Pages

Wednesday, May 9, 2012

51 108 poRRikaL

108 போற்றிகள்



அமிர்தவல்லி உடனுறையும்
தான்தோன்றீஸ்வரருக்கு
108 போற்றிகள்!
==============

  1. சந்திரன் தலையில் சூடினாய் போற்றி!
  2. தகதிமி என்றே ஆடினாய் போற்றி!
  3. தடுத்தெமை என்றும் ஆள்வாய் போற்றி!
  4. தான்தோன்றி ஈச ஈசனே போற்றி!
  5. கங்கையைச் சடையில் தாங்கினாய் போற்றி!
  6. கைலையில் உயர்ந்து ஓங்கினாய் போற்றி!
  7. தாளிணை அன்பால் பணிந்தோம் போற்றி!
  8. தான்தோன்றி ஈச ஈசனே போற்றி!
  9. நெற்றியில் முக்கண் படைத்தாய் போற்றி!
  10. நீறணி பவனே பிரானே போற்றி!
  11. தண்ணருள் எமக்கே ஈவாய் போற்றி!
  12. தான்தோன்றி ஈச ஈசனே போற்றி! 
  13. கண்டத்தில் நஞ்சைத் தேக்கினாய் போற்றி!
  14. கண்டத்தை நீக்கித் தடுப்பாய் போற்றி!
  15. தவறுகள் செய்தால் பொறுப்பாய் போற்றி!
  16. தான்தோன்றி ஈச ஈசனே போற்றி!
  17. கழுத்தினில் அரவம் ஏற்பாய் போற்றி!
  18. கடிவிஷம் போக்கிக் காப்பாய் போற்றி!
  19. கொடுவினை எங்கும் தீர்ப்பாய் போற்றி!
  20. தான்தோன்றி ஈச ஈசனே போற்றி!
  21. புலியின் தோலை அணிந்தாய் போற்றி!
  22. புவியை என்றும் பேணுவாய் போற்றி!
  23. தவிப்பினைப் போக்கி யவிப்பாய் போற்றி!
  24. தான்தோன்றி ஈச ஈசனே போற்றி!
  25. உடுக்கையில் ஒலியைக் கூட்டுவாய் போற்றி!
  26. இடுக்கணை ஓட்டிக் களைவாய் போற்றி!
  27. இடிதுயர் மாற்றி மடியாய் போற்றி!
  28. தான் தோன்றி ஈச ஈசனே போற்றி!
  29. சூலம் கையில் எடுப்பாய் போற்றி!
  30. ஞாலத் தீமை கெடுப்பாய் போற்றி!
  31. ஞாயிறு திகழும் சுடரே போற்றி!
  32. தான்தோன்றி ஈச ஈசனே போற்றி!
  33. அக்கினி கரத்தில் ஏந்துவாய் போற்றி!
  34. ஆக்கினை நீயே தருவாய் போற்றி!
  35. வாக்கினில் ஒலியாய் உறைவாய் போற்றி!
  36. தான்தோன்றி ஈச ஈசனே போற்றி!
  37. காளையில் அமர்ந்தே வருவாய் போற்றீ!
  38. காலனைக் காலால் உதைத்தாய் போற்றி!
  39. ஆலத்தை அமுதாய் குடித்தாய் போற்றி!
  40. தான்தோன்றி ஈச ஈசனே போற்றி!
  41. முயலகன் கொட்டம் முடித்தாய் போற்றி!
  42. கயிலை வாழும் கண்ணே போற்றி!
  43. தணித்திடு எங்கள் வாட்டம் போற்றி!
  44. தான்தோன்றி ஈச ஈசனே போற்றி!
  45. அம்பலம் தன்னில் அருள்வாய் போற்றி!
  46. ஆங்கே நடனம் புரிவாய் போற்றி!
  47. மாலவன் போற்றும் மாமா போற்றி!
  48. தான்தோன்றி ஈச ஈசனே போற்றி!
  49. மாலவன் தங்கை மணாளா போற்றி!
  50. அமிர்த வல்லியின் அன்பா போற்றி!
  51. கருணை நிழல்தரு தருவே போற்றி!
  52. தான்தோன்றி ஈச ஈசனே போற்றி!
  53. வாரண முகத்தோன் தந்தாய் போற்றி!
  54. பானை வயிற்றனை பயந்தாய் போற்றி!
  55. பாவம் அடக்கும் பாகா போற்றி!
  56. தான்தோன்றி ஈச ஈசனே போற்றி!
  57. பன்னிரு கரத்தனை அளித்தாய் போற்றி!
  58. படிப்பினை அவனால் பெற்றாய் போற்றி!
  59. ஐயப் பனுக்கும் ஐயா போற்றி!
  60. தான்தோன்றி ஈச ஈசனே போற்றி!
  61. அன்பால் அனுக்ரகம் செய்தாய் போற்றி!
  62. அறிவே நீயாய் ஆனாய் போற்றி!
  63. காந்திமதி யம்மன் கணவா போற்றி!
  64. காத்திடும் நெல்லை அப்பா போற்றி!
  65. மீனாட்சி யம்மை மணாளா போற்றி!
  66. மின்னிடும் மதுரைச் சொக்கா போற்றி!
  67. சிவகாமி சிந்தை குளிர்வாய் போற்றி!
  68. தில்லை ஆடும் அரசே போற்றி!
  69. காமாட்சி கையைப் பிடித்தாய் போற்றி!
  70. காஞ்சி ஏகாம் பரமே போற்றி!
  71. காசியில் ஆளும் கருணா போற்றி!
  72. விசா லாட்சியின் விஸ்வா போற்றி!
  73. ஒரகையில் அருளும் உரமே போற்றி!
  74. அமிர்த வல்லியின் ஆளுன போற்றி!
  75. அன்பை அருளும் அன்பே போற்றி!
  76. அமுதைப் பொழியும் அமுதே போற்றி!
  77. தயவே செய்யும் பண்பே போற்றி!
  78. தான்தோன்றி ஈச ஈசனே போற்றி!
  79. தயவே செய்யும் அருளே போற்றி!
  80. தயவே செய்யும் அறிவே போற்றி!
  81. தயவே செய்யும் தாயே போற்றி! 
  82. தான்தோன்றி ஈச ஈசனே போற்றி!
  83. தயவே செய்யும் தந்தாய் போற்றி!
  84. தயவே செய்யும் குருவே போற்றி!
  85. தயவே செய்யும் இறைவா போற்றி!
  86. தான்தோன்றி ஈச ஈசனே போற்றி!
  87. உருவாய் அருவாய் உள்ளாய் போற்றி!
  88. உணர்வார் உணரார் நடுவே போற்றி!
  89. உலகின் உயிராய் இருப்பாய் போற்றி!
  90. தான்தோன்றி ஈச ஈசனே போற்றி!
  91. முக்தியின் வித்தாய் மிளிர்வாய் போற்றி!
  92. எத்திக் கும்நீ ஒளிர்வாய் போற்றி!
  93. வாழும் வகைகள் செய்வாய் போற்றி!
  94. தான்தோன்றி ஈச ஈசனே போற்றி!
  95. மங்கல வாழ்வே தருவாய் போற்றி!
  96. தான்தோன்றி ஈச ஈசனே போற்றி!
  97. குங்குமம் தன்னில் உறைவாய் போற்றி!
  98. தான் தோன்றி ஈச ஈசனே போற்றி!
  99. மலரில் மணமாய் நிறைவாய் போற்றி!
  100. தான்தோன்றி ஈச ஈசனே போற்றி!
  101. மஞ்சள் தன்னில் திளைப்பாய் போற்றி!
  102. தான்தோன்றி ஈச ஈசனே போற்றி!
  103. மங்கையர் வாழ்வின் மணமே போற்றி!
  104. கங்கா தரனே உன்தாள் போற்றி!
  105. பொங்கும் புனலே வருவாய் போற்றி!
  106. இம்மை மறுமையில் இருப்பாய் போற்றி!
  107. என்றும் உன்தாள் மறவோம் போற்றி!----------108



No comments:

Post a Comment