எண்ணத்தில்எழுந்தவை
1
வாயளவில் சீர்திருத்தம் பேசி ,
ஊர்முழுக்கப் பாராட்டு வாங்கி ,
செயல் என்று வரும்போது
சுயநலம் பார்ப்பவனையல்ல;
"சொன்னபடி செய்யவும் செய்வேன்,
செய்ததை மட்டுமே சொல்லுவேன்"
என வாழ்ந்து காட்டுபவனையே
தலைவன் என்பேன் நான் !
2
வறுமை போக்கவே வாழ்வதாகப் பேசி ,
வாக்குறுதிகளை அள்ளி வீசி ,
வாய்ப்புக் கிடைத்தவுடன்
கொள்ளை அடிப்பவனையல்ல ;
வந்த வழியை எண்ணி ,
சொந்தங்களைத்தள்ளி ,
தூய்மையாய் வாழ்பவனையே
தலைவன் என்பேன் நான் !
3
"நான் வரதட்சிணை எதுவும்
வாங்கிக் கொள்ளாமலே ,
ஒரு பெண்ணை மணந்து கொண்டேன்"
என்று பெருமை பேசுபவனையல்ல;
"அவளைக் கண்கலங்காமலும்
வைத்துக் காப்பாற்றுகிறேன் "
என்று சொல்பவனையே
ஆண்மகன் என்பேன் நான் !
4
பெண்ணை அடிமைப் படுத்தி ,
அவளை உணர்ச்சியற்றவள் ,
என ஒதுக்கி வைத்து ,
அடக்கி ஆள்பவனையல்ல;
அவளுக்கும் சமவாய்ப்பளித்து ,
அவள் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து ,
அவளுள் அடங்கி மகிழ்பவனையே
ஆண்மகன் என்பேன் நான் !
5
பேருக்கு நல்லவனாக ,
ஊருக்கு நியாயங்கள் பேசி ,
தவறு செய்யாமல் மட்டும் நடப்பவனையல்ல ;
தவறு நேர்ந்துவிட்டால்,
தன்னையும் தண்டிக்க
உடன்படும் உயர்ந்தவனையே
உடன்படும் உயர்ந்தவனையே
தலைவன் என்பேன் நான் !
6
"நான் நல்லவன்;
கெட்டவன் என்று பேர் வாங்காதவன்,"
என்று மார்தட்டிக் கொள்பவனையல்ல;
"தவறுக்குத் துணை போகவும் மாட்டேன் ;
தப்பு செய்தவனைத் தப்பவிடவும் மாட்டேன் "
என்று தட்டிக் கேட்பவனையே
நல்லவன் என்பேன் நான் !
7
"தப்பு செய்ய மாட்டேன்"
என்று வாக்குக் கொடுத்து ,
தப்பைச் செய்து விட்டு,
மாட்டிக் கொண்டவுடன் ,
இதை அவன் செய்யவில்லையா ?
என்று கேட்பவன் ,
அயோக்கியன் மட்டுமல்லன்;
நம்பிக்கைத் துரோகியும் ஆவான் !
8
எளியவன் என்றாலும் ஒருவன்
சுய மரியாதையை எதிர்பார்க்கலாம் ;
அதற்கு ஏற்றவனாகத் தன்னை ,
அவன் மாற்றிக் கொள்ள வேண்டும் !
தகுதியற்றவன் எதிர்பார்ப்பது
தகுதிக்கு மீறிய செயலாகும் !
9
தகுதி பணத்தாலோ
அல்லது பலத்தாலோ வருவதல்ல ;
பிறரை வஞ்சிக்க எண்ணாத
நல்ல பண்புகளால் வருவதாகும் !
10
தவறு செய்வது தவறல்ல !
அது தவறே இல்லை ,
என்று வாதிப்பதுதான் பெருந்தவறு !
11
வறுமை நமது தவறல்ல ;
அதைப் போக்க ,
வழி தேடாதிருப்பதுதான்
நமது தவறு !
நமது தவறு !
12
அரசுக்கு ஆலோசனை சொல்லும் தகுதி ,
அந்த அரசில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் என்றால்,
அந்த அரசு தவறுகள் நிறைந்ததாகவே இருக்கும் !
அந்த அரசில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் என்றால்,
அந்த அரசு தவறுகள் நிறைந்ததாகவே இருக்கும் !
13
மக்களாட்சியின் சிறப்பு என்பது ,
அவர்களின் பிரதிநிதிகளால் ,
ஆளப் படுவது மட்டுமல்ல;
அந்த ஆட்சியால் மக்களுக்கு ,
என்ன நன்மை என்பதும் தான் !
என்ன நன்மை என்பதும் தான் !
14
மக்களாட்சியில் ஒரு நல்ல
திட்டத்தை செயல்படுத்துவதற்கு ,
பெரும்பான்மை தடையாக இருக்கிறதென்றால் ,
திட்டத்தை செயல்படுத்துவதற்கு ,
பெரும்பான்மை தடையாக இருக்கிறதென்றால் ,
அதைவிட, அதை, உடனே செயல்படுத்துகின்ற ,
ஒரு நல்ல சர்வாதிகார ஆட்சி மேலானதாகும் !
ஒரு நல்ல சர்வாதிகார ஆட்சி மேலானதாகும் !
15
மக்களாட்சி என்றும், பெரும்பான்மை என்றும்,
அதனால் பாதிக்கப் படாத, வசதி படைத்தவர்களே
பேசிக் கொண்டிருப்பார்கள் !
பேசிக் கொண்டிருப்பார்கள் !
வசதி இல்லாதவர்களுக்குப் பயனில்லை ,என்றால்,
அது மக்களாட்சி ஆகாது !
அது மக்களாட்சி ஆகாது !
16
ஒரு போராட்டத்தின் வெற்றி ,
அதற்காகக் கொடுக்கப் பட்ட வாக்குறுதிகள் அல்ல !
அதன் நோக்கத்தை ஒட்டிய செயல்பாடுகள் ,
நிறைவேற்றப் படுவதே ஆகும் !
நிறைவேற்றப் படுவதே ஆகும் !
17
தனக்கென்றால் ஒருமாதிரியும் ,
பிறருக்கென்றால் வேறு ஒரு மாதிரியுமாக ,
பிறருக்கென்றால் வேறு ஒரு மாதிரியுமாக ,
ஓரிடத்தில் ஒன்றும் மற்றோரிடத்தில்
வேறு ஒன்றுமாக, நேரத்துக்கு ஏற்றபடி ,
வேறு ஒன்றுமாக, நேரத்துக்கு ஏற்றபடி ,
மாற்றிப் பேசுவது நியாயமல்ல !
எங்கும் ,எப்போதும் ,யாருக்காகவும்
மாறாதிருப்பதுதான் நியாயம் !
எங்கும் ,எப்போதும் ,யாருக்காகவும்
மாறாதிருப்பதுதான் நியாயம் !
மற்றவை அநியாயம் !
18
அறிவுரைகள் ,பிறர் மகிழ வேண்டும் என்பதற்கோ ,
அல்லது பிறர் புகழ வேண்டும் என்பதற்கோ ,
வழங்கப் படுவன அல்ல !
அனைவரும் அதன்படி நடக்க வேண்டும் என்பதற்கே !
19
தவறு செய்வதை இயல்பாகக் கொண்டவர்களுக்குச்
சொல்லப் படுகிற அறிவுரையும் ,
சொல்லப் படுகிற அறிவுரையும் ,
செவிடன் காதில் ஊதுகிற சங்கும் ஒன்றே !
20
வாய்ச் சொல் வீரர்கள் ,செயலிலும் வீரர்களாக ,
இருப்பார்கள் என்று சொல்ல முடியாது !
ஒன்று அவர்கள் தற்பெருமைக் கார்களாக இருப்பார்கள் !
இருப்பார்கள் என்று சொல்ல முடியாது !
ஒன்று அவர்கள் தற்பெருமைக் கார்களாக இருப்பார்கள் !
அல்லது ஏமாற்றுக்காரர்களாக இருப்பார்கள் !
21
நமது முடிவு தவறு எனில் ,
அது எவ்வாறு என்று விளக்கப் படவேண்டும் !
அவ்வாறில்லாமல் ,நமது முடிவு
முற்றிலுமாக நிராகரிக்கப் பட்டு ,
முற்றிலுமாக நிராகரிக்கப் பட்டு ,
பிறரது முடிவு வலுக்கட்டாயமாக ,
நம்மீது திணிக்கப் படுமாயின் ,அது
பலாத்காரம் செய்வதற்கு ஒப்பாகும் !
பலாத்காரம் செய்வதற்கு ஒப்பாகும் !
22
ஒரேமாதிரியான இரண்டு வேலைகளை ,
இருவரிடம் வழங்கி ,
ஒருவருக்குக் கடினமான கட்டுப்பாடுகளும் ,
மற்ற ஒருவருக்கு எளிமையான கட்டுப் பாடுகளும் விதித்து ,
இருவரும் ஒரே தரத்தில் ,ஒரே நேரத்தில் ,
வேலையை முடிக்கவேண்டும் ,
என உத்தரவிடுவது நல்ல நிர்வாகமாகாது !


No comments:
Post a Comment