார்க்க முடியுமா?முட்டையிலிருந்து வெளிவந்த குஞ்சு,முட்டையைப் பார்க்க முடியும்;முட்டையினால் குஞ்சைப் பார்க்க முடியாது!கூட்டிலிருந்து வெளிவந்த பறவை,கூட்டைப்பார்க்க முடியும்!கூட்டினால் பறவையைப் பார்க்க முடியாது!நான் குஞ்சு!நீ உடைந்த முட்டை!நான் பறவை!நீ கலைந்த கூடு!நான் காற்று!நீ கிழிந்த பை!உன் உடம்புக்கும் எனக்கும் உள்ள தொடர்பு இதுதான்!----மாயமாகப் போகும் நான்ஆவியாகி விடுவேன்!ஜடமாகிப் போகும் உன் உடலை ,"போய் விட்டானா?பாவி!"என்று பலரும் ஏச வேண்டுமா?--வேண்டாமா?-------என்றால்,என் கதையைக் கேள்!பரம்பொருளிலிருந்து,பிரிந்து வந்தவன்,நான்!அது பரமாத்மா!அதன் ஒரு பகுதி நான் என்பதாலும் ,இயங்கியும்,--இயங்காதது எனப்படுகிற ஒன்றிலிருந்து,வந்து இயங்குபவன் நான் என்பதாலும் ,என்னை ஜீவாத்மா,என்றார்கள்!ஜீவனுள்ள ஆத்மா!ஆனால் பரமாத்மா நிலையானது!ஜீவாத்மா நிலையற்றது!பரம்பொருளின் ஒரு பகுதி தான் நான் என்பதால் நானும் பரம்பொருள் தான்!அதாவது,நான் கடவுள்!உனக்குள் நான் இருக்கிறேன் என்பதால்,உனக்குள் கடவுள் இருக்கிறார்,என்றார்கள்!எண்ணிப்பார்!வீட்டிலிருந்து புறப்பட்டு வெளியே வந்தால்,வீட்டை அடைவதுதான் நமது குறிக்கோளாக இருக்கும்!அதைப்போல பரம்பொருளிலிருந்து பிரிந்து வந்த நான் மீண்டும் பரம்பொருளை அடைய விரும்புகிறேன்!அதற்கு நீ உதவ வேண்டும் என்றால் கடவுளுக்குரிய குணங்களுள், கொஞ்சமேனும் உனக்கு இருக்க வேண்டாமா?நான் ஏன் உதவ வேண்டும்?என்கிறாயா?என்னைச் சுமந்து திரிகின்ற உனக்கு,அந்த பாரம் குறைய வேண்டுமானால்,நீ உதவத்தான் வேண்டும்!எங்கிருந்து வந்தோமோ,அங்கே மீண்டும் செல்லவேண்டுமானால் வந்தவழி தெரிய வேண்டும்!அன்பு வழியில் வந்தோம்;அஹிம்சை வழியில் வந்தோம்;அந்த வழியில் தானே திரும்ப வேண்டும்?அந்த வழி மறந்து,எதிர்த்திசையில் சென்றால், நமது இடத்தை அடைய முடியுமா?பரம்பொருளில் தான் இணைய முடியுமா?ஏ மனிதா!எண்ணிப்பார்!என்றெல்லாம் எண்ணி,உனக்கும் கூறிக் கொண்டிருக்கின்றேன்!என்றாலும் எனக்குள்ளே சில கேள்விகள் எழுகின்றன!அவை என்னவென்று கூறுகிறேன்,கேள்!



                                                                            ஏ!மனிதா!கோபம் கூடாது என்று மனம் சொல்கிறது!துக்கப் படாதே என்று மனம் சொல்கிறது!அதையும் மீறி கோபம் வருகிறது!துக்கம் வருகிறது!என்றால் கோபப் பட வைப்பது யார்?துக்கப்பட வைப்பது யார்?மனம் ஒன்று!ஆனால் கோபப்பட வைப்பதுவும்,துக்கப்பட வைப்பதுவும் மற்றொன்றா?இது எப்படி?உன்னில் நான் இருக்கிறேன்;இவர்கள் எங்கிருக்கிறார்கள்?இவர்களை இயக்குவது யார்?ஆத்மாவாகிய எனக்கும் மனத்துக்கும் ,அந்த மற்றொன்றுக்கும்உள்ள தொடர்பு என்ன?இவர்கள் எல்லாம் வேறு வேறு என்றால் ,நான் யார்?இவற்றில் உன் பங்கு என்ன?பஞ்சபூதங்களும் உன்னுள் அடக்கம் என்கிறார்கள்!உன்னுள் இணைந்த குற்றத்துக்காக ,அவையும் உ ன் பாவத்தில் பங்கு பெற வேண்டுமா?உன்னை நினைத்தால் எனக்குப் பரிதாபம் தான் வருகிறது!செய்வது யாரோ ஒருவர்!பலன் உனக்கா?இறைவன் உன்னைப் படைத்த நோக்கம்தான் என்ன?மனிதா!இவற்றுக்கான விடைகளையே இன்னும் நீயும் கண்டுபிடிக்கவில்லை!நானும் கண்டுபிடிக்கவில்லை!ஆனால் பரம்பொருளின் ஒரு பகுதி என்று மட்டும் என்னைப் பற்றி பெருமையாகச் சொல்லிக் கொள்கிறேன்!எதுவுமே தெரியாத எனக்கு,அந்தப் பெயர் எதற்கு?எல்லோரும் பரம்பொருளின் ஒரு பகுதி தான் என்கிறார்கள்!பிறகு ஏன் ஒருசிலர் நல்லது செய்ய,பலர் பாவம் செய்கிறார்கள்?யார் எதைச் செய்தாலும் அதுபற்றி நீ கவலைப் படாதே என்கிறார்கள்!அவர்கள் செய்கையினால் பாதிக்கப் படுவது நானாக இருக்கும்போது ,எப்படி நான் கவலைப்படாமல் இருக்க முடியும்?அடுத்த பிறவியில் அதற்கான பலனை அனுபவிப்பார்கள் ,என்கிறார்கள்!தவறுக்குத் தண்டனை என்றால்தானே தப்பு செய்த அவர்கள் திருந்துவார்கள்?எனக்கும் ஒரு ஆறுதல் கிடைக்கும்!நாம் நல்லவனாய் இருப்பதில் ஒரு அர்த்தம் இருக்கிறது என்ற ஓர் தெளிவு பிறக்கும்?ஒரு பலனும் இல்லையென்றால் ,திருந்துவது எப்படி?எப்போது?அடுத்த பிறவியில் இதை யார் பார்த்தார்கள்?மனச்சாட்சி அவர்களைப் பார்த்துக் கொள்ளும் என்கிறார்கள்!கண்ணால் காணும் சாட்சிகளையே மாற்றி விடுகின்ற இவர்கள் ,மனச்சாட்சியை ,ஏமாற்றவா?கஷ்டப்படப் போகிறார்கள்!விஞ்ஞானத்திற்கு உட்பட்டதுதான் கடவுள் என்று ஒப்புக் கொண்டோம்!காரணம் இல்லாமல் காரியம் இல்லை;அந்தக் காரணம் எது என்பதைக் கண்டறிவதுதான் ,விஞ்ஞானம் என்றும் சொல்லிக் கொள்கிறோம்!என்றால் இவற்றுக்கெல்லாம் என்ன காரணம்?என்ன மனிதா!என் கேள்வியில் அர்த்தம் இருக்கிறதா,இல்லையா? இன்னும் கேட்பேன்!

( இதன் இரண்டாம் பகுதியை ,86-ல் காண்க )
                                                                                

No comments:

Post a Comment