This is what I experienced!
This is what I experienced!
1-கொஞ்சம் போதுமா ? Is
something better than nothing ?
ஆசிரியப் பணியிலிருந்து ஓய்வு பெற்றிருந்த நேரம் !
வீணாகப் பொழுதைப் போக்குவதை
விட , உருப்படியாக ஏதாவது வேலை செய்தால் பொழுதும்
போகும் ; செலவுக்குக் கைக்கு கொஞ்சம் காசும் கிடைக்கும் ; அதனால் நமக்குத் தெரிந்த
ஒரு வேலை செய்யலாமே ; பயனுள்ளதாகவும் இருக்குமே ,
என்று , எண்ணினேன்
! வேலை செய்ய உடலில்
கொஞ்சம் தெம்பும் இருந்தது ! ஆகையால் , எங்காவது
நமக்கு ஏற்ற வேலை காலியிருந்தால் ,
தெரிவிக்கும்படி நண்பர்
ஒருவரிடம் சொல்லி வைத்திருந்தேன் ! சிறிது
நாட்களுக்குப் பிறகு , நண்பர் என்னைச்
சந்தித்தார் ; சொன்னார் ; " ஒரு
சமூக சேவை நிலையத்தில் வேலை இருக்கிறது ! அது
சேவை மையமாக இருந்தாலும் , வெளிநாட்டு உதவியுடன் நடப்பதால் ,
வேலைக்கு வருகின்றவர்களுக்கு ,
ஓரளவுக்கு நல்ல சம்பளமும் தருவார்கள் !
போன் செய்து விட்டுச் சென்று பாருங்கள் "
, என்று சொல்லி , ஒரு தொலைபேசி எண்ணைக் கொடுத்தார் ,
நண்பர் ! மறுநாள் அந்த எண்ணை டயல் செய்தேன் !
நிலையத்தின் நிர்வாகி பேசினார் !
விபரத்தைக் கூறினேன் ; " எப்போது
வருகிறீர்கள் ? " என்றார் !
" நாளை வருகிறேன் பேசுவோம் !
" என்றேன் ! அடுத்த
நாள் புறப்பட்டேன் ! அவ்வளவு தொலைவு
இல்லை யென்றாலும் பக்கம் என்றும் சொல்ல முடியாது ! வீட்டிலிருந்து
ஒரு பத்திலிருந்து பதினைந்து கிலோ மீட்டர்
தொலைவு இருக்கும் ! அந்த இடம் ; ஆனால் பஸ்ஸிலோ அல்லது ரயிலிலோ நேராகச்
சென்றுவிட முடியாது ! பஸ்ஸிலும் ஆட்டோவிலுமாக
அல்லது ரயிலிலும் ஆட்டோவிலுமாகச் செல்லவேண்டும்
. இல்லையென்றால் டு வீலரில் செல்ல வேண்டும் ;
அவ்வளவு தொலைவுக்கு டு வீலரில் செல்வது உசிதமாக இராது என்று அதைத் தவிர்த்து விட்டு
, பஸ்ஸிலும் ஆட்டோவிலுமாக , ஒரு வழியாக அந்த இடத்தை அடைந்தேன் .
வழக்கமான விசாரிப்புகளுக்குப் பிறகு , அவர் கூறத் தொடங்கினார் ; இங்கே பெரும்பாலும் வசதி இல்லாதவர்கள் மற்றும் பெற்றோரை இழந்தவர்கள் என்று மிகவும் எளிய நிலையில் உள்ள பிள்ளைகள் தான் படிக்கிறார்கள் ; நாங்களும் இதை ஒரு சேவையாகத்தான் செய்து வருகிறோம் ! “ என்றார் ; ( குறைவான சம்பளம் தான் கொடுக்கப் போகிறோம் என்பதற்கான பீடிகை ! வெளி நாட்டிலிருந்து தேவைக்கு மேலேயே நிதி உதவி வருகிறது , என்பதைச் சொல்லவில்லை ! ) என்ன வேலை ? எப்போது வரவேண்டும் என்றெல்லாம் சொல்லிவிட்டு ," வேலை முடிந்தது ! குறிப்பிட்ட நேரத்தில் வீட்டுக்குச் செல்லலாம் , என்று பார்க்கக்கூடாது ! அந்த பிள்ளைகளை நமது பொறுப்பில் எடுத்துக் கொள்ளவேண்டும் ! "
என்றும் சொன்னார் ! " பொறுப்பைச் சுமப்பது ஒன்றும் எனக்குப் புதியதில்லை ; அது பற்றிக் கவலை இல்லை ! எல்லாம் சரி ! எவ்வளவு சம்பளம் தருவீர்கள் ? "
என்று கேட்டேன் ! " அதுதான் சொன்னேனே ! நீங்கள் இதை சம்பளம் என்று நினைக்கக் கூடாது ! ஹானரேரியம் என்றுதான் வைத்துக் கொள்ள வேண்டும் ! இதை ஒரு சமூக சேவையாகத்தான் நினைக்க வேண்டும் ! " என்று இழுத்து , ஏதோ போனால் போகிறது என்பதைப் போல " ஒரு நான்காயிரம் ரூபாய் தரலாம் " என்றார் ! ( இது அன்றைய மதிப்பு ) நான் அதிர்ந்து விடவில்லை ! பலத்த பீடிகை போடும் போதே தெரிந்தது தான் ! என்ன சொல்லப் போகிறாரென்று நான் எதிர்பார்த்தது தான் ! " ஹானரேரியம் என்பது கொடுத்து கௌரவிப்பது ! இது கொடுத்து கேவலப்படுத்துவதாக அல்லவா ? இருக்கிறது ! அது இருக்கட்டும் ! என் திறமை என்ன ? நான் எந்த அளவுக்குப் பிள்ளைகளுக்குப் பயனுள்ளவனாக இருப்பேன் ? என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டாமா ? அதற்கு சோதனைத் தேர்வு எதுவும் எனக்கு வைக்காமலேயே , எந்த அடிப்படையில் இவ்வளவு தான் தருவோம் என்று கூறினீர்கள் " என்று கேட்டேன் !
3-கொஞ்சம் போதுமா ? Is something better than nothing ?
" அதை
நீங்கள் வேலை செய்யும்போது பார்த்துக் கொள்வோம் " என்றார்
, அந்த நிர்வாகி
. " போகப் போக உங்கள் திறமையைப்
பார்த்து பின்னால் தருவோம் என்றார் ; நான் தான் சொன்னேனே ! இது ஒரு சமூக சேவை என்று நீங்கள் நினைக்கவேண்டும்
என்று " என்றார் அவர் !
" சம்பளமும்
வாங்கிக் கொண்டு அதை ஒரு சமூக சேவை என்று நினையுங்கள் என்றால் , தாராளமாக நான்
அப்படி நினைத்துக் கொள்கிறேன் ; அதற்கு எனக்கு எந்த விதமான ஆட்சேபணையும் கிடையாது
: அதனால் எனக்கு நஷ்டமும் கிடையாது ; ஆனால் , முதலிலேயே கூட நீங்கள் தருவதாகச் சொன்ன
தொகை சரியானதாக இல்லையே ! படித்து முடித்து உடனே புதிதாக வேலைக்கு வருகின்றவனுக்குக்கூட இதைவிட அதிகமாகவே தருவார்கள்!
நானோ படித்து முடித்து கல்வியறிவோடு,
முப்பதாண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்த
அனுபவ அறிவும் பெற்றுள்ளேன் ! என் வயதைக் கணக்கில்
எடுக்கவேண்டாம் ; என் கல்வியையும் ,அனுபவத்தையும்
, கூட கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லையே !
பிள்ளைகளுக்குப்
பாடம் சொல்லிக் கொடுக்க ஆசிரியர் ,தேவை
என்பது போல் தோன்ற வில்லை ! மேலே கணக்குக் காட்ட ஓர் ஆள் இருந்தால் போதும் ,
என்பது போல் தான் தோன்றுகிறது !
" என்றேன் ! " தேவை
இல்லாத விஷயங்களை நீங்கள் பேசுகிறீர்கள் என்றார் அந்த நிர்வாகி
சரி அதை விடுங்கள் ! நீங்கள் சொல்வது போல் அது சேவையாகவே
இருந்தாலும் , எந்த ஒரு லாபமும் இல்லாமல் யாரும் எந்த சேவையையும்
செய்து விட மாட்டார்கள் ! மனிதனுக்குத் தேவை ,
புகழ் அல்லது பயன் ! சேவையை
வசதியானவர்கள் செய்வார்கள் ; அவர்களுக்கு லாபம் பேரும் புகழும்
! வீடு வாசலைத் துறந்தவர்கள் செய்வார்கள் !
அவர்களுக்கு லாபம் , சாப்பாடும்
, தங்குமிடமும் ! " ஆத்ம
திருப்திக்காக , இதை நான் செய்கிறேன் ,
என்பார்கள் !
அவர்களுக்கு லாபம் அந்த ஆத்ம திருப்தி !
உங்கள் ஆத்ம திருப்திக்காகத்தான் , நீங்கள் சேவை
செய்வதாக நினைத்துக் கொண்டால் , உங்களிடம் பணியாற்ற வரும் என்னைப் போன்ற
மற்றவர்களும் அவ்வாறு எண்ண வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு ! " பற்றுக பற்றற்றான் பற்றினை
; அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு "
" என்று வள்ளுவர்
பாடியது இதைத்தான் ! ஆனால் என்னைப் போன்ற நடுத்தர வர்க்கத்தினருக்கு அதுவெல்லாம்
ஒத்துவராது ! ஏதோ நன்கொடை என்று ஒரு தொகையைக் கொடுத்தால் அதுதான்
நாங்கள் செய்யும்சேவை ! அதற்கு மேல் சேவை என்று எதுவும் செய்ய எங்களால் இயலாது
!
நீங்கள் தருவதாகச் சொன்ன அந்த நான்காயிரம் ரூபாய் எனக்குக்
கட்டுபடியாகாது " என்றேன்! "
Something is better than nothing " என்று ஆங்கிலத்தில் ஒரு proverb
இருக்கிறது ; அதை நினைத்துப் பாருங்கள் என்றார் அந்த நிர்வாகி !
" நீங்கள் நன்றாகப் புரிந்து தான் சாதாரணமாக இதைச் சொல்கிறீர்கள்
என்றால் , அதற்கு சாதாரணமான முறையில் நானும் இப்படித்தான்
சொல்ல வேண்டி இருக்கும் ; இதுவும் ஆங்கிலத்தில் உள்ளது தான் ; கேளுங்கள் ;
Nothing
is better than nonsense " என்பது அது என்றேன்
! இதைக் கேட்டு அவர் மிகவும் டென்ஷனாகி விட்டார் !
Nonsense
, என்று எப்படிச் சொல்லலாம் ?
என்று கோபமாகக் கேட்டார் ! " " நான்
நான்சென்ஸ் என்று உங்களைச் சொல்லவில்லை ; நான்
சொன்ன அர்த்தமே வேறு என்று நான் சொல்ல முயன்ற எந்த விளக்கத்தையும் அவர் காதில் வாங்குவதாயில்லை
! அதற்குப் பிறகு அங்கு எனக்கு என்ன வேலை ?
இந்த விளக்கம் உங்களுக்கு !
ஒரு வகையில் இது என் தன்னிலை விளக்கம் என்றும் வைத்துக்
கொள்ளலாம் ! ஆனால் நிச்சயமாக , சமாளிப்பு அல்ல ! எப்படி என்று
கேளுங்கள் ! ஐயோ பாவம் வேலை வெட்டி என்று எதுவும் இல்லாமல் ,
வருமானமும் இல்லாமல் சும்மாவே உட்கார்ந்திருக்கிறாயே !
மாதம் ஒரு ஆயிரம் ரூபாய் தருகிறோம் ;
வந்து வாங்கிக் கொள்ளப்பா !
என்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம் !
ஆனால் நானோ வந்து வாங்கிச் செல்வதெல்லாம் மிகவும் கஷ்டமான
வேலை !
5-கொஞ்சம் போதுமா ? Is
something better than nothing ?
இருந்தாலும் ஒரு இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தால் வந்து
வாங்கிக் கொள்கிறேன் ; அதுதான் எனக்குக் கட்டுபடியாகும் !
என்று நான் சொன்னால் , நிச்சயமாக
அது தவறு தான் !
" ஒன்னுமில்லாம
உட்காந்திருக்கிறதுக்குப் போனால் போகிறதென்று ஆயிரம் ரூபாய் கொடுத்தால் ,
அது போதாதோ என்று தாராளமாகக் கேட்கலாம் !
Something is better than nothing என்று தைரியமாகவும் சொல்லலாம்
! ஆனால் இங்கு நான் கேட்பது பிச்சை அல்ல !
வேலைக்கு உண்டான கூலி ! இங்கே
, Something is better than nothing என்பதெல்லாம்
சிறிதும் பொருந்தாது !
அதற்காக Nothing is better than nonsense
என்று நீ சொல்வதா ? என்று
நீங்களும் கேட்கலாம் ! Nonsense என்றால் முட்டாள் தனமானது என்றே
தவறாக எண்ணிக் கொண்டிருக்கிறோம் ! புத்திசாலித்
தனமில்லாதது என்பது தான் சரி !
புத்திசாலித்தனமில்லாதது எல்லாம் முட்டாள் தனமானது அல்ல
! இதை கேளுங்கள் ; விசை விதிகளைக் கண்டுபிடித்த
விஞ்ஞானி நியூட்டன் பெரிதும் சிறிதுமாக இரண்டு பூனைகள் வளர்த்தார் ; ஒன்று வெளியே
போவதற்கு கதவை பிறாண்டும் ; போய்விட்டு சிறிது நேரத்திற்குப் பிறகு உள்ளே
வருவதற்கும் கதவைப் பிறாண்டும் ; மற்றொன்றும் இவ்வாறே செய்யும் ; அவ்வப்போது
எழுந்து கதவைத் திறப்பதும் மூடுவதும் , இவருடைய வேலைக்கு பெரிதும் இடைஞ்சலாக
இருந்தது ; ஆகவே கதவில் துவாரம் இருந்தால் தானாகவே போய் வந்து கொள்ளும்
என்று நினைத்தார் ; ஒரு தச்சுத் தொழிலாளியை அழைத்து அவரிடம் சொன்னார் ; பெரிய பூனை நுழைவதற்கும் சிறிய பூனை நுழைவதற்கும்
தனித்தனியாக ஒன்று பெரியதும் மற்றொன்று சிறியதுமாக கதவில் இரண்டு துவாரங்கள்
போட வேண்டுமென்றார் ! தச்சுத்தொழிலாளி , ஏன்
இரண்டு துவாரங்கள் ? பெரிய துவாரத்தில் சிறிய
பூனை நுழைய முடியாதா ? என்று கேட்டார் ; நியூட்டன் இதைக் கேட்டுத் திகைத்தார் அப்போதுதான் அவருக்கு அது புரிந்தது !
இந்த யோசனை நமக்கு இல்லாமற் போய்விட்டதே என்று
எண்ணினார் ; இதனால் நியூட்டனை முட்டாளென்று சொல்ல முடியுமா ?
புத்திசாலித்தனமாயில்லாத வேலையைத்தான் Nonsense
என்கிறோம் !
6-கொஞ்சம் போதுமா ? Is
something better than nothing ?
என் கதையை எடுத்துக் கொள்வோம் ! வேலை செய்வதற்காக பத்து
கிலோ மீட்டருக்கு மேல் பதினைந்து கிலோ மீட்டருக்குள் இருக்கின்ற அந்த இடத்தை அடைய நான் ஏறக்குறைய ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆட்டோவிலும்
பஸ்ஸிலுமாக பயணம் செய்ய வேண்டும் !
எட்டு மணிக்கு அங்கே நான் பணியில் இருக்க வேண்டுமானால்
, வீட்டிலிருந்து நான் ஆறரை மணிக்குப் புறப்பட வேண்டும்
! அதற்கு ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து விட வேண்டும்
! காலைக் கடன்களை முடித்துக் குளித்து நான் ரெடியாவதற்குள்ளாக என் மனைவி எனக்குச்
சாப்பிடவோ இல்லை எடுத்துச் செல்லவோ ,
டிஃபனும் , சாப்பாடும்
தயார் செய்ய வேண்டும் ! அதற்கு அவர் நான்கு மணிக்கெல்லாம் கண் விழிக்க வேண்டும் விழித்து எழுந்து எல்லாம்
தயார் செய்து என்னை அனுப்பி வைக்க வேண்டும் ! எனக்கு
ஆறுமணிக்கு பணி முடிந்து நான் வீட்டுக்கு வர
இரவு எட்டு மணியாகும் ! அதற்குப் பிறகு நாங்கள் சாப்பிட்டு முடித்து ,
பாத்திரங்களைக் கழுவிக் கவிழ்த்து ,
சமையலறையை விட்டு வெளியே வர என் மனைவிக்கு ஒன்பது மணியாகும்
! இப்படி , பகலில்
நான் விழித்திருக்கும் நேரம் பதினாறு மணியென்றால் , பின்
தூங்கி முன் எழும் பேதையாம் என் மனைவிக்கோ , பதினேழு
மணி ! உடல் வலி வகையில் இப்படி என்றால் , செலவு
வகையில் , ஆட்டோவுக்கு இவ்வளவு , பஸ்ஸுக்கு
இவ்வளவு , டீச்செலவுக்கு இவ்வளவு என்று அவர்கள் தருகின்ற நாலாயிரம்
ரூபாயில் , பாதிக்கும் மேல் காலியாகிவிடும் !
இதற்கு மேல் , இரவு பகலென்று பாராத ஓயாத அலைச்சல் ;
அளவுக்கு மீறிய உழைப்பு ,
அகாலத்தில் விழிப்பு , அகாலத்தில்
தூக்கம் ஆகியவற்றால் இருவருக்கும் ஏற்படும் , உடல்நலக்
குறைவு காரணமாக மருத்துவரிடம் சென்றால் , அந்த
மீதியும் காலி ! இதில் என்ன லாபம் ? உடல் நலமும் கெட்டு ,
மன நலமும் கெடுவது தான் லாபம் !
7-கொஞ்சம் போதுமா ? Is something better than nothing ?
ஏதோ ? ஒன்றுமில்லாமல் சும்மா இருப்பதற்கு , கிடைப்பது
( கொஞ்சம் ) என்றாலும் அது ( போதுமா ? )
------இதுதான் முழு தலைப்பு !
தலையைச் சொறிவதற்கு குச்சி எதுவும் கிடைக்க வில்லை என்று அடுப்பில் எரிந்து கொண்டிருக்கும் குச்சியை எடுத்து சொறிந்து கொள்வதைப் போன்றது தான் , இத்தகைய செயல்களை நாம் செய்வதும் ; இதைத் தான் புத்திசாலித்தனமில்லாத செயல்கள் என்று சொல்கிறோம் அறிவு என்பது வழி ! புத்தி அதில் நடந்து , நாம் எடுக்கும் முடிவு ! அறிவில்லாதவன் புத்தியைப் பயன்படுத்த முடியாது ; புத்தியில்லாதவன் அறிவில்லாதவன் அல்லன் ! அறிவைப் பயன்படுத்தாதவன் என்று சொல்லலாம் ; ஏனென்றால் எல்லோருக்கும் அவரவர் எடையில் 2 சதவீதம் மூளை இருக்கத்தான் செய்கிறது , என்று , விஞ்ஞானிகள் சொல்கிறார்கள் ; அதைக் கசக்க கஷ்டப்படுகிறோம் ; துணியைக் கசக்கினால் அழுக்கு அகலும் ; மூளையைக் கசக்கினால் அறியாமை அகலும் ; அப்படி கசக்கினால் எங்கே மூளை குழம்பி விடுமோ என்று பயப்படுகிறோம் ; குழம்பினால் தானே தெளியும் ? sense என்பது மூளை அல்ல ; brain என்றால் தான் மூளை ; sense என்றால் புத்திசாலித்தனம் ; அத்தகைய புத்திசாலித்தனத்துடன் , இருப்பதை வைத்து , திருப்தியாக , சும்மா இருப்பதே சுகம் தானே ! ஆனால் ஏதாவது இருக்க வேண்டும் ! ஒன்றுமில்லாமல் எதை வைத்துக் கொண்டு திருப்தியாக சும்மா இருக்க முடியும் ? இதைத்தான் , nothing is better than nonsense என்கிறோம் ! One bird in the hand is better than two birds in the bush என்றும் சொல்வார்கள் அது சரி ! கையில் ஒரு குருவி வைத்திருந்த ஒருவன் , மரத்தில் இரண்டு குருவிகள் இருப்பதைப் பார்த்து அந்த இரண்டுக்கு ஆசைப்பட்டு , கையில் இருந்ததை விட்டுவிட்டு , அவற்றைப் பிடிக்கப் போனானாம் ; அவையும் பறந்து விட்டன ; கடைசியாக கையிலும் இல்லை முதலிலேயே , அவன் ஒன்றோடு போய் இருக்கவேண்டும் ; அதனால் அது சரி ; அது வேறு பொருளில் வருவது ; ஆனால் , Something is better than nothing என்பது சரியல்ல ! ஏனென்றால் இதற்கு வேறு பொருள் ! இரண்டுக்கும் பொருள் வேறுபாடு உண்டு ! வேறுபாடுகள் அறிந்து சொல்ல வேண்டும் ! செயலாற்ற வேண்டும் ! அவ்வாறு தக்கபடி முடிவெடுத்து அவசியமில்லாமல் வரும் துன்பங் களைத் தவிர்ப்போம் ! உயர்வோம் !

