மனையாள் இருக்கையில் மற்றவள் தேடி,
மண்ணாள் வேட்கையில் மதிமிக வாடி
பொன்னும் பொருளும் குவித்திட ஓடி,
மொழிகளின் பெயரால் பிளவுகள் வளர்த்து,
இனங்களின் பெயரால் பிரிவுகள் தொகுத்து,
மதங்களின் பெயரால் மனிதரைப் பிரித்து,
எதிர்ப்படும் எங்கும் பேதங்கள் வகுத்து,
நல்லவை தனையே நகைப்புற மறுத்து,
தொல்லைகள் எனும்பயிர் நாள்தொறும் அறுத்து,
அல்லவை தேடி அறங்களை மறக்க,
எல்லைகள் என்பது மனங்களுக் கில்லை;
அளவது இருந்தால் அழகது வாகும்;
அளவது இருந்தால் அழகது வாகும்;
அறிவொடு நடந்தால் உயர்வது வாகும்;
ஆம்பலின் நீட்டம் நீரள வாகும்;
அணைகளின் ஏற்றம் ஆற்றள வாகும்;
விண்ணதன் எல்லை கண்ணள வாகும்;
மண்ணதன் எல்லை தொடுவா னாகும்;
கடலும் அடங்கும் கரையின் எல்லையில்;
உடலும் அடங்கும் இடுகாட் டெல்லையில் ;
உறவுகள் அடக்கம் வீட்டின் எல்லையில்;
வாழ்க்கைத் துணையும் வீதியின் எல்லையில்;
பிள்ளைகள் வருவர் புதைகாட் டளவில்;
வாழ்க்கை அடங்கும் விதியின் கைகளில்;
எல்லைகள் என்பதுமனங்களுக்கில்லை;
யோசனைக் கெல்லை இல்லை என்பதால்,
யோசனைக் கெல்லை இல்லை என்பதால்,
பெருந்தொலை வென்பதை யோசனை என்றார்;
யோசனை உதிப்பது மனத்தில் என்பதால்,
எல்லைகள் என்பதுமனங்களுக்கில்லை;
எல்லைகள் என்பது தொல்லைகட் கில்லை;


No comments:
Post a Comment