Pages

Tuesday, April 24, 2012

46 mozhi




Mozhi

1
மொழி
---------
தொடக்கத்தில் , ஆதி மனிதன் மற்ற உயிரினங்களைப் போலவே தனது தேவைகளையும் , உணர்ச்சிகளையும் , வெறும் ஒலிகளின் வாயிலாகவே , தெரிவித்து வந்தான் ! நாளடைவில் , காலப் போக்கில் , அந்த ஒலிகளை ஒரு குறிப்பிட்ட வடிவங்களாக்கி , இதற்கு இந்த ஒலிவடிவம் அதற்கு அந்த ஒலிவடிவம் என்று ஒரு ஒலி நிர்ணயம் செய்துகொண்டான் ! அதையே மொழி என்கிறோம் !
ஆக , தனது தேவைக்காக , மனிதன் தன்போக்கில் , தனக்குப் புரிகின்ற வகையில் தயாரித்துக் கொண்ட , ஒரு கருவிதான் மொழி ! இந்தக் கருத்து எல்லா மொழிகளுக்கும் பொருந்தும் ! இலக்கண இலக்கியங்கள், இப்படித்தான் இருக்க வேண்டுமென்று திட்டமிட்டோ, அல்லது அதை தொன்மையான மொழி என்று எல்லோரும் அழைக்க வேண்டுமென்றோ , அல்லது அதை செம்மொழி என்று எல்லோரும் புகழவேண்டுமென்றோ , முன்கூட்டியே முடிவுசெய்து , எந்த மொழியும் அமைக்கப் பட்டு விட வில்லை ! தான் சொல்வது என்னவென்று , மற்றவருக்குப் புரியவேண்டும் , என்று தனக்குத் தோன்றியவாறு , தனது சௌகரியத்துக் கேற்றபடி , தனது மொழியை அமைத்துக் கொண்டான் ! என்றுதான் சொல்ல வேண்டும்!
எனவே , இதில் என்மொழிதான் , செம்மொழி ! சிறப்பானமொழி ! என்றெல்லாம் கூறிக்கொள்வது , தேவையற்ற வீண்வாதங்களுக்கும் , வம்புகளுக்கும்தான் , வழிவகுக்கும் ! காக்கைக்குத் தன்குஞ்சும் பொன்குஞ்சுதான்!
ஒருமொழி , நிலைத்து நிற்பதோடல்லாமல் , வளர்ச்சியும் அடைய வேண்டுமானால் , அதில் இலக்கண, இலக்கியங்கள் இருந்தால் மட்டும் போதாது ! அது பேசுவதற்கு எளிதானமொழி என்று , நாம் சொன்னால் மட்டும் போதாது ! அது இனிமையானது , என்ற விளம்பரமும் தேவையில்லை ! பின்னர் என்னதான் தேவை ?.. அதை எல்லோரும் பேச வேண்டும் ! அதற்கு என்ன செய்வது?.. கலப்பு மணம் , வேண்டும் என்கிறோம் ! மொழியில் மட்டும் , கலப்பு , ஏன் வேண்டாம் , என்கிறோம்? ஒருமொழியின் புனிதம் கலப்புச் சொற்களால் கெட்டு விடுவதில்லை ! புரியும் தன்மைதான் வேண்டும் ! பிறமொழிச் சொற்களின் கலப்பு , ஆங்கிலத்தைப் போல் வேறெந்த மொழியிலும் இல்லை ! அதனால் அதன் புனிதம் கெட்டு விடவுமில்லை ! அதை யாரும் பேசாமலுமில்லை ! மாறாக , இன்று அது , அகில உலகமொழி , என்ற அந்தஸ்தைப் பெற்றுவிட்டது ! அத்தகைய அந்தஸ்து நமது மொழிக்கும் வேண்டாமா? அதை செம்மொழி என்று நாமே பாராட்டிக் கொண்டிருந்தால் போதுமா ? ஒருவர் ஒரு மொழியைப் பேச வேண்டுமென்றால் , முதலில் தனக்கும் புரியவேண்டும் ! தன்னோடு , பேசுபவருக்கும் , புரியவேண்டும் ! அதாவது , சொற்கள் எல்லோருக்கும் தெரிந்ததாக இருக்கவேண்டும் ! நாம் சொல்கின்ற ஒரு சொல் அப்படியே அவரைச் சென்று அடையவேண்டும் ! மாறாக , அதற்கு என்ன அர்த்தம் என்று , அகராதியைப் புரட்டும் வகையில் இருக்கக் கூடாது !




2
இன்று ஆங்கிலம் , உலகத்திலேயே , அதிக அளவில் பேசப்படுகின்றது என்றால் , முதற்காரணம் , அதில் வேறுமொழிச் சொற்கள் , அதிக அளவில் இருப்பதே ஆகும் ! அதன் காரணமாக , எல்லோருக்கும் அது எளிதில் புரிகிறது ! சிறிய அளவில் , இருந்த , அதன் சொல்லகராதி , இன்று பலமடங்கு பெரிதானதற்குக் காரணம் , பிறமொழிச் சொற்களை , தனதாக்கிக் கொண்டதேயாகும்!
பாரதியார் பாடினார்;
" பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்,
தமிழ் மொழியில், பெயர்த்தல் வேண்டும் "-என்று ; இன்று அதை இப்படிப் பாட வேண்டும் !
" பிறர் பேசும் பல்மொழியின் வார்த்தைகளை,
நம் மொழியில் சேர்த்தல் வேண்டும் ! "
ஏன் சேர்க்கக் கூடாது ? சேர்த்தால் , என்ன குறைந்து விடும்? ஒன்றும் குறையாது ! அதனால் மொழி வளரும் ! சொல்லகராதி பெரிதாகும் ! புதிதாகச் சேரும் , வார்த்தைகள் எல்லோருக்கும் புரிகின்றதாக இருக்கும் ! காபி என்றால் எல்லோருக்கும் புரியும் ! " குளம்பி " எத்தனை பேருக்குத் தெரியும்? பிறரையும் குழப்பி , நாமும் பசிநேரத்தில் குழம்பவேண்டுமா? பஸ் அனைவரும் அறிவர் ! பேருந்து , அத்தனை பேரும் அறிவரா ? பஸ் , என்று சட்டெனச் சொல்வதை விட்டு விட்டு , பே..ருந்து , என்று நீட்டி, முழக்க வேண்டுமா ? சைக்கிள் சிறு பையனுக்கும் தெரியும் ! துவிச்சக்கரவண்டி , தேவையா? இருசக்கரவண்டி ! சைக்கிளுக்கும் இரண்டு சக்கரம் ; பைக்குக்கும் இரண்டு சக்கரம் தான் ! சரி ; மிதிவண்டி? சைக்கிளையும் மிதிக்கிறோம் ! பைக்குகளையும் மிதிக்கிறோம் ! எது சரி ? ஜக் என்றால் ஜக் தான் ! மக் என்றால் மக் தான் ! டம்ளர் என்றால் டம்ளர் ! குவளை என்றால் , ஜக்கா? மக்கா? டம்ளரா ? பிரெட் என்றால் ரொட்டி ! பிஸ்கட் என்றால்? பிஸ்கட் தான் !
பிசுகோத்தா ? ஏன் பிஸ்கட் வேண்டாமா ? அது தேவையா ? காப்பியா ? நகலா ? எது ஈசி ? எது லேசு? சினிமாவா? திரைப்படமா? டூப்ளிகேட்டா? போலியா? நேக்கா? சாமர்த்தியமா? நிக்கரா? அரை ட்ரவுசரா? எல்லாமே , ஆங்கிலச் சொற்கள் தான் ! டூப்ளிகேட்டுக்கு நகல் , இருக்கட்டும் ! ட்ரிப்ளிகேட்டுக்கு? குவாட்ரிபிளிகேட்டுக்கு ? ரோஜாவுக்கு இருக்கும் மிடுக்கு , ரோசாவுக்கு இருக்கிறதா? ராஜா என்றால் ராஜா தான்; ராசா என்றால்? நகைச் சுவையாக இல்லை ? ஜெய் , மஹாசக்தியை , செய் , மகாசக்தி என்றா சொல்வது? புச்பமும் , புட்பமும் , புஷ்பமாகுமா? பச்பம் , பஸ்பமாகுமா ? ஜனம் , சனமானால் ? ஒரு மொழியின் அழகே , அதன் உச்சரிப்பில் தான் இருக்கிறது ! மொழி , மொலியாகவும் , பலம் , பழமாகவும் இருந்தால் , அது உச்சரிப்பா? தெரிந்ததில் , இருந்துதான், தெரியாததைத் தொடங்கவேண்டும் , என்பது கற்றுக் கொடுத்தலின் அடிப்படை விதி !








3
ஒரு தாய் , தன் குழந்தையை ஆங்கிலப் பள்ளியில் , படிக்கவைத்தாள் ! ஆங்கிலத்தில் , நல்ல தேர்ச்சி பெற்ற , அந்தக் குழந்தை , தன் அம்மாவை , மம்மி என்றும் , அப்பாவை டாடி என்றும் , அழைத்து , மகிழ்வித்தது ! ஒருநாள் , பள்ளி முடிந்து , அந்தத் தாய் , தன் குழந்தையை அழைத்து வந்து கொண்டிருந்தாள்!
நீண்டநேரமாக அணிந்து கொண்டிருக்கின்றாளே என்று , அவள் சாக்சுகளையும் , ஷூக்களையும் கழற்றி , கையில் வைத்துக் கொண்டாள் , அந்தத் தாய் ! வழியில் , ஒருமுள் அந்தக் குழந்தையின் காலில் , தைத்து விட்டது ! " ஐயோ , அம்மா ! செத்தேன் ! என் காலில் முள் தைத்துவிட்டது " என்று அலறியது அந்தக் குழந்தை ! " ஹாய் மம்மி ! எ தார்ன் பிரிக்டு Á¢ அட் மை ஃபூட் ! என்று சொல்ல வில்லை ! ஏன் ?..இயல்பாக நமக்கு எது பேச வருமோ அதுதான் வரும் ! இதைத்தான் நமது முன்னோர்கள், " பேச்சுப் பேச்சென்னும் ! பெரும்பூனை வந்தாக்கால் , கீச்சுக்கீச்சென்னுமாம் கிளி ! என்றார்கள் ! அதாவது , கிளிக்கு என்ன தான், அக்கா என்றும் , தம்பி என்றும் , ச்சீ போடா மடையா என்றும் , வாடா வண்டி வாயா என்றும் , நாம் பேசுவதைப் போலவே கற்றுக் கொடுத்திருந்தாலும் , ஒரு பூனை வந்து அதைக் கவ்வப் போகிறது என்றால் , அதற்கு அந்த ஆபத்தில் உதவுவது , கீச்சுக்கீச்சென்கின்ற , அதன் சொந்த மொழி தான் என்பது , இதன் பொருளாகும் ! இதற்கு , தத்துவவிளக்கம் , வேறு இருக்கின்றது , என்று சொல்வார்கள் ! நமக்கு இப்போது , தேவை அதுவல்ல ! ஒருமனிதனுக்கு , கற்பனைகளும் , சிந்தனைகளும் , இயல்பான , அவனது தாய்மொழியிலேயேதான் உருவாகும் ; வளரும் ; என்பதாகும் ! இதைத் தான்நமக்குத் தெரிந்த ஒன்றிலிருந்து , தெரியாத ஒன்று உருவாவது , என்கின்றோம் ! அம்மாவுக்குப் பிறகுதான் மாமா ; ஏனென்றால் நமக்கு முதலில் அறிமுகமாகின்றவள் அம்மா ; தொடக்கமே , மாமா என்றால் ? அப்பாவுக்குப் பிறகுதான் , அண்ணன் ; தொடக்கமே , அண்ணனாக இருக்கமுடியாது ! நன்றாக அறிமுகமான ஒருவரை , வைத்துத்தான் அடுத்தவர் «È¢Ó¸Á¡Å¡÷ ! அறிமுகமான சொற்களை வைத்துத்தான் , அடுத்த சொற்கள் ! அத்தகைய சொற்களை , ஏன் விலக்க வேண்டும் ? அதனால் நமது மொழிக்கு என்ன ஊறு நேர்ந்து விடப்போகிறது? எந்த ஒரு மொழியும் இறந்து விடுவதில்லை , அதை யாரும் பேசாமல் இருந்தால் தவிர ! கடினமானதாக இருந்தால் , அதைப் பேச யார் முன் வருவர் ? பண்பாடுகளை வளர்ப்பதுதான் கல்வி ! அந்தக் கல்வியை கற்றுக் கொடுக்கும் ஒரு கருவிதான் மொழி ! இடர்ப்பாடுகளை ஏற்படுத்துவதல்ல ! நடைமுறையில் அதைப் பேசுவதற்கு எந்த ஒரு சிக்கலும் இல்லையென்றால் ஒழிய , அந்த மொழியை யாரும் பேசாமல் இருப்பதில்லை ! இப்படித் தான் அதைப் பேசவேண்டும் : அப்படியெல்லாம் , இதைப்பேசக்கூடாது , என்று , கட்டுப்பாடுகளை , விதிக்கும் போது , எல்லோராலும் , அவ்வாறு எளிதில் , பேசமுடியுமா என்பதை , மொழிவல்லுனர்கள் என்று சொல்லிக் கொள்வோர் ஆழ்ந்து யோசிக்கவேண்டும் ! முதலில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும் ; போகப்போக , அது பழகி விடும் என்பார்கள் !


4
எளிதாகச் செய்ய வேண்டிய ஒரு செயலை , கஷ்டப்பட்டு , ஏன் செய்ய வேண்டும் ? கஷ்டமாகச் செய்ய வேண்டிய ஒரு செயலைக் கஷ்டமாகச் செய்தால் சரி ! எல்லாவற்றையுமே கஷ்டமாகத்தான் , செய்ய வேண்டுமா ? சில மொழிகள் வழக்கிலிருந்தே மறைந்துவிட்டது , என்றால் அதற்குக் காரணம் , அதன்மேல் திணிக்கப் படுகின்ற , இத்தகைய கட்டுப் பாடுகளே ஆகும் !
" இராமநாதபுரத்திற்கு , இரயில் வண்டியில் செல்வதற்கு , ஒரு இடிக்கட்டுத் தாருங்கள் ! " என்று தான் கேட்கவேண்டுமா?
ராமநாதபுரம் செல்ல ஒரு டிக்கட்டுத் தாருங்கள் , என்றால் போதாதா ?
" வாய்ப்பு இருக்குமாயின், யாம் அங்கு வருவோம் ", என்றுதான் கூற வேண்டுமா? வாய்ப்பு இருந்தால் வருகிறோம் , என்றால் என்ன ?
எழுத அது சரி ! பேச?
" எம் நிலையை , யாம் விளக்குமாற்றால் , விளக்குதும் ! " என்றால் ? புரியாதவர்கள் , இதை வேறு மாதிரி புரிந்து கொள்ள மாட்டார்களா ?
அது ஆங்கிலேயர் காலம் : கிராமப் புறத்தில் , ஒருநாள் , ஒரு துரை, (ஆங்கிலேயர்களை முன்பெல்லாம் நம்மவர்கள் துரை என்றுதான் அழைப்பது வழக்கம் ) கிராமவாசிகளுக்கு நடுவே , சொற்பொழிவு ஆற்றிக்கொண்டிருந்தார் ! அருகில் நின்றிருந்த , மொழிபெயர்ப்பாளர் , அவருடைய ஆங்கில உரையை , தமிழில் பெயர்த்துக் கொண்டிருந்தார் ! பேச்சினூடே , துரை , ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியை , விவரித்தார் ! இதைக் கூறி முடிக்க , துரைக்கு ஏறக்குறைய , ஐந்து நிமிடங்கள் ஆயிற்று ! மொழி பெயர்த்தவர் , ஒன்றிரண்டு வார்த்தைகளில் , ஏதோ கூறியதும் , கிராமவாசிகள் , அனைவரும் சிரித்தார்கள் ; வியப்பும் , திகைப்புமான துரை , " நான் நீண்டநேரம் கூறியதை , எப்படி இவ்வளவு சீக்கிரம் மொழி பெயர்த்தீர்கள்? " என்று கேட்டார்; " துரை அவர்களே ! அது வேறொன்று மில்லை : துரை அவர்கள், ஒரு தமாஷ் சொல்கிறார் ! நீங்கள் எல்லோரும் , சிரியுங்கள், என்றேன்; சிரிக்கிறார்கள் " என்றார் ! துவிபாஷி ; துரையின் முகம் போன போக்கை விவரிக்கத் தேவையில்லை !
புரியாத ஒன்றைக் கேட்டு , வெறுமனே, புரிந்ததுபோல் தலையாட்டுவதால் , சொன்னவருக்கும் , லாபமில்லை ; கேட்டவருக்கும் லாபமில்லை !
முன்பெல்லாம் , மகாபாரதக் கூத்தின்போது , பீமன் மரத்தைப் பிடுங்கினானே, என்று, வேஷம் போட்டவர் பாடுவது , பின்னால் , கடைசியில் இருப்பவர்களுக்கு , டிங்கினானே, என்று கேட்குமாம் ; அதையும் கேட்டு, அவர்கள் ஏதோ புரிந்து விட்டதுபோல் , டிங்கினானே ! டிங்கினானே என்று பாடி , மிக , ஆனந்தமாகத் தலையாட்டுவார்களாம் ! அதைப் போல இது சைகைகளினால் , புரிந்து கொள்ளும் பழைய காலத்தையல்லவா நினைவூட்டுகின்றது ! மீண்டும் பழைய காலம் செல்வோம் வா என்று அழைக்கிறார்களா ? இப்படியான கல்வியினால் , எப்படி அறிவு வளரும் ? எப்படி , மொழி வளரும் ? கல்வி விருப்பமானதாக இருக்கவேண்டும் ! அதை கற்றுக் கொள்ள வேண்டும் என்று எல்லோரும் விரும்ப வேண்டும் ! அப்படி இல்லாமல் , எல்லோரும் , அதை வெறுக்க வேண்டும் என்பதுதான் , இவர்களின் விருப்பமா ? என்று தெரியவில்லை ! அது பொது அறிவை வளர்ப்பதாக இருக்கவேண்டும் : அதனால் பயன் விளைய வேண்டும் ; அவ்வாறில்லாமல் ஒரு சாரார் அதை விளக்கவேண்டும் ; மற்றவர்கள் , என்னவென்று புரியாமல் , அதைக் கேட்டு , தலையாட்டிக் கொண்டே இருக்க வேண்டும் , என்றால் , மொழி எப்படி வளரும்?
தாகூர் , வங்கத்தில் எழுதிய கீதாஞ்சலியை , ஆங்கிலத்தில் பெயர்த்தபோதுதான் அதற்கு , நோபல் பரிசு கிடைத்தது !
சரோஜினி நாயுடு , ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதியல்லவா , கவிக் குயில் , பட்டம் வாங்கினார் !
வள்ளுவரின் திருக்குறள் , பன்மொழிகளிலும் பெயர்க்கப் பட்ட பிறகல்லவா உலகப் பொதுமறை , ஆனது !
பண்டிதருக்கு மட்டுமே மொழி என்ற நிலை நிலவுமானால் , அந்த மொழி என்றும் வளராது ! அது உயரமான மொழியாக மட்டுமே இருக்கும் ; சாமான்யர்களாலும் , பேசப்படும் சமமான மொழியாக இருக்காது ; அந்த நிலை மறைந்து , அது பாமரருக்கும் தான் , என்ற நிலை வரவேண்டுமானால் , அது எளிமையாக்கப் படவேண்டும் : அது பயன் தரக் கூடியதாக இருக்கவேண்டும் ! " குண்டுசட்டிக்குள் குதிரை ஒட்டிக் கொண்டிருந்தால் " , என்ன பயன்? நாமும் மற்றவர்களைப் போல் எங்கும் சென்று பேசி , உழைத்து வர வேண்டாமா ? ஒரு மொழி என்ன ? இரு மொழி என்ன ? மும்மொழி என்ன ? கற்றுக் கொள்வதற்கு என்ன கட்டுப்பாடு ? நான் பல மொழிகளும் கற்று , பன்மொழிப் புலவர் , என்று பட்டம் வாங்கி , இந்த உலகைச் சுற்றி வர வேண்டும் ! நீ ஒரு மொழியைக் கூட கற்றுக் கொள்ளாமல் , உருப்படியில்லாமல் ,போக வேண்டுமா ? இது நாம் , முடிவு செய்ய வேண்டிய விஷயம் ! இதில் அடுத்தவர் தலையிடத் தேவை இல்லை !




5
இரண்டு நண்பர்கள் இருந்தார்கள் ; இருவரும் பள்ளி இறுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ; ஆனால் இருவருக்கும் கொள்கைகள் வேறு வேறு !
ஒருவனுக்கு , எந்த நேரத்துக்கு எது உகந்ததோ , அதையே பின்பற்றுவது மற்றும் , எந்த நிலையிலும் , ஒரே ஒரு மொழி மட்டும் தான் தெரிந்திருக்க வேண்டும் , என்ற நிலையான கொள்கை ; இன்னொருவனுக்கு , எப்போதும் ஒரே ஒரு கொள்கையை மட்டும் தான் , பின்பற்றுவது , மற்றும் தேவைக்கேற்றபடி , எத்தனை மொழிகளையும் , தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் , என்ற நிலையில்லாத கொள்கை ; இருவரும் கொள்கை வழியில் முரண்பட்டாலும் , செலவை எல்லாம் , நிலை இல்லாத கொள்கையாளன் செய்வானாகையால் , செலவு வழியில் , இவர்கள் ஒன்று பட்டிருந்தார்கள் ; உள்ளூரில் , வேலை கிடைக்காததால் , வெளியூர் சென்று தேடுவது என்று முடிவெடுத்தார்கள் ; மும்பை செல்வது தான் , நல்லது என்றும் , தீர்மானித்தார்கள் ; மும்பை செல்வதாயிருந்தால் , ஹிந்தி தெரியவேண்டுமே ! நிலையானவன் , நான் கற்க மாட்டேன் , என்று கூறி விட்டான் ; நிலையில்லாதவனோ, நான் கற்றுத்தான் ஆக வேண்டும் , என்று கூறிய போது , தடுக்கத்தான் , நினைத்தான் ; ஆனால் , அப்படிச் சொன்னால் , அவன் , மும்பை செல்ல டிக்கட் எடுக்க , மறுத்தால் என்ன செய்வது , நமக்கு டிக்கட் வாங்க காசு வேண்டுமே என்பதால் , தடுக்கவில்லை ; ஒரு ஹிந்தி ஆசிரியரிடம் சென்ற அவன் , விபரத்தைக் கூறி , முழுமையாகக் கற்பது முடியாத காரியம் என்பதால் , முக்கியமான வார்த்தைகளை மட்டும் கற்றுத் தரச் சொல்லித் தெரிந்து கொண்டான் ; ஜீ என்றால் , ஐயா ; மா என்றால் , அம்மா ; கானா என்றால் சாப்பாடு ; பானி என்றால் , தண்ணீர் : கப்படா என்றால் , துணி ; சோனா என்றால் , தூக்கம் ; கர் என்றால் , வீடு ; காம் என்றால் , வேலை ; ஹூங்க் என்றால் , ஆம் ; நஹி என்றால் , இல்லை ; ஆ என்றால் வா : ஜா என்றால் போ ; இப்படி , பல வார்த்தைகளைக் கற்றுக் கொண்ட அவன் , இப்போதைக்கு இது போதும் என்று , திருப்தி அடைந்தான் ! நிலையானவனுக்கு , இது எதுவும் தேவைப்படவில்லை ; எடுத்துச் செல்ல எதுவுமில்லை என்றாலும் , ஆளுக்கு ஒரு பையை எடுத்துக் கொண்டு , சென்ட்ரல் நிலையம் வந்து , மும்பைக்கு , டிக்கட் எடுத்துக் கொண்டார்கள்;
மும்பை செல்லும் வண்டி எதுவென்று கேட்டு அதில் ஏறிக்கொண்டார்கள் ; வண்டி போகும்போதே , இருவரும் , ஒன்றாகச் சென்றால் , வேலை கிடைக்காது ; அதனால் , தனித்தனியாகப் பிரிந்து செல்வோம் என்று , மும்பை வந்தவுடன் , முதலில் ஒருவனும் , அடுத்து வேறொருவனுமாகப் பிரிந்து கொண்டார்கள் ; யாரையும் , எங்கும் தெரியாத இடம் ; கொள்கை உறுதி இல்லாதவன் , நடந்தான் ; இருந்த கொஞ்சம் சில்லறைக் காசை வைத்து , என்ன செய்வது , என்று யோசித்தவாறே நடந்தான் ; எதிரே ஒருவர் வந்தார் ; இவன் ஜீ என்று அழைத்தான் ; அழைப்பைக் கேட்ட அவர் திரும்பிப்பார்த்து , அச்சா ! கியா ஹோனா என்றார் ; ஜீ ! கானா நஹி , என்றான் ; தனது மொழியை , அதைத் தெரியாதவன் ஒருவன் , பேச முயற்சிப்பதைக் கண்டு , அவருக்கு மகிழ்ச்சி ! கானா ஹோனா ? என்றவர் , அவனை அழைத்துச் சென்று , ஒரு ஹோட்டலில் உணவு வாங்கிக் கொடுத்தார் ; சாப்பிட்டு விட்டு , நின்றவனைப் பார்த்தார் ; அபி கியா ? என்றார் ; ஜீ , கர் நஹி ; காம் நஹி ! என்றான் ; ஓ !
காம் பீ ஹோனா ? என்றவர் , அவனை அழைத்துச் சென்று , அவருக்குத் தெரிந்த இடத்தில் , ஒரு சிறு வேலை வாங்கிக் கொடுத்து , அங்கேயே தங்குவதற்கும் , ஏற்பாடு செய்தார் ; கொள்கைப் பிடிப்பு உள்ளவனும் நடந்தான் ; அவன் கையில் சில்லறையாவது இருந்தது ! இவன் கையில் அதுவுமில்லை ! இவனும் நடந்தான் ; பசி வயிற்றைக் கிள்ளியது ; இவனுக்கு எதிரேயும் ஒருவர் வந்தார் ; அவரையே பார்த்தவன் , ஐயா , என்றான் ; ஏதோ சொல்கிறானே , பிச்சைக்காரன் போலும் என்று நினைத்தவர் , கியா ? என்றார் ! தலையைச் சொரிந்தான் ; புரியாமல் , அவர் , ஜாவ்ரே என்றார் ; இவனும் புரியாமல் , அவர் நம்மை , சாக அல்லவா சொல்கிறார் என்று நினைத்து , வயிற்றைத் தடவிக் கொண்டே , பசி என்று சைகை காட்டினான் ; அவருக்கும் , வயிறு பெரிதாக இருந்ததால் அதைப் பார்த்து , நம்மைக் கிண்டல் தான் , செய்கிறான் என்று நினைத்து , கோபம் கொண்ட அவர் , சோர் சோர் என்று கத்தினார் ; கூச்சல் கேட்டு ஓடிவந்தவர்கள் , அவனை , மொத்தி , விரட்டினார்கள் ; அவன் இப்படித்தான் இனி , அலைந்து திரிந்து , உதை வாங்கி , என்ன ஆவான் என்று , இப்போது சொல்ல முடியாது ; கொஞ்சம் தெரிந்தவனுக்கே , அவ்வளவு என்றால் , கொஞ்சம் ஜாஸ்தியாகவே , தெரிந்து கொண்டால் , எவ்வளவு கிடைக்கும் , என்பதைத்தான் சொல்ல வேண்டும் ; நமது ஊருக்கு மற்றவர்கள் தான் , வருவார்கள் ,என்றில்லை ; நம்மவர்களும் தான் , அவர்கள் ஊருக்குப் போவார்கள் ! அது இந்த இடத்தை விட்டு போகின்றவர்களுக்குத் தானே தெரியும் ? எனவே எந்த மொழியும் வேண்டாம் என்று சொல்ல வேண்டாம் ; அப்படியெல்லாம் , நான் போகமாட்டேன் , என்று சொல்பவர்கள் கற்க வேண்டாம் !












6-மொழி


யாதும் நம் ஊரே என்கிறோம் ! எதுவும் நம் மொழியே என்றும் சொல்லி ஏன் கற்க மறுக்கிறோம் ?
மலையாளத்தண்ணீர் தான் , தமிழில் வெள்ளமானது ! என்கிறோம் !
நாம் நான் என்கிறோம் ; அவர்கள் ஞான் என்கிறார்கள் ; என்கிறோம் !
கன்னட அங்கிடியும் , தெலுங்கு அங்கடியும் , தமிழில் அங்காடி என்றும் கடையென்றும் ஆனது ! என்கிறோம் !
அவர்கள், கன்னடத்தில் , பரி என்பதைத்தான் , நாம் தமிழில் , வருக என்கிறோம் , என்று சொல்கிறோம் ;
தெலுங்கு பொத்து , தமிழில் பொழுதானது , என்றும் ,
தெலுங்கு ஒத்து , தமிழில் விலகு என்றானது ! என்றும் , ஒத்துக் கொள்கிறோம் !
ஆனால் , அத்தகைய மொழிகளைக் கற்றுக் கொள்ள மட்டும் ஏன் மறுக்கிறோம் ?


பிறமொழிச் சொற்கள் கலந்ததால் , தமிழ் வளர்ந்தது !
வடமொழிச்சொற்கள் நம் தமிழில் நிறைந்திருந்த காலத்திலே தான் அரும்பெரும் இலக்கண நூல்களும் , எண்ணற்ற இலக்கியங்களும் தோன்றின ! அதற்காக , அவற்றாலேதான் அவை தோன்றின என்று நான் கூற வரவில்லை ! அவ்வாறு இருந்தபோது மொழி வளரவில்லையா? என்றுதான் கேட்கிறேன் ! காலத்துக்கேற்றபடி , உங்கள் படைப்புகள் இருக்கட்டும் ! ஆனால் அதில் நமது நாகரீகமும் பண்பாடும் தெரியட்டும் ! அத்தகைய படைப்புகள் மட்டுமே நம் மொழியின் மேன்மையை உலகுக்கு உணர்த்தும் ! அது நம் மொழியின் மதிப்பை கற்றோர் மத்தியில் உயர்த்தும் ! அந்த உயர்வு நம் மொழியை நிச்சயம் வளர்க்கும் ! பேசுவோர் , அஞ்சும் நிலையில் தமிழை வைக்காமல் , அஞ்சாமல் , பேசும் நிலைக்கு , தமிழை எளிமையாக்கின் , பேசுவோர், எண்ணிக்கையிலும் , உயர்வர் ! வாழ்க்கையிலும் உயர்வர் ; அப்போது , மெள்ளத் தமிழ் , இனிச்சாகும் , என்று , அஞ்ச வேண்டிய நிலை , எஞ்ஞான்றும் ஏற்படாது ! வாழ்க நம் மொழி ! வளர்க அதன் புகழ் ! உலகெலாம் ! !


நிருபர் ;--சார் ! உங்கள் மொழிக் கொள்கை என்ன என்பதைச் சொல்லுங்கள் !


பிரமுகர் ;-- சார் என்று அழைக்க வேண்டாம் ; ஐயா என்று கூப்பிடுங்கள் , என்று சொன்னேன் ; நீங்கள் கூப்பிடவில்லை ! இருந்தாலும் பரவாயில்லை ! இனி , நீங்கள் ,
ஐயா என்று கூப்பிடுவதை விட , சார் என்று அழைப்பதே , கௌரவமாகவும் , நன்றாகவும் இருக்கிறது ! என் மொழிக் கொள்கை என்னவென்று , எத்தனை முறை தான் நீங்களும் கேட்பீர்கள் ! நானும் முதல் தடவை என்ன சொன்னோம் என்று
»¡À¸ப்படுத்திப் பார்த்து ஒன்றிரண்டு தடவை சொல்லிய பிறகு , இப்போது , நன்றாக மனதில் பதிந்து விட்டது ! எனவே , அதை , மனதில் ¨ÅòÐì ¦¸¡ñÎ , இனி , ±ò¾¨É Ó¨È வேண்டுமானாலும் சொல்வேன் ! இப்போதும் சொல்கிறேன் ! இருமொழி , மும்மொழி , பன்மொழி என்றெல்லாம் சொல்வார்கள் ! அவர்களுக்கு , நான் , ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புவேன் ! உயிர் ஒன்று தான் , நமக்கு ! அப்படி இருக்க , பல மொழிகள் எதற்கு ? அதனால் மொழியும் ஒன்று தான் ! மொழியை ஒரு கருவி என்று நமது முன்னோர்களே சொல்லி , அதை கவனமாகவே , கையாள வேண்டும் என்றும் சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள் ! அப்படி இருக்கும்போது , எண்ணிக்கையில் குறைவாக உள்ள கருவிகளை வைத்துக் கொண்டு , அதை மேலும் உற்பத்தி செய்ய முடியாத நிலையில் , எத்தனை பேருக்குத்தான் கொடுத்து விட முடியும் ? அத்தனை பேருக்கும் வழங்க வேண்டாமா ? சொல்லுங்கள் ! ஒருவரே ஒன்றுக்கு மேற்பட்ட கருவிகளை வைத்துக் கொண்டால் , ஆளுக்கு ஒரு கருவி , என்ற நமது சமநீதிக் கொள்கை காக்க , மீதி கருவிகளுக்கு , நாம் எங்கே செல்வது ? தனி ஒருவனுக்கு , உணவில்லை , எனில் ஜகத்தினை அழித்திடுவோம் , என்ற பாரதியின் வழியில்தான் , நாங்கள் செல்கிறோம் என்று புரிந்து கொள்ளுங்கள் ; தனி மனிதனுக்கு , ஒரு மொழி என்றில்லாமல் , அவனுக்கு , பல மொழிகள் என்றால் , அந்த பல மொழிகளையும் , அழிப்பது என்ற வழியில் தான் , நாங்களும் செல்கிறோம் , என்று தயவு செய்து , இப்போது , நான் சொன்ன பிறகாவது , புரிந்து கொள்ளுங்கள் ! ஒருவனுக்கு ஒருத்தி தான் என்று ராமன் அன்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்கள் ! ஆனால் ஒருவருக்கு ஒரு மொழி தான் , என்று , இன்று நான் சொன்னால் , ஏற்றுக் கொள்ள மாட்டீர்கள் ! இது உங்களுக்கே நியாயமாகப் படுகிறதா ? இதுதான் என் முடிவான கருத்து , என்று சொல்லி , முதல் பக்கத்தில் போடுங்கள் ; என் புகைப்படத்தையும் , வழக்கத்தை விட , கொஞ்சம் பெரிதாகவே எடுத்துக் கொள்ளுங்கள் ; இல்லையென்றால் , அவர்களுக்கும் நமக்கும் வித்தியாசம் தெரியாமலேயே போய்விடும் ; நன்று ! வாருங்கள் சென்று !


விழி மறைய வைப்பதல்ல மொழி ! வழியைத் தெரிய வைப்பதே மொழி !







No comments:

Post a Comment