இவர்கள்மனிதர்களாம்!
நெறிகள் மாறிடினும் திரளும் சேனையனை,
நாடுவார்க ளிந்த உலகிலே!
நெறிகள் தேரிடினும் மருளும் தனியனெனின்,
தேடுவார்க ளிலை மண்ணிலே!
நாடுவார்க ளிந்த உலகிலே!
நெறிகள் தேரிடினும் மருளும் தனியனெனின்,
தேடுவார்க ளிலை மண்ணிலே!
மறைவில்தீ செயினும் வலிவில் பெரியவனை ,
நாடுவார்க ளிந்த உலகிலே!
கறைபடா அவனும் உருவில் எளியனெனின்
தேடுவார்க ளிலை மண்ணிலே!
நிறையிலா ஒருவன் நிறங்கள் காட்டுமெனின்,
நாடுவார்க ளிந்த உலகிலே!
நிறமிலா னொருவன் திறங்கள்கூட் டிடினும்,
தேடுவார்க ளிலை மண்ணிலே!
அறிவிலா னெனினும் பொருளைச்சேர்க்கு மெனின்,
நாடுவார்க ளிந்த உலகிலே!
அறிவுசேர்த் தொருவன் திருவிலா னெனினும்,
தேடுவார்க ளிலை மண்ணிலே!
நெஞ்சமே அறிய பிறரைக் கொல்லுவார் !
நெஞ்சமே அறிய பொருளைக் கொள்ளுவார்!
நெஞ்சமே அறிய கள்ளை உண்ணுவார்!
நெஞ்சமே அறிய மாதர் நண்ணுவார்!
நெஞ்சமே அறிய பொய்கள் சொல்லுவார்!
நஞ்சவை என்றே அறிந்துமாம்!
வஞ்சமாய்ப் பிறரைத் துஞ்சவைத் திடினும்,
வஞ்சமாய்ப் பொருளைக் கொள்ளைகொண் டிடினும்,
வஞ்சமாய் மறைவில் மயக்குகள் ளுணினும்,
வஞ்சமாய்ப் பிறரின் மாதர்விரும் பிடினும்,
வஞ்சமாய் அஞ்சும் பொய்கள் சொல்லிடினும்,
பஞ்சமா கொடிய பாவமாம் !

No comments:
Post a Comment