Pages

Saturday, March 17, 2012

7 Kamban kaNda kadhaa paaththirangaL





                         

   கம்பன்கண்டகதாபாத்திரங்கள்

             1 -------தசரதன்

கரியன்னஉரமுடையான்கணக்கற்றவரமுடையான்;
பொருதலிலேபகைவரெலாம்பின்வாங்கும்திறமுடையான்;
ஒருவரத்தால்உற்றதெலாம்வற்றவெனப்பாவையினால்,
தரைபடிந்தமீனெனவேதவிப்புற்றதகையுடையான்!

            2------கைகேயி

கன்னெஞ்சுஅவட்கில்லை;கடியகுணம்அதிலில்லை;
பெண்ணஞ்சுஒருசெயலைப்புரியவெனும்மதியுமிலை;
தண்ணன்பைத்தனயனெனராமன்மேல்காட்டியவள்;
முன்சுமந்தவிதிப்பயனால்விதியதனைமாற்றியவள்!


            3----------ராமன்

ஈன்றவர்ஆணையைஏற்றுநடந்தவன்;
நோன்றவர்நோன்பினைக்காத்துமகிழ்ந்தவன்;
ஒன்றேமனையெனக்காட்டிஉயர்ந்தவன்;
குன்றெனநன்றினைநாளும்புரிந்தவன்!

            4----------சீதை

அழகில்ஆங்கொருரதியைப்போன்றவள்;
அருமையில்அரியவன்திருவைஆண்டவள்;
பொறுமையில்பூமாதேவியைவென்றவள்;
கரியவன்காட்டியகனலில்நின்றவள்!

5------இலக்குவன்

அண்ணனைத்தந்தையாய்அன்புடன்கொண்டவன்;
அண்ணியைத்தாயெனக்கண்களால்கண்டவன்;
கண்ணியம்காத்திடக்கன்னியைக்கடிந்தவன்;
மண்ணெலாம்போற்றிடும்மாட்சிமைபடிந்தவன்!

           6---------பரதன்

அன்னைசெய்தபிழைகண்டுகொதித்தவன்;
அண்ணன்எய்தகதிகண்டுபதைத்தவன்;
பின்னைசென்றவனின்பாதம்துதித்தவன்;
விண்ணெலாம்புகழஏதம்மிதித்தவன்!

          7---------குகன்

கங்கைக்கரையடையபரிசல்ஒட்டியவன்;
காட்டைக்கடந்திடவும்பரிவேகாட்டியவன்;
வேட்டைப்படுவுணவைவிரைந்தேஊட்டியவன்;
விருப்பாய்த்தம்பியெனராமன்ஏற்றியவன்!

         8--------அனுமன்

பக்தியிற்பெரியவன்;பணிவினில்எளியவன்;
பண்பினுக்கரியவன்;பலத்தினில்வலியவன்;
திக்கினைத்தெரிந்தவன்;தீங்கடல்பறந்தவன்;
சக்தியாம்சீதையைச்சடுதியில்அறிந்தவன்!

         9--------வாலி

பிறர்வலிமைதன்பலமாய்ஏற்றதாலோ,
பிறன்மனையைத்தன்மனையாய்ஏற்றுக்கொண்டான்;
பெருமைமிகும்ராமனையும்எதிர்த்ததாலோ,
கருணைமிகும்திருவடியிற்சரணம்கண்டான்!

        10------இராவணன்

ஈசனின்பெயரைஏற்றவன்ஆனான்;
நீசமாம்செயலைநோற்றவன்ஆனான்;
மலையும்இளகும்மாணிசைமன்னன்,
அலையாய்மடிந்தான்அயலாள்எண்ணி!



                                

No comments:

Post a Comment