Pages

Monday, April 30, 2012

48 Come on let us solve!-3




Come on let us solve our problems!
------------------------------------




(1)  Find the number,
When it is divided 
by 2, the remainder is 1;
by 3, the remainder is 2;
by 4, the remainder is 3;
by 5, the remainder is 4;
by 6, the remainder is 5;and
by 7, the remainder is nothing.

(2)  Find the number,
When it is divided
by 2,3,4,5,and 6 the remainders are 1;
But by 7, the remainder is nothing.

(3)  From a number,one third of it is subtracted;
One third of the balance is subtracted;
One third of the remainder is subtracted;
At last,When one third of the balance is subtracted,
The balance is not divisible by 3.without remainder;
Find the number:- 

(4)  There are only 4 weighing stones;
The total weight of them is 40 kgms;
We can weigh any weight from 1 to 40 kgs,
using these stones in both sides at the physical scale;
What are the weights of each stone?

(5)  A pen costs 5 Rs;
      A pencil costs 1 Re;
      And 20 labels cost 1 Re;
      How many items should we purchase,
      to get 100 articles for 100 Rs;

     The answers are:---

       1---------------119.                   
       2---------------301.
       3---------------81  
       4---------------1,3,9,27.  
       5---------------19  pens    95 Rs
                                 1   pencil    1 Re
                               80   labels    4 Rs
                             ---------------------
                               100           100
                               --------------------
     
                                           

                                                                                   







47 May day

வாழ்க!
மேதினம்!
-----------------




உழைத்தார்கள் உறங்காமல்,விழித்து அழவும்,
உழைக்காத எஜமானர் களித்து எழவும்,
ஒருநிலைமை இருந்ததது;அன்று ஓர்நாள்!
என்றதனை மாற்றியதே,மேமு தல்நாள்!

ஆடெனவும்,மாடெனவும் கொட்டில் தன்னில்,
அடைபட்டுப் புரண்டிருந்தார் அந்தோ! மண்ணில்!
அந்தநிலை மாற்றற்கு வந்த நாளே,
ஆண்டுதொறும் நாம் மகிழும் மேநன் னாளே!

உணவுக்குக் கைஎடுத்தால் சாட்டை கொட்டும்!
உரிமைக்குக் குரல் கொடுத்தால் உதிரம் சொட்டும்!
விலங்கோடு விலங்குகளாய் இருந்த நாளை,
விலக்கற்குத் தேர்ந்தாரே மேநன் னாளை!

ஓய்வில்லா உழைப்புக்கு ஊதி யத்தை,
உறுநோய்க்கு சிகிச்சை பெற மருத்து வத்தை,
உற்றதெலாம் வழங்கற்கு வந்த நாளே,
வாழ்த்தொலிகள் முழங்குகிற மேமு தல்நாள்!

வரிசையென வந்ததல்ல மேமு தல்நாள்!
பரிசாகத் தந்ததல்ல மேமு தல்நாள்!
உயிரினையும் பேறாக எண்ணா மற்றான்,
உள்ளதெலாம் ஆறாகச் சிந்திப் பெற்றார்!

கடமைகளைச் செய்யாமல் உரிமை இல்லை!
உரிமைகளை எய்தாமல் கடமை இல்லை!
விதியாகச் செய்தாரே! முன்னோர் அன்று!
விதிகளையே போற்றிடுவோம்! உயர்வோம்! நன்று!

கடமைகளை ஆற்றிடுவோம்! முன்னே என்றும்,
உரிமைகளைக் கேட்டிடுவோம்! பின்னே என்றும்,
உறுதிதனை ஏற்றிடுவோம்! ஒன்றாய் நின்று!
உயர்தற்குச் சூளுரைப்போம்! பொன்னாள் இன்று!



Tuesday, April 24, 2012

46 mozhi




Mozhi

1
மொழி
---------
தொடக்கத்தில் , ஆதி மனிதன் மற்ற உயிரினங்களைப் போலவே தனது தேவைகளையும் , உணர்ச்சிகளையும் , வெறும் ஒலிகளின் வாயிலாகவே , தெரிவித்து வந்தான் ! நாளடைவில் , காலப் போக்கில் , அந்த ஒலிகளை ஒரு குறிப்பிட்ட வடிவங்களாக்கி , இதற்கு இந்த ஒலிவடிவம் அதற்கு அந்த ஒலிவடிவம் என்று ஒரு ஒலி நிர்ணயம் செய்துகொண்டான் ! அதையே மொழி என்கிறோம் !
ஆக , தனது தேவைக்காக , மனிதன் தன்போக்கில் , தனக்குப் புரிகின்ற வகையில் தயாரித்துக் கொண்ட , ஒரு கருவிதான் மொழி ! இந்தக் கருத்து எல்லா மொழிகளுக்கும் பொருந்தும் ! இலக்கண இலக்கியங்கள், இப்படித்தான் இருக்க வேண்டுமென்று திட்டமிட்டோ, அல்லது அதை தொன்மையான மொழி என்று எல்லோரும் அழைக்க வேண்டுமென்றோ , அல்லது அதை செம்மொழி என்று எல்லோரும் புகழவேண்டுமென்றோ , முன்கூட்டியே முடிவுசெய்து , எந்த மொழியும் அமைக்கப் பட்டு விட வில்லை ! தான் சொல்வது என்னவென்று , மற்றவருக்குப் புரியவேண்டும் , என்று தனக்குத் தோன்றியவாறு , தனது சௌகரியத்துக் கேற்றபடி , தனது மொழியை அமைத்துக் கொண்டான் ! என்றுதான் சொல்ல வேண்டும்!
எனவே , இதில் என்மொழிதான் , செம்மொழி ! சிறப்பானமொழி ! என்றெல்லாம் கூறிக்கொள்வது , தேவையற்ற வீண்வாதங்களுக்கும் , வம்புகளுக்கும்தான் , வழிவகுக்கும் ! காக்கைக்குத் தன்குஞ்சும் பொன்குஞ்சுதான்!
ஒருமொழி , நிலைத்து நிற்பதோடல்லாமல் , வளர்ச்சியும் அடைய வேண்டுமானால் , அதில் இலக்கண, இலக்கியங்கள் இருந்தால் மட்டும் போதாது ! அது பேசுவதற்கு எளிதானமொழி என்று , நாம் சொன்னால் மட்டும் போதாது ! அது இனிமையானது , என்ற விளம்பரமும் தேவையில்லை ! பின்னர் என்னதான் தேவை ?.. அதை எல்லோரும் பேச வேண்டும் ! அதற்கு என்ன செய்வது?.. கலப்பு மணம் , வேண்டும் என்கிறோம் ! மொழியில் மட்டும் , கலப்பு , ஏன் வேண்டாம் , என்கிறோம்? ஒருமொழியின் புனிதம் கலப்புச் சொற்களால் கெட்டு விடுவதில்லை ! புரியும் தன்மைதான் வேண்டும் ! பிறமொழிச் சொற்களின் கலப்பு , ஆங்கிலத்தைப் போல் வேறெந்த மொழியிலும் இல்லை ! அதனால் அதன் புனிதம் கெட்டு விடவுமில்லை ! அதை யாரும் பேசாமலுமில்லை ! மாறாக , இன்று அது , அகில உலகமொழி , என்ற அந்தஸ்தைப் பெற்றுவிட்டது ! அத்தகைய அந்தஸ்து நமது மொழிக்கும் வேண்டாமா? அதை செம்மொழி என்று நாமே பாராட்டிக் கொண்டிருந்தால் போதுமா ? ஒருவர் ஒரு மொழியைப் பேச வேண்டுமென்றால் , முதலில் தனக்கும் புரியவேண்டும் ! தன்னோடு , பேசுபவருக்கும் , புரியவேண்டும் ! அதாவது , சொற்கள் எல்லோருக்கும் தெரிந்ததாக இருக்கவேண்டும் ! நாம் சொல்கின்ற ஒரு சொல் அப்படியே அவரைச் சென்று அடையவேண்டும் ! மாறாக , அதற்கு என்ன அர்த்தம் என்று , அகராதியைப் புரட்டும் வகையில் இருக்கக் கூடாது !




2
இன்று ஆங்கிலம் , உலகத்திலேயே , அதிக அளவில் பேசப்படுகின்றது என்றால் , முதற்காரணம் , அதில் வேறுமொழிச் சொற்கள் , அதிக அளவில் இருப்பதே ஆகும் ! அதன் காரணமாக , எல்லோருக்கும் அது எளிதில் புரிகிறது ! சிறிய அளவில் , இருந்த , அதன் சொல்லகராதி , இன்று பலமடங்கு பெரிதானதற்குக் காரணம் , பிறமொழிச் சொற்களை , தனதாக்கிக் கொண்டதேயாகும்!
பாரதியார் பாடினார்;
" பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்,
தமிழ் மொழியில், பெயர்த்தல் வேண்டும் "-என்று ; இன்று அதை இப்படிப் பாட வேண்டும் !
" பிறர் பேசும் பல்மொழியின் வார்த்தைகளை,
நம் மொழியில் சேர்த்தல் வேண்டும் ! "
ஏன் சேர்க்கக் கூடாது ? சேர்த்தால் , என்ன குறைந்து விடும்? ஒன்றும் குறையாது ! அதனால் மொழி வளரும் ! சொல்லகராதி பெரிதாகும் ! புதிதாகச் சேரும் , வார்த்தைகள் எல்லோருக்கும் புரிகின்றதாக இருக்கும் ! காபி என்றால் எல்லோருக்கும் புரியும் ! " குளம்பி " எத்தனை பேருக்குத் தெரியும்? பிறரையும் குழப்பி , நாமும் பசிநேரத்தில் குழம்பவேண்டுமா? பஸ் அனைவரும் அறிவர் ! பேருந்து , அத்தனை பேரும் அறிவரா ? பஸ் , என்று சட்டெனச் சொல்வதை விட்டு விட்டு , பே..ருந்து , என்று நீட்டி, முழக்க வேண்டுமா ? சைக்கிள் சிறு பையனுக்கும் தெரியும் ! துவிச்சக்கரவண்டி , தேவையா? இருசக்கரவண்டி ! சைக்கிளுக்கும் இரண்டு சக்கரம் ; பைக்குக்கும் இரண்டு சக்கரம் தான் ! சரி ; மிதிவண்டி? சைக்கிளையும் மிதிக்கிறோம் ! பைக்குகளையும் மிதிக்கிறோம் ! எது சரி ? ஜக் என்றால் ஜக் தான் ! மக் என்றால் மக் தான் ! டம்ளர் என்றால் டம்ளர் ! குவளை என்றால் , ஜக்கா? மக்கா? டம்ளரா ? பிரெட் என்றால் ரொட்டி ! பிஸ்கட் என்றால்? பிஸ்கட் தான் !
பிசுகோத்தா ? ஏன் பிஸ்கட் வேண்டாமா ? அது தேவையா ? காப்பியா ? நகலா ? எது ஈசி ? எது லேசு? சினிமாவா? திரைப்படமா? டூப்ளிகேட்டா? போலியா? நேக்கா? சாமர்த்தியமா? நிக்கரா? அரை ட்ரவுசரா? எல்லாமே , ஆங்கிலச் சொற்கள் தான் ! டூப்ளிகேட்டுக்கு நகல் , இருக்கட்டும் ! ட்ரிப்ளிகேட்டுக்கு? குவாட்ரிபிளிகேட்டுக்கு ? ரோஜாவுக்கு இருக்கும் மிடுக்கு , ரோசாவுக்கு இருக்கிறதா? ராஜா என்றால் ராஜா தான்; ராசா என்றால்? நகைச் சுவையாக இல்லை ? ஜெய் , மஹாசக்தியை , செய் , மகாசக்தி என்றா சொல்வது? புச்பமும் , புட்பமும் , புஷ்பமாகுமா? பச்பம் , பஸ்பமாகுமா ? ஜனம் , சனமானால் ? ஒரு மொழியின் அழகே , அதன் உச்சரிப்பில் தான் இருக்கிறது ! மொழி , மொலியாகவும் , பலம் , பழமாகவும் இருந்தால் , அது உச்சரிப்பா? தெரிந்ததில் , இருந்துதான், தெரியாததைத் தொடங்கவேண்டும் , என்பது கற்றுக் கொடுத்தலின் அடிப்படை விதி !








3
ஒரு தாய் , தன் குழந்தையை ஆங்கிலப் பள்ளியில் , படிக்கவைத்தாள் ! ஆங்கிலத்தில் , நல்ல தேர்ச்சி பெற்ற , அந்தக் குழந்தை , தன் அம்மாவை , மம்மி என்றும் , அப்பாவை டாடி என்றும் , அழைத்து , மகிழ்வித்தது ! ஒருநாள் , பள்ளி முடிந்து , அந்தத் தாய் , தன் குழந்தையை அழைத்து வந்து கொண்டிருந்தாள்!
நீண்டநேரமாக அணிந்து கொண்டிருக்கின்றாளே என்று , அவள் சாக்சுகளையும் , ஷூக்களையும் கழற்றி , கையில் வைத்துக் கொண்டாள் , அந்தத் தாய் ! வழியில் , ஒருமுள் அந்தக் குழந்தையின் காலில் , தைத்து விட்டது ! " ஐயோ , அம்மா ! செத்தேன் ! என் காலில் முள் தைத்துவிட்டது " என்று அலறியது அந்தக் குழந்தை ! " ஹாய் மம்மி ! எ தார்ன் பிரிக்டு Á¢ அட் மை ஃபூட் ! என்று சொல்ல வில்லை ! ஏன் ?..இயல்பாக நமக்கு எது பேச வருமோ அதுதான் வரும் ! இதைத்தான் நமது முன்னோர்கள், " பேச்சுப் பேச்சென்னும் ! பெரும்பூனை வந்தாக்கால் , கீச்சுக்கீச்சென்னுமாம் கிளி ! என்றார்கள் ! அதாவது , கிளிக்கு என்ன தான், அக்கா என்றும் , தம்பி என்றும் , ச்சீ போடா மடையா என்றும் , வாடா வண்டி வாயா என்றும் , நாம் பேசுவதைப் போலவே கற்றுக் கொடுத்திருந்தாலும் , ஒரு பூனை வந்து அதைக் கவ்வப் போகிறது என்றால் , அதற்கு அந்த ஆபத்தில் உதவுவது , கீச்சுக்கீச்சென்கின்ற , அதன் சொந்த மொழி தான் என்பது , இதன் பொருளாகும் ! இதற்கு , தத்துவவிளக்கம் , வேறு இருக்கின்றது , என்று சொல்வார்கள் ! நமக்கு இப்போது , தேவை அதுவல்ல ! ஒருமனிதனுக்கு , கற்பனைகளும் , சிந்தனைகளும் , இயல்பான , அவனது தாய்மொழியிலேயேதான் உருவாகும் ; வளரும் ; என்பதாகும் ! இதைத் தான்நமக்குத் தெரிந்த ஒன்றிலிருந்து , தெரியாத ஒன்று உருவாவது , என்கின்றோம் ! அம்மாவுக்குப் பிறகுதான் மாமா ; ஏனென்றால் நமக்கு முதலில் அறிமுகமாகின்றவள் அம்மா ; தொடக்கமே , மாமா என்றால் ? அப்பாவுக்குப் பிறகுதான் , அண்ணன் ; தொடக்கமே , அண்ணனாக இருக்கமுடியாது ! நன்றாக அறிமுகமான ஒருவரை , வைத்துத்தான் அடுத்தவர் «È¢Ó¸Á¡Å¡÷ ! அறிமுகமான சொற்களை வைத்துத்தான் , அடுத்த சொற்கள் ! அத்தகைய சொற்களை , ஏன் விலக்க வேண்டும் ? அதனால் நமது மொழிக்கு என்ன ஊறு நேர்ந்து விடப்போகிறது? எந்த ஒரு மொழியும் இறந்து விடுவதில்லை , அதை யாரும் பேசாமல் இருந்தால் தவிர ! கடினமானதாக இருந்தால் , அதைப் பேச யார் முன் வருவர் ? பண்பாடுகளை வளர்ப்பதுதான் கல்வி ! அந்தக் கல்வியை கற்றுக் கொடுக்கும் ஒரு கருவிதான் மொழி ! இடர்ப்பாடுகளை ஏற்படுத்துவதல்ல ! நடைமுறையில் அதைப் பேசுவதற்கு எந்த ஒரு சிக்கலும் இல்லையென்றால் ஒழிய , அந்த மொழியை யாரும் பேசாமல் இருப்பதில்லை ! இப்படித் தான் அதைப் பேசவேண்டும் : அப்படியெல்லாம் , இதைப்பேசக்கூடாது , என்று , கட்டுப்பாடுகளை , விதிக்கும் போது , எல்லோராலும் , அவ்வாறு எளிதில் , பேசமுடியுமா என்பதை , மொழிவல்லுனர்கள் என்று சொல்லிக் கொள்வோர் ஆழ்ந்து யோசிக்கவேண்டும் ! முதலில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும் ; போகப்போக , அது பழகி விடும் என்பார்கள் !


4
எளிதாகச் செய்ய வேண்டிய ஒரு செயலை , கஷ்டப்பட்டு , ஏன் செய்ய வேண்டும் ? கஷ்டமாகச் செய்ய வேண்டிய ஒரு செயலைக் கஷ்டமாகச் செய்தால் சரி ! எல்லாவற்றையுமே கஷ்டமாகத்தான் , செய்ய வேண்டுமா ? சில மொழிகள் வழக்கிலிருந்தே மறைந்துவிட்டது , என்றால் அதற்குக் காரணம் , அதன்மேல் திணிக்கப் படுகின்ற , இத்தகைய கட்டுப் பாடுகளே ஆகும் !
" இராமநாதபுரத்திற்கு , இரயில் வண்டியில் செல்வதற்கு , ஒரு இடிக்கட்டுத் தாருங்கள் ! " என்று தான் கேட்கவேண்டுமா?
ராமநாதபுரம் செல்ல ஒரு டிக்கட்டுத் தாருங்கள் , என்றால் போதாதா ?
" வாய்ப்பு இருக்குமாயின், யாம் அங்கு வருவோம் ", என்றுதான் கூற வேண்டுமா? வாய்ப்பு இருந்தால் வருகிறோம் , என்றால் என்ன ?
எழுத அது சரி ! பேச?
" எம் நிலையை , யாம் விளக்குமாற்றால் , விளக்குதும் ! " என்றால் ? புரியாதவர்கள் , இதை வேறு மாதிரி புரிந்து கொள்ள மாட்டார்களா ?
அது ஆங்கிலேயர் காலம் : கிராமப் புறத்தில் , ஒருநாள் , ஒரு துரை, (ஆங்கிலேயர்களை முன்பெல்லாம் நம்மவர்கள் துரை என்றுதான் அழைப்பது வழக்கம் ) கிராமவாசிகளுக்கு நடுவே , சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தார் ! அருகில் நின்றிருந்த , மொழிபெயர்ப்பாளர் , அவருடைய ஆங்கில உரையை , தமிழில் பெயர்த்துக் கொண்டிருந்தார் ! பேச்சினூடே , துரை , ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியை , விவரித்தார் ! இதைக் கூறி முடிக்க , துரைக்கு ஏறக்குறைய , ஐந்து நிமிடங்கள் ஆயிற்று ! மொழி பெயர்த்தவர் , ஒன்றிரண்டு வார்த்தைகளில் , ஏதோ கூறியதும் , கிராமவாசிகள் , அனைவரும் சிரித்தார்கள் ; வியப்பும் , திகைப்புமான துரை , " நான் நீண்டநேரம் கூறியதை , எப்படி இவ்வளவு சீக்கிரம் மொழி பெயர்த்தீர்கள்? " என்று கேட்டார்; " துரை அவர்களே ! அது வேறொன்று மில்லை : துரை அவர்கள், ஒரு தமாஷ் சொல்கிறார் ! நீங்கள் எல்லோரும் , சிரியுங்கள், என்றேன்; சிரிக்கிறார்கள் " என்றார் ! துவிபாஷி ; துரையின் முகம் போன போக்கை விவரிக்கத் தேவையில்லை !
புரியாத ஒன்றைக் கேட்டு , வெறுமனே, புரிந்ததுபோல் தலையாட்டுவதால் , சொன்னவருக்கும் , லாபமில்லை ; கேட்டவருக்கும் லாபமில்லை !
முன்பெல்லாம் , மகாபாரதக் கூத்தின்போது , பீமன் மரத்தைப் பிடுங்கினானே, என்று, வேஷம் போட்டவர் பாடுவது , பின்னால் , கடைசியில் இருப்பவர்களுக்கு , டிங்கினானே, என்று கேட்குமாம் ; அதையும் கேட்டு, அவர்கள் ஏதோ புரிந்து விட்டதுபோல் , டிங்கினானே ! டிங்கினானே என்று பாடி , மிக , ஆனந்தமாகத் தலையாட்டுவார்களாம் ! அதைப் போல இது சைகைகளினால் , புரிந்து கொள்ளும் பழைய காலத்தையல்லவா நினைவூட்டுகின்றது ! மீண்டும் பழைய காலம் செல்வோம் வா என்று அழைக்கிறார்களா ? இப்படியான கல்வியினால் , எப்படி அறிவு வளரும் ? எப்படி , மொழி வளரும் ? கல்வி விருப்பமானதாக இருக்கவேண்டும் ! அதை கற்றுக் கொள்ள வேண்டும் என்று எல்லோரும் விரும்ப வேண்டும் ! அப்படி இல்லாமல் , எல்லோரும் , அதை வெறுக்க வேண்டும் என்பதுதான் , இவர்களின் விருப்பமா ? என்று தெரியவில்லை ! அது பொது அறிவை வளர்ப்பதாக இருக்கவேண்டும் : அதனால் பயன் விளைய வேண்டும் ; அவ்வாறில்லாமல் ஒரு சாரார் அதை விளக்கவேண்டும் ; மற்றவர்கள் , என்னவென்று புரியாமல் , அதைக் கேட்டு , தலையாட்டிக் கொண்டே இருக்க வேண்டும் , என்றால் , மொழி எப்படி வளரும்?
தாகூர் , வங்கத்தில் எழுதிய கீதாஞ்சலியை , ஆங்கிலத்தில் பெயர்த்தபோதுதான் அதற்கு , நோபல் பரிசு கிடைத்தது !
சரோஜினி நாயுடு , ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதியல்லவா , கவிக் குயில் , பட்டம் வாங்கினார் !
வள்ளுவரின் திருக்குறள் , பன்மொழிகளிலும் பெயர்க்கப் பட்ட பிறகல்லவா உலகப் பொதுமறை , ஆனது !
பண்டிதருக்கு மட்டுமே மொழி என்ற நிலை நிலவுமானால் , அந்த மொழி என்றும் வளராது ! அது உயரமான மொழியாக மட்டுமே இருக்கும் ; சாமான்யர்களாலும் , பேசப்படும் சமமான மொழியாக இருக்காது ; அந்த நிலை மறைந்து , அது பாமரருக்கும் தான் , என்ற நிலை வரவேண்டுமானால் , அது எளிமையாக்கப் படவேண்டும் : அது பயன் தரக் கூடியதாக இருக்கவேண்டும் ! " குண்டுசட்டிக்குள் குதிரை ஒட்டிக் கொண்டிருந்தால் " , என்ன பயன்? நாமும் மற்றவர்களைப் போல் எங்கும் சென்று பேசி , உழைத்து வர வேண்டாமா ? ஒரு மொழி என்ன ? இரு மொழி என்ன ? மும்மொழி என்ன ? கற்றுக் கொள்வதற்கு என்ன கட்டுப்பாடு ? நான் பல மொழிகளும் கற்று , பன்மொழிப் புலவர் , என்று பட்டம் வாங்கி , இந்த உலகைச் சுற்றி வர வேண்டும் ! நீ ஒரு மொழியைக் கூட கற்றுக் கொள்ளாமல் , உருப்படியில்லாமல் ,போக வேண்டுமா ? இது நாம் , முடிவு செய்ய வேண்டிய விஷயம் ! இதில் அடுத்தவர் தலையிடத் தேவை இல்லை !




5
இரண்டு நண்பர்கள் இருந்தார்கள் ; இருவரும் பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ; ஆனால் இருவருக்கும் கொள்கைகள் வேறு வேறு !
ஒருவனுக்கு , எந்த நேரத்துக்கு எது உகந்ததோ , அதையே பின்பற்றுவது மற்றும் , எந்த நிலையிலும் , ஒரே ஒரு மொழி மட்டும் தான் தெரிந்திருக்க வேண்டும் , என்ற நிலையான கொள்கை ; இன்னொருவனுக்கு , எப்போதும் ஒரே ஒரு கொள்கையை மட்டும் தான் , பின்பற்றுவது , மற்றும் தேவைக்கேற்றபடி , எத்தனை மொழிகளையும் , தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் , என்ற நிலையில்லாத கொள்கை ; இருவரும் கொள்கை வழியில் முரண்பட்டாலும் , செலவை எல்லாம் , நிலை இல்லாத கொள்கையாளன் செய்வானாகையால் , செலவு வழியில் , இவர்கள் ஒன்று பட்டிருந்தார்கள் ; உள்ளூரில் , வேலை கிடைக்காததால் , வெளியூர் சென்று தேடுவது என்று முடிவெடுத்தார்கள் ; மும்பை செல்வது தான் , நல்லது என்றும் , தீர்மானித்தார்கள் ; மும்பை செல்வதாயிருந்தால் , ஹிந்தி தெரியவேண்டுமே ! நிலையானவன் , நான் கற்க மாட்டேன் , என்று கூறி விட்டான் ; நிலையில்லாதவனோ, நான் கற்றுத்தான் ஆக வேண்டும் , என்று கூறிய போது , தடுக்கத்தான் , நினைத்தான் ; ஆனால் , அப்படிச் சொன்னால் , அவன் , மும்பை செல்ல டிக்கட் எடுக்க , மறுத்தால் என்ன செய்வது , நமக்கு டிக்கட் வாங்க காசு வேண்டுமே என்பதால் , தடுக்கவில்லை ; ஒரு ஹிந்தி ஆசிரியரிடம் சென்ற அவன் , விபரத்தைக் கூறி , முழுமையாகக் கற்பது முடியாத காரியம் என்பதால் , முக்கியமான வார்த்தைகளை மட்டும் கற்றுத் தரச் சொல்லித் தெரிந்து கொண்டான் ; ஜீ என்றால் , ஐயா ; மா என்றால் , அம்மா ; கானா என்றால் சாப்பாடு ; பானி என்றால் , தண்ணீர் : கப்படா என்றால் , துணி ; சோனா என்றால் , தூக்கம் ; கர் என்றால் , வீடு ; காம் என்றால் , வேலை ; ஹூங்க் என்றால் , ஆம் ; நஹி என்றால் , இல்லை ; ஆ என்றால் வா : ஜா என்றால் போ ; இப்படி , பல வார்த்தைகளைக் கற்றுக் கொண்ட அவன் , இப்போதைக்கு இது போதும் என்று , திருப்தி அடைந்தான் ! நிலையானவனுக்கு , இது எதுவும் தேவைப்படவில்லை ; எடுத்துச் செல்ல எதுவுமில்லை என்றாலும் , ஆளுக்கு ஒரு பையை எடுத்துக் கொண்டு , சென்ட்ரல் நிலையம் வந்து , மும்பைக்கு , டிக்கட் எடுத்துக் கொண்டார்கள்;
மும்பை செல்லும் வண்டி எதுவென்று கேட்டு அதில் ஏறிக்கொண்டார்கள் ; வண்டி போகும்போதே , இருவரும் , ஒன்றாகச் சென்றால் , வேலை கிடைக்காது ; அதனால் , தனித்தனியாகப் பிரிந்து செல்வோம் என்று , மும்பை வந்தவுடன் , முதலில் ஒருவனும் , அடுத்து வேறொருவனுமாகப் பிரிந்து கொண்டார்கள் ; யாரையும் , எங்கும் தெரியாத இடம் ; கொள்கை உறுதி இல்லாதவன் , நடந்தான் ; இருந்த கொஞ்சம் சில்லறைக் காசை வைத்து , என்ன செய்வது , என்று யோசித்தவாறே நடந்தான் ; எதிரே ஒருவர் வந்தார் ; இவன் ஜீ என்று அழைத்தான் ; அழைப்பைக் கேட்ட அவர் திரும்பிப்பார்த்து , அச்சா ! கியா ஹோனா என்றார் ; ஜீ ! கானா நஹி , என்றான் ; தனது மொழியை , அதைத் தெரியாதவன் ஒருவன் , பேச முயற்சிப்பதைக் கண்டு , அவருக்கு மகிழ்ச்சி ! கானா ஹோனா ? என்றவர் , அவனை அழைத்துச் சென்று , ஒரு ஹோட்டலில் உணவு வாங்கிக் கொடுத்தார் ; சாப்பிட்டு விட்டு , நின்றவனைப் பார்த்தார் ; அபி கியா ? என்றார் ; ஜீ , கர் நஹி ; காம் நஹி ! என்றான் ; ஓ !
காம் பீ ஹோனா ? என்றவர் , அவனை அழைத்துச் சென்று , அவருக்குத் தெரிந்த இடத்தில் , ஒரு சிறு வேலை வாங்கிக் கொடுத்து , அங்கேயே தங்குவதற்கும் , ஏற்பாடு செய்தார் ; கொள்கைப் பிடிப்பு உள்ளவனும் நடந்தான் ; அவன் கையில் சில்லறையாவது இருந்தது ! இவன் கையில் அதுவுமில்லை ! இவனும் நடந்தான் ; பசி வயிற்றைக் கிள்ளியது ; இவனுக்கு எதிரேயும் ஒருவர் வந்தார் ; அவரையே பார்த்தவன் , ஐயா , என்றான் ; ஏதோ சொல்கிறானே , பிச்சைக்காரன் போலும் என்று நினைத்தவர் , கியா ? என்றார் ! தலையைச் சொரிந்தான் ; புரியாமல் , அவர் , ஜாவ்ரே என்றார் ; இவனும் புரியாமல் , அவர் நம்மை , சாக அல்லவா சொல்கிறார் என்று நினைத்து , வயிற்றைத் தடவிக் கொண்டே , பசி என்று சைகை காட்டினான் ; அவருக்கும் , வயிறு பெரிதாக இருந்ததால் அதைப் பார்த்து , நம்மைக் கிண்டல் தான் , செய்கிறான் என்று நினைத்து , கோபம் கொண்ட அவர் , சோர் சோர் என்று கத்தினார் ; கூச்சல் கேட்டு ஓடிவந்தவர்கள் , அவனை , மொத்தி , விரட்டினார்கள் ; அவன் இப்படித்தான் இனி , அலைந்து திரிந்து , உதை வாங்கி , என்ன ஆவான் என்று , இப்போது சொல்ல முடியாது ; கொஞ்சம் தெரிந்தவனுக்கே , அவ்வளவு என்றால் , கொஞ்சம் ஜாஸ்தியாகவே , தெரிந்து கொண்டால் , எவ்வளவு கிடைக்கும் , என்பதைத்தான் சொல்ல வேண்டும் ; நமது ஊருக்கு மற்றவர்கள் தான் , வருவார்கள் ,என்றில்லை ; நம்மவர்களும் தான் , அவர்கள் ஊருக்குப் போவார்கள் ! அது இந்த இடத்தை விட்டு போகின்றவர்களுக்குத் தானே தெரியும் ? எனவே எந்த மொழியும் வேண்டாம் என்று சொல்ல வேண்டாம் ; அப்படியெல்லாம் , நான் போகமாட்டேன் , என்று சொல்பவர்கள் கற்க வேண்டாம் !












6-மொழி


யாதும் நம் ஊரே என்கிறோம் ! எதுவும் நம் மொழியே என்றும் சொல்லி ஏன் கற்க மறுக்கிறோம் ?
மலையாளத்தண்ணீர் தான் , தமிழில் வெள்ளமானது ! என்கிறோம் !
நாம் நான் என்கிறோம் ; அவர்கள் ஞான் என்கிறார்கள் ; என்கிறோம் !
கன்னட அங்கிடியும் , தெலுங்கு அங்கடியும் , தமிழில் அங்காடி என்றும் கடையென்றும் ஆனது ! என்கிறோம் !
அவர்கள், கன்னடத்தில் , பரி என்பதைத்தான் , நாம் தமிழில் , வருக என்கிறோம் , என்று சொல்கிறோம் ;
தெலுங்கு பொத்து , தமிழில் பொழுதானது , என்றும் ,
தெலுங்கு ஒத்து , தமிழில் விலகு என்றானது ! என்றும் , ஒத்துக் கொள்கிறோம் !
ஆனால் , அத்தகைய மொழிகளைக் கற்றுக் கொள்ள மட்டும் ஏன் மறுக்கிறோம் ?


பிறமொழிச் சொற்கள் கலந்ததால் , தமிழ் வளர்ந்தது !
வடமொழிச்சொற்கள் நம் தமிழில் நிறைந்திருந்த காலத்திலே தான் அரும்பெரும் இலக்கண நூல்களும் , எண்ணற்ற இலக்கியங்களும் தோன்றின ! அதற்காக , அவற்றாலேதான் அவை தோன்றின என்று நான் கூற வரவில்லை ! அவ்வாறு இருந்தபோது மொழி வளரவில்லையா? என்றுதான் கேட்கிறேன் ! காலத்துக்கேற்றபடி , உங்கள் படைப்புகள் இருக்கட்டும் ! ஆனால் அதில் நமது நாகரீகமும் பண்பாடும் தெரியட்டும் ! அத்தகைய படைப்புகள் மட்டுமே நம் மொழியின் மேன்மையை உலகுக்கு உணர்த்தும் ! அது நம் மொழியின் மதிப்பை கற்றோர் மத்தியில் உயர்த்தும் ! அந்த உயர்வு நம் மொழியை நிச்சயம் வளர்க்கும் ! பேசுவோர் , அஞ்சும் நிலையில் தமிழை வைக்காமல் , அஞ்சாமல் , பேசும் நிலைக்கு , தமிழை எளிமையாக்கின் , பேசுவோர், எண்ணிக்கையிலும் , உயர்வர் ! வாழ்க்கையிலும் உயர்வர் ; அப்போது , மெள்ளத் தமிழ் , இனிச்சாகும் , என்று , அஞ்ச வேண்டிய நிலை , எஞ்ஞான்றும் ஏற்படாது ! வாழ்க நம் மொழி ! வளர்க அதன் புகழ் ! உலகெலாம் ! !


நிருபர் ;--சார் ! உங்கள் மொழிக் கொள்கை என்ன என்பதைச் சொல்லுங்கள் !


பிரமுகர் ;-- சார் என்று அழைக்க வேண்டாம் ; ஐயா என்று கூப்பிடுங்கள் , என்று சொன்னேன் ; நீங்கள் கூப்பிடவில்லை ! இருந்தாலும் பரவாயில்லை ! இனி , நீங்கள் ,
ஐயா என்று கூப்பிடுவதை விட , சார் என்று அழைப்பதே , கௌரவமாகவும் , நன்றாகவும் இருக்கிறது ! என் மொழிக் கொள்கை என்னவென்று , எத்தனை முறை தான் நீங்களும் கேட்பீர்கள் ! நானும் முதல் தடவை என்ன சொன்னோம் என்று
»¡À¸ப்படுத்திப் பார்த்து ஒன்றிரண்டு தடவை சொல்லிய பிறகு , இப்போது , நன்றாக மனதில் பதிந்து விட்டது ! எனவே , அதை , மனதில் ¨ÅòÐì ¦¸¡ñÎ , இனி , ±ò¾¨É Ó¨È வேண்டுமானாலும் சொல்வேன் ! இப்போதும் சொல்கிறேன் ! இருமொழி , மும்மொழி , பன்மொழி என்றெல்லாம் சொல்வார்கள் ! அவர்களுக்கு , நான் , ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புவேன் ! உயிர் ஒன்று தான் , நமக்கு ! அப்படி இருக்க , பல மொழிகள் எதற்கு ? அதனால் மொழியும் ஒன்று தான் ! மொழியை ஒரு கருவி என்று நமது முன்னோர்களே சொல்லி , அதை கவனமாகவே , கையாள வேண்டும் என்றும் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள் ! அப்படி இருக்கும்போது , எண்ணிக்கையில் குறைவாக உள்ள கருவிகளை வைத்துக் கொண்டு , அதை மேலும் உற்பத்தி செய்ய முடியாத நிலையில் , எத்தனை பேருக்குத்தான் கொடுத்து விட முடியும் ? அத்தனை பேருக்கும் வழங்க வேண்டாமா ? சொல்லுங்கள் ! ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட கருவிகளை வைத்துக் கொண்டால் , ஆளுக்கு ஒரு கருவி , என்ற நமது சமநீதிக் கொள்கை காக்க , மீதி கருவிகளுக்கு , நாம் எங்கே செல்வது ? தனி ஒருவனுக்கு , உணவில்லை , எனில் ஜகத்தினை அழித்திடுவோம் , என்ற பாரதியின் வழியில்தான் , நாங்கள் செல்கிறோம் என்று புரிந்து கொள்ளுங்கள் ; தனி மனிதனுக்கு , ஒரு மொழி என்றில்லாமல் , அவனுக்கு , பல மொழிகள் என்றால் , அந்த பல மொழிகளையும் , அழிப்பது என்ற வழியில் தான் , நாங்களும் செல்கிறோம் , என்று தயவு செய்து , இப்போது , நான் சொன்ன பிறகாவது , புரிந்து கொள்ளுங்கள் ! ஒருவனுக்கு ஒருத்தி தான் என்று ராமன் அன்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்கள் ! ஆனால் ஒருவருக்கு ஒரு மொழி தான் , என்று , இன்று நான் சொன்னால் , ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் ! இது உங்களுக்கே நியாயமாகப் படுகிறதா ? இதுதான் என் முடிவான கருத்து , என்று சொல்லி , முதல் பக்கத்தில் போடுங்கள் ; என் புகைப்படத்தையும் , வழக்கத்தை விட , கொஞ்சம் பெரிதாகவே எடுத்துக் கொள்ளுங்கள் ; இல்லையென்றால் , அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் தெரியாமலேயே போய்விடும் ; நன்று ! வாருங்கள் சென்று !


விழி மறைய வைப்பதல்ல மொழி ! வழியைத் தெரிய வைப்பதே மொழி !







Monday, April 23, 2012

45 come on! let us solve!- 2



come on! Let us solve our problems!
------------------------------------

Find the number:
From which, 1 is subtracted;
Half amount is deducted from that;
2 is subtracted from the balance;
Half amount is deducted from that;
2 is subtracted again from it;
Half of the amount is deducted;
2 is subtracted again from it;
Again,when the half amount is deducted,
The remainder is 2.  

Solve:----

There are 4 steps;We can calculate from end;
(4) After half amount is deducted,the remainder is 2.
So the previous number was 2+2=4;
This is, after 2 was subtracted;
So,the previous number is 4+2=6;
(3) As this is half of the amount,the full amount is 6x2=12
This is after 2 was subtracted;
So, the previous number is 12+2=14;
(2) As this is half of the amount,the full amount is 14x2=28
This is after 2 was subtracted;
So, the previous number is 28+2=30;
(1) As this is half of the amount,the full amount is 30x2=60
This is after 1 was subtracted;
So, the previous number is 60+1=61  
That number is 61

                                                 

          The workmanship of man bridges the hell and the heaven!

   Spot: U.S.A 


  

44 engE nhimmadhi?


                                                     

எங்கே? நிம்மதி!
----------------------         


பிள்ளைகளும்,பெற்றவர்களும்!
=============================

பிள்ளைகள் முன்புபோல் எங்களிடம் அன்பாக இல்லை,
என்று பெற்றோர்கள் புலம்புவதும்,பெற்றோர்கள் அன்
பாகஇல்லை,என்று பிள்ளைகள் புலம்புவதும்,சர்வ சாதாரணமாக,நடைமுறையில் இருப்பதை,இன்று நாம்
பார்க்கிறோம்!


ஒருவனோ,அல்லது ஒருத்தியோ பருவவயதைத் தாண்டியபிறகு,
அம்மா,மகன்,மனைவி மற்றும் அப்பா மகள் கணவன்:
இவர்களில்,
மகன், அம்மாவைவிட மனைவியிடமும்;
மகள், அப்பாவைவிட கணவனிடமும்;
ஒரு தந்தை, தன் மகளைவிட,அவள் அம்மாவிடமும்;
ஒரு தாய் தன் மகனைவிட அவன் அப்பாவிடமும்;
அதிக அன்பு காட்டுவது சரியா? என்றால் இயற்கையின்
நியதிப்படி சரியே!
கூடுதலாக எவரிடமிருந்து அன்பு பெறப்படுகிறதோ,
அல்லது பெறப்பட்டதோ,அவரிடம் கூடுதலாக அன்பு
காட்டுவது மனித இயல்பு!
அந்த வகையில்,ஒரு ஆண் மனைவியிடமும்;
ஒரு பெண் கணவனிடமும்;
கூடுதலாக அன்பைப் பெற்றவர்கள்,அல்லது பெறுகின்றவர்
கள், என்ற நிறைவில்,அவர்களும் கூடுதலான அன்பைக்
காட்டுவது இயற்கைதான்!
இந்த அன்பின் அடிப்படையை இனக்கவர்ச்சி என்றும் கூட
வைத்துக் கொள்ளலாம்!
இனப்பெருக்கத்துக்கான தொடர் நடவடிக்கைகளில் இது
ஆரம்பம் என்றும் வைத்துக் கொள்ளலாம்!
இதை மேலோட்டமாகப் பார்த்தால்,ஒரு அற்பமான,ஏன்
அநாகரீகமான காரணமாகவும் தெரியலாம்;
இது நம்மை மிகவும் உயர்வானவர்களாகக் கருதிக் கொள்
வதன் வெளிப்பாடுதானே தவிர,உண்மையில் அது உண்மை
யில்லை! பெரும் ஞானியரைத் தவிர்த்து,(ஏன் அவர்களையும்
சேர்த்துத்தான்) அனைவரும் இக்கோட்பாட்டுக்குள் அடங்கி
யோர் தான்! பீஷ்மனின் தந்தை சந்தனு மன்னன் இதற்கு ஒரு
நல்ல எடுத்துக் காட்டு!
தவ வலிமை மிக்க விசுவாமித்திரனும் இதனாலேயே தடுக்கி,
விழுந்தான்! இது நமது பெருமையைக் குலைக்கிறது என்றா
லும் தவிர்க்க இயலாதது! இனக்கவர்ச்சி, இயற்கை நமக்க
ளித்த ஒரு சிறப்பு ஏற்பாடு ஆகும்!நாம் இதை இலைமறைவு
காயாக வைத்திருப்பது, விலங்குகள் நிலையிலிருந்து ,
ஆறறிவு பெற்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறோம்,என்பதற்கே
ஆகும்;இன்னும் கூட நாம் விலங்குகள் நிலையிலேதான்
இருக்கிறோம் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்!அதற்காக
வேதனைப்படவேண்டும்,என்றும் வெட்கப்பட
வேண்டும் என்றும் சொல்வதெல்லாம் ஒரு ஒப்புக்காக மட்
டுமே இருக்கும்!பெற்று வளர்த்த பிள்ளை,பருவமுற்றஉடனே
மற்றவரைத் தேடி, ஒடுவதோடல்லாமல், நம்மை உதாசீனப்
படுத்துவதோடு நிற்காமல்,அவர்களின் தேவைகளை நிறை
வேற்றுவதோடல்லாமல்,அவர்களைச்சேர்ந்தவர்களை
உயர்த்தியும்,நம்மைத் தாழ்த்தியும் பேசும்போதுதான் பிரச்சி
னையே எழுகின்றது!அதோடு நமது தேவைகளை அவர்கள்
கவனிக்காமல் விட்டால், பிரச்சினை இன்னும் பெரிதாகி
விடும்! நாம் சாதாரணமாகச் செய்வதெல்லாம் பெரிய தவறா
கவும்,அவர்கள் செய்யும் பெரிய தவறுகள் எல்லாம் சாதாரண
மாகவும் அவர்களுக்குப் படுகின்றது! நமது சொல்லும் செயலும்
அந்நியமாகிப் போகிறது!நமக்குள் ஏதோ ஒரு இடைவெளி ஏற்
பட்டுவிட்டதைப் போன்ற ஓர் உணர்வு!இதற்கு யாரோ ஒருவர்
காரணமாகி விட்டார், என்று அவர்மேல் வெறுப்பு!இந்த நிலை
ஏன் என்றுதான் அவர்கள் வேதனை அடைகின்றார்கள்! அவர்
களின் எதிர்பார்ப்பு பொய்யாகிப் போகும்போது அல்லது பொய்
யாகி விட்டதாக அவர்கள் எண்ணும்போது,அவர்கள் பெற்ற பிள்
ளைகளே அவர்களுக்கு ஆறுதலாக இல்லாதபோது, மற்றவர்
யாரிடமிருந்து, அந்த அமைதியை எதிர் பார்க்க முடியும்? பிறகு
யார் அந்த நிம்மதியை தருவார்? இந்த நிலை மாறினாலே,அங்கே
அமைதியும் நிம்மதியும் நிலவும்!பிள்ளைகள்சிறியவர்களாக
இருக்கின்றபோது,பெற்றோர் அவர்களைப் பற்றிக் காணுகிற
கனவுகள்,அவர்கள் பெரியவர்களாக ஆகின்றபோது பொய்த்துப்
போவதாக எண்ணுவதன் காரணமே இதுதான் என்று கொஞ்சம்
நிதானமாக சிந்தித்தால் புரியும்!
இதற்கு என்ன தீர்வு? பிள்ளைகளும்,அவர்களைப் பெற்றோரும்
ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும்!இதுவரை நமக்காக எல்
லாம்செய்த பெற்றோரை மனம் கோண வைக்காமல்,நடந்து
கொள்வது நம் கடமை என்று பிள்ளைகளும் நினைக்கவேண்டும்!
பிள்ளைகள் அப்படித்தான் இருப்பர் என்று பெற்றோரும் எண்ண
வேண்டும்!பிள்ளைகள் கொஞ்சம் விட்டுக் கொடுக்க வேண்டும்!
ஏன் என்றால்,"வயது ஆகிவிட்டது,நமக்கு;இனி நம்மால் ஒரு
பயனும் இல்லை என்பதால்தானே நம்மை உதாசீனப் படுத்துகி
றார்கள்" என்ற தாழ்வு மனப்பான்மை,அவர்களை நிலை
குலையச் செய்யும்; அவர்களை அந்த மனப் பான்மையிலிருந்து
மாற்ற,நாம் சில முயற்சிகளை மேற்கொள்ளலாம்;அவர்கள்
என்ன சொல்கிறார்கள்,என்று கேட்கவேண்டும்;அதில் உள்ள
சாதகபாதகங்களை அலச வேண்டும்! பிறகு ஒரு முடிவு எடுக்க
வேண்டும்; இவ்வாறு செய்வதால்,நமக்கும் ஒரு முக்கியத்துவம்
கிடைக்கிறது,என்று அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்!அந்த
மகிழ்ச்சி அவர்களின் தாழ்வு மனப்பான்மையை அகற்றும்;
பிள்ளைகள்,நம்மீது அன்பாகத்தான் இருக்கிறார்கள் என்ற எண்
ணத்தை,அவர்களுக்கு ஏற்படுத்தும்;வீட்டில் நிம்மதி நிலவும்!


கணவனும் மனைவியும்!
=======================      


பெண்ணும் மாப்பிள்ளையும் இருந்தால் தான் திருமணம்!
பெண்ணை மட்டும் மணவறையில் அமரவைத்து ,அல்லது
மாப்பிள்ளையை மட்டும் அங்கே அமரவைத்து திருமணம்
செய்ய முடியாது!
கணவனும் மனைவியும் சேர்ந்தால்தான் குடும்பம்!
கணவன் இல்லாமல் மனைவி மட்டும் இருந்தாலோ,அல்
லது மனைவி இல்லாமல் கணவன் மட்டும் இருந்தாலோ,
அதை முழுமை பெற்ற குடும்பம் என்று சொல்ல முடியாது!
இந்த இருவரில் ஒருவருக்கு மட்டும் தான் முக்கியத்துவம்,
என்றும் சொல்ல முடியாது!இருவருக்கும் தான்!ஆகவே,
இருவரில் யார் உயர்ந்தவர் என்ற கேள்விக்கே இடமில்லை!
"கொண்டவனைப் பேணுதகைப் பெண்ணுக்காகும்!
கொண்டவளைப் போற்றுவதோ ஆணுக்காகும்!
இன்பெனினும் துன்பெனினும் இணைந்து செல்லல்,
இல்வாழ்வோர் ஏற்குதகைக் கடமையாகும்!"
ஒரு குடும்பம் செம்மையாக இயங்க,இருவரும் ஒருவரை
ஒருவர் அனுசரித்துப் போவதே சிறப்பான வழி!ஒருவ
ருக்கு ஒருவர் விட்டுக் கொடுப்பதால்,யாரும் குறைந்து
போவதில்லை!இருவரும் தோழமையோடு பழகும்போது,
வேற்றுமை எண்ணம் வரவே வழியில்லாமற் போய்
விடும்!நாம் இருவரும் ஒன்று என்றால்,உயர்வு ஏது?
தாழ்வு ஏது?உண்மையைச் சொல்ல வேண்டுமானால்,ஒரு
குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு,மனைவியின் சொல்லே
மந்திரமாக இருக்கும்!இதற்கு நாம் வெட்கப்படத்தேவை
இல்லை!அத்தகைய குடும்பங்களேசிறப்பாக இயங்குகின்
றன,என்பதும் நாம் காண்கின்ற காட்சிகளாகும்!அவ்வாறு
இல்லாத குடும்பங்கள்,ஆணாதிக்கம் நிறைந்ததாகவே
இருக்கும்!
குடும்ப பந்தம் என்பது ஒருவர்மேல் ஒருவர் ஆதிக்கம்
செலுத்துவதல்ல!இருவரும் தாங்கள் எதிர்கொள்ள இருக்
கின்ற பிரச்சனைகளை,தங்களுக்குள் விவாதித்துப் பேசித்
தீர்க்கவேண்டும்!அவளுக்கு ஒன்றும் தெரியாது,என்று கண
வனும்,அவருக்கு ஒன்றும் தெரியாதுஎன்று மனைவியும்
எண்ணுவது கூடாது!எல்லோரும் அவரவர் வழியில்,ஓர
ளவு அறிந்தவர்களே! இன்னும் சொல்லப்போனால்,ஒருவர்
மேல் ஒரு பொறுப்பைச் சுமத்தும்போது,பொறுப்பற்றவரும்,
பொறுப்பு மிக்கவராக மாறுகிறார் என்பது உளவியல் உண்
மையாகும்! எனவே அதற்கான வழிமுறைகளை,இருவரும்
பகிர்ந்து,அதனால் வரும் சாதக பாதகங்களை,விவாதித்து,
ஏற்றவழி என்று,ஒன்றை இருவருமேமுடிவு செய்ய வேண்
டும்;ஏனென்றால் வருகின்றவிளைவுகளில் இருவருக்கும் சமபங்கு
உண்டு,என்பதால்,இந்த விவாதம்,அவர்களுக்குள் ஒருநெருக்கத்தையும்
பொறுப்புணர்ச்சியையும் ஏற்படுத்தும்!இதனால் எந்தவிதமான மனக்கசப்பும்
ஏற்பட வழி இருக்காது!
அதனாலேயேதான் நமது முன்னோர்,கணவ
னும்,மனைவியும் வண்டியில் பூட்டப்பட்ட ,இரண்டு மாடு
களைப் போல என்றார்கள்;இருவரும் ஒருதிசையில் சென்
றால்,வண்டி சீராக நகரும்:வெவ்வேறு திசையில் இழுத்
தால்,இருவருக்கும்தொல்லை
தான்,என்பதோடு,வண்டியும்
நகராது!வாழ்க்கை சீராக இயங்க
வழி தேடுங்கள்!முன்
னேற்றம் காண முயலுங்கள்!மகிழ்ச்சியும் இனிமையும்
ஓங்க ஒருமனதோடு முனையுங்கள்! வெற்றிகள் பல
பெறுங்கள்! உற்றாரும் மற்றாரும் வியக்க,வாழ்வில் வள
மும் நலமும் பெற்று மகிழுங்கள்!
வள்ளுவன் கண்ட வாழ்க்கையை நீங்களும்  காணுங்கள்!   வாழ்க பல்லாண்டு!!





Friday, April 20, 2012

43 Freedom struggle


Freedom Struggle!
-----------------------



                                     

                                                                                             













                       
Respected president!
Reforming teachers!
Beloved Parents!
And my dear friends!

I bow down and hail you all!I wish you a happy independence day!
Today we are celebrating our fiftieth independence day!
Our freedom struggle was over!But for that, We should remember that our
forefathers gave a great price!Yes this was achieved only after continuous
fight by great leaders,like Mahathma gandhi,Jawaharlal nehru,Nethaji,Sardar
patel,V.O.chidambaram pillai,Bharadhiyar,and Subramanya siva and many
more patriots.
They ignored their lives,longings and belongings.Though they were put in
prison,though they were shot dead,and though they were punished severely,
They did not fear for anything,but one thing; that was our freedom.
The British at last found that it was not possible to exist here and decided to
quit India!
Thus,We got our freedom on the 15th August 1947.Yes we got it from the
roaring cannon's mouth.Now the freedom fight is over.
But the freedom from poverty,
the freedom from untouchability,
and the freedom from diversity,
We have not yet got!
It is our duty to follow the teachings of our forefathers and to work hard
for the development of our nation.Thank you!

                                                           
                                                               

Thursday, April 19, 2012

42 A kind of generation


A kind of generation
or
The kind of generation
(Then and now)

When I puled then,They patted me to calm;
Now when I pule,They beat me to calm.
When I vomited ,They cleaned me;
Now I vomit;They hit me to clean.
When I tried to get up,They helped me;
Now I try to get up;They curse me.
When I began to walk,They encouraged me;
Now I try to walk;They discourage me.
When I started my speech,They were happy;
Now I speak; They are unhappy.
When I was dirty,They made me bathe;
Now too I am dirty;But they hide me.
When I could not eat,They fed me;
Now I can not eat;They shed me.
When I cried for sweets,They granted;
Now I weep for hungry;They get angry.
When I wanted to read,They gave me books;
Now I want to read;They give me kicks.
Then they made me well dressed;
Now they tell me to be half naked.
Then they laid me in a smooth bed;
Now I lie in a rope cot.
Then they were kind to me;
Now they all hate me.
Because,That was my childhood;And those were my parents!
This is my elder hood;And these are my children!

When a baby is born,The parents laugh and let the baby weep!
Is it the revenge for that?Not the children are all tomorrow's parents?                                       








                                           

Tuesday, April 17, 2012

41 creation of God


Creation of God
------------------


                                                               

                             
                                                                      
                    
                                                                                  
God created  world so nice;
And combined flowers birds and beasts;
Roaring seas you see,my dear friends,
How wonderful is his trends.                                                                               

                                                                




                                                          


                                                                                                                                                          
Air blows upward;
And river flows downward;
Mountains lay the dome:
And meadows lie the down.





Seasons round the year;
And make pleasure the earth;
Stars twinkle in the sky;
And don't enjoy you, why?

                                                                                           


Vanishes the moon;
And rises then the sun;
Clouds roll down below;
And garnish then rainbow.

                   


                                                                              
Spreads the bird her wings;
And flies in air and sings;
Beautify flowers.
And pacify lovers;



                                                                               
                                                                                     
                                                                                            
All pronounce his name;
And all announce his fame;
Come with me to sing!
And come with me and sing!




Monday, April 16, 2012

40 Laptop

நீஎன்மடிக்கணிணி!












என் மடியில் நீ கிடந்து மினுங்குகிறாய்!-அட
உன்மீது நான் சாய்ந்தால் சிணுங்குகிறாய்!
நேரத்தில் பெரும்பகுதி விழுங்குகிறாய்!-நான்
இல்லாத நேரத்தில் உறங்குகிறாய்!
வருடங்கள் பலசென்று படும் கஷ்டத்தில்-வரும்
நெருடலினால் நினைவெல்லாம் பதிந்திராது!
பலநூறு ஆனாலும் உந்தன்டிஸ்க்கில்-நான்
பதித்ததுவோஎந்நாளும் அழிந்திராது!
கள்ளத்தால் உனக்குள்நான்புகமுடியாது!-மறந்து-கவனமின்றிபோட்டதையும்தொடமுடியாது!
ஒருநாள்நீ ஒருபொழுதுஏதோஆனாய்!-என்று
சரிபார்த்தஅவனாலேமோசம்போனாய்!
சாகசத்தால்உன்னைஅவன்என்னசெய்தான்?-அழிச்
சாட்டியங்கள்பண்ணுகிறாய்!என்ன செய்தேன்?
துணையாக வந்தவளோஅன்புத்தாரம்!-எனக்கு
வினையாக வந்தவள்நீஇரண்டாம்தாரம்!
உண்மையிலே நீ எனக்கு முதலாம் தாரம்!-எனில்,
ஒருவகையில்அவளெனக்கு,இரண்டாம்தாரம்!



உன்னைத்தான் நான்முதலில்கைஎடுத்தேன்!-அதன்
பின்னேதான் என்னவளைக் கைபிடித்தேன்!
கள்ளையும் என்றும் உண்டால்தான்மயக்கம்!
பெண்ணையோ கண்ணால் கண்டால்தான்மயக்கம்!
உன்னையோ கையால் தொட்டாலும்மயக்கம்!
ஒருவேளை தொடாமல் விட்டாலும்மயக்கம்!
பார்வையோ எப்போதும் உன்பக்கம்இருக்கும்!
பார்ப்ப தெல்லாம் எனக்குஅப்போது வெறுக்கும்!
மூடிக் கிடக்கும்உன்
முகம் மாற்ற உன்னை நான் தொடுகணிணி!
ஏற்றம் பெறத்துடிக்கும்
எனைமாற்ற என்னைநீ தொடாக்கணிணி!
கிணற்றுத் தவளைஎனக்,
கண்மூடிக் கிடப்பதனால், மடக் கணிணி!
உணர்வுகளே இல்லையென,
உறக்கத்தில் இருப்பதனால், ஜடக் கணிணி !
வேறெதுவும் செய்யாமல்,
சோம்பலினை வளர்ப்பதனால், மடிக் கணிணி !
உற்றாரைப் பார்க்காமல்,
உறவுகளை அழிப்பதனால், மடி கணிணி !
எடுத்துன்னை வைக்காமல்,
மடித்தபடி வைப்பதனால், மடி கணிணி !
எப்போதும் நீஎனது,
மடிமீது தவழ்வதனால், மடிக் கணிணி !
எந்தன் துயர் தீர்த்து,
எண்ணியதைத் தான்கொடுக்கும்,காம தேனு நீ !
விந்தைகள் பலசெய்து,
சிந்தையினைக் கவர்ந்திழுக்கும்,அரும் ஜனனி!









Monday, April 9, 2012

39 Come on! let us solve!-1

      Come on!


   Let us solve our problems!



A car runs at a constant speed of 30 km /p/h;
A bike runs at the regular increasing speed by 1 km for the
succeeding hours,commencing from 1km/p/h;
Both they start a race from one place at the same time;
Will they meet again?
If so,when and where will they meet?

Solve:
Let the meeting hour be X;
So the final speed of the bike is also X;
Accordingly,
The distance run by the car=The distance run by the bike.
The distance run by the car=Xx30
The distance run by the bike=Xx(X/2+1/2)
Therefore,Xx30=Xx(X/2+1/2);Strike out X,both sides;
=30=X/2+1/2;  =30x2=X+1;  =60=X+1;  X+1=60;  X=60--1=59.
X is the meeting hour of the vehicles.
So,both they will meet at 59th hour.
And on the 59th hour the speed of the bike is 59 km/p/h
The distance:  The car=59x30=1770 km; 
The bike=59x(59/2+1/2)=59x60/2=59x30=1770 km
Both they will meet at 1770 km,distance.          


                                                                                   
                                             

Friday, April 6, 2012

38 maanam !


மானம்!




                                                                                                                 

1

 

மானம்

 

மானம் மிகுந்த தலைவர் அவர்களே !

 

அன்பு நிறைந்த அருமை நணபர்களே

 

மதிப்புக்குரிய பெரியோர்களே !

 

பாசம் நிறைந்த தாய்மார்களே !

 

பண்பும் படிப்பும் நிறைந்த மாணவ மணிகளே !

 

உங்கள் அனைவருக்கும் வணக்கம் !

 

நான் இங்கே பேசுவதற்குப் பொருளாக மானம் கொடுத்திருக்கிறார்கள் ! பொதுவாகப் பேச்சாளர்களுக்குப் பேசுவதற்குப் பணம் கொடுப் பார்கள் ; பாவம் ! பேசிக் கொண்டே அலைகின்றானே ! பிழைத்துப் போகட்டுமே என்று ! ஆனால் நான் இங்கே பேசுவதற்குப் பொருளாக  

" மானம் " கொடுத்திருக்கிறார்கள் ! ஒருவேளை ! ஐயோ பாவம் ! மானம் இல்லாமல் அலைகின்றானே என்று எண்ணி விட்டார்களோ ? என்னவோ ? தெரியவில்லை ! பரவாயில்லை : அதனால் தான் நானும் முன்னெச்சரிக்கையாக மானம் மிகுந்த தலைவர் அவர்களே என்று அழைத்தேன் ! ஏன் தெரியுமா ? நாம் எதையாவது ஒரு பங்கு கொடுத் தோமென்றால் , அது பல பங்காகத் திரும்பக் கிடைக்கும் என்பது நமது பெரியோர் சொன்னது ! அதன்படி , நான் இப்போது நமது தலைவர் அவர்களை , மானம் மிகுந்த என்று அழைத்துகொஞ்சம் மானம் கொடுத்திருக்கிறேன் ! அது பல மடங்காக நமக்குத் திரும்பக் கிடைக்கவில்லை என்றாலும் , ஏதோ கொஞ்சமாவது அதிகமாகக் கிடைக்காதா ? என்ற நைப்பாசையில் தான் !

 

2

 

மானம்

 

ஆனால் இப்போதெல்லாம்நாம் எது கொடுத்தாலும்அதிகமாகக் கிடைக்கவில்லை  என்றாலும்பரவாயில்லை ! கொடுத்ததே கூட திரும்பக் கிடைப்பதில்லை ! ஒன்றே ஒன்றைத் தவிர ! பணம் கொடுத்தோமென்றால் , வாங்கியவர் நம் பக்கமே தலை வைத்துப் படுக்க மாட்டார் ! அதுவாவது போகட்டும் ! கடனாகக் கொடுத்தோம் ! ஒரு வேலையை முடித்துத் தருகிறேன் : சாமான் வாங்க வேண்டியிருக்கிறது , ஒரு ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று சொல்லி , ஒரு தொழிலாளி , வாங்கிப் போனவர் தான் ! இன்னும் அவர் வரவில்லை ! போனவன் போனான்டி ! வந்தாலும் வருவான்டி ! என்று பாடிக் கொண்டி ருக்கிறேன் ! சரி ! சிறிதாக ஏதாவது பொருள் கொடுத்தோமென்றால் , வாங்கியவர் எப்போது தருவார் என்று , நாம் தான் அதை நினைத்துக் கொண்டே இருப்போம் ! ஆனால்வாங்கியவர் சுத்தமாக அதை மறந்து விடுவார் ! நாம் திரும்பக் கேட்டால் , அப்படியா ? எப்போது வாங்கினேன் ? இருக்காதே ! என்பார் ! ஏதோ அவர் மிகவும் யோக்கியமானவர் என்பதைப் போல ! நாம் தான் தலையைத் தொங்கப் போடவேண்டும் ! அது இல்லாமல்பெரிதாக எதையேனும் கொடுத்துவிட்டாலோ போதும் ; வாங்கியவர் வீட்டைக் காலி செய்து கொண்டு ஊரை விட்டே போய் விடுவார் ! " இப்படிச் செய்கின்றோமே ; நம்மைப் பற்றி ஊரார் என்ன நினைப்பார்கள் ? அது அவமானமில்லையா ? " என்று மானத்தைப் பற்றி எல்லாம் ,   அவர்கள் கவலைப் படுவதே இல்லை ! இப்படி இருக்கின்ற இன்றைய சமுதாய நிலையில் , ஒன்றே ஒன்று மட்டும் நிச்சயமாகக் கிடைக்கும் ! அது என்னவென்று புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நினைக்கிறேன்

 

3

 

மானம்

 

ஆம் ! அதுதான் , அடி ; உதை ; அடி , உதை கொடுத்தால் , நிச்சயம் நமக்குத் திரும்பவும் கிடைக்கும் ! ஒரு அடி கொடுத்தால் , அது பல மடங்காகக் கட்டாயம் நமக்குத் திரும்பக் கிடைக்கும் ; ஏனென்றால் , அடுத்தவனிடம் அடி வாங்குவது அவமானம் ; கொடுப்பது தான் , மானம் ! அதனால் வாங்கிக் கொண்டு திரும்பக் கொடுக்கவில்லை என்றால் , நம் மானம் போய்விடுமே என்ற கவலை

" ஒருவன் ஒரு கன்னத்தில் அறைந்தால் , அவனுக்கு உனது மறு கன்னத்தையும் காட்டு " என்றார் , ஏசுபெருமான் !              ஆனால் இப்போதுள்ள பெருமானார்கள் ,  

" ஒருவன் உனது கன்னத்தில் ஒரு முறை அறைந்தால் , அவனது இரு கன்னங்களிலும் மாறி மாறி , பளார் பளார் என்று கொடுத்து விடு ; வருவதை , பிறகு பார்த்துக் கொள்ளலாம் ! " என்று சொல்கிறார்கள் ! அது தான் இப்போதைய நிலை ! இதை ஒரு மானப் பிரச்சினை என்று சொல்கிறார்கள் ! எனவே அடி , உதை  தவிர , வேறு எதுவும் திரும்பக் கிடைக்காது , என்ற இன்றைய நிலையில் , நான் மட்டும் நம்பிக்கையோடு இருக்கிறேன் என்றால் , அதற்குக் காரணம் நமது தலைவர் அத்தகையவர் அல்லர் , என்பதால் தான் ! அதுசரி ; மானம் பற்றிப் பேச வேண்டிய அவசியம் இப்போது என்ன வந்துவிட்டது ? என்று நீங்கள் யோசிப்பதைப் போலவே நானும் யோசித்தேன் !

 

4

 

மானம்

 

பொதுவாக எதைப் பற்றியாவது

நாம் பேசுகிறோம்

என்றாலோ , அல்லது , பேச வேண்டும் என்றாலோ , ஒன்று அது நாட்டில் , அதிகமாக இருக்க வேண்டும்  ; அல்லது குறைவாக இருக்க வேண்டும்அல்லது இல்லாமலும் இருக்க வேண்டும் ! இப்போது அது இருக்கிறதா ? இல்லையா என்ற சந்தேகத்திற் கிடமான நிலையில் இருக்கிறது ! நல்லவை அதிகமாக  நடந்தால் , மானமுள்ளவர்களும் , கெட்டவை அதிகமாக நடந்தால் , மானமில்லாதவர்களும் ஆள்வார்கள் என்பது ஓர் அளவு கோல்சாதாரணமாகநல்லவை அதிகமானால் , நல்லவர்கள் ஆள்கிறார்கள் ; கெட்டவை அதிகமானால்கெட்டவர்கள்

ஆள்கிறார்கள் , என்ற அளவு கோலும் மானத்துக்கு உண்டு !எவ்வாறென்றால் ,

நல்லவை அதிகமானால் , மானம் போகவில்லை !கெட்டவை அதிகமானால் மானம் , போய் விட்டது ; என்றும் வைத்துக் கொள்ளலாம் :

எடுத்துக் காட்டாக மழை குறைந்து வறட்சி அதிகமாகி விட்டால் , செய்தித்

தாள்களில் ,

தொலைக்காட்சிகளில் எல்லாம் , நாடெங்கும் வறட்சி ; மக்கள் கண்களில் மிரட்சி ; வயல்களில் நிலம் வெடிப்பு ; பசியால் மக்கள் துடிப்பு ; என்று செய்திகள் வெளிவரும்

 மாறாக மழை அதிகமாகி விட்டால் , ஊரெங்கும்

மழை ; நாடெங்கும் மழை ; சாலையிலும் வெள்ளம் ;

பிள்ளைகள் படிக்கும் பாட

சாலையிலும் வெள்ளம்

குடிசைகள் நீரில்

மிதக்கின்றனமக்கள் வெள்ளத்தில் மிதக்கின்றனர் ;

மேகத்திலிருந்து

தண்ணீர் மழை ; கூடவே மக்களின் கண்ணீர் மழை ;

என்று வெள்ளம் போல் பேசி எழுதிக் கொட்டி விடுவார்கள்

 

4

 

மானம்

 

பொதுவாக எதைப் பற்றியாவது

நாம் பேசுகிறோம்

என்றாலோ , அல்லது , பேச வேண்டும் என்றாலோ , ஒன்று அது நாட்டில் , அதிகமாக இருக்க வேண்டும்  ; அல்லது குறைவாக இருக்க வேண்டும்அல்லது இல்லாமலும் இருக்க வேண்டும் ! இப்போது அது இருக்கிறதா ? இல்லையா என்ற சந்தேகத்திற் கிடமான நிலையில் இருக்கிறது ! நல்லவை அதிகமாக  நடந்தால் , மானமுள்ளவர்களும் , கெட்டவை அதிகமாக நடந்தால் , மானமில்லாதவர்களும் ஆள்வார்கள் என்பது ஓர் அளவு கோல்சாதாரணமாகநல்லவை அதிகமானால் , நல்லவர்கள் ஆள்கிறார்கள் ; கெட்டவை அதிகமானால்கெட்டவர்கள்

ஆள்கிறார்கள் , என்ற அளவு கோலும் மானத்துக்கு உண்டு !எவ்வாறென்றால் ,

நல்லவை அதிகமானால் , மானம் போகவில்லை !கெட்டவை அதிகமானால் மானம் , போய் விட்டது ; என்றும் வைத்துக் கொள்ளலாம் :

எடுத்துக் காட்டாக மழை குறைந்து வறட்சி அதிகமாகி விட்டால் , செய்தித்

தாள்களில் ,

தொலைக்காட்சிகளில் எல்லாம் , நாடெங்கும் வறட்சி ; மக்கள் கண்களில் மிரட்சி ; வயல்களில் நிலம் வெடிப்பு ; பசியால் மக்கள் துடிப்பு ; என்று செய்திகள் வெளிவரும்

 மாறாக மழை அதிகமாகி விட்டால் , ஊரெங்கும்

மழை ; நாடெங்கும் மழை ; சாலையிலும் வெள்ளம் ;

பிள்ளைகள் படிக்கும் பாட

சாலையிலும் வெள்ளம்

குடிசைகள் நீரில்

மிதக்கின்றனமக்கள் வெள்ளத்தில் மிதக்கின்றனர் ;

மேகத்திலிருந்து

தண்ணீர் மழை ; கூடவே மக்களின் கண்ணீர் மழை ;

என்று வெள்ளம் போல் பேசி எழுதிக் கொட்டி விடுவார்கள்

 

6

 

மானம்

 

நடுவர் என்றால்  அப்படித்தான் , நாசுக்காகச் சொல்ல வேண்டும்அப்படிச் சொல்லி நழுவவில்லை என்றால் , அது அவருக்கு மானப் பிரச்சினை ஆகி விடும் ! அரசியல்வாதிகள் என்றால்அவர்களின் விரோதம் வரும் ! அது பெரிய ஆபத்து ! மக்கள் 

என்று சொன்னால் , இருக்கும் ஊரிலேயே இடத்துக்கு ஆபத்து ; அதனால் தான் இரண்டுக்கும் பொதுவாக அங்கே ஒரு தட்டு ; இங்கே ஒரு தட்டு , என்று அப்படித்தான் இருக்கும் ! இருக்க வேண்டும் ! இதைக் கேட்கஅங்கு செல்ல வேண்டுமா ? என்று யோசித்தேன் ! மெள்ள நகர்ந்தேன் !

வழியிலும் ஒரு கூட்டம் நடந்து கொண்டிருந்தது ! நின்று ஒரு நோட்டம்விட் டேன் ; மேடையில் ஒரு பேச்சாளர் பேசிக் கொண்டிருந்தார் ; அவரது பேச்சு எரிச்சலைத் தான் தந்தது !பொறுப்பான பதவியில் உள்ளவர்கள் , மக்களை அமைதிப்படுத்தும்வகையில் தான் பேச வேண்டுமே தவிர , அவர்களுக்கு ஆத்திரமூட்டி அதில் குளிர் காய எண்ணக்கூடாது ! அந்த வகையில் அவர் , ஏதேதோ பேசிவிட்டு , கடைசியாக , " ஆகவே , நண்பர்களே !ஆண்டாண்டு காலமாகப் போராடிக் கொண்டிருக்கும் நமக்கு , இது இறுதிக் கட்ட தன்மானப் போர் ! இதில் உறுதியான வெற்றி கிடைக் கும் வண்ணம்நமது எழுச்சி அமைய வேண்டும் ! நமது தன்மானம் காக்க யாரும் , நமக்குச் சன்மானம் தர வேண்டாம் : நாம் அடையும் வெற்றியே நமக்கு வெகுமானம் ! அவமானம் வந்தாலும் தாங்கிக்கொண்டு , சீறும் புலிகளாய் ,

அணையை மீறும் நீரின் அலைகளாய் , அணி அணியாய்த் திரள்வீர் ! ஆதரவு , தருவீர் ! புறப்படுவீர் ! " என்ற தோரணையில் , அவர் விடுத்த அறைகூவலைக் கேட்டு , பயந்து , எங்கே நாம் இங்கே சற்றுத் தாமதித்தால் , நமது கையிலும் ஒரு ஆயுதத்தைக் கொடுத்து , புறப்படு நீயும் போருக்கு , என்று நம்மையும் இழுத்துக் கொண்டு போய்விடுவார்கள், என்று மிரண்டுமெள்ள நழுவினேன் !

இதையும் ஒரு மானப் பிரச்சினை என்கிறார்கள்

                                         பொதுமானம் காப்பதற்காக தனிமனிதர்களைஅவமானம் அடையச் செய்வது எந்தவகையில் நியாயம் ,என்பதை அவர்கள் எண்ணிப் பார்த்தார்களா?இல்லை, எண்ணிப் பார்த்தும் அதைப் பொருட்படுத்தவில்லையா?தெரியவில்லை!காய்கறிகள் விலை அதிகமானாலும்அதே கதைதான்:பொது ஜனங்கள் தங்களுக்குள்ளாகவே பேசிக் கொள்வார்கள்;தினசரிகளில் கட்டம் கட்டிப் போடுவார்கள்;அரசியல்

வாதிகளும்,சமூகசேவகர்களும்கூட்டம் போட்டும் பேசுவார்கள்;ஒரு கட்டி டத்தின்முன்னே அறிவிப்புப் பலகை ஒன்று தொங்கியது:"விலைவாசி உயர் வுக்குக் காரணம்,யார்?விற்கும் வியாபாரிகளா?வாங்கும் மக்களா?பட்டி மண் டபம் காண வருவீர்!யார் என்று அறிவீர்!"என்று அதில் வாசகங்கள் காணப் பட்டன;"விலைவாசி உயர்வுக்குக் காரணம்,வியாபாரிகளே,என்றால் சரி: வாங்கும் மக்களேஎன்பது எப்படிச் சரி?புரியவில்லையே!"யோசித்தேன்; சுற்றிலும்பார்த்தேன்!நுழை வாயிலில் ஒருவர் நின்று கொண்டிருந்தார்:அவர் அணிந்திருந்த அடையாள அட்டை அந்நிகழ்ச்சிக்குத்தொடர்புடையவர் என்பதைக் காட்டியது;அவரிடம் சென்று என் சந்தேகத்தைச் சொன்னேன்; "ஐயா!வாங்கும் மக்களே என்று எப்படி வாதாடுவார்கள்?"அவர் சிரித்தார்; சொன்னார்;"அதில் என்ன சந்தேகம்?வாங்கும் மக்கள்தான்;அவர்கள்,வாங்கா விட்டால்,விலைவாசி எப்படிஉயரும்?"என்று ஒரு போடு போட்டார்; எனக்குப்பகீர்என்றது;கேட்டேன்;"ஐயா!ரேடியோ வேண்டாம்;பாட்டு கேட்காவிட்டால் போகிறது;டிவியும் வேண்டாம்;படமோ செய்தியோ பார்க்கவும் வேண்டாம்;கேட்கவும் வேண்டாம்;அட!கிரைண்டர் வேண்டாம்; மிக்சி வேண்டாம்;அம்மி இருக்கிறது;ஆட்டுக்கல் இருக்கிறது;அது மட்டு மல்ல;சோப்பு வேண்டாம்;சீப்பு வேண்டாம்;பவுடர் வேண்டாம்;கண்ணாடியும் வேண்டாம்;வெறுங்கையால் தேய்த்துக் குளித்து,அதே கையாலேயே தலையை,கோதிவிட்டுக்கொண்டால் போகிறது;ஏனையா!இந்த நாட்டில் பிறந்த ஒரு இந்தியக் குடிமகனுக்கு,ஓட்டுப் போடுவதற்காவது உயிர் வேண்டாமா?அதற்கு அவன் கஞ்சியாவது காய்ச்சிக் குடிக்க வேண்டாமா?அந்தக் கஞ்சிக்கு அவன் அரிசி வாங்க வேண்டாமா?அதில் போடஉப்பு வாங்க வேண்டாமா?"என்று படபடவெனக் கொட்டித்தீர்த்தேன்;பட்டிமன்றத்துக்காரர், கடகடவெனச் சிரித்தார்;"சபாஷ்!சரியான கேள்விதான் கேட்டீர்கள்!"என்றார், வில்லன்வீரப்பா,பாணியில்."நான் எதையும் நீங்கள் வாங்கவே கூடாது,என்று
சொல்லவில்லை;அவர்கள் சொல்லும் விலையை,அப்படியே கொடுத்து ஏன்
வாங்குகிறீர்கள்?ஏன் குறைத்துக் கேட்கக் கூடாது?ஒரு பொருளின் விலை எவ்வளவு இருக்கும்?என்று தோராயமாக உங்களுக்குத் தெரியும்போது,அதை
அதிக விலையில் சொல்கிறார்கள்,என்று தெரிந்தும் ஏன்வாங்குகிறீர்கள்?அப்படி வாங்கக் கூடாது;என்றுதான் சொல்கிறேன்;"என்றார்.அவரதுவிளக்கம் சரியாகத்தான் இருந்தது;ஏன்வாங்குகிறோம் என்றுதான் புரியவில்லை; கொஞ்சம்வித்தியாசமாக இருக்கிறதே உள்ளே சென்றுதான் பார்ப்போமே, என்றுஉள்ளே போனேன்;அமர்ந்தேன்;வாதம் தொடங்கியது;நடுவர், அழைத் தார்;"விலைவாசி உயர்வுக்குக் காரணம்,வாங்கும் மக்களே என்ற அணியின்
தலைவர்,தோழர் அதிகவிலை வென்றான் இப்போது தனது வாதத்தைத் தொடங்குவார்;"அணித்தலைவர் எழுந்தார்;அட!இவரா?நம்மைக் கேள்வி கேட்டவர்;நமக்கு விடையும் சொன்னவர்;நிமிர்ந்து உட்கார்ந்தேன்;அவர் தொடங்கினார்;"அருமைத்தோழர்களே!விலைவாசி உயர்வுக்குக் காரணம் நாம் தான்;அதாவது வாங்கும் மக்களாகிய நாம்தான் என்று,அழுத்தமாக,
எத்தனை முறை வேண்டுமானாலும் அடித்துச் சொல்வேன்!கேளுங்கள்!அன்று
விடுமுறை நாள்;இன்றுதான் வேலை ஒன்றுமில்லையே என்று சாய்வு நாற்காலியில்,ஓய்வாக அமர்ந்தபடி,செய்தித்தாளைப் புரட்டிக் கொண்டிருந் தேன்;அருகில் நிழலாடுவதைப் பார்த்துத் திரும்பினால்,என் மனைவி நின்று,
கொண்டிருந்தார்;கையில் பை ஒன்றைத் திணித்து ,"பிடியுங்கள்;போய் காய் வாங்கி,வாருங்கள்!"என்றார்;முகத்தில் எறியவில்லை;மறுத்துப் பேசினால் ,கஞ்சிதான் என்று தெரியும்;அதனால் மறு பேச்சுப் பேசாமல்,பையை வாங்கிக்கொண்டு,"காசு?"என்றேன்;"ஏன்?உங்களிடம் இல்லை?சென்று வாருங்கள்"உள்ளே சென்றுவிட்டார்;"ஹூம்;ஓய்வுக்கு ஓய்வும் போய்,பையிலிருந்து காசும் போகப்போகிறது;"என்று எனக்கு நானே பொருமிக்
கொண்டு,மார்க்கெட்டுக்குக் கிளம்பினேன்;காய்கறி மார்க்கெட்டை நெருங்க நெருங்க,எனக்கு ஒரு சந்தேகம் ;ஜனக்கூட்டத்தையே காணவில்லையே, ஒரு வேளை,பந்த் அது இது என்பார்களே!அப்படி இருக்குமோ?இல்லை;இல்லை;
கடைகள் திறந்திருக்கின்றன;பரவாயில்லையே!நம் மக்கள் ஒழுங்கையும் ,
கட்டுப்பாட்டையும் கூடக் கடைப்பிடிக்கிறார்களே!என்று எனக்குள்ளாகவே,
வியந்துபாராட்டிக் கொண்டேன்!ஒரு கடை முன்னால் நின்றேன்;என்ன ஆச்
சரியம்!விலைப்பட்டியல் கூட வைக்கப் பட்டிருக்கிறதே!விலைகளைப் படித்
தேன்;மறுபடியும் ஒரு சந்தேகம்;தவறுதலாக ஏதாவது ஒரு நகைக் கடைக்கு
வந்துவிட்டோமா?சுற்றிலும் பார்த்தேன்;இல்லை;நல்லவேளை!காய்கறிக்
கடைக்குத்தான் வந்திருக்கிறோம்;கடையில் காய்கறிகள்,அடுக்கி வைக்கப் பட்டிருக்கிறதே!என் சந்தேகம் தீர்ந்து,பட்டியலை மறுபடியும் படித்தேன்;ஜனக்
கூட்டம் ஏன் இல்லை,என்று இப்போது புரிந்தது:இவ்வளவு விலை கொடுத்து ,வாங்கி சாப்பிடாவிட்டால் போகிறது,என்று நினைத்திருப்பார்கள்;ஜனங்கள் நமது கட்சிதான்;அதுதான் கூட்டமில்லை போலும் என்று நினைத்துக்கொண்டேன்;பட்டியல் இவ்வாறு இருந்தது;
உருளை------------------50 ரூபாய்
கோஸ்---------------------40 ரூபாய்
பீன்ஸ்----------------------45 ரூபாய்
தக்காளி--------------------46 ரூபாய்
பச்சை மிளகாய்-------42 ரூபாய் 50 காசு
வெண்டை----------------30 ரூபாய்
முள்ளங்கி----------------28 ரூபாய்
வெங்காயம் ----------30 ரூபாய்

மற்றும் கேரட்,பீட்ரூட்,அவரை,கத்திரி என்றுஅனைத்துக் காய்களின் விலை யும்மிகத் துல்லியமாக எழுதி வைக்கப் பட்டிருந்தது;மயக்கமே வந்துவிடும் போல்இருந்தது;நெஞ்சை நீவி விட்டுக் கொண்டு ,காய்களை ஒரு நோட்ட மிட்டேன்! ஏக்கத்துடன்:செம்பட்டாடை அணிந்த செல்வக்குமரியைப் போல் ,
பளபளப்பான மேனியில் ,தளதளவென்று மின்னிய தக்காளி என்னைப் பார்த்து கிண்டலாகக் கண் சிமிட்டியது;என்னைத்தொட முடியுமா?உன்னால் என்று
ஏளனம் செய்தது;முடியாது!தொட்டால் இது புட்டுக் கொள்ளும்;நாளான தக்காளி வேறு என்ன செய்யும்?பார்வையை வெட்டிக் கொண்டு அருகில் ஓட்டினேன்;குண்டு குண்டுகத்திரிக்காய்;கூடை எனும் மோடாவில் ஒய்யார மாய்ச்சாய்ந்து,ஒற்றைக் கால்களை,ஒன்றின் மேல் ஒன்றாய்ப் போட்டுக் கொண்டு,திண்டின்மேல் சாய்ந்திருக்கும் சேட்டைப்போல் என்னைக் காட்ட மாகப்பார்த்து,"வாய்யா,வா"என்றது!"நான் வேண்டுமா?"என்று ஏதோ ஒரு சினிமாப் பாட்டைப் பாடியது!ஐயோ!மானம் போகிறதே,என்று மெள்ளமுனகிக்
கொண்டே,"உன்னை ஓரம் கட்டுகிறேன் பார்",என்று கறுவிக்கொண்டேபார் வையைத் திருப்பினேன்;ஓரமாகக் கூடிக் கிடந்த மிளகாயைப் பார்த்தேன்; காரமாய் என்னைப் பார்த்து அது கோரமாகச்சிரித்து,வில்லனைப் போல்
மிரட்டியது;மிரண்டுபோய்,வெண்டையையும்முள்ளங்கியையும் கவனித் தேன்;அவையோ என்னைக் கவனிக்காமல்,ஏக்கமாக மற்ற காய்களைப் பார்த்து "இன்று உங்களுக்கு வந்த பவிசு,எங்களுக்கும் வராமலா போகும்?
அன்று நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்;இன்ற நீங்கள்!நாளை நாங்கள்!இல்லைஎன்றால்,இன்று நாங்கள்;நாளை நீங்கள்!போங்கள்!"என்று தத்துவப் பாடல் பாடிக்கொண்டிருந்தன.என் பார்வையைத் திருப்பி,"ஐயா!இந்த விலை களில்கொஞ்சம் குறைப்பதற்கு வழி ஏதாவது இருக்கிறதா?"என்று கேட்டேன்:
கடைக்காரர் என்னை இளக்காரமாகப் பார்த்தார்;"பெரிசா வேட்டியும் சட் டை யும் போட்டுக்கிட்டுஒரு பையும் தூக்கிட்டு,வந்துடுறீங்க!(வந்துடுறானுங்க என்றுமனசுக்குள் சொல்லியிருப்பார்;அவரும் வெட்டி சட்டை தான் போட்டி ருந்தார்,)இந்த காய்களை சந்தையிலே வாங்கி,வண்டியிலே ஏத்தி,இங்கே கொண்டு வந்து சேத்து,மெனக்கெட்டு உட்காந்து அடுக்கி,கடை வாடகையும் கொடுத்து,எங்களுக்குச் சம்பளமும் எடுத்து,எல்லாத்தையும் கணக்குப் போட்டா,கிலோவுக்கு 25 பைசா மிஞ்சாது;அதையும் விட்டுப்புட்டு,நாங்க!...........
போங்கையா!காய் வாங்க வந்துட்டீங்க காயி!காய் வாங்கலேன்னா போங்க!" என்று விரட்டவில்லை;25 பைசா என்பது பச்சைப்பொய் என்று நமக்குத் தெரி
யாதா?ஏதோ அவர்தான் கஷ்டப்படுகிறார்;நாமெல்லாம் கொட்டிக் கிடக்கும் பணத்தை அள்ளிக் கொண்டு வருகிறோம் என்ற எண்ணம்அவருக்கு;இப்படி பேசி விட்டாரே,மானம் போகிறதோ?யோசித்தேன்;இதில் என்ன மானம்?காசு
நம் கையில்;காய்கள் அவர் கடையில்;யாரும் யாரையும் நிர்ப்பந்திக்க முடி யாது;இதற்கு மேலும் அங்கே வாங்கினால் தான்நம் மானம்கேள்விக்குறியாகி விடும்;அடுத்த கடைக்குப் போனேன்;கொஞ்சம்குறைவானவிலையில்சொற்ப, அளவில்,வாங்கிக் கொண்டுவீடு திரும்பினேன்!ஆகவே,தோழர்களே!ஏதோ நமது மானமே,இதில் தான்இருக்கிறது,என்றுஒருபோலியான மானத்தைக் கற்பனைசெய்து கொண்டு,சொல்லும்விலைக்குஅப்படியே வாங்கும் மக்கள் தான்விலைவாசி உயர்வுக்குக் காரணம்என்றுகூறி,என் முதல் கட்டவாதத்தை
இத்துடன் முடிக்கிறேன்!"என்று அமர்ந்தார்;கேட்டுக்கொண்டிருந்த நான் பர
வாயில்லை;ஒரு கேள்விக்குப் பதிலும் கிடைத்தது;ஒரு மானப் பிரச்சினையும்
தீர்ந்தது,என்ற திருப்தியோடு,மீண்டேன்;எனவே இதுபோன்றநிலையிலேதான் நாம்மானம்பற்றிப் பேச இருக்கிறோம்;ஏன் பேசவேண்டும்?நமது நாட்டில் இப் போது மானம் இருக்கிறதா?இல்லையா?என்றசந்தேகம் இருக்கிறது; ஏனென் றால்,ஒவ்வொருவரும்,மானம் காப்போம் என்று,மேடைக்கு மேடை முழங்கு கிறார்கள்;ஆகவே,சந்தேகத்துக்கு இடமான நிலையில் உள்ள ஒன்றைப் பற்றி யும்,நாம் பேசித்தான் ஆகவேண்டும்;சுதந்திரமே வாங்காத காலத்திலேயே கூட,"எங்கும் சுதந்திரம்,என்பதே பேச்சு"என்று பாரதியார் பாடவில்லையா?என்ன?அப்படித்தான்;இப்படியாக,மானம் மானம் என்று அலைகிறோம்;இந்த மானம் தான் எப்போது வந்தது?எப்படி வந்தது?என்று பார்க்க வேண்டாமா?அதற்கு நம் கொஞ்சம் பின்னோக்கிச் செல்லவேண்டும்;நாம்பின்னோக்கித் தானேசென்று கொண்டிருக்கின்றோம்!இன்னும் பின்னோக்கியாசெல்லவேண் டும்? என்று முணுமுணுக்காதீர்கள்!நான் சொல்வது அந்தப் பின்னோக்கி யல்ல!ஒரு Flash back!முன்னால்என்ன நடந்தது,என்று எண்ணிப் பார்க்கச் சொல் கிறேன்!எப்படிச் செல்வது என்ற கவலை வேண்டாம்!அதற்குத்தான் கால எந்தி
ரம்(Time machine)இருக்கிறதே!



சரி!எல்லோரும் அதில் ஏறி அமர்ந்து கொள்வோம்!ரெடியா?பித்தானைத் தட்டுகிறேன்!இதோபுறப்படுகிறது;நாம்போய்க்கொண்டிருக்கிறோம்;நமதுகாலத்தைக் கடந்து,ஒ!ஆங்கிலேயர் காலம் அடுத்து.மன்னராட்சிக்காலம். அதாவது..கடை--இடை-முதல்சங்ககாலம்.வேதகாலம்என்றஇதிகாசகாலம்;உலோககாலம் புதியகற்காலம்.பழையகற்காலம்?என்ன இது? ஒரு காலமும் இல்லையே!வெட்ட வெளியாகஅல்லவாஇருக்கிறது?ஒன்றுமே இல்லையா?ஆம்.ஒன்று மில்லாத இடத்துக்குத்தான்வந்திருக்கிறோம்!
பேரண்டத்தில் கொதித்துக் கொண்டிருந்த பிழம்பாக ஜொலித்துக் கொண்டி
ருந்தசூரியனிலிருந்து,தெறித்து வந்து விழுந்தது,ஒரு பிழம்புக் குழம்பு!அல்லது குழம்புப் பிழம்பு!அந்தக் குழம்பு,விண்வெளியின் ஓரிடத்தில் மையம் கொண்டு,சூரியனோடு சேர்ந்து சுற்றத் தொடங்கியது!விழுந்த வேகத்தில் தானும் சுழலத் தொடங்கியது,ஒரு பம்பரத்தைப் போல!அதன் சுழற்சியும், வேகமும் சேர்ந்து ஒழுங்கற்ற அதனை ஓர் உருண்டையாக்கிற்று;அதாவது கோளமாக்கியது!ஆண்டுகள் செல்லச் செல்ல அதன் மேற்பரப்பு குளிரவும் ஆயிற்று!அதன் மேற்பரப்பில் சில இடங்கள் சமமாகவும்,சில இடங்கள் ஆங் காங்கே,மேடுகளும் பள்ளங்களுமாக இருந்தன;
அதன் சுழற்சிஇயக்கம் அதனுள்
 ஒரு பருவ மாற்றத்தைத் தோற்றுவித்தது; அப்பருவ மாற்றங்கள்,பருவக்



காற்றுகள் வீசுவதற்கு
 வழி வகுத்தன: பருவக் காற்றுகள், அக்கோளத்தின் பலபாகங்களிலும் மழை பெய்வதற்குக் காரணமா யின! மழை!ஓயாதமழை;இடைவிடாத மழை.  ஆண்டுக் கணக்கில் மழை!ஓயாது கொட்டிய மழை,பெரும் வெள்ளமாய்ப்பாய்ந்தது; ஓடைகள், சிற்றாறு கள் என உருவாகின: சிற்றாறுகள்,பேராறுகளாயின; அப்பேராறுகள், பெரும் பள்ளங்களில்நீரைக்கொண்டு சேர்த்தன;நீர் நிரம்பிய பள்ளங்கள் கடல்களா யின;


  உயர்ந்து நின்ற மேடுகள்மலைகளாயின; சமமானநிலங்கள்,சமவெளிகள்ஆயின: கோளம் பூமியானது;அளவைமீறிய குளிர்ச்சி,காற்றுசூரிய ஒளிஆகிய காரணிகள்,பூமியில்,நுண்ணுயிர்கள் தோன்றக் காரணமாயின; ஒருபுறம் நுண்ணுயிர்கள்; மறு புறம்சிறுசிறு புல் பூண்டுகள்;நுண்ணுயிர்கள்,

ஊர்வன என்றும்,நீர்வாழ்வனஎன்றும், பறப்பன என்றும்,நடப்பன என்றும் உரு மாறின;புல் பூண் டுகள்,  செடிகள், கொடிகள்,புதர்கள், மரங்கள், காடுகள்  என்று விரிந்தன;நடப்பவை, சிங்கம், புலி, கரடி,யானை,  மான்,குரங்குகள்
எனும் விலங்குகள்ஆயின;

குரங்கிலிருந்துமனிதன்தோன்றினான்,
என்கிறது,டார்வின் பரிணாமக் கொள்கை;
இல்லை!ஆதி மனிதனாக.... .இல்லை மனுஷியாக ஏவாளைப் படைத்தான்;பின்னர் அவள் விலாஎலும் பிலிருந்து,ஆதாமைப் படைத்தான்,ஆண்டவன் என்கிறது,விவிலியநூல்;
டார்வின் தத்துவம் தகர்க்கப் பட்டுவிட்டது,இப்போது என்பது வேறு கதை;நாம்
பார்க்கப் போவதில்லை,அதை;
       ஆதி மனிதர்களே ஆதாமும் ஏவாளும் தானா?என்பதே இன்றைய கேள்வி!ஏனென்றால்,மாற்றங்கள்என்பதுஒருதலைமுறைஇடைவெளியிலேயே
நடந்து விடுவதல்ல:அதற்குநீண்டகாலஇடைவெளிதேவைப்படுகிறது;எனவே
நாகரீகமடைந்த மனிதர்களின் முதல் மனிதர்கள்,ஆதாமும்,ஏவாளும் என்று
வைத்துக் கொள்ளலாம்;ஆதிமனிதன் பாதி மனிதனாக இருந்தான்;எப்படி?ஒரு கால்;ஒரு கை;ஒருகண்;அரைமண்டை;இப்படியாஇல்லையில்லை;ஆடை
யில்லாதவன்அரைமனிதன்என்பார்களே!அப்படி!ஆதிமனிதன் ஆடை யில்லா
மல் இருந்தான்;அதாவது அவன் மானமில்லாமல் இருந்தான்;மானம் காக்கத் தானே ஆடை அணிகி றோம்?ஆதாமும், ஏவாளும்என்றே வைத்துக் கொள்வோம்;ஒருநாள் ஒரு முதியவரைப்போல்,இறைவன் அவர்கள் முன்தோன்றினான்; அவர்களிடம் சொன்னான்;"நான் சொல்வதைக் கேளுங்கள்!இந்தஉலகத்
தின் திசைகள்,எட்டு ;நீங்கள் போகவேண்டிய திசைகளோ ஏழு மட்டுமே!இங்கே படைக்கப்பட்டுள்ளஉயிரினங்கள்,பூக்கள்,செடிகள்,கொடிகள்,மரங்கள்,கனிகள்,நீர்,காற்று,நிலம்எல்லாமே,உங்களுக்காகத்தான்;நீங்கள்அனைத்தையும் நுக ரலாம்;

 ஆனால்ஒரு நிபந்தனை;ஆம்;ஏழு திசைகளில் மட்டுமே உங்கள ஆதிக்கம்செலுத்தப் படவேண்
டும்; எட்டாவது திசைக்குநீங்கள் போகக்கூடாது; போனால்நல்லதல்ல;புரிந்ததா?அதுதடை செய்யப்பட்ட இடம்;"முதியவர்,அதாவதுஇறைவன் மறைந்தான்;"சரி"என்று சம்மதித்த அவர்கள்,நீண்ட காலத்துக்குஅப்படியே நடந்து கொண்டார்கள்; இருந்தாலும்,அவர்கள் மனத்துக்குள்ளே ஓர்
அரிப்பு; "எங்கும் செல்லலாம்,என்றவர்,ஏன் அங்கு மட்டும் செல்லக்
கூடாது"என்றார், என்ற,அந்த அரிப்பு விசுவரூபமெடுத்து,அன்று அங்கே செல்
லும் அளவுக்குச்செயல்பட வைத்து விட்டது,அவர்களை!
இதுதான் மனிதமனம்
    ஏனென்றால்,மனிதன் தனக்குக் கிடைத்த எதனோடும் திருப்திஅடைந்துவிடுவதில்லை இது தவறென்றும் சொல்வதற்கில்லை;மனிதனின் இந்தப்பண்புதான், இன்றுஅவன் மாபெரும் சாதனைகள் பல படைப்பதற்குப் பாதைஅமைத்துத் தந்துள் ளது;"Necessity is the mother of invention"என்று ஆங்கிலத்தில்சொல்வார்களே! அதைப்போல;ஆனால்அந்தஆசையானதுபொதுநன்மைதழு
வியதாக இருத்தல்வேண் டும்;சுயநலம் மிக்கதாக இருந்தால்,அவனுக்கு அழி
வு தான் என்பதில் ஐயமில்லை;மனம் போன பாதையில் அந்த எட்டாவது திசை
நோக்கிச் சென்றார் கள்;நின்றார்கள்;அங்கே அவர்கள் கண்ட காட்சி !இதுவரை
பார்த்திராத புதுமையாய்,கண்ணுக்கு விருந்தாய்,புத்தம்புதுச்சோலைவனமாய்,
செழித்திருந்த அங்கே,ஓங்கிஉயர்ந்து,விரிந்து,பரந்திருந்தமரங்கள்,அவர்களின்
மனத்தைக்கொள்ளை கொண்டன;




மரங்களின் மேல் அமர்ந்தும்,உயரத்தில் பறந்தும்தோன்றிய வண்ணப் பறவை கள்,அவர்களது எண்ணப் பறவையைச் சிறகடிக்க வைத்தன !
அங்கும்,இங்கு மாக அலைந்து திரிந்த,வகை வகையான விலங்குகள், அவர்களுக்குப் புதுமையான காட்சிகளாக விளங்கின;பூத்துக் குலுங்கி,மணம் வீசிநின்ற ,வண்ண மயமானமலர்கள்,;கனிந்துதொங்கி ,பசியைத் தூண்டும் ,தேன்சொட்டும் கனிகளின் தோரணங்கள்!
தெளிந்த நீரோடும் ஓடைகள்;எல்லாம் அவர்களுக்குத் திகைப்பையும், வியப்பையும் ஊட்டின;கூடவே ஒரு கேள்வியும் எழுந்தது !

இத்தனை அழகான இடத்துக்கு நீங்கள் செல்லக்
 கூடாது,என்று சொன்ன அந்த,கிழவனுக்குத்தான் ;
அதுதான் அந்த கடவுளுக்குத்தான் எத்தனை
 கெட்டஎண்ணம்பார்த்தாயா?"என்று ஏவாளும்,"ஆமாம்;ஆமாம்"என்று ஆதாமும்பேசிக் கொண்டார்கள்;



 அங்கேயே அவர்கள் ஆடினார்கள்;பாடினார்கள்;
 ஓடினார்கள்;விளையாடினார்கள்;களிப்பாக
ஆடிய அவர்களுக்குக் களைப்பாகஆனது;








அருகேஇருந்தஓடையில், குளித்தார்கள்; பசியின் மிகுதியால், அங்கிருந்த பழங்களைப் பறித்தார்கள்; புசித்தார்கள்;நன்மை,தீமை அறியத்தக்க கனிஅது என்றும்,அதை உண்டஅளவிலேதான், அவர் களுக்கு,உணர்வுகள் தோன்றின,என்றும் அதனால்,மான உணர்வு மிகுதியால்,நாணம் கொண்டு,அவர்கள்இலை,தழைகளையும், கொடிகளையும்பறித்து உடனே உடலை மூடிக் கொண்டார்கள் என்றும் கூறப் பட்டுள்ளது; ஆணையை மீறி நடந்து கொண்டதுபாவம்
என்றும்,சொல்லப் ட்டுள்ளது;ஆனால்அவர்கள்படைக்கப்பட்டதன்நோக்கமே
இப்பூவுலகில்,பல்கிப் பெருகி,இவ்வுலகை நிரப்பவேண்டும்என்பதற்காகத்தான்
என்றும் சொல்லப்பட்டுள்ளது;
எனவே விதியை மீறி நடந்துகொண்டார்கள், என்றும் சொல்வதற்கில்லை; சரி; விதியை மீறி நடந்துகொண்டார்கள் என்றேவைத்துக்கொள்வோம்;தவறுதான்; ஆனால் தவறு பாவமாகாது;விதிகள் மீறப்பட்டு,அதில்தீமைகள்விளைந்தால்,
அதுபாவம்;சாலையில்இடப்பக்கமேசெல்ல வேண்டும்,என்ற விதியை மீறி வலப்பக்கம் சென்றால்,போக்கு வரத் தில்,குழப்பம் ஏற்பட்டு,அதனால் விபத்து களும் நேர வாய்ப்புண்டு,என்பதால் ,வலப்பக்கம் செல்வது தவறு என்கிறோம்;
ஆனால்,ஆதாமும்,ஏவாளும்அங்கே செல்லக் கூடாதுஎன்ற விதியை மீறி
அங்கே சென்றதால்,எத்தகைய ஆபத்தும்,யாருக்கும் நேரவில்லை; மாறாக,
மனித சமுதாயம் பல்கிப் பெருக வேண்டும்என்ற இறைவனின்கட்டளையைத் தான் அவர்கள் நிறைவேற்றினார்கள்; நன்மை எது?தீமை எது என்று அறிவது
தவறாகாது;



யூத இனத்தின் விதிகளை மீறித்தான்,ஏசு,புதியகருத்துக்களைச்சொன்னார்; 


அரேபியரின்விதிகளைமீறித்தான்,நபிகள்நாயகம் இஸ் லாம் மதம்கண்டார்;





கிரேக்கர்களின் கருத்துக்களுக்கு எதிராகத்தான்,சாக்ர டீஸ்,புரட்சி எண்ணங்களைப் போதித்தார்;



மதவிதிகளை மீறித்தான்,கலீலியோ உலகம்உருண்டை,என்றார்;






இந்துக்களின் உடன்கட்டை ஏறும் கொடிய பழக்கத்தை ஒழிக்கத்தான், ராஜாராம் மோகன்ராய் புதிய வழியொன்றுசொன்னார்;



இவர்கள்எல்லோரும்அன்று,
தூற்றப்பட்டாலும் ,இன்று போற்றப் படவில் லையா? இனப்பெருக்கத்துக்கான
முறைகள்,மற்ற எல்லா உயிரினங்களுக்கும் வழங்கப் பட்டிருக்கும்போது,
மனித இனத்துக்கு மட்டும் அம்முறை மறுக்கப்படுவது,எந்த வகையில் நியா
யம்?அவன் உணர்வுகள் பெற்றது தவறு என்பதுஎப்படிச் சரியாகும்? நாண
உணர்வும்,மான உணர்வும் இல்லாத மனிதனை விலங்கென்று சொல்லாமல்,
வேறென்ன சொல்ல?எனவே அவர்கள் ஆணை யை மீறியது வேண்டுமானால்
தவறென்று சொல்லலாம்;ஆனால் எத்தகையதீமையும் பயக்காத தவறு பாவ
மாகாது,என்பதே எனது கருத்து! நூல் ஆராய்ச்சிக்கு நாம் செல்ல வேண்டாம்;
நாம் மேலே செல்வோம்;அன்று தோன்றியது,மானம்;அப்படித் தோன்றிய அந்த
மானம்,உடலிலிருந்து,உள்ளத்துக்குத் தாவி,காதல்,வீரம்,அறிவு,கொடை,
வாழ்க்கை என்று அனைத்து நிலைகளிலும் தன்ஆதிக்கத்தை நிலை நாட்டிக்
கொண்டது;இதிகாச காலம் தொட்டு,இன்றுவரைஅதன் பரிணாமம் வெவ்வேறு
அளவுகளில் மாற்றம் பெற்றுக் கொண்டுள்ளது;இன்னும் மாற்றம் பெறும்!நான்
பெரியவன்;நீசிறியவன்;நான்வலியவன்;நீமெலிந்தவன்;நான்செல்வாக்குஉள்ளவன்;நீஅது இல்லாதவன்;என்று உள்ளத்தால்,உணர்வுகளின் அடிப்படையில்,
வளர்ந்த மானம் ,உடல் வலிமையின்தாக்கத்துக்குத் தாவி, பூசல்,பொறாமை சண்டை என்று பலவற்றுக்கும் அடிகோலியது;
பாரதப்போரும் இப்படித்தான் மூண்டது;சிறுவயதில் இருந்தே,கல்வி கேள்வி
களில் தேர்ச்சி பெற்ற பாண்டவரை,அது பொறாது போனகௌரவர்,பொறாமை
கொண்டு,அவமானம் நேர்ந்ததே,என்று எண்ணி,மானம் காக்கிறோம் என்ற
பெயரில்,பாண்டவருக்குப் பற்பலவகையிலும்,தீங்குசெய்தனர்;அக்கால

முறைப்படி,சூதாடி,அதில் சகுனியின் சூழ்ச்சியால்,வென்று,வீடு,நாடு என
அனைத்தையும் கவர்ந்து,இறுதியாக,பாஞ்சாலியையும் அடிமைப் படுத்தினர்;அவளை அவைக்கு இழுத்து வந்து,துகிலுரிந்து,அவமானப் படுத்தினர்;அது மட்டுமல்லாது,துரியோதனன்,துரோபதையை,அவன் தொடை மீது அமரச்சொல்லியும், கொச்சை யாகப்பேசினான்;கொதித்துஎழுகின்றனர்,வீமனும்,அர்ச்சு னனும்; அர்ச்சுனன்,
                                                                           "தருமத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்;
தருமமறு படிவெல்லு மெனுமியற்கை,
மருமத்தை நம்மாலே உலகம் கற்கும்,
வழிதேடி விதியிந்தச் செய்கை செய்தான்;
கருமத்தை மென்மேலும் வளரக் காண்போம் இன்று,
கட்டுண்டோம்;பொறுத்திருப்போம்;காலம் மாறும்;
தருமத்தை அப்போது வெல்லக் காண்போம்;
தனு உண்டு காண்டீபம் அதன் பேர்" என்றான்!
               

   "தொடையில் அமர்கென்ற, துரியோதனன், தொடையைப் பிளந்து,அவனைக்கொல்வேன்" என்று வெஞ்சினம் பூண்டான்,வீமன்; "அத்தொடையிலிருந்து,வழியும் குருதியைப் பூசிக் குளித்தே,என் கூந்தலை முடிவேன்;அதுவரையேன்",என்று பாஞ்சாலியும் சபதம் பூண்டாள்;இதுவும் மானப் பிரச்சினை தான்;பிறரின் தன்மானத்தைப் பழித்து,தொடரும்தோல்விகளைக் காண்பவ னும்,மானம் போயிற்றே,என்கிறான்;பிறரால்அவமானப் படுபவனும்,மானம் போயிற்றே,என்கிறான்;என்னே மானம்!

இராமாயணத்தில்,காமுற்ற தன்னை,ஏற்றுக் கொள்ளவில்லை, இலக்குவன்,என்று கோபமுற்ற சூர்ப்பனகை, தன் மானம்போயிற்று,என்று பொய்க்கதைபேசி, இராவணனைத்தூண்டி, சீதையைக் கவரச்செய்கிறாள்; பெண்மானம்காத்துதன்மானம் காக்கவெனப் போரிடுகின்றனர்,இராமனும்,இராவணனும்;




இதுவும் மானம் தான்;இவை இதிகாச காலமானங்கள்;
தமிழ்வேந்தரை,இழிவாகப் பேசியதாக வந்த செய்தி கேட்டு,அவ்வாறு பேசிய ,
கனகவிசயரை,வென்று,அவர்தம் தலையில் கல் ஏற்றி ,சுமந்துவரச் செய்து,
அதைக்கொண்டு,கண்ணகிக்குச் சிலை வடிக்கிறான்,சேரன் செங்குட்டுவன்,
இனமானம் காக்க;             
தான் எழுதிய பாட்டிலே,பிழை என்று சொன்ன,தமிழ்ச் சங்கத்துத் தலைமைப்புலவன், கீரனோடு வாதாடி,நெற்றிக் கண் திறப்பினும் குற்றம்,குற்றமே,என்ற,அவன் கூற்றுக் கேட்டு,கூற்றமாய் மாறி,அவனுக்குச் சாபமிடுகிறான்,சிவன்;இறுதியில் கோபம் தணிந்து,சாப விமோசனமும் தருகிறான்;இது தமிழால்,வந்த மானம்:
போரில் எதிர்நிற்க மாட்டாமல்,புறமுதுகு காட்டி மடிந்தான்,உன் மகன் என்று
சொல்லக் கேட்டு,"அவ்வாறு நடந்தது உண்மை எனில்,அவன் பால் குடித்த என்
மார்பகங்களைக் கொய்து எறிவேன்!"என்று வெஞ்சினம் கொண்டு,வாளோடு
போர்முனை சென்று,"பொருதடக்கை வாளெங்கே?மணிமார்பெங்கே?போர்
முகத்தில் எவர்வரினும் புறங்கொடாத,பருவயிரத் தோளெங்கே?எங்கே?என்
மகன்?"என்று தேடிக்கண்டு,புறமுதுகில் புண்படாமல்,மார்பில் வாள்ஏற்று,
மடிந்த தன மகனை,மார்போடு அணைத்து,உச்சிமோந்து மகிழ்கிறாள்,ஒரு புற
நானூற்று வீரத்தாய்;இவை அனைத்தும் சங்ககால வீர மானங்கள்!
புறமுதுகு காட்டாது போரிடுதல்,தோற்றால்,புலவர்கள் பாடாதொழிக,எனச்
சூளுரைத்தல்,புறமுதுகு காட்டாத நிலையிலும்.முதுகில் புண்படுமாயின்,
வடக்கிருந்து ,உயிர் விடுதல்,காதலி ஏற்றுக்கொள்ளவில்லையே என்று மட
லேறுதல் ஆகிய எல்லாம் கூட சங்க காலத்துமானங்களே!
மங்காப் புகழோடு விளங்கிய நம் தமிழ்நாடு,ஆங்கிலேயர் காலத்தில் அவ
ருக்கு,அடிமைப்பட்டபோது,மண்மானம் காப்பதற்காக,தன மானம் பெரிதென
எண்ணாது,அவமானம் பல அடைந்துபோரிட்டனர்,பலர்!




"வானம் பொழிகிறது:பூமி விளைகிறது;உனக்கென்ன தருவது வரி?"என்றுமுழங்கியவன்,வீர பாண்டிய கட்ட பொம்மன்;அவன் வழியிலே தாய் நாட்டுமானம் காக்க அயராது போரிட்டு, அருமை உயிர்நீத்தவர்கள்,புலித்தேவனும், சுந்தரலிங்கமும்;



எண்ணற்றோரை,சுட்டுக் கொன்ற,வெள்ளைக்கார துரை,"ஆஷை',சுட்டுக்கொன்று, தானும் சுட்டுக் கொண்டு மாண்டவன்,வீரவாஞ்சி;




நாட்டு நலம் காக்கப் போராடி,உடல்நலம் கெட்டுத் தொழுநோயும் பெற்றும்தளராது தன்பணியைத் தொடர்ந்தவர்,சுப்பிரமணிய சிவா!



வீட்டு நலம் கெட்டுக்குடும்பம்,வறுமையுற்ற போதும்,நாட்டு நலம் ஒன்றே,பெரிது எனத் துணிந்து,மடை திறந்த வெள்ளமெனக் கனல் கக்கும் தேசியப்பாடல்களைப் பாடி,முழங்கியவன்,புரட்சிக்கவி பாரதி!

வழக்கறிஞர் தொழிலில் வரும்,வருமானத்தை, எண்ணாமல்,"அன்னியரின்ஆதிக்க இழிவைப் போக்கி,மண்மானம் காக்கப் போராடுவேன்"என்று, களமிறங்கி,தன் குடும்பச் செல்வமனைத்தும் தந்து,முதல் முதலாகச் சுதேசிக் கப்பலோட்டிய தமிழன்,வ.வு.சி!இவர்களெல்லாம் மானம் காக்கும் புகழுக்காகத் தங்கள் உயிரையும் பெரிதாகஎண்ணாத வீரத்திலகங்கள்!

இவர்களை எண்ணியே,புறநானூற்றுப் பாண்டிய மன்னன்,இளம்பெருவழுதி,
"புகழெனின் உயிரும் கொடுக்குவர்"என்றுபாடினான்;






ஆங்கிலக் கம்பராம் ஷேக்ஸ்பியரும்,"seeking the bubble reputation,even in the cannon'smouth" என்றார்,அந்தப் பொருளில்;
புகழ்மானம் காப்பதற்கு,உயிரைக் கொடுத்த காலம் போய்,பணம் பறிப்பதற்
காக, உயிரையும் பறிக்கும் காலமாகி விட்டது இப்போது!"பணமெனின் உயி
ரும் கெடுக்குவர் என்று தான் பாடத் தோன்றுகிறது! மானம் பார்க்க வேண்டுமா
என்பதேகேள்விக்குறியாகிவிட்டது!
குழாயடியில்,பெண்கள் இருவர்,தனது குடம் தான் முன்னால் வைக்கவேண்டு
மென்று சண்டை போட்டு,மானம் போகுமாறு இருவரும் பேசித் தங்கள் கண
வன்மாரிடம்,"மானம் போய்விட்டது"என்று முறையிட்டு,அதனால் எழுந்த கை
கலப்பில்,ஒருவர் கொலையுண்டு சாக,மற்றொருவர் தண்டனையில் சாக,
இரு பெண்களும் கைம்மைக் கோலத்தில்,மானமிழந்து பவனி வரும் காட்சிக
ளைக் காண்கிறோம்;அற்பமான ஒரு நிமிடத்துக்காக,அவர்கள் மானமே போய்
விட்டது என்று எண்ணிய அவர்களது அற்பமான அறிவால்,ஆண்டாண்டு
காலத்துக்கும் அவமான நிலை வந்ததை,எந்தவகை மானத்தில் சேர்ப்பது?
குடும்பங்களில் கூட,பிள்ளைகள் சிறு தவறு செய்யும்போது,அவர்களின்
பெற்றோர்,அவர்களை,மென்மையாகக் கண்டிக்காமல்,"உனக்கு மானம் இல்
லையா? சோற்றில் எதைப்போட்டு சாப்பிடுகிறாய்?"என்று பேசி விடுகிறார்
கள்; நாம் போடுவதைத் தானே அவர்களும் சாப்பிடுவார்கள்;நமக்கு இருக்கும்
மானம் தானே அவர்களுக்கும் இருக்கும்,என்றெல்லாம் எண்ணிப் பார்ப்பதில்லை!குடும்ப மானம் அவர்களாலேயே பறிக்கப்படும் கொடுமை இது!
இனி பணமானம் பார்ப்போம்!அது ஒரு சிற்றூர்:அங்கே ஒரு வீட்டில் திருமணம் நடக்க இருந்தது;நானும் அங்கு சென்றிருந்தேன்;தாலி கட்டும் நேரமோ,நெருங்கிக் கொண்டிருந்தது;புரோகிதர் மந்திரத்தை, முணுமுணுத்துக் கொண்டிருந்தார்; எல்லோரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தார் கள்;இன்னும்அக்காவைக் காணோமே!இன்னும் அக்காவைக் காணோமே!என்று யாரையோஎதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்;தாலி கட்டுவதற்கு முன்பாகவே, பெண்ணும்,மாப்பிள்ளையும் பேசிக்கொள்வது நகரங்களை சகஜம் என்றாலும், கிராமப்புறங்களில்,அவர்கள்சிரித்துப் பேசிக் கொண்டது வேடிக்கையாக
இருந்தது!எல்லோரும் அக்காவை எதிர்பார்த்துக் கொண்டிருந்தபடியால்,அவர்
களையாரும் கவனிக்கவில்லை!அது அவர்களுக்கு வசதியாய்ப் போயிற்று;
என் அருகில்ஓரமாக அமர்ந்திருந்தஒருவர்,"அக்காவாம்;அக்கா: "துடைப்பத்
துக்கு பட்டுக் குஞ்சம்னு பேர் வச்சமாதிரி"என்று அவராக முணுமுணுத்துக்
கொண்டிருந்தார்;"அக்கா வந்தாச்சு;அக்கா வந்தாச்சு"என்ற சப்தம் கேட்டுத்
திரும்பினேன்!
ஒரு 45 வயது கனத்த சரீரத்துடன்,ஆனால் வயதுக்குத் தேவையற்ற,
கண்ணுக்கு மை,லிப்ஸ்டிக்,தொங்கும் காதணிகள்,லோகட் ஜாக்கெட்,
உடல் தெரியும் புடவை,ஹைஹீல்ஸ் செருப்பு,ஆகிய அலங் காரங்களோடு
,காலுக்கு,கைக்கு,கழுத்துக்கு என்று பலவகைமேட்ச்அலங்காரங்களோடு
,காட்சியளித்தபடி,வந்துகொண்டிருந்தஅந்தப்பெண்மணிஎன்னுள் ஒரு
கேள்வியை எழுப்பினாள்!அந்த அக்கா வந்ததும்,புரோகிதர் வேகமாக மந்திரம்
ஓத,தாலி கட்டும் நிகழ்ச்சியும் வேகமாக நடந்தேறியது மணமக்கள் எழுந்து
அக்காவின் காலில் விழுந்து,ஆசி பெற்றுக் கொண்டார்கள் அந்தப் பெண்மணி
கம்பீரமாக நின்று ,அவர்களுக்கு ஆசி வழங்கி,தன் ஜாக்கெட்டுக்குள்ளிருந்து
ஒரு பர்சை உருவி,எடுத்து ,ஒரு நோட்டுக் கற்றையை,அவர்கள் நீட்டிய
வெற்றிலைத்தட்டில் வைத்தாள்;கூடியிருந்தவர்கள்,நோட்டுக் கற்றையைப்
பார்த்து,வியப்புடன் வாய் பிளந்தார்கள்;"அக்கா!கலரு"என்ற மணவீட்டாரின்,
உபசரிப்பை ஸ்டைலாக மறுத்துவிட்டு,கவர்ச்சியாக விடைபெற்று,ஓர் அர
சியல்வாதியைப்போல் அந்த அக்கா அகன்று விட்டாள்!நான் கூட ஒருவேளை
ஒரு முக்கியமான பதவி வகிக்கும் அரசியல்வாதியாக இருக்குமோ?என்ற
ஐயத்தில்,பக்கத்தில் முனங்கிக் கொண்டிருந்த அவரிடம் கேட்டேன்;"அந்த
அக்கா,யார்?" என்று;"என் முன்னாள் மனைவி"என்றார்,அவர்;வியப்போடு
,அவரைப் பார்த்தேன்;அவர் தொடர்ந்தார்;"ஆமாம்,தம்பி! 25 வருடங்களுக்கு
முன்னால்,அவள் என் மனைவி;உழைத்துக் கிடைப்பதைக் கொண்டு வாழ்ந்
தால் போதும்,என்ற கொள்கை உடையவன் நான்;ஆனால் அவள் உல்லாச
வாழ்வு வாழ விரும்பினாள்!அதற்காகஒழுக்கக் கேடான வழிகளைப்பின்பற்றி
னாள்;என் அறிவுரைகளை அவள் லட்சியம் செய்யவில்லை:அது எனக்குப்
பிடிக்கவில்லை:அவள் வேண்டாமென்று,நானே ஒதுங்கிக் கொண்டேன்;
அவள்தனது வழியில் தொடர்ந்து சென்று,பெரும் பொருளும் சேர்த்துவிட்டாள்
இன்று ஊரில் அவள்பெரிய மனுஷி!அக்கா!அன்று அவளைவிரும்பியவர்கள்
கூட,இன்று அக்கா,என்கிறார்கள்;சீச்சீ!இது ஒரு பிழைப்பா? என்கிறேன்,நான்"
பொருமினார்,அவர்;அவருடைய பொருமல் எனக்குப் புரிந்தது: அட, கொடு
மையே!பணத்துக்காக மானம் இழந்தவள்,இன்று அதே பணத்தைக் கொண்டு,
இழந்த மானத்தைச் சம்பாதித்தும்?விட்டாள்;இது மானமா?ஓஹோ!இதுதான்
மானம் போலும்! பணமானம்!மானம் ஒன்றே பெரிதென எண்ணி வாழ்ந்த நமது
அன்றைய சமுதாயம், இன்று பணமே என்றும் பெரிதென எண்ணி வீழ்ந்து
கிடக்கின்றது!அது உயர்வது எப்போது?என்றுதான் புலப்படவில்லை!
இன்னும் சில சில்லரை மானங்களும் உண்டு!கடன்காரன் வந்து கடன் கேட்டா
லும்,மானம் போய்விட்டது என்கிறார்கள்;கடன் வாங்கி விட்டுக் கொடுக்கா
விட் டால், மானம் போகும் என்று முன்பே தெரியாதா?
படிக்கும் நண்பர்களில் ஒருவன்,வகுப்பில் ஆசிரியரின் கேள்விகளுக்குப் பதில்
சொன்னாலும்,அது சொல்லத் தெரியாதமற்றொருவன்,இவனால்,அவனது
மானம் போய்விட்டது,என்கிறான்;அதாவது இவன் மானத்துக்காக,அவன்
மானத்தையும் இழக்கச் சொல்கிறான்; என்ன மானம்!
விழாக்களில் எல்லாப் பெண்களும் ,பட்டுச்சேலை கட்டிவந்து,ஒரு பெண்
மட்டும் வேறு சேலை கட்டிவந்துவிட்டு,வீட்டுக்குச் சென்று,தன் கணவனிடம்
தன்மானம் போய்விட்டது,என்கிறாள்;அவனோடு சண்டை போட்டு,உடனே
தனக்கும் பட்டுச்சேலை வேண்டும் என்று அடம் பிடிக்கிறாள்;மானம் காக்க,
அன்று இலை தழை;அதேமானம் காக்க இன்று பட்டுச்சேலை!மானம் எப்படி
மாறிவிட்டது?பார்த்தீர்களா?
பழிக்குப் பழி என்ற பெயரில்,மானம் காக்கிறேன் என்ற போர்வையில்,பிறரின்
குடும்பத்தாரை,தலை குனியச் செய்யும் நிகழ்ச்சிகளும் நடக்காமல் இல்லை;
பிறர் மானம் காத்தற்குத் தன் மானம் மதியான் தான் மானம் காப்பான்;தன்
மானம் காத்தற்குப் பிறர் மானம் போக்கிடுவானோ மானமில்லான் என்ற
உணர்வு,அவர்களுக்கு இல்லாமையே அதற்குக் காரணம்!
புதிய குறள்மானம் பார்ப்போமா?அறையில் அமர்ந்து,குறளைப்புரட்டிக்கொண்டிருந்தேன்;அருகில் என் நண்பனும் அமர்ந்து,ஏதோ ஒரு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தான்;அவன்ஒருகுறும்புக்காரன்; குதர்க்கமாகப் பேசுவான்;ஆனால்அதில்பொருள் இருக்கும்; திருக்குறளில் மானம் என்ற அதிகாரத்தில் என் கண்கள் நிலைத்தன;"மயிர்  நீப்பின் வாழாக் கவரிமா வன்னார்உயிர் நீப்பர் மானம் வரின்"என்று மெதுவான குரலில்படித்தேன்;என் நண்பன்,"என்ன படிக்கிறாய்?மறுபடியும் படி"என்றான்;மறுபடியும் சப்தமாகப் படித்தேன்; "தவறாகப்படிக்கிறாய் !மறுபடியும் படி"என்றான்; எரிச்சலுடன்,"என்னடா சொல்கிறாய்?இந்தா!நீயே படி"
என்று புத்தகத்தை அவனிடம் தூக்கிப் போட்டேன்;"புத்தகத்தை நீயே வைத்துக்
கொள்!அந்தக் குரல் இப்படி இருக்கவேண்டும்;கேள்!
"உயிர் நீப்பின் வாழாக் கவரிமா வன்னார்,
மயிர்நீப்பர் மானம் வரின்",என்றான்;
"என்னடா!எல்லோரும் கதையைத்தான் மாற்றுவார்கள்;நீ குறளையே மாற்று
கிறாயே!அவ்வளவு பெரிய ஆள் ஆகி விட்டாயா?" என்றேன்;"அதற்குப்பொருள்
தெரியுமா?"என்றான்;"அதை நீயே சொல்லு"என்றேன்,புரியாமல்.புன்னகை
யுடன்,அவன்,"சொல்கிறேன்,நான் கேட்பதற்குப் பதில் சொல்!" என்றான்;
"உயிர் நீப்பின் வாழாக் கவரிமான்";உயிர் போய்விட்டது,என்றால்,மான் என்ன
செய்யும்?
"உயிர் போய்விட்டால்,மான் என்ன செய்யும்?ஒன்றும் செய்யாது!"
"ஒழுங்காகச் சொல்!என் கேள்விக்கு விடை வேண்டும்!"
"என்ன செய்யும்?நீயே சொல்லித் தொலை!"
"இதுகூடத் தெரியவில்லையா?உயிர்போய்விட்டால்,செத்துப் போகும்!" "அப்படிச்சொல்ல வேண்டுமாக்கும்!சரி!அப்புறம்"?
"அதைப்போல,அந்த மானைப் போன்றவர்கள்,மானம் போய்விட்டது,என்றால்,
மயிர் நீப்பர்!அதாவது மொட்டை அடித்துக் கொள்வார்கள்! உயிர் போனால்,
மான் செத்துப் போகும்;!இவர்களுக்கு மானம் போனால்,மயிர் போகும்;மானம்
போவது,இவர்களுக்கு மயிர் போவதற்குச் சமம்;"என்று முடித்தான்;
அவன் சொன்னதும்,சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு நிகழ்ச்சி நினைவுக்கு
வந்தது; ஒருநாள்,பேருந்தில் பயணம் செய்துகொண்டிருந்தேன்;அருகில்
இரண்டு வாலிபர்கள் அமர்ந்திருந்தார்கள்;ஒரு வாலிபர் மொட்டை அடித்திருந்
தார்;நான்,"தம்பிக்கு எந்த ஊர்லே மொட்டை?"என்று கேட்டேன்;ஏதாவது
வேண்டுதலுக்கு எங்காவது கோவிலில் அடித்த மொட்டையாக இருக்கும்!என்ற எண்ணத்தில்;அருகில் இருந்த அடுத்த வாலிபர் சிரித்தார்; மொட்டை
நண்பனை முறைத்தார்;"அதெல்லாம் இல்லீங்க! இவன் எங்க ஊர்லே ஒரு
பொண்ணு கையைப் புடிச்சி இழுத்துட்டான்!ஊரு வழக்கப்படி, இவனுக்கு
மொட்டை அடிச்சி விட்டாங்க!'என்றார்,மொட்டையின் நண்பர்!
ஆஹா! எவ்வளவு சரியாக நமது நண்பன் சொல்லியிருக்கிறான்! இந்த வாலிப
ரும் தன் மானம் போனதாகக் கருதவில்லை! மொட்டை அடித்தாலும்,போன
மயிர் மீண்டும் வளரத்தான் போகிறது;பரவாயில்லை,நமது நண்பனின்
விளக்கம் என்று அவனைப் பாராட்டினேன்! இது குறள் மானம்!
இன்று அரசியலிலும் அதே நிலை தான்!அப்பாவியான தலைவர், கோரிக்கை
எதையாவது வலியுறுத்தி, உண்ணாவிரதம் தொடங்குவார்! சிலரோ புத்தி
சாலித்தனமாக, அது நடக்கப் போகிறது என்று தெரிந்து,அதை வலியுறுத்தி, உண்ணாவிரதம் தொடங்குவார்கள்;அவர்களின் மானம் காக்கப் பட்டு விடும்!தெரியாமல் ஆரம்பித்தவர்களின் கதைதான் மோசம்!உண்ணாவிரதத்தைத்தொடரவும் முடியாது!முடிக்கவும்முடியாது!தொடர்ந்தால்,உயிருக்கு ஆபத்து!முடித்தால், மானத்துக்கு ஆபத்து!
புலியின் வாலைப் பிடித்த கதையாக, வகையாகமாட்டிக்கொள்வார்கள்;மானப் பிரச்சினையாயிற்றே!
எதிர் அணியில் இருக்கும்போது,காரசாரமாக,ஏன்?தரக்குறைவாகக்கூட,தாக்
கிக் கொள்ளும் இரண்டு கட்சிகள்,அடுத்த தேர்தலில்,பழையனவற்றை மறந்து
விட்டு,கைகோர்த்துக் கொள்ளும் காட்சிகளைக் காண்கிறோம்!அதில் அவர்கள்
மானம் பார்ப்பதே இல்லை!என்று தான் எண்ணத் தோன்றுகிறது!நாமும்
அப்படித்தான்;அவர்கள் பார்க்காத ஒன்றை நாம் மட்டும் ஏன் பார்க்க
வேண்டும்?என்று விட்டு விடுகிறோம்!வேறு வழி இல்லாமல் திரும்பவும்
அவர்களுக்கே வாக்களிக்கவும் செய்கிறோம்!மாறி மாறி அவர்களே நிற்கும்
போது, நாம்தான் வேறு என்ன செய்ய முடியும்?இதில் எல்லாம் நம்மால்,
மானம் பார்க்க முடியுமா?
இப்போது இனமானம்,மொழிமானம் என்றெல்லாம்கூடத்தோன்றியிருக்கிறது!
இப்படி பல மானங்கள்,நிலவுகின்ற நிலையில் "எனக்குக் கொஞ்சம் மானம்
கொடுங்கள்,"என்று தலைவரிடம்,நான் எந்த மானத்தைக் கேட்பது?நம்மிடம்
இல்லாத மானம் எது?என்று எனக்கே,புரியாதபடியால்,எந்த மானம் எனக்கு
வேண்டும் என்று முடிவு செய்த பிறகே கேட்பது,என்று முடிவு செய்துவிட்ட
படியால், தற்காலிகமாக,என் வேண்டுகோளை இப்போது நான் தள்ளி
வைக்கிறேன்;அதுவரையிலும்,மானம் பற்றி இனிப் பேசவேமாட்டேன்என்றும்
மானத்தோடு உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்!
உயர்வு தாழ்வுகள் இல்லா நன்மானம் வாழ்க!
அப்படி இல்லாத அவமானம் வீழ்க!நன்றி!வணக்கம்!