Pages

Sunday, February 25, 2018

98-devotional songs-4











                     1
மண்ணை சுமந்த தலைவா-மதுரை
மண்ணை காத்த இறைவா
அன்னை யாக வந்தாய்-உன்
அருளால் உயர்வு தந்தாய்-மண்ணை

கனவெனும் வாழ்வை நனவென நினைத்தோமே-உன்
கருத்தறியாமல் மனம்போல் நடந்தோமே-இரு
விழிகளிருந்தும் வழிதெரியாமல்
வாடி மாள்கிறோம்-வலி தன்னில்-ஆழ்கிறோம்-மண்ணை

மிதித்தவர் தமையும் மதித்தருள் புரிந்தாயே-உனை
மதித்திடும் எமையே நினைத்திட மறந்தாயே-தினம்
கதிஎனப் பணியும் அடியவர் எமையே
கண்ணால் நோக்குவாய்-எம்-கவலை போக்குவாய்-மண்ணை

பாவங்கள் போக உன்னடி துணைஎன்றாய்-வரும்
பழிகளைப் போக்க நல்வழி நினைஎன்றாய்-எம்
இன்னல்கள் நீங்க இனியவை ஓங்க
என்றும் அருளுவாய்-நீ-இங்கே வருகுவாய்-மண்ணை

 






1-விந்தை

விந்தையில் விந்தையான தேவனாம்                                          சுந்தர வேந்தனார் மைந்தனாம்                                    எந்தைதான் எங்களின் சொந்தமாம்-விந்தை

விண்ணிலே மீன்களும் ஒளியை வீசுமே                     வியப்பிலே மேய்ப்பர்கள் விழிகள் கூசுமே                   கன்னியாம் மேரியின் குழந்தையைத் தேடுவோம் மண்ணிலே மனிதர்நாம் ஒன்று கூடுவோம்-விந்தை

பாவம்தீர்க்க பாவையிடம் பாரில் வந்தவர்      ஜோதியில்மெய் ஜோதியான தூயர் ஆனவர்              பாரினில் எங்களின் பாவங்கள் போக்குவார்                நீதியில் ஆளுவார் நெறிகள் பேணவே –விந்தை 

கர்த்தராம் கிரிஸ்துராஜன் கருணை வள்ளலாய் இத்தரையில் மாபெரும் மன்னன் ஏசுவாய்                      உத்தம மார்க்கத்தை உலகிலே தந்தவர்                    முக்தியை நாங்களும் என்றும் காணவே-விந்தை

2-துதிப்போம்

துதிப்போம் துதிப்போம்  துதிப்போம்                                        துதி முழங்கும் தூயர்பரிசுத்தரை                                                  தூயா வா நேயா வா                                                                           தயவே தருவாய் என்று                                                          கனிவுடனும் பணிவுடனும்                                                     காலமெல்லாம் துதி பாடுவோம்-துதிப்போம்

ஆதிச்சபை ஆணை நிறைவேறவே                                  ஆவிவந் தமர்ந்தது விரைவாகவே                                         கன்னி மரியன்னை கருவாகினாள்                                 கண்ணான நம்ஏசு உருவாகினார்- துதி

வானத்தில் விண்மீன்கள் வழிகாட்டவே                        மேகத்தில் முழக்கங்கள் வியப்பூட்டவே               மேய்ப்பர்கள் பின்னோடு வந்திடவே                             மேய்ப்பராம் நம்ஏசு பிறந்தார் இங்கே-துதி

மாட்டுக்கொட் டில்அங்கே தொட்டில் இல்லை                மண்மீது வைக்கோலில் கட்டில் இல்லை                  விண்ணாளும் நம்ஏசு ஏழையென்றே                           மண்ணாள இவ்வளவாய் வந்தார் இங்கே -துதி 

அல்லேலூ யாஎன்று நாம்பாடு வோம்                          அனுதினமும் அவரோடு சேர்ந்தாடு வோம்                  நாம்செய்த பாவங்கள் பனியாகட் டும்                           நன்மைகள் நம்வாழ்வில் நனவாகட் டும்-துதி