Pages

Monday, April 23, 2012

44 engE nhimmadhi?


                                                     

எங்கே? நிம்மதி!
----------------------         


பிள்ளைகளும்,பெற்றவர்களும்!
=============================

பிள்ளைகள் முன்புபோல் எங்களிடம் அன்பாக இல்லை,
என்று பெற்றோர்கள் புலம்புவதும்,பெற்றோர்கள் அன்
பாகஇல்லை,என்று பிள்ளைகள் புலம்புவதும்,சர்வ சாதாரணமாக,நடைமுறையில் இருப்பதை,இன்று நாம்
பார்க்கிறோம்!


ஒருவனோ,அல்லது ஒருத்தியோ பருவவயதைத் தாண்டியபிறகு,
அம்மா,மகன்,மனைவி மற்றும் அப்பா மகள் கணவன்:
இவர்களில்,
மகன், அம்மாவைவிட மனைவியிடமும்;
மகள், அப்பாவைவிட கணவனிடமும்;
ஒரு தந்தை, தன் மகளைவிட,அவள் அம்மாவிடமும்;
ஒரு தாய் தன் மகனைவிட அவன் அப்பாவிடமும்;
அதிக அன்பு காட்டுவது சரியா? என்றால் இயற்கையின்
நியதிப்படி சரியே!
கூடுதலாக எவரிடமிருந்து அன்பு பெறப்படுகிறதோ,
அல்லது பெறப்பட்டதோ,அவரிடம் கூடுதலாக அன்பு
காட்டுவது மனித இயல்பு!
அந்த வகையில்,ஒரு ஆண் மனைவியிடமும்;
ஒரு பெண் கணவனிடமும்;
கூடுதலாக அன்பைப் பெற்றவர்கள்,அல்லது பெறுகின்றவர்
கள், என்ற நிறைவில்,அவர்களும் கூடுதலான அன்பைக்
காட்டுவது இயற்கைதான்!
இந்த அன்பின் அடிப்படையை இனக்கவர்ச்சி என்றும் கூட
வைத்துக் கொள்ளலாம்!
இனப்பெருக்கத்துக்கான தொடர் நடவடிக்கைகளில் இது
ஆரம்பம் என்றும் வைத்துக் கொள்ளலாம்!
இதை மேலோட்டமாகப் பார்த்தால்,ஒரு அற்பமான,ஏன்
அநாகரீகமான காரணமாகவும் தெரியலாம்;
இது நம்மை மிகவும் உயர்வானவர்களாகக் கருதிக் கொள்
வதன் வெளிப்பாடுதானே தவிர,உண்மையில் அது உண்மை
யில்லை! பெரும் ஞானியரைத் தவிர்த்து,(ஏன் அவர்களையும்
சேர்த்துத்தான்) அனைவரும் இக்கோட்பாட்டுக்குள் அடங்கி
யோர் தான்! பீஷ்மனின் தந்தை சந்தனு மன்னன் இதற்கு ஒரு
நல்ல எடுத்துக் காட்டு!
தவ வலிமை மிக்க விசுவாமித்திரனும் இதனாலேயே தடுக்கி,
விழுந்தான்! இது நமது பெருமையைக் குலைக்கிறது என்றா
லும் தவிர்க்க இயலாதது! இனக்கவர்ச்சி, இயற்கை நமக்க
ளித்த ஒரு சிறப்பு ஏற்பாடு ஆகும்!நாம் இதை இலைமறைவு
காயாக வைத்திருப்பது, விலங்குகள் நிலையிலிருந்து ,
ஆறறிவு பெற்ற நிலைக்கு உயர்ந்திருக்கிறோம்,என்பதற்கே
ஆகும்;இன்னும் கூட நாம் விலங்குகள் நிலையிலேதான்
இருக்கிறோம் என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்!அதற்காக
வேதனைப்படவேண்டும்,என்றும் வெட்கப்பட
வேண்டும் என்றும் சொல்வதெல்லாம் ஒரு ஒப்புக்காக மட்
டுமே இருக்கும்!பெற்று வளர்த்த பிள்ளை,பருவமுற்றஉடனே
மற்றவரைத் தேடி, ஒடுவதோடல்லாமல், நம்மை உதாசீனப்
படுத்துவதோடு நிற்காமல்,அவர்களின் தேவைகளை நிறை
வேற்றுவதோடல்லாமல்,அவர்களைச்சேர்ந்தவர்களை
உயர்த்தியும்,நம்மைத் தாழ்த்தியும் பேசும்போதுதான் பிரச்சி
னையே எழுகின்றது!அதோடு நமது தேவைகளை அவர்கள்
கவனிக்காமல் விட்டால், பிரச்சினை இன்னும் பெரிதாகி
விடும்! நாம் சாதாரணமாகச் செய்வதெல்லாம் பெரிய தவறா
கவும்,அவர்கள் செய்யும் பெரிய தவறுகள் எல்லாம் சாதாரண
மாகவும் அவர்களுக்குப் படுகின்றது! நமது சொல்லும் செயலும்
அந்நியமாகிப் போகிறது!நமக்குள் ஏதோ ஒரு இடைவெளி ஏற்
பட்டுவிட்டதைப் போன்ற ஓர் உணர்வு!இதற்கு யாரோ ஒருவர்
காரணமாகி விட்டார், என்று அவர்மேல் வெறுப்பு!இந்த நிலை
ஏன் என்றுதான் அவர்கள் வேதனை அடைகின்றார்கள்! அவர்
களின் எதிர்பார்ப்பு பொய்யாகிப் போகும்போது அல்லது பொய்
யாகி விட்டதாக அவர்கள் எண்ணும்போது,அவர்கள் பெற்ற பிள்
ளைகளே அவர்களுக்கு ஆறுதலாக இல்லாதபோது, மற்றவர்
யாரிடமிருந்து, அந்த அமைதியை எதிர் பார்க்க முடியும்? பிறகு
யார் அந்த நிம்மதியை தருவார்? இந்த நிலை மாறினாலே,அங்கே
அமைதியும் நிம்மதியும் நிலவும்!பிள்ளைகள்சிறியவர்களாக
இருக்கின்றபோது,பெற்றோர் அவர்களைப் பற்றிக் காணுகிற
கனவுகள்,அவர்கள் பெரியவர்களாக ஆகின்றபோது பொய்த்துப்
போவதாக எண்ணுவதன் காரணமே இதுதான் என்று கொஞ்சம்
நிதானமாக சிந்தித்தால் புரியும்!
இதற்கு என்ன தீர்வு? பிள்ளைகளும்,அவர்களைப் பெற்றோரும்
ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும்!இதுவரை நமக்காக எல்
லாம்செய்த பெற்றோரை மனம் கோண வைக்காமல்,நடந்து
கொள்வது நம் கடமை என்று பிள்ளைகளும் நினைக்கவேண்டும்!
பிள்ளைகள் அப்படித்தான் இருப்பர் என்று பெற்றோரும் எண்ண
வேண்டும்!பிள்ளைகள் கொஞ்சம் விட்டுக் கொடுக்க வேண்டும்!
ஏன் என்றால்,"வயது ஆகிவிட்டது,நமக்கு;இனி நம்மால் ஒரு
பயனும் இல்லை என்பதால்தானே நம்மை உதாசீனப் படுத்துகி
றார்கள்" என்ற தாழ்வு மனப்பான்மை,அவர்களை நிலை
குலையச் செய்யும்; அவர்களை அந்த மனப் பான்மையிலிருந்து
மாற்ற,நாம் சில முயற்சிகளை மேற்கொள்ளலாம்;அவர்கள்
என்ன சொல்கிறார்கள்,என்று கேட்கவேண்டும்;அதில் உள்ள
சாதகபாதகங்களை அலச வேண்டும்! பிறகு ஒரு முடிவு எடுக்க
வேண்டும்; இவ்வாறு செய்வதால்,நமக்கும் ஒரு முக்கியத்துவம்
கிடைக்கிறது,என்று அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்!அந்த
மகிழ்ச்சி அவர்களின் தாழ்வு மனப்பான்மையை அகற்றும்;
பிள்ளைகள்,நம்மீது அன்பாகத்தான் இருக்கிறார்கள் என்ற எண்
ணத்தை,அவர்களுக்கு ஏற்படுத்தும்;வீட்டில் நிம்மதி நிலவும்!


கணவனும் மனைவியும்!
=======================      


பெண்ணும் மாப்பிள்ளையும் இருந்தால் தான் திருமணம்!
பெண்ணை மட்டும் மணவறையில் அமரவைத்து ,அல்லது
மாப்பிள்ளையை மட்டும் அங்கே அமரவைத்து திருமணம்
செய்ய முடியாது!
கணவனும் மனைவியும் சேர்ந்தால்தான் குடும்பம்!
கணவன் இல்லாமல் மனைவி மட்டும் இருந்தாலோ,அல்
லது மனைவி இல்லாமல் கணவன் மட்டும் இருந்தாலோ,
அதை முழுமை பெற்ற குடும்பம் என்று சொல்ல முடியாது!
இந்த இருவரில் ஒருவருக்கு மட்டும் தான் முக்கியத்துவம்,
என்றும் சொல்ல முடியாது!இருவருக்கும் தான்!ஆகவே,
இருவரில் யார் உயர்ந்தவர் என்ற கேள்விக்கே இடமில்லை!
"கொண்டவனைப் பேணுதகைப் பெண்ணுக்காகும்!
கொண்டவளைப் போற்றுவதோ ஆணுக்காகும்!
இன்பெனினும் துன்பெனினும் இணைந்து செல்லல்,
இல்வாழ்வோர் ஏற்குதகைக் கடமையாகும்!"
ஒரு குடும்பம் செம்மையாக இயங்க,இருவரும் ஒருவரை
ஒருவர் அனுசரித்துப் போவதே சிறப்பான வழி!ஒருவ
ருக்கு ஒருவர் விட்டுக் கொடுப்பதால்,யாரும் குறைந்து
போவதில்லை!இருவரும் தோழமையோடு பழகும்போது,
வேற்றுமை எண்ணம் வரவே வழியில்லாமற் போய்
விடும்!நாம் இருவரும் ஒன்று என்றால்,உயர்வு ஏது?
தாழ்வு ஏது?உண்மையைச் சொல்ல வேண்டுமானால்,ஒரு
குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு,மனைவியின் சொல்லே
மந்திரமாக இருக்கும்!இதற்கு நாம் வெட்கப்படத்தேவை
இல்லை!அத்தகைய குடும்பங்களேசிறப்பாக இயங்குகின்
றன,என்பதும் நாம் காண்கின்ற காட்சிகளாகும்!அவ்வாறு
இல்லாத குடும்பங்கள்,ஆணாதிக்கம் நிறைந்ததாகவே
இருக்கும்!
குடும்ப பந்தம் என்பது ஒருவர்மேல் ஒருவர் ஆதிக்கம்
செலுத்துவதல்ல!இருவரும் தாங்கள் எதிர்கொள்ள இருக்
கின்ற பிரச்சனைகளை,தங்களுக்குள் விவாதித்துப் பேசித்
தீர்க்கவேண்டும்!அவளுக்கு ஒன்றும் தெரியாது,என்று கண
வனும்,அவருக்கு ஒன்றும் தெரியாதுஎன்று மனைவியும்
எண்ணுவது கூடாது!எல்லோரும் அவரவர் வழியில்,ஓர
ளவு அறிந்தவர்களே! இன்னும் சொல்லப்போனால்,ஒருவர்
மேல் ஒரு பொறுப்பைச் சுமத்தும்போது,பொறுப்பற்றவரும்,
பொறுப்பு மிக்கவராக மாறுகிறார் என்பது உளவியல் உண்
மையாகும்! எனவே அதற்கான வழிமுறைகளை,இருவரும்
பகிர்ந்து,அதனால் வரும் சாதக பாதகங்களை,விவாதித்து,
ஏற்றவழி என்று,ஒன்றை இருவருமேமுடிவு செய்ய வேண்
டும்;ஏனென்றால் வருகின்றவிளைவுகளில் இருவருக்கும் சமபங்கு
உண்டு,என்பதால்,இந்த விவாதம்,அவர்களுக்குள் ஒருநெருக்கத்தையும்
பொறுப்புணர்ச்சியையும் ஏற்படுத்தும்!இதனால் எந்தவிதமான மனக்கசப்பும்
ஏற்பட வழி இருக்காது!
அதனாலேயேதான் நமது முன்னோர்,கணவ
னும்,மனைவியும் வண்டியில் பூட்டப்பட்ட ,இரண்டு மாடு
களைப் போல என்றார்கள்;இருவரும் ஒருதிசையில் சென்
றால்,வண்டி சீராக நகரும்:வெவ்வேறு திசையில் இழுத்
தால்,இருவருக்கும்தொல்லை
தான்,என்பதோடு,வண்டியும்
நகராது!வாழ்க்கை சீராக இயங்க
வழி தேடுங்கள்!முன்
னேற்றம் காண முயலுங்கள்!மகிழ்ச்சியும் இனிமையும்
ஓங்க ஒருமனதோடு முனையுங்கள்! வெற்றிகள் பல
பெறுங்கள்! உற்றாரும் மற்றாரும் வியக்க,வாழ்வில் வள
மும் நலமும் பெற்று மகிழுங்கள்!
வள்ளுவன் கண்ட வாழ்க்கையை நீங்களும்  காணுங்கள்!   வாழ்க பல்லாண்டு!!





No comments:

Post a Comment