Pages

Sunday, March 18, 2012

9 Kalla ? kadavuLaa ?

 

                                                                           

1 - கல்லா ? கடவுளா ?

 

ஆரம்பம்

 

யாரோ ? காவி கட்டிய , சந்நியாசியாம் ;

பரதேசிக் கோலத்திலே , வந்திருக்கிறாராம் !

அவர் , இந்தியாவின் , இந்து மதப் பிரதிநிதியாம் ! என்றுஏளனமாய் எல்லோரும் பார்க்கிறார்கள் ;

கோட்டும் , சூட்டும் , போட்டு , வசதியாக வந்தவர்கள் , எல்லாம் கம்பீரமாக , கார்களில் இருந்து , இறங்கி , சர்வ

மரியாதையோடு , அழைத்துச் செல்லப்படுகிறார்கள் ;

காவி உடையும் , காவி வேட்டியும் கட்டி , வா என்று அழைக்கக் கூட , ஆள் யாரும் , இல்லாமல் , எவர் துணையுமின்றி , நடையாய் , நடந்து வந்து சேர்கிறார் , இவர் ; இதுதான் , மகாநாடு , நடக்கப் போகும் , இடமா ? என்று அவருக்குள்ளாகவே கேட்டு , அவராகவே , உள்ளே செல்கிறார் ; அது ஒரு பிரம்மாண்டமான மண்டபம் ; அங்கே தான் உலக மத மகாநாடு நடக்கப்போகிறது ! இவர்என்ன , பேசிவிடப்

போகிறார்என்று , ஐந்து நிமிடங்களுக்கு மட்டுமே , அனுமதிக்கப் படுகிறார் ; " சீமான்களே ! சீமாட்டிகளே ! " என்று ஆர்ப்பாட்டமாய் , ஆரம்பித்துப் பேசி , அமர்ந்தவர்களுக்கு , நடுவே , அமைதியாய்  எழுந்து , நின்று , எந்தவிதமான பதட்டமோ ? அச்சமோஇல்லாமல் ,

" சகோதரர்களே ! சகோதரிகளே ! " என்று , தொடங்கி , அனைவரையும் பிரமிக்க வைத்து , அவருக்கு , அளிக்கப்பட்ட

ஐந்து நிமிடங்களையும் , அவையினர் கை தட்டியே , எடுத்துக் கொண்ட பிறகும் , அவர்களின் ஒப்புதலோடு ,

தொடர்ந்து பேசுகிறார் ; " கூட இருப்பவர்களைக்கூட , சீமான்களாகவும் , சீமாட்டிகளாகவும் பார்க்கின்றீர்கள் , உங்கள் நாட்டில் ;

2

முழக்கம்

 

அவர்களை , சகோதரர்களாகவும் , சகோதரிகளாகவும் , பார்க்கச் சொல்வதற்காக நான் , இங்கு வந்திருக்கிறேன் ! உங்களோடு இருக்கும் உங்கள் ஊரினரையே , வேறுபடுத்திப் பார்க்கும் , உங்களுக்கு , யாதும் ஊரே ! யாவரும் கேளிர் ! என்று , எடுத்துக் கூற வந்திருக்கிறேன் !

சமத்துவம் , சகோதரத்துவம் , சகிப்புத்தன்மை , ஆகியவற்றைப் போதித்த , இந்து மதமே , என் மதம்  என்று , சொல்வதற்காக நான் , இங்கு வந்திருக்கிறேன் ! அதுவே அனைத்து மதங்களுக்கும் , வழிகாட்டும் முதல் மதம் என்று , பெருமையோடு , பறை சாற்றுவதற்காகவும் , நான் இங்கு வந்திருக்கிறேன் !

விழிமின் ! எழுமின் ! உழைமின் ! என்று , அறைகூவல் விடுக்கிறேன் ! உங்கள் உறக்கத்திலிருந்து , விழித்து எழுங்கள் , என்று கூறி , உங்களைத் தட்டி எழுப்பவே , நான் இங்கு வந்திருக்கிறேன் ! இந்துமதத்தின் , பிரதிநிதியாக , இந்தியாவிலிருந்து , நான் , இங்கு வந்திருக்கின்றேன்என்று , ஒரு மணி நேரத்திற்கும் , மேலாக , முழங்கிசாது போலத் தெரிந்த அவரா ? இப்படிப் பேசுகிறார் , என்று , எல்லோரையும் வியக்கவும் , திகைக்கவும் வைத்து , பகவான் ஸ்ரீ ராம கிருஷ்ண பரமஹம்சரை , குருவாக , வரித்துக்கொண்டவரும் ,

சகோதரி நிவேதிதை போன்ற எண்ணற்ற வெளிநாட்ட வரையும் , தமது சீடர்களாக ஏற்றுக் கொண்டவருமான , சுவாமி விவேகானந்தர் , அமெரிக்காவின் , சிகாகோ நகரில் நடந்த , உலக அனைத்து மத மகாநாட்டில் , நமது , இந்துமதத்தின் பெருமையைஇந்த உலகத்துக்கு எல்லாம் , உணர்த்தி விட்டு , வந்த நேரம் அது !

சுவாமியின் , பெருமையும் , புகழும் , நம் நாடு மட்டுமின்றி , உலகமெங்கும் , பரவிக் கொண்டிருந்த , நேரம் அது !

 

 

3- கல்லா ? கடவுளா ?

 

எத்தனை கடவுள் ?

 

சுவாமியின் திறமையை அறிந்து , இந்தியாவின் சமஸ்தான மன்னரெல்லாம் , அவரை , அழைத்து , கௌரவித்து , அவர் தம் அறவுரையைக் கேட்டு மகிழ்ந்த காலம் அது ! அத்தகையோரில் , வங்கதேச மன்னரும் , ஒருவராக , அவரைத் தம் விருந்தினராக , விரும்பி அழைத்திருந்த , அந்த நேரத்தில் , அங்கே , ஒரு நாள் ..

வங்க தேச மன்னரின் அவையில் , அனைவர் முன்பும் , சுவாமி , அறவுரை ஆற்றிக் கொண்டிருந்தார் ; அனைவரின் முகங்களையும் , கூர்ந்து , நோக்கிக் கொண்டிருந்த சுவாமி , மன்னரின் முகத்தையும் நோக்கினார் ! அதில் , ஓர் ஐயத்தின் சாயல் தெரிவது கண்டு , வினவினார் ; " தயக்கம் வேண்டாம் ! தைரியமாய்க் கேளுங்கள் ! என்ன சந்தேகம் ? "                                  " ஒன்றுமில்லை ;  மன்னிக்க வேண்டும் ! இந்து மதம் , சிறந்த மதம் தான் ; எனக்கு , அதில் கருத்து வேறுபாடு , இல்லை ! எனக்கு சில , ஐயப்பாடுகள் உண்டு ! அவற்றைத் தாங்கள் , தெளிவு செய்ய வேண்டும் ! முதலாவது ஐயம் ! கடவுள் ஒருவர் தான் , என்று சொல்கிறோம் ; அதே சமயம் , பல கடவுள்கள் இருப்பதாகச் சொல்லியும் , வணங்குகிறோம் ; இது சரிதானா ? என்று , சுவாமிகள் விளக்கம் , அளிக்க வேண்டும் , என்றார் , மன்னர் ; சுவாமி , உரையாற்றிக் கொண்டே , அவையின் உள்ளே , சுவர்களில் , மாட்டப் பட்டிருந்த , பலவேறு நிலைகளிலான , படங்களில் , ஒன்றைக் காட்டி ,  " இது யார் " என்றார் ; " இது என் பாட்டனார் ; அவருடைய சிறு வயதுத் தோற்றம் " " சரி ! இது ? "  " இதுவும் , அவர்தான் ! அவருக்கு மணமான போது "  " இது ? " " இது , அவருடைய வயோதிகத் தோற்றம் ; இதுவும் தான் ! "  "அப்படியா ? "  " நீங்கள் அவரைப் பார்த்திருக்கிறீர்களா ? "  " இல்லை " " அதாவது , உங்கள் பாட்டனாரைப் பார்க்காமலேயே அவரை பல வடிவங்களில் , பல நிலைகளில் படமாகப் பார்த்து , மரியாதை செய்கிறீர்கள் ! அப்படித்தானே ? " மன்னருக்கு ஒன்றும் , புரியவில்லை ;

 

4

 

கடவுளின் தோற்றங்கள்

 

நாம் ஒன்று கேட்டால் , இவர் ஏதேதோ பேசுகிறாரே! சரி

என்ன சொல்கிறார் , என்று பார்ப்போம் , என்று , எண்ணிக் கொண்டார்.  " அது இருக்கட்டும் ; அதோ , உங்கள் அரியணைக்கு அருகே , ஒரு இளைஞன் அமர்ந்திருக்கிறானே ? அது யார் ? " என்று வினவினார் சுவாமி ;  " என் மைந்தன்நாளை , அரியணை , ஏற இருப்பவன் " "  அப்படியா ? மிகவும் மகிழ்ச்சிஉங்களுக்கு மகன் ! உங்கள் , தந்தையாருக்கு ? "    " இது என்ன கேள்வி சுவாமி ? அவருக்குப் பேரன்! "   " கேளுங்கள் மன்னா ! அது மட்டுமில்லை ; அவனுடைய மாமாவுக்கு , அவன் , மருமகன்; அவனுடைய அண்ணனுக்கு , அவன் , தம்பி  ! அவனுடைய தம்பிக்கு , அண்ணன் ! அவனுடைய

ஆசிரியருக்கு , அவன்மாணவன் ! அவனுடைய நண்பனுக்கு , அவன் , நண்பன்  ! நாளை அவனுக்கு , மணமுடிக்கும்போது , அவன் , ஒரு பெண்ணுக்கு , கணவன் ! அவனுக்கு முடி சூட்டும் போது, மன்னன் ! குழந்தை பெற்றுக் கொண்டால் , அவன் தந்தை ! மாமனார் ; பாட்டனார் ; என்று , பல உருவங்களைத் தாங்கப் போகின்றான் ; மற்றவர்கள் எல்லாம் , அவரவர்க்கு உள்ள உறவு முறையில் , அவனுக்கு மரியாதை செலுத்துவர் ! ஆனால் , அவன் உங்களுக்கு மைந்தன் தான்உங்கள் , மைந்தன் தான் , கடவுள் ! அவன் ஒருவன் தான்  ! மற்றவர்களுக்கு , வேறு , வேறு வடிவங்களில் , காட்சி தருகிறான் ; உங்கள் தந்தையையே , நீங்கள் , நான்கு  தோற்றங்களில் , பார்க்கிறீர்கள் ! கடவுளால் , படைக்கப்பட்ட நமக்கே , இத்தனை தோற்றங்கள் என்றால் , நம்மை எல்லாம் படைத்த , அந்த கடவுளுக்கு எத்தனை , தோற்றங்கள் இராதுஇருக்க வேண்டும்பல்வேறு நிலைகளில் , பலருக்கும் , பல வடிவங்களாகத் தெரிகிறார் ! தாங்கள் , இங்கிருக்கும் கோலத்திலேயே , அந்தப்புரத்திலும் இருப்பீர்களா ? இதே , கோலத்திலேயே , போர்க்களத்துக்கும் , போவீர்களா ?

 

5- கல்லா ? கடவுளா ?

 

உனக்காகநானா ?

 

எத்தனை கோலங்களில் , நீங்கள் , சென்றாலும் , அது , நீங்கள் தான் ! அவ்வாறே  , கடவுளும் திகழ்கிறார் ! இதில் , வியக்கவோ , இல்லை , திகைக்கவோ ஒன்றுமில்லை ! கடவுள்  ஒருவர் தான் " என்ற , சுவாமியின் தெளிவுரை , மன்னரின் , சிந்தனையைக் கிளறி , விட்டது !.......

 “ சுவாமி ! மன்னிக்க வேண்டும் ! இப்படித்தான் இருப்பார், என்று , கடவுளின் உருவத்தை , எப்படித் தீர்மானிக்கிறார்கள் ! கேட்டார் மன்னர் ! சுவாமி சொன்னார் ! கற்பனைக்கு எட்டாத ஒன்றைக் காட்சிப் படுத்தும்போது , அவரவர் கருத்துக் கேற்றபடிதான் , அமைத்துக் கொள்ள முடியும் ! அப்படித்தான் அவரவர் கற்பனைக்கேற்றபடி அமைத்துக் கொள்கிறார்கள் ; உனக்கு என்ன பலகாரம் பிடிக்கும் ? என்று கேட்டால் , நாம் இதுவரை சாப்பிட்டவற்றில் பிடித்த ஒன்றைத்தான் சொல்வோமா ? அல்லது இதுவரை சாப்பிடாத பலகாரம் ஒன்றை கேட்போமா ? அது எப்படி இருக்கும் என்றே தெரியாத போது , அதை எப்படிக் கேட்க முடியும் ! கடவுளின் உருவமும் அப்படித்தான் ; நாம் இதுவரை பார்த்த மற்றும் தெரிந்த உருவங்களை வைத்துத்தான் அவனைக் காட்சிப் படுத்த முடியும் " என்றவர் , தொடர்ந்து ,  "  மன்னா ! என்ன சிந்தனைஎனறு கேட்டார் !  " சுவாமி , என் அறியாமை நீங்க வேண்டும் , என்றுஎனக்காக தாங்கள்தான்  இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும் ! "  என்றார் , மன்னர் .  "  என்ன ? உனக்காக நானா ? ஏன் ? நீ கேட்டால் , தரமாட்டாரா ? -----இதைக் கேள் ! என் குருநாதரிடம் நான் இருந்த போது , நடந்த நிகழ்ச்சி ஒன்றை , நான் உனக்குச்  சொல்லுகிறேன், ஒரு நாள் , அன்னையிடம் பிரார்த்திக்கச் சென்ற , என் குரு நாதர் , நீண்ட நேரத்திற்குப் பிறகே , வந்தார் . அவரிடம் , எப்படிக் கேட்பது , என்று தயங்கி , அவரைப் பார்த்தேன் . " " என்ன நரேந்திரா !  ( நரேந்திரர்- விவேகானந்தரின் இயற்பெயர் ) ஏன் தாமதம் , என்று கேட்க விரும்புகிறாயா? "  என்றார் ;

6- கல்லா ? கடவுளா ?

 

நம்மால் மட்டுமே முடியும்

 

அவராகவே புரிந்து கொண்டு , " என் அன்னை , இன்று , என்னை வெகுநேரம் , தன்னோடு இருக்க வைத்து விட்டாள் " . என்றார் . அன்னை , அவரிடம் , மிகவும் கனிவாக நடந்து கொள்வாள் , போலும் , என்றுஎண்ணிய நான் " சுவாமி ! எனக்காக நீங்கள் அவளிடம் , எனக்குத் தேவையானதை , கேட்கக் கூடாதா ? " என்றேன் . " அடடா ! அது எனக்குத்  தெரியாமல் போயிற்றே ! கேட்கலாமேஎன்றவர் , தொடர்ந்து , "  நாளை , உன்னை அன்னையிடம் , அனுப்புகிறேன் ! உனக்கு என்ன வேண்டுமோ ! அதை நீயே  அவளிடம் , கேட்டுப் பெற்றுக் கொள்  " என்றவர் , அடுத்த நாள் , என்னை பூஜை அறையினுள் ,

அனுப்பினார் . வெகு நேரத்திற்குப் பிறகு , வெளியே வந்த என்னிடம் , " என்ன ? கேட்டாயா ? " என்றார் . " சுவாமி ! உள்ளே சென்ற எனக்கு, என்ன , கேட்பது என்று , எதுவும் நினைவுக்கு வரவில்லை ; அந்த பரவசமான நிலையைக் கடந்து , எதுவும் தேவை என்று , தோன்றவுமில்லை ! " என்றேன் . குருநாதர் சொன்னார் ;  " அவளுக்கு , எதை , எப்போது தரவேண்டும் என்று , தெரியும் ; அது மட்டுமில்லை ; நரேந்திரா  !  வேறு யார் சார்பாகவும் , நீயோ , அல்லது உன் சார்பாக , வேறு யாருமோ அவளிடம்கேட்பதை , அவள் விரும்புவதில்லை ; அவள் எல்லோரிடமும் சம தூரத்திலேயே இருக்கிறாள் ; மனிதர்களைப் போன்று , யாருக்கும் , சிறப்புச்  சலுகைகள் , வழங்குவதும் இல்லைஉனக்கு , என்ன தேவை , என்று , நீ கேட்பதையே , அவள் , விரும்புகிறாள் ,அவள் , நம் எல்லோருக்குமே , நெருக்கமானவள் தான் ! ஒன்றைப் புரிந்து கொள் ; உனக்காக , நான் பிரார்த்தனை செய்தேன் ! அல்லது செய்கிறேன் , என்று சொல்பவர்களிடம் , எச்சரிக்கையாக இரு ! நீ செய்யாத பிரார்த்தனையையா ? அவர்கள் செய்துவிடப் போகிறார்கள் ? நமது தேவை என்ன என்று அறிந்து கேட்க நம்மால் மட்டுமே முடியும் !

 

 

7- கல்லா ? கடவுளா ?

 

எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும்  

 

உனக்காக அவர்கள் , ஏன் அவ்வாறு , செய்ய வேண்டும் , என்று எண்ணிப்பார் ! ஏதோ , ஒன்றை உன்னிடம் , அவர்கள் எதிபார்க்கிறார்கள், என்பது தான் , அதன் பொருள் ! . அது மட்டுமல்ல ; யாராவது , ஒருவருக்கு என்றுஉன் பிரார்த்தனையைச் செய்யாதே ! எல்லோரும் , மகிழ்ச்சியாக , இருக்கவேண்டும் என்று கேள் !

உன் குடும்பத்தில், யாராவது , ஒருவர் சுகமாக  இருந்து , மற்றவர் கஷ்டப்பட்டால் , அது உனக்கு மகிழ்ச்சியைத் தந்து விடுமா ? மற்றவர் , சுகமாக இருந்து , நீ கஷ்டப்பட்டால் அது அவர்களுக்கு , மகிழ்ச்சியைத் தந்து விடுமா ? உன் குடும்பம் மட்டுமல்ல ; ஊர் , நாடு , எல்லாவற்றுக்கும்இதே முறை தான் ; அறிந்தவர்கள் , எல்லோரும் , இன்புற்றிருக்கவே நினைப்பர் ! வேண்டுவர் , என்று , என் குருநாதர் , அன்று , எனக்குச் சொன்னதை , இன்று , உனக்குச் சொல்லுகிறேன் , என்றார் , சுவாமி ! அவள் , என்று , நான் குறிப்பிட்டது , இறைவனை ! என்று எண்ணிக் கொள் , என்றார் ! மன்னர் , தெளிவடைந்தார் ;

" சுவாமி ! பல கேள்விகளைக் கேட்டு , தங்கள் மனம் புண்படும்படி , நடந்து கொண்டு விட்டேன் ! என்னை மன்னியுங்கள் ! என் அறியாமை அகன்று விட்டது ! "  ;                                                                                                                         “ இல்லை ! இன்னும் சில ஐயப்பாடுகள் , உன்னிடம் தெரிகின்றன ; தயங்காமல் கேள் ! "   " சுவாமி ! இறைவனை எந்த மொழியில் வணங்க வேண்டும் ? "  " அனைத்து மொழி பேசுகின்றவர்களையும் படைத்த அவனுக்கு , அந்த அந்த மொழிகள் தெரியாதென்றா நினைக்கிறாய் ? கேள் ! உனக்கு , ஒரு சிறு குழந்தை இருக்கிறது , என்று வைத்துக் கொள்வோம் ; அது தன் போக்கில் , காலையும் , கையையும் , ஆட்டிக் கொண்டு , ஏதேதோ பேசிக் கொண்டு இருக்கும் ! அது , எந்த மொழியில் பேசுகிறது ? என்று உனக்குத் தெரியுமா ? யாருக்கும் , அந்த மொழி , என்ன மொழி என்று தெரியாது ! அது குழந்தை மொழி !

 

8- கல்லா ? கடவுளா ?

 

 கடவுளின் மொழி     

 

ஆனால் அது என்ன பேசுகிறது , என்று , அதன் தந்தையும் , தாயுமான , உங்கள் இருவருக்கும் , தெரியும் ! அதாவது , அதன் பெற்றோருக்குத் தெரியும் ! அதே போலத் தான் ; நாம் எந்த மொழியில் வழிபட்டாலும்நம்மைப் பெற்றவனாகிய , இறைவனுக்கு அதன் பொருள் தெரியும் ; இங்கே பக்தி தான் முக்கியம் ; பாஷை முக்கியமல்ல ; மற்றவரிடம் , எந்த மொழியில் , பேசினாலும் , உதடுகள் அசைவதைப் போல , இறைவனிடம் பேசும் போது , உள்ளம் அசைய வேண்டும்.! அது தான் , அவன் மொழி ! அவனிடம் , மனம் ஈடுபட வேண்டும் ! அதுதான் , முக்கியம் ! என்ன மன்னா ? " " புரிந்து கொண்டேன் , சுவாமிசுவாமி ! மற்றும் ஒன்று கேட்கட்டுமா ? " " விளக்கம் அளிக்கத்தானே வந்திருக்கிறேன் ! கேள் !

இறைவனுக்குப் , பலர் , படைக்கிறோம் , என்று சொல்லி , ..பலவிதமாக , எதை , எதையோ படைக்கிறார்கள் ! எதைப் படைக்க வேண்டும்என்று , விதி ஏதும் உண்டாசுவாமி ? "  "  பெற்றோர் தருவதைத் தான் பிள்ளைகள் சாப்பிடுவர் ! பிள்ளைகள் உண்பதைத்தான் , பெற்றோருக்கும் தருவர் ; இறைவன் கொடுத்ததை , அவனுக்குப் படைக்கிறோம் ! நாம்  சாப்பிடுவதைத் தானேபடைக்கவும் முடியும் ? உள்ளன்போடு சமர்ப்பிக்கப்படும் , எதையும்நான் , ஏற்றுக் கொள்வேன், என்று கீதையில்  , கண்ணன் , சொல்லி இருக்கிறானே ! குசேலன் , கண்ணனுக்கு அவல் கொடுத்தான் ; குகன்ராமனுக்கு , மீனும் , தேனும் கொடுத்தான் ; கண்ணப்பன், சிவனுக்கு , இறைச்சி கொடுத்தான் ; பாட்டி , கொடுத்த பிட்டையும்  , சாப்பிட்டான் , சிவன் ; உன் குழந்தைக்கு நீ சோறூட்டுகிறாய்  ! சாப்பிட்டுக்கொண்டேஅது , தன் எச்சில் கையால்ஒரு சிறு பருக்கையைஎடுத்து , திரும்பவும் , அதை , தன் வாயில் போட்டு , தடவிஉன் வாயில் , ஊட்டுகிறது !

9- கல்லா ? கடவுளா ?

 

அதுவாக நான்

 

அதை , நீ மறுத்து விடுகிறாயா ? அதை உண்டு , மகிழ்கிறாய்  அல்லவா ? குழந்தைகளாகிய , நமக்கு அவன் தருகிறான் ; அதைத் திரும்பவும் அவனுக்குக் கொடுத்துமகிழ்கிறோம் ! கல்லால் எறிந்து , பூசை , செய்தான் ஒருவன் ; கசையால் அடித்து , அவனை நினைத்தான் , ஒருவன் ! வில்லாலும் , அடித்து , வரம் பெற்றான், வேறொருவன் ; வேறொன்று நினைத்து , மலரால் , அடித்தவனைத் தண்டிக்கவில்லையா , இறைவன்? எதைப் படைக்கிறோம் ? எதனால் அர்ச்சிக்கிறோம் , என்பதல்ல , கேள்வி ! அதை எப்படிச் செய்கிறோம் ? என்பது தான் கேள்வி !

ஒரு இடத்தில் , அரிசிச்சோறு, உண்கின்றனர் ; வேறிடத்தில் , கோதுமைஉண்கின்றனர ; பலர் பலவிதமான உணவு வகைகளை , உட்கொள்ளுகின்றனர் ; எல்லாம் வயிற்றுக்கேஅதுபோல் , எல்லாம் இறைவனுக்கே , என்ற எண்ணம் வந்தால்அங்கே , கேள்விக்கே , இடமில்லை ! எந்த ஐயமும் வேண்டாம் !

நீ எதை நினைக்கிறாயோ , அதுவாக , நான் ஆகிறேன் , என்று , கண்ணன்கீதையில் சொல்கிறான் ; அதைக்  கேள் ! கடவுளை நினைத்து , எங்கே தேடினாலும் , அவன் இருப்பான் அல்லது வருவான் ! இன்னும் சொல்கிறேன் , கேள்  ! என்று ,சொன்னார் 

வேடன் ஒருவன் , காட்டில் வேட்டையாடிக் கொண்டிருந்தான் ; வேட்டை  முடிந்து , திரும்பும் வழியில் , முனிவர் ஒருவர் , கண்களை மூடி தியானத்தில் , ஆழ்ந்திருந்தார் ;. 

அந்த வேடன் அவரிடம் கேட்டான் !   அந்த உரையாடலைக் கேள் !

 "என்ன சாமி ! கண்ண மூடிக்கிட்டு , என்ன பண்றீங்க ?

 " ஒருவரைத் தேடுகிறேன் அப்பா  "

" என்னது ? கண்ண மூடிக்கிட்டு , உட்காந்துகிட்டு , ஒருத்தர தேடுற , முத ஆளு , நீங்க தான் சாமி ! அது சரி ;  " நீங்க ஒருத்தரு ! இன்னொருத்தரா ? நான் இங்க , வேற யாரையும் பாக்கலியே  ? சாமி ! என்றான் ;

 

 

10- கல்லா ? கடவுளா ?

 

மனத்தைக் கட்டு 

 

 " அவர் மனிதன் இல்லையப்பாஉன் மொழியில் சொல்வதென்றால் , அதுவும் , ஒரு விலங்குதான்  ! "

" அப்பிடியா ! அது என்ன  விலங்கு சாமி ?, சிங்கமா ? புலியா ? கரடியா ? யானையா ? சட்டுனு சொல்லுங்க , சாமி ! அதெல்லாம் எனக்கு தூசு மாதிரி ! இப்பவே , புடிச்சி கொண்டு வறேன் ! உன்ன பாத்தா , பாவமா இருக்கு ! "

 " உன்னால் , என்ன செய்ய முடியுமப்பா ? ...ம் ... சரி  , சொல்கிறேன் ! அதற்கு சிங்கத்தின் தலை  இருக்கும் ! மனித உடம்பு இருக்கும் ! ஆனால் பொல்லாதது ! உன்னால் பிடிக்க முடியாது ! "

 " அப்பிடியா ? அந்த மாதிரி ஒரு வெலங்க , நான் இதுவரைக்கும்  பாத்ததே , இல்லியே , சாமி ! சரி ! சொல்லிட்டீங்கள்ல ! நான் பாத்துக்கிறேன் ! நாளை சாயங்காலம் , அதப் புடிச்சிக்கிட்டு நான் வரல்லேன்னா , நான் இல்லேனு நினைச்சுக்கங்க , அப்பறம் என்ன எதிர்பாக்காதீங்க " என்று , சொல்லி விட்டு போனான் ; மறுநாள்அஸ்தமன நேரத்தில் , அந்த விலங்கைக் கட்டி இழுத்துக் கொண்டு , வந்தான் ; அவன் சொன்னான்;   " நீங்க சொன்ன மாதிரி , இது ஒன்னும், பொல்லாதது இல்ல சாமி ! ரொம்ப சாது ! நீங்க சொன்ன உடனே , இத புடிச்சு , உங்ககிட்டு கொண்டு வந்துவிடாம , ராத்திரி , தூங்கவும் கூடாது ; வீட்டுக்கு , போகவும் கூடாது ; தண்ணி , சாப்பாடு , எதுவும் கூடாதுன்னு , முடிவு பண்ணிகிட்டேன் , சாமி  ! ராத்திரி முழுக்க தேடுனேன் ; பகல் முழுக்க , தேடுனேன் ; பொழுதும் போச்சி ; ஆனா அந்த விலங்கு கண்ணுல படவே இல்ல ; இனிமே இருக்கிறதுல , பிரயோஜனம் இல்லனு , முடிவு பண்ணி  , உங்க கிட்ட , நான் , சொன்ன மாதிரி சாகிறது , தான் நம்ம வழின்னு , ஒரு கிணத்தப் பாத்து , போறேன் சாமி ! போனா , எனக்கு எதுத்தாப்பில , கட்டிப் போட்ட , எரும மாடு மாதிரிநிக்கிது !

 

11- கல்லா ? கடவுளா ?

 

 என்னையும் கட்டுவாய்        

 

அட இதப் பார்றா ! இங்க நிக்கிற , இத விட்டுட்டு , எங்கெங்கயோ , தேடுனமேன்னு , நினைச்சிக்கிட்டே , மெதுவா , ஓடிறக் கூடாதில்ல , பக்கத்துல போனா , இது கொஞ்சம் கூட அசையவே இல்ல , சாமி ! மண்ணு மாதிரி நிக்குது ! சரிகயித்தில , எதுக்கும் , கட்டிகுக்குவோம்னு , கட்டுனேன் ! அப்பிடியே நின்னுச்சு , கட்டி முடிக்கிற வரைக்கும்அப்ப , இத நம்ம தான் , இழுத்துட்டுப் போகணும் போலன்னு , நெனச்சா , பழகின மாடு மாதிரி , பின்னாலயே வருது ! இதப் பாருங்க சாமி ! இதான , நீங்க தேடுன , அந்த விலங்கு ! இருந்தாலும் , இவ்வளவு சாதுவா ஒரு விலங்க , நான் பாத்ததே இல்ல சாமி " என்று சொல்லியபடியே , வந்தான் , அந்த வேடன்அதைப் பார்த்த , முனிவர் திகைத்து எழுந்தார் ! எந்த விலங்கைத் தேடி , இத்தனை ஆண்டுகள் , நிஷ்டையில் இருந்தாரோ , அது தான் , அவன்  கொண்டு வந்த விலங்கு ! தசாவதாரத்தில் , மஹாவிஷ்ணு , எடுத்த , நரசிம்ம விலங்கு ....

கேள் மன்னா ! முனிவர்எழுந்ததும் அங்கே , அந்த நரசிம்ம விலங்கு மறைந்தது ; சங்கு சக்கரங்களோடு மஹாவிஷ்ணுவே நின்றார் ! முனிவர் , அவர் காலடியில் வீழ்ந்தார் ; இதைப் பார்த்த வேடனுக்கு , ஒன்றும் , புரியவில்லைமுனிவர் , " ஐயனே ! நான் காண்பது மெய்யா ? எந்த கோலத்தைக் காணவேண்டுமென்று , இத்தனை ஆண்டுகள் , தவம் கிடந்தேனோ , அது இவனாலா , எனக்கு கிடைத்தது ? சுவாமி ! என் பக்தியில் , என்ன குறை கண்டீர்கள் ? என்னால் நம்ப முடியவில்லை , ஸ்வாமி ! "  " முனிவரேநம்மைவிட மற்றவர்கள் , தாழ்வானவர்கள் , என்ற எண்ணத்தை விட்டொழியும் ! வருந்தாதீர்அவனைக் குறைவாகவும் எண்ண வேண்டாம் ! உமது பக்தி குறைந்தது

, என்று நான் சொல்லவில்லைஎனக்குத் தேவை , சம்பிரதாயங்கள் அல்ல ! சரணடைதல் !

 

12- கல்லா ? கடவுளா ?

 

என்னைத் தேடி இருவர்

 

சம்பிரதாயம் , தொலைவை , அதிகரிக்கும் ; சரணடைதல் , நெருக்கத்தை , இறுக்கமாக்கும் !

ஆனால் , இவனை வைத்துப் பார்க்கும்போது , உமது  பக்தி குறைந்தது தான் ; நீர் தவம் செய்தீரே தவிர , அதில் , தீவிரம் காட்டவில்லைகுறிக்கோள் இருந்தது , ஆனால் அதில் வெறி இல்லை ; இருப்போம்அது கிடைக்கும் போது , கிடைக்கட்டும் , என்ற , அலட்சிய பாவமே , அதில் மேலோங்கியிருந்தது ; என் கோலத்தைக் காண , விரும்பிய நீர் , ஒரு முறையேனும்  அதை உங்கள் மனக்கண்ணில் , காண விரும்பியதுண்டா ? ஆனால் இவன் தன்எண்ணமெல்லாம் , அந்த கோலத்தை நிறைத்துக் கொண்டான் ! இவ்வளவு , காலத்துக்குள் , நான் விரும்பியதை , அடைவேன் என்று , ஓர் இலக்கு , வைத்துக் கொண்டான் ; உம்மிடம் இருந்ததா ? முடிந்தால் , நாளை மாலைக்குள் பிடிப்பேன் , இல்லையெனில் என் உயிரை முடிப்பேன் என்ற இலக்கு , இவனிடம் , இருந்ததுஇவன் உம்மைப் போல் கற்றவன் இல்லை ! விரும்பியதை அடையாமல் , வீடு திரும்புவதில்லை , என்ற வெறி , இருந்தது ! அது வரை , அன்ன ஆகாரம் , எதுவும் வேண்டாம் , என்ற , உறுதி இருந்தது ! இல்லையெனில் , இறப்பேன் , என்ற தீவிரம் இருந்தது ; அவன் நினைவில் , நீர் சொன்ன அந்த விலங்கே நிறைந்திருந்தது ! நீரும் படித்தீரே ! நீ எதுவாக நினைக்கிறாயோ , அதுவாக நான் இருக்கிறேன் , என்று நான் சொன்னதை ! எங்கே நினைத்தீர் ? அதுவாக நான் வர ? சொல்லும் ! இன்று இவனுக்கு , நாம் அகப்படவில்லையெனில் , நிச்சயமாக , அவன் , மடிவான் என்று அஞ்சினேன்ஒரு பக்தன் துன்புறுவதைக் காண நான் சகியேன் , என்றும் படித்திருப்பீரே ! அவனைக் காப்பாற்றவே , சாதுவாக அவனிடம் நின்றேன் ! அவன் சொல்லாமலேயே , அவனுக்குக் கீழ்ப் படிந்தேன்அவன் கட்டாமலேயே அவனிடம் நான் கட்டுண்டேன்

 

 

13- கல்லா ? கடவுளா ?

 

மனதில் உறுதி வேண்டும்

 

ஆவேஷமானது , ஆக்ரோஷமானது , பொல்லாததுஎன்றெல்லாம் , என்னைப்பற்றி நீர்  சொன்னீரே ? அது , உண்மைதான் ! ஆனால் , அவன் என்ன சொன்னான் என்று , கேட்டீரா ? என்னை எந்த துன்பத்துக்கும் ஆளாக்காமல் , முரண்டு பிடிக்காமல்  , இது என்னோடு வந்தது என்று ! அதை எண்ணி நான் மகிழ்கிறேன் ! பெருமைப் படுகிறேன் ! முனிவரே ! ஆம் ! அவனுடைய உறுதிக்கு , நான் அடிமை ! அவனுடைய பக்திக்கு , முன்னால்  நான் ஒரு சிறு கன்று  ! சிங்கமாக இருந்த நான் , சின்னஞ்சிறு கன்றாக   நின்றேன் ! ஆவேஷமாகவும் ஆக்ரோஷமாகவும் இருந்த நான் , அத்தனையையும் விட்டு விட்டுஅவனுக்குப் பின்னால் அமைதியாக , வந்தேன் ! இதுதான் , அவன் என்னைக் கட்டிப்போட்ட கதை ! நல்லது ! என்னைத் தேடி இருவர் வந்தீர்கள் ! எந்த உருவிலும் என்னைத் தேடுபவர்களை , நான் கைவிடுவதில்லை ! உங்கள் வழி எதுவாயினும் , அது பற்றி நான் கவலைப் படுவதும் இல்லை ; அது நல்ல வழியாக மட்டுமே , இருக்க வேண்டும் என்பதே , என் நிலை ! எழுந்திரும் முனிவரே  ! வருந்தாதீர் ! நீவிர் , இருவரும் , என் அன்பர்களேவாருங்கள் ! அன்பான, வேடனே ! நீயும் , என்னோடு வா ! நீங்கள் இருவரும் என்னோடு வருகிறீர்கள் ! " என்று அவர்களைத் தன்னோடு அழைத்துச் சென்றான் , இறைவன் ; கேட்டாயா ? மன்னா ! என்று முடித்தார் , சுவாமிஎல்லாம் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது ! ஆனால் ..என்று தயங்கிய மன்னரிடம் , எது நன்றாக இல்லை என்று கேட்டார் சுவாமிகள் ; சுவாமி , …கடவுளே இல்லை என்று சிலர் சொல்கிறார்களே ! அதற்கு என்ன பதில் சுவாமி ? உன்னிடம் அடிப்படை இருக்கிறது என்று நம்பி சில விஷயங்களைச் சொன்னேன் , என்றவரிடம்  ; மன்னியுங்கள் சுவாமி ! அவர்களுக்கு பதில் சொல்வதற்காகக் கேட்டேன் ; என்றார் மன்னர் !

 

14- கல்லா ? கடவுளா ?

 

கடவுள் இருக்கிறாரா ?

 

வாய்விட்டுச் சிரித்த சுவாமிகள் ; உன்னிடம் அடிப்படையே இல்லை என்று இப்போது தான் தெரிகிறது என்றார் ;

மன்னியுங்கள் சுவாமி ! சிலர் அப்படிப் பேசுகிறார்கள் ; கடவுள் இருக்கிறது என்பது மூட நம்பிக்கை என்கிறார்கள் ; அவர்களுக்கு நமது பதில் என்ன என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்குத் தான் அப்படிக் கேட்டேன் , என்றார் மன்னர் ; பரவாயில்லை ; உன் கேள்வி தவறு தான் ; என்றாலும் கேட்டதற்கான காரணம் சரி ; ஆகையால் கேட்டதில் தவறில்லை ; புரிந்து கொண்டால் சரி என்றவர் , விஞ்ஞானம் என்றால் என்ன சொல் என்று கேட்டார் சுவாமி ; அறிவியல் ; ஆங்கிலத்தில் science ; என்றார் மன்னர் ;  கடகடவெனச் சிரித்த சுவாமிகள் ,  what is science  என்று கேட்டார் ; மன்னர் ஒன்றும் சொல்லவில்லை ; சுவாமிகள் சொன்னார் :  சாரட்டில் செல்கிறாயே ! அது தானாகவே , நீ போகுமிடத்துக்கு செல்லுமா ? போகாது சுவாமி ; அதை சாரதி ஓட்ட வேண்டும் ;  

சுவாமி சொன்னார் ; ஓட்டுனர் இல்லாமல் வண்டி ஓடாதென்பாய் ! ஆனால் ஒருவன் இல்லாமல் இந்த உலகம் இயங்காதென்றால் ஒப்புக்கொள்ள மாட்டாய் ! அப்படித் தானே ?  நாம் வாழ்கின்ற இந்த பூமியில் , இரவு என்றும் பகல் என்றும் மாறி மாறி வருகின்றன ; கோடை , குளிர் , மழை , வறட்சி என்று பருவ காலங்கள் மாறுகின்றன ; பூமி , சந்திரன் , சூரியன் , கிரகங்கள் , நட்சத்திரங்கள் என்று எல்லாமே ஒரு சீரான தூர மற்றும் கால இடைவெளியில் , ஒன்றுடன் ஒன்று மோதிக்கொள்ளாமல் . இந்தப் பேரண்டத்தில் சுற்றிச் சுற்றி வருகின்றன ; இவை எல்லாமே தானாகவே நடக்கும் செயல்கள் என்று கூறுகிறாயா ? கோழியிலிருந்து முட்டை , முட்டையிலிருந்து கோழி என்று மாறி மாறி முன்னோக்கிச் சென்றால் , முதலில் இருந்தது எது என்று தெரியவேண்டுமல்லவா ? எதுவும் இல்லாமல் ஏதாவது நடக்குமா ?

15- கல்லா ? கடவுளா ?

 

விஞ்ஞானமும் , மெய்ஞானமும்

 

நடைபெறுகின்ற காரியங்கள் எல்லாம் ஒரு காரணத்தோடு தான் நடக்கின்றன ; அந்த காரணம் எது என்பதைக் கண்டறிவது தான் விஞ்ஞானம் ; காரணம் எது என்பதைக் கண்டறிந்து விட்டால் தீர்வுகளையும் கண்டறிய முடியும் என்பது தான் விஞ்ஞானம் , மெய்ஞானம் ஆகிய இரண்டு கோட்பாடுகளின் முடிவு ; வெயில் அடிக்க சூரியன் வேண்டும் ; மழை பெய்ய மேகங்கள் வேண்டும் : உலகம் இயங்க ஒரு காரணம் வேண்டும் ; அந்த காரணம் கடவுள் என்று சொல்வது மெய்ஞானம் ; ஆகையால் விஞ்ஞானமும் , மெய்ஞானமும் ஒன்று தான் ; கடவுள் இருக்கிறார் என்று நம்பித்தான் ஆக வேண்டும் ; “ புரிந்து கொண்டேன் : எல்லாம் சரி தான் , சுவாமி  ஆனால் "  , 

" தயங்காமல் கேள் ; சொல்கிறேன் ! " என்றார் , சுவாமி ! " இந்த சிலை வழிபாடு தான்

எனக்குப் பிடிக்கவில்லை ! சுவாமி  " ,  என்றார் மன்னர் !  " இன்னுமா ? உனக்கு , தெளிவு பிறக்கவில்லை ? என்ன சொல்கிறாய் ?

மன்னாசிலை வழிபாடா ? சொரூப வழிபாடா ? அல்லது ரூப வழிபாடா ? " என்று கேட்டார் சுவாமி ;  " தங்கள் கேள்வி , எனக்குப் புரியவில்லை சுவாமி " என்றார் , மன்னர் ;

" சொல்கிறேன் ; கேள் ! சுய ரூபம் என்பது தான்  , சொரூபம் ; ஒரு உண்மையான அதாவது நிஜமான ஒன்றைப் பார்த்து , அதே போல , ஒன்று செய்தால் , அது சொரூபம் ; நாம் இறைவனின் உண்மையான உருவத்தைப் பார்த்ததில்லை , ஆதலால் , நாம் அவனது சொரூபத்தைச் செய்யவும் முடியாது ! வணங்கவும் , முடியாது ! ரூபம் என்பது நமக்குத் தேவையான , அல்லது பிடித்தமான ஒன்றை , ஏதோ ஒரு உருவத்தில் செய்து கொள்வது , நாம் இப்போது வழிபடுவது , உருவ வழிபாடு , அதைச் சிலை வழிபாடு , என்று சொல்லி விட முடியாது ! ஏன் என்று கேள் !

 

16- கல்லா ? கடவுளா ?

 

வர வேண்டிய இடம்

 

இந்த உருவத்தை , சிலர் காகிதத்தில் , வரைந்து கொள்கிறார்கள் ; சிலர் மரத்தில் செதுக்கிக் கொள்கிறார்கள் ; சிலர் மண்ணில் , வனைந்து கொள்கிறார்கள் ; சிலர் கல்லில் , உலோகத்தில் , வடித்துக் கொள்கிறார்கள் ;

இப்படி , எல்லோரும் தான்உருவ வழிபாடு செய்கிறார்கள் !   இந்த முறையில் , நாம் உலோகம் மற்றும்  கற்கள் என்று மட்டும் இல்லாமல் , எல்லாவற்றிலும் , உருவங்கள் செய்து , பூஜிக்கிறோம்  ! இதில் என்ன ? தவறு கண்டாய் ? "  அவருடைய பதில் , அவருக்கே , திருப்தி தரவில்லை , என்று  அவருக்கும் , தெரியும்  ! இருந்தாலும் ," என்ன மன்னா ! " என்றார் , சுவாமி ! " இல்லை சுவாமி ! இது எனக்கு , நிறைவைத் தரும் , பதிலாகத் தெரியவில்லை ! அவர்கள் செய்கிறார்கள் , அதனால் , நாமும்  செய்கிறோம் ; அதனால் , அதில்  தவறு இல்லை , என்று சொல்வது , நல்ல விளக்கமாகத் தெரியவில்லை என்னை மன்னிக்க வேண்டும்சுவாமி  " என்றார் மன்னர் .

சுவாமி , புன்னகைத்தார் ! நீ எந்த இடத்துக்கு , வரவேண்டும் , என்று , நான் , விரும்பினேனோ , அந்த இடத்துக்கு , இப்போது தான் வந்திருக்கிறாய் ! பேசியபடியே , சுற்றிலும் நோக்கினார் ; சுவர்களில் , கண்ணாடியும்சட்டமும் அமைக்கப் பட்ட பல படங்கள் மாட்டப்பட்டிருந்தன ; ஒரு சில படங்களுக்கு , மாலைகளும் சூட்டப் பட்டிருந்தன ! அவற்றில் , மன்னர் முன்பு காட்டிய , அவரின் பாட்டனாரின் , படத்தின் மேல் , சுவாமியின் பார்வை நிலைத்தது ; மன்னரிடம் , அந்த படம் வேண்டும் , என்று கேட்டார் ; மன்னர் பணியாளரைப் பணித்தார் ; பணியாளர் படத்தைக் கொண்டுவந்தார் ; படத்தைக் கையில் வாங்கிய சுவாமி , சிறிது நேரம் , அதை உற்றுப் பார்த்து விட்டு , முகத்தில் எவ்வித மாறுதலும் இன்றி , யாரும் எதிர்பாராத வகையில் , படத்தின் மேல் தூவென்று துப்பி , கீழே போட்டுக் காலால் எட்டி உதைத்துத் தள்ளினார் !

 

17- கல்லா ? கடவுளா ?

 

கல்லா அவன்

 

சுற்றிலும் இருந்தோர் கைகளைப் பிசைந்தனர் ! மன்னரின் முகம் சிவந்தது ! மீசை துடித்தது ! தன்னையும் அறியாமல் , கைகள் , உடை வாளருகே சென்றன ! எனினும் , செய்தது சுவாமி , என்று தன்னை , அடக்கிக் கொண்டார்என்றாலும் , கேட்காமல்இருக்க முடியவில்லை ;

 " என்ன காரியம் செய்துவிட்டீர்கள் ? சுவாமி ! " , படபடத்தார் , மன்னர் ; " ஏன் மன்னா ! ஆத்திரப் படுகிறாய் ? ஒரு படத்திற்குஇவ்வளவு பதட்டமா ? ஏன் ?" சுவாமி கேட்டார் ! "சுவாமி ! அது சாதாரணமான , படம் இல்லை ; என் பாட்டனாரின் படம் ! என் தந்தையாருக்குத் தந்தையார் ! அவர் வழிபட்டு வந்த , அப்படத்தை இப்பொழுது , நான் வழிபடுகின்றேன் ! எனக்குப் பிறகு , என் பிள்ளைகளும் , வழிபடுவர் ! சுவாமி என்னால் , இதைத் தாங்க முடியவில்லை ! நீங்களா இப்படிச் செய்தீர்கள் , என்று என்னால் நம்பவும் முடியவில்லை ! " பொங்கினார் , மன்னர் ! அமைதியாய்ச் சிரித்த , சுவாமி பேசினார் ; " என்னை , மன்னித்து விடு மன்னா ! உன்னைப் பெற்ற , உன் தந்தையைப் பெற்ற , உன்  பாட்டனாரின், வெறும் படம் தான் அது ! அதில் ஒன்றும் உயிர் இல்லை ! காகிதத்தாலும் மரத்தாலும் , கண்ணாடியாலும் ஆக்கப் பட்டது தான் , அது ! என்றாலும் நீ , அதைக் காகிதம் என்றோ , கண்ணாடி என்றோ , நினைப்பதில்லை ; நீ பார்க்காத அவரை , ஆனால் உன் தந்தையார் சொன்னார் என்று நம்பி , அது , உன் பாட்டனார் என்றே , எண்ணி வழிபடுகிறாய்  ; மரியாதை செய்கிறாய் ! நீயே உருவாக்கிக் கொண்ட , இந்த உருவப்படத்தில் , உன் பாட்டனார் , இருப்பார் ; ஆனால் , அவன் உருவாக்கி வைத்த , இந்த கல்லில் , அவன் இருக்க மாட்டானா ? என்றோமறைந்து போன , உன் பாட்டனாரின் , உருவத்துக்குத் தருகின்ற , மரியாதையை , இன்றும் இருக்கின்ற , இறைவனின் உருவத்துக்கு , தரப் பிடிக்கவில்லை , என்கிறாய் ! சிந்தி , மன்னா ! "

18   கல்லா ? கடவுளா ?

 

அகந்தையை அகற்று

 

இந்த உலகைப் படைத்தவன் இறைவன் ! அதில் உள்ள , உயிர்களைப் படைத்தவனும் அவனே ! அவன் எல்லாவற்றிலும் , இருக்கிறான் ! எங்கும் இருக்கிறான் ! எல்லாவற்றையும் , படைத்த அவனால் , மனிதரையும் , விலங்குகளையும் , படைத்த அவனால் , அதில் ஒன்றாக , ஏதோ ஒரு உருவத்துக்கு , மாற முடியாதாஒரு நாடகத்தை , எழுதி , இயக்குகின்ற ஒருவனால் , அந்த நாடகத்தில் , ஒரு பாத்திரமாக நடிக்க முடியாதா ? எங்கும் இருக்கின்ற , அவனால் , இந்தக் கல்லில் , சிலையில் , இருக்க

முடியாதா?ஆனால் , நம்மாலோ எங்கும் , இருக்கின்ற அவனை , அங்கெல்லாம் , நம் சிந்தையைச் செலுத்தி , வணங்க முடியாது ! நாம் பார்ப்பது எது , என்று , பார்வை தீர்மானிப்பதில்லை  ! அது உனக்குள்ளே இருக்கின்ற உணர்வுதான் ! இது கல் , என்று எண்ணிப் பார்த்தால் , அது கல் தான் ! கடவுள் என்று எண்ணினால் , அது கடவுள் ; ஏன் ? அவ்வாறு எண்ண வேண்டும் , என்பாய் ! எல்லாத் திசைகளிலும் , இருக்கின்ற அவனை , எந்தத் திசையை  நோக்கித் தொழுவது ? எல்லாப் பொருட்களிலும்இருக்கின்ற இறைவனை , எந்தப் பொருளைப்  பார்த்துவணங்குவது ?

வணங்குவதற்கு ஒருமுகமான மனம் வேண்டும் ! மனம் , ஒன்றிலேலயித்தால் தான்ஒருமுகமாகும் ! எங்கும் நிறைந்திருக்கின்ற , காற்றைப் பம்ப்பின் வழியாகடியூப்புக்குள் செலுத்துவதைப்போல , பசுவின் உடலில் ஊறுகிற பாலை , மடியின் வழியாகக் கறப்பதைப் போல , இறைவன் அருளைப் பெற , மனதைஒருமுகப்படுத்த வேண்டும் ! அவ்வாறு ஒருமுகப்படுத்த , ஒரு குறிப்பிட்ட பொருளில்பார்வையைச்

செலுத்த வேண்டும் ! அந்த ஒரு பொருளாகநமக்குத் தெரிந்த வடிவத்தில் , ஒரு சிலையைஅமைத்திருக்கிறோம் ! இது ஒரு வழிதான் ! இதுவே முடிவல்ல ! முடிவு அவனை அடைவதே ! சிலை வழிபாடு , அல்லது , உருவ வழிபாடு , பொருளற்றது என்று , கூறுவதும் கடவுளே இல்லை என்று சொல்வதும்  , அனைத்தும்நான் அறிந்தவன் , என்று , தன்னைப் பற்றிப் பெருமையாக , உயர்வாக , எண்ணிக் கொள்வதன்வெளிப்பாடே ஆகும்தராசில் , தாழும் தட்டில் தான் , கனம் அதிகம் ! உயரும் தட்டில் , கனம் குறைவு , என்பதை , நீயும் அறிவாய் ! அறிவுக்கும் , அதே விதிதான்   ! கடவுள்விவாதத்துக்கு அப்பாற்பட்டவர்வெறும்விவாதங்களின் மூலம் , கடவுளை அடைய முடியாது ! பக்தி ஒன்றே நம்மைக் கடவுளிடம்கொண்டு 

சேர்க்கும் ! " என்று விளக்கியசுவாமி " இதை உனக்குக் காட்டவே , இவ்வாறு நடந்து கொண்டேன் ; என்னை மன்னித்து விடு " என்றார் , மறுபடியும் அடக்கத்துடன் ! தடாலென்று , காலடியில் வீழ்ந்தார்மன்னர் !  " மன்னியுங்கள் என்று , மறுபடியும் , மறுபடியும் சொல்லாதீர்கள் , சுவாமி ! அறியாமையில் கிடந்த , என்னை , நீங்கள் தான் , மன்னிக்க வேண்டும் ! " என்று , தேம்பியழுத , மன்னரின் முகத்தில் , தெளிவு தெரிந்தது ! நான் எனும் , அகந்தை எனும் , அறியாமை இருள் அகல , ஆண்டவன் , அருள் புரியட்டும்   !                               நிறைவு பெறுகிறதுவணக்கம்              

 

 

 


                                             

                                                                        

                                                                           

No comments:

Post a Comment