(மு)(எ)க் காலமும் பொருந்தும் குறள்!
இதனால், அவர்களை விட நான் பெரியவன் ஆகிவிட மாட்டேன்! தமிழன்னையின் விலைமதிப்பற்ற அணிகலன் ஒன்றில், காலச்சுவடுகள் பதித்துவிட்ட மாசு களையப்படவேண்டும்; அதற்குப் பூசப்பட்ட உரை, என்ற மெருகு புதுப்பிக்கப் படவேண்டும், என்பதே என் ஆசை!
எனது இந்தப் பார்வையில் எவரேனும் சிந்திக்க மாட்டார்களா என்று காத்திருந்தேன்! காலம் தாழ்த்தல் வேண்டாம் எனக் கருதி, இதை எழுதுகிறேன்! "பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல; கால வகையினானே" என்பது நம் தமிழ் மூதுரை அல்லவா?
எவரேனும் இப்பார்வையில், எழுதியிருந்தால், அவர்களுக்கு எனது நன்றி உரித்தாகும்!
(1) முதலில் நமது ஆய்வுக்கு உட்படுவது;
"குணமென்னும் குன்றேறி நின்றார், வெகுளி,
கணமேயும் காத்தல் அரிது" (அதிகாரம்-3-நீத்தார் பெருமை; குறள்-29; )
இக்குறளுக்கு உரையாசிரியர்களால் சொல்லப்படுகின்ற பொருள், நீத்தாரைப் பெருமைப்படுத்துவதற்கு மாறாக அவர்களைச் சிறுமைப் படுத்துவதாகவே இருக்கின்றது.
உயர்ந்த குண நலன்களைப் பெற்ற சான்றோராலும் கோபத்தை ஒரு கணமேனும் அடக்க முடியாது என்று இதற்குப் பொருள் உரைக்கப் படுகிறது;
எல்லா தீய குணங்களையும் ஒழித்தவர்களைத்தான் சான்றோர் (குணமென்னும் குன்றேறி நின்றார்) எனக் குறிப்பிடுவது வழக்கம்! கோபமும் ஒரு தீய குணம் தான்! அப்படியிருக்க, கோபம் என்னும் கொடிய குணத்தை, அது ஒரு கணமாக இருந்தாலும், அடக்கமுடியாதவரை, சான்றோர் என எப்படி அழைக்க முடியும்?
இக்குறள், வெகுளாமை என்னும் அதிகாரத்தில் வந்திருந்தால், ஒருவேளை கோபத்தின் தன்மையைக் காட்டுவதற்காக இப்படிச் சொல்லியிருக்கலாம் என்று எண்ண இடமுண்டு; ஆனால் இது இருப்பதோ (அனைத்துத் தீய குணங்களையும்) நீத்தார் பெருமையில்; என்றால், இதற்கு எப்படிப் பொருள் உரைப்பது?
குணமென்னும் குன்றேறி நின்றாரின் வெகுளி, கணமேயும் காத்தல் அரிது.என்று பொருள் கொள்ள வேண்டும்.
அரிய பண்பு நலன்களைப் பெற்று உயர்ந்து நிற்கின்றவர்கள், எளிதில் கோபப்பட மாட்டார்கள்; அத்தகையவர்களைச் சீண்டி, சினமூட்ட எண்ணினால், எளிதில் அது நடக்காது! அதையும் மீறி, அவர்களுக்குக் கோபம் வருமானால், அதை, நம்மால் ஒருகணம் கூடத் தாங்கமுடியாது; விளைவுகள் கடுமையாக இருக்கும், சுனாமியைப்போல, எனப் பொருள் கொள்ளுவதே சரியாக இருக்கும். இது நீத்தாரின் பெருமையைச் சொல்வதாகவும் இருக்கும்! முனிவர்களின் சாபத்தினால், எத்தனை பேர், என்னென்ன அல்லல் பட்டனர் என்பதை நாம் படித்திருக்கிறோம்;
(2) அடுத்து நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொள்வது;
"தெய்வம் தொழாள்;கொழுநன் தொழுதெழுவாள்,
பெய்யெனப் பெய்யும் மழை" (அதிகாரம்-6-வாழ்க்கைத்துணைநலம்;குறள்-55;)
இதற்கு சொல்லப் படுகின்ற பொருள், கடவுளை வணங்காமல், கணவனையே கடவுளாகக் கருதி, அவனை வணங்கி எழுகின்ற ஒரு பெண், பெய் என்று சொன்னால், மழை பெய்யும்; நில் என்றால் நிற்கவும் செய்யும், என்பதாகும்!
சில அதிபுத்திசாலிகள், அப்படிப்பட்ட பத்தினிப் பெண்கள் நமது நாட்டில் இப்போது இல்லாமற் போய்விட்டார்களே! இருந்தால், எங்கெல்லாம் மழை இல்லையோ, அங்கெல்லாம் அவர்களை அழைத்துச் சென்று மழை பெய்ய வைக்கலாமே, என்று கேலி பேசுகிறார்கள்! அவர்கள் பேசுவது பெண்களையா? அல்லது குறளை எழுதிய வள்ளுவரையா? என்று தெரியவில்லை!
மழை பெய்கிறது! நாம் விரும்பி, அது பெய்வதில்லை! நிற்கிறது! நாம் வேண்டாம் என்று சொல்லி, அது நிற்பதில்லை! நாம் விரும்பியபோது பெய்து, வேண்டாம் என்கிறபோது, நிற்கிற மழையாக இருந்தால், அது எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்! அம்மழையால் அந்நாடு, எவ்வளவு வளமும், நலமும் பெறும்! அதுபோலவே ஒரு பெண், கணவனை மதிக்கின்றவளாக இருந்தால், அவள், அரிய பண்புகளைப் பெற்றவளாகவும் இருப்பாள்! அவளால் அக்குடும்பத்துக்கு வளமும், நலமும் விளையும்; அக்குடும்பம் மேன்மையடையும்! அவள் தென்றல்! அவள் நிலா! என்பதைப் போல, அவள் மழை! சாதாரணமான மழை இல்லை! தேவைப்படுகின்றபோது பெய்து, தேவையில்லாதபோது நிற்கின்ற மழை! இப்படித்தான் பொருள் கொள்ள வேண்டும்! கடவுளை வணங்காமல், கணவனையே கடவுளாக எண்ணி, வணங்கி எழுகின்றவள், பெய்யென்றால் பெய்து, நில்லென்றால் நிற்கும் மழைக்கு நிகரானவள், மழையைப் போன்றவள், ஆவாள்!
(3) மூன்றாவதாக;
"ஆபயன் குன்றும்; அறுதொழிலோர் நூல்மறப்பர்;
காவலன் காவான் எனின்". (அதிகாரம்-56-கொடுங்கோன்மை; குறள்-560;)
ஒரு நாட்டில், மன்னன் நல்லமுறையில் ஆட்சி செய்யவில்லையெனில், பசுக்கள் பால் சுரப்பது குறையும்; அந்தணர்கள் தங்கள் வேத பாடங்களை மறந்துவிடுவர், என இதற்குப் பொருள் உரைக்கப் படுகிறது! இதனால் என்ன பெரிய தீமை என்று தெரியவில்லை! இதை ஒரு பெருங்குறையாகக் கருத முடியாது! வேறு பொருள் உரைத்தலே சரியாக இருக்கும்!
சிறிது காலத்துக்கு முன்பு, நிகழ்ச்சி ஒன்றில் பேசிய, தமிழறிந்த மாவட்ட ஆட்சியர் ஒருவர், இதற்கு நல்ல விளக்கம் ஒன்று கொடுத்திருந்தார்! அவர் பெயர் நினைவுக்கு வரவில்லை! அவருக்கு நமது நன்றி! அந்த விளக்கத்தை இங்கே எடுத்தாண்டமைக்கு அவர் நம்மை மன்னிப்பாராக! (அவர் யார் என்று தெரியவரின் இங்கே வெளியிடுவேன்!)
அது இதுதான்:
"அரசு நல்லமுறையில் செயல்படவில்லையானால், (அவரவர் தாங்கள் ஆற்றவேண்டிய கடமைகளை, ஒழுங்காக ஆற்றமாட்டார்கள்; ஆதலால்) நியாயமாக இருக்க வேண்டிய உற்பத்தி குறையும்; ஆறு அல்ல, பல்வகைத்தொழிலையும் செய்பவர்கள், (அரசின் கண்காணிப்பு இன்மையால், எந்த பயமும் இல்லாமல்) தாங்கள் கற்ற தொழில் தர்மங்களை சரியாக அனுசரிக்காமல், முறையற்ற வழிகளில் பொருளீட்ட முனைவர்; இதன் விளைவுகள் மக்களைப் பாதிக்கும்; அதனால் அவர்கள் பெரிதும் அல்லலுறுவர்!"
(4) அடுத்த குறள்;
"பிறப்பொக்கும் எல்லாஉயிர்க்கும்; சிறப்பொவ்வா,
செய்தொழில் வேற்று மையால்". (அதிகாரம்-98-பெருமை; குறள்-972; )
பலராலும் விவாதிக்கப் படுகிற ஒரு குறளாக இது இருக்கிறது!
பிறப்பினால் அனைவரும் ஒன்றெனினும், அவரவர் செய்கின்ற தொழிலுக்கேற்ப உயர்வு, தாழ்வு வேறுபடுகிறது, என்பது இதற்குக் கூறப்படுகின்ற விளக்கமாகும்!
வள்ளுவரின் கருத்து இதுவாக இராது என்பதே எனது கருத்தாகும்.
இதற்கு விளக்கம் இப்படித்தான் இருக்கவேண்டும்! எல்லா உயிர்க்கும் எவ்வாறு பிறப்பினால் வேறுபாடு இல்லையோ, அதுபோல செய்கின்ற தொழிலால், உயர்வு, தாழ்வு என்ற சிறப்பு வேறுபடுகிறது என்பதும் பொருந்தாது! (சிறப்பு ஒவ்வா) எத்தொழிலாக இருந்தாலும் அது சிறப்பானதே! அவரவர், அந்தந்தத் தொழிலை செய்தால் மட்டுமே நாடும் வீடும் நலமாகவும் வளமாகவும் இருக்க முடியும்! செய்யும் தொழிலே தெய்வம் என்கின்றபோது எந்தத் தொழிலை சிறப்பற்ற தொழில் என்று சொல்ல முடியும்? உழவன் வயலில் வேளாண்மை செய்யவேண்டும்! நெசவாளி ஆடை நெய்ய வேண்டும்! உழைப்பாளி ஆலையில் வேலை செய்ய வேண்டும்! துப்புரவுத் தொழிலாளி நாட்டைத் தூய்மை செய்ய வேண்டும்! இவர்களில் எவரேனும் ஒருவர் தன் கடமையைச் செய்யவில்லையெனில், நாடு நலமாகவும், வளமாகவும் இருக்க முடியாது! ஒவ்வொரு தொழிலும் அதற்குரிய சிறப்பைப் பெற்றதே ஆகும்! எனவே, செய்கின்ற தொழிலால் சிறப்பும், சிறப்பின்மையும் ஏற்படுகிறது என்று சொல்ல முடியாது! அப்படியானால் இதன் பொருள்தான் என்ன?
வள்ளுவர், ஊதியம் கருதிச் செய்யப்படுவதை மட்டும் தொழில் என்று குறிப்பிடவில்லை! ஒருவரின் குண நலனுக்கேற்ப, அவர் நடந்து கொள்ளும் நடத்தையையும் தொழில் என்றே குறிப்பிடுகிறார்! பிறப்பு அனைவருக்கும் ஒன்றெனினும், அவரவர் தங்கள் எண்ணம் போல், தங்கள் குணநலன்களின் அடிப்படையில் செய்கின்ற, வேறு வேறான, நற்செயல், மற்றும் தீச்செயல்களுக்கேற்ப (செய்தொழில் வேற்றுமை) அவர்களின் சிறப்பு வேறுபடுத்தப் படுகிறது என்பதே இக்குறளின் கருத்தாக இருக்க முடியும்! எடுத்துக்காட்டாக,
"உவப்பத் தலைக்கூடி, உள்ளப் பிரிதல்,
அனைத்தே புலவர் தொழில்" என்ற குறளில், தொழில் என்ற சொல்லை, செயல் என்ற பொருளிலேயே குறிப்பிடுகிறார்!
வினையாலணையும் பெயர்ச்சொல்லை, செய்வதால், செயல் என்று தானே குறிப்பிட வேண்டும்? தொழில் என்பது செயலுக்கு இடுகுறிப்பெயராக இருக்கலாம்!
இத்தகைய பொருள் விளக்கங்கள்தான், குறள் உலகப்பொதுமறை என்று அழைக்கப் படுவதற்குப் பெருமை சேர்ப்பதாக அமையும்!
வள்ளுவர், தெய்வப்புலவர் என விளிக்கப் படுவதற்குப் பொருத்தமானவர் தான் என்று ஒப்புக் கொள்ளத்தக்கதாக இருக்கும்!
சிலவினாக்கள்; சிலவிடைகள்.
வினா-(1)
மலையைவிடப் பெரியது எது?
விடை;
"நிலையிற் திரியாது அடங்கியான் தோற்றம்,
மலையினும் மாணப் பெரிது".
வினா-(2)
பூமியைவிடப் பெரியது எது?
விடை;
"காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்,
ஞாலத்தின் மாணப் பெரிது".
வினா-(3)
கடலைவிடப் பெரியது எது?
விடை;
"பயன்தூக்கார் செய்த உதவி, நயன்தூக்கின்,
நன்மை கடலிற் பெரிது".
வாழட்டும்வள்ளுவம்பலஆண்டு! கூறுவோம்அதற்குப்பல்லாண்டு!

No comments:
Post a Comment