நீயேதான்காரணம்!
காட்டுக்குள்ளே உன்னைத்தேடிக் கண்டுபிடிச்சதாரு?-ஒரு
கோட்டைக்குள்ளே ஒனக்கு வீடு பிடிச்சிக் குடுத்ததாரு ?
கண்ணு மூக்குகையி காலு பாத்து வச்சதாரு?-ஒன்
கண்ணு மூக்குகையி காலு பாத்து வச்சதாரு?-ஒன்
கருத்த நீயும் திருத்திக்கோன்னுமூளைவச்சதாரு?
கண்கலங்கி அழுதிடாம கஞ்சிகுடுத்ததாரு?--ஒரு
கணக்கு பாத்து ஒன்ன இங்கே வெளிய விட்டதாரு?
கணக்கு பாத்து ஒன்ன இங்கே வெளிய விட்டதாரு?
மண்ணுக்குள்ளே மதிமயங்கி நிக்கச் சொன்னதாரு?-ஒன்
மனசுபோன பாதையெல்லாம் போகச்சொன்னதாரு?
மனசுபோன பாதையெல்லாம் போகச்சொன்னதாரு?
எண்ணம்போல வாழ்க்கையின்னு எழுதி வச்சார் பாரு!--அந்த
எண்ணம் தானே துயரமுன்னு யோசிச்சியா பாரு!
கஷ்டமுடா சாமியின்னு கலங்கி நிக்கிறதாரு?--நீ
கண்டபடி அலைஞ்சதுதான் காரணமா?பாரு!
கண்டபடி அலைஞ்சதுதான் காரணமா?பாரு!
எல்லாத்தையும் ஒனக்குத் தந்து அனுப்பி வச்சான் பாரு!--அவன்
இஷ்டப்படி எதுவுமிங்கே நடப்பதில்ல பாரு!
இஷ்டப்படி எதுவுமிங்கே நடப்பதில்ல பாரு!
இப்பிடித்தான் நடக்கவென்னுவிதிய வச்சான் பாரு!--அத
என்னிக்காவ தொரேநாளுமதிச்சதுண்டா ?பாரு !
அப்படியே தப்புநம்ம மேலிருக்க பாரு!--அதுக்கு
அவந்தலைய உருட்டலாமா?யோசிச்சித்தான் பாரு!
அவந்தலைய உருட்டலாமா?யோசிச்சித்தான் பாரு!
நாளைக்கின்னு சொத்தமட்டும் சேத்துவச்சேபாரு!--அந்த
நாளைக்கின்னு என்னசேத்து வச்சிருக்கே?பாரு!
நாளைக்கின்னு என்னசேத்து வச்சிருக்கே?பாரு!
சொந்தமாக வர்றதென்ன கேட்டிருக்கார் பாரு!--ஒன்
சொந்தபந்தம் கூடக்கூட வராதுன்னார் பாரு!
சொந்தபந்தம் கூடக்கூட வராதுன்னார் பாரு!
எந்தநாளும் மனுஷனாக இருக்கிறதப் பாரு!--அது
அந்தநாளில் ஒனக்கு ஒதவும் அறிஞ்சுக்கத்தான் பாரு!
அந்தநாளில் ஒனக்கு ஒதவும் அறிஞ்சுக்கத்தான் பாரு!



No comments:
Post a Comment