Pages

Friday, March 16, 2012

4 Thaimai

         

                                                     

          தாய்மை
         
தாங்க முடியாத சுமை என்று அதை
இறைவன்-- அவனிடம் இறக்கினான் ;
அவனோ அதை அவளிடம் கொடுத்தான் !

அவள்--அதை மகிழ்வோடு ஏற்றுக்கொண்டாள்
அதற்கு நோகுமே என்று அதை ,
அவள் --வயிற்றிலே சுமந்தாள் ;
ஒருநாள் இருநாள் அல்ல ;முன்னூறு நாட்கள் ;

உள்ளே இருப்புக் கொள்ளாமல் --அது
வெளியே வரத் துடித்தது ;
அவள் விருப்பத்துக்கு மாறாக என்றாலும் ,
அதன் விருப்பத்துக்கு அதை அவள் வெளியே விட்டாள் ;

தரையில் இறக்கிவிட மனமில்லாமல் ,
தன் மார்பிலும் ,தோளிலும் கையிலும் ,இடுப்பிலும் சுமந்தாள்;
பெரிதாய் வளர்ந்து அவள் இறக்கி விடாமலேயே ,
அது இறங்கிச் சென்றது !

உடற்சுமை இல்லாத நிலையில் ,அதை ,
உள்ளத்தில் ஏற்றிக் கொண்டாள்!
உடல் ஒடுங்கி ,அவள் உயிர் அடங்கியபோது ,
அந்த உள்ளச்சுமையும் அவளோடு சேர்ந்தே போனது !

தாங்க முடியாத சுமை என்று ,
இறைவன் ஒன்றை நினைத்தான் ;
அது இரண்டாகத் திரும்பியபோது ,
அவன் திகைத்தான் !
தாங்கிய அவளோ தாய் !----அதுவோ சேய் !


No comments:

Post a Comment