இதுடார்வின்பரிணாமக்கொள்கை
பற்றியகதைஅல்ல! மரத்துக்கு மரம்தாவும்மந்தியைப்போல், தடுமாறும்மனத்தோடுஇருந்த
நான், திடமானஒருஇடத்தைத்
தேடிப்பிடித்து,நிலையாகஅமர்ந்து,
அமராதகதை! மனிதனுக்கும்,மந்திக்கும்
வித்தியாசமேமரமும், மனமும்
பற்றியகதைஅல்ல! மரத்துக்கு மரம்தாவும்மந்தியைப்போல், தடுமாறும்மனத்தோடுஇருந்த
நான், திடமானஒருஇடத்தைத்
தேடிப்பிடித்து,நிலையாகஅமர்ந்து,
அமராதகதை! மனிதனுக்கும்,மந்திக்கும்
வித்தியாசமேமரமும், மனமும்
தானே!
நான்தனிமரம்! என்றுமேநான்
தனிமரம்தான்!அன்றுஎன்னைச் சார்ந்தபலர்இருந்தும்,அவர் களிடமிருந்துவிலகி இருந்த
தால்,தனிமரம்!இன்று என்னைச்சார்ந்துஒருவரும் இல்லாதபடியால்தனிமரம்!
சில நேரங்களில்நமதுசெயல்கள், பிறரை, நம்மிடமிருந்துபிரிக்கின்றன! சிலநேரங்களில்பிறரதுசெயல்கள் நம்மைப்பிறரிடமிருந்துபிரிக்கின்றன! .
எனக்குள் ஒரு வெறியை வளர்த்துக் கொண்டேன்! வஞ்சம் தீர்க்க வேண்டும் என்ற வெறியல்ல! வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற லட்சிய வெறி! சொற்களால் என்னைக் காயப் படுத்தியவர்களைச் செயல் மூலம் மௌனிகளாக்கினேன்! ஐந்தில் வளைந்தது, ஐம்பதிலும் வளையக் கை கொடுத்தது! வளைந்தேன்! இந்த வளைவு, என் தன்மானத்தை விட்டுக் கொடுத்த வளைவல்ல: ஏச்சுக்கள் வந்தபோதும் தாங்கிக் கொண்ட வளைவு; காக்கை அமரும்போது தாழ்ந்து, அது பறந்தவுடன் உயருமே!கிளை? அந்த வளைவு!நீர்மட்டம் உயரும் ஆற்றில் வளையுமே, நாணல்? அத்தகைய வளைவு! இந்த வளைவுகள் ஒரு கட்டத்தில் என்னை நிமிர வைத்தது! அப்போது, முன்னால்என்னைப் பணிந்தவர்களைப் பணிந்தேன்! பணியாதவர்கள் முன் நிமிர்ந்தேன்! பணிவும் நிமிர்வும் ஒருவழிப் பாதையல்லவே! நாம், என்ன எதிர்பார்க்கிறோமோ, அதை அடுத்தவர்களும் எதிர்பார்ப்பார்களல்லவா? அப்படி நான் நிமிர்வதற்காக, ஏற்பட்ட சோதனைகள்! அதனால் விளைந்த வேதனைகள்!
ஆடும் பருவம் முடிந்து, கல்வியைத் தேடும் பருவத்தில், பள்ளியில் சேர்த்தனர் பெற்றோர்! அறியாமைக் கடல் கடந்து, அறிவென்னும் கரை சேர,பள்ளியில் சேர்ந்தேன்! படித்து நன்றாய்த் தேர்ந்தேன்; சொல்லிலும் செயலிலும் எங்களை நல்லவர் என்றனர் ஊரார்! பண்பாய்ப் பழகியது .அவர்களை அன்புகாட்டத் தூண்டியது: படிப்பு முடிந்து அல்ல முடித்து, பயிற்சியும் முடிந்து, பணியிற் சேர்ந்தேன்! ஆயினும் பார்த்திடத் தந்தை இல்லை! பரிவே காட்டிய தாயினும் பரிந்தவர் யாரும் இல்லை! என்னையே நான் நிறுத்திக் கொள்ள முனைந்து கொண்டிருந்த போது, எனக்கென்று ஒருவள் வந்து, அவளை நான் நிறுத்த வேண்டும் என்ற என் தாயின் ஆசையையும் நிறைவேற்ற வேண்டியதாயிற்று! அதில் சுய நலமும் இருந்திருக்கலாம்; ஆனால் அந்த நேரம், என் சுயநலத்துக்குக்கூட சோதனையான நேரம் ஆயிற்றே! என்னோடு, இணையும் அவளும் துன்புறல் வேண்டுமா? எனத் தயங்கினேன்! அம்மா செவி சாய்க்கவில்லை! அவர்கள் பக்கம் நான் சாய வேண்டியதாயிற்று! என் துயரங்களில் பங்கு கொள்ள, என் அன்னைக்கு மருமகளாக வந்தாள் என் மனைவி! எனக்கு மட்டும் துணைவியாக அல்ல; என் அன்னைக்கும் துணைவியாக! ஒரு மருமகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவள் எடுத்துக்காட்டு! ஒரு மாமியார் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு என் அன்னை எடுத்துக் காட்டு! எனவே இருவருக்குள் எத்தகைய உரசல்களும் இல்லை! அவள் வருகை எனக்குப் புத்துணர்ச்சி ஊட்டியது: அவள் கற்றுத் தேர்ந்தவள் அல்ல; வரவுக்குள் செலவு செய்யக் கற்றுத் தேர்ந்திருந்தாள்!
எழுபதில் நிமிர எண்ணிடல் தகாது; எனினும் நிமிரல் இயன்றது, என்றால் பிள்ளைகள் நல்லவரானதால்! ஆண்டுகள் எழுபது கடந்தன! ஆயினும் எல்லாம் நடந்தன! நடந்தவை ஒன்றா? இரண்டா? கடந்தவை கருத்தில் நின்றால், நடப்பதை, வழி செலுத்திடலாம்!பெரிதாக எதையும் சாதிக்க வில்லை! எனினும் ஒரு குடும்பத்தை நிர்வகிப்பதும், நாட்டை நிர்வகிப்பதும் ஒன்றுதான் என்ற அளவில் இது எனக்குச் சாதனைதான்! எனது இந்தச் சாதனைக்கு, நான் யாரையும் வஞ்சிக்கவில்லை! நியாயமற்ற வழிகளைக் கிஞ்சித்தும் எண்ணவில்லை! என் பணியையும் நேர்மையாகவே செய்து முடித்தேன்!
"யாண்டு பலவாகியும் (நரையிலவாகுதல் அல்ல) துயரிலவாகுதல் யாங்காகியது? என வினவுதீராயின்,
மாட்சி நிறைந்த என் மனைவியொடு, மக்களும், அறிவால், திறனால்
நிரம்பினர்; முடிந்ததைச் செய்கிறேன்! கடவுளை நினைக்கிறேன்!", என்பேன்!
"யான் கண்டனையர், என் இளையரும்! வேந்தனும் அல்லவை செய்யான் காக்கும்; ஆன்றவிந்தடங்கிய கொள்கைச் சான்றோர் பலர் யான் வாழும் ஊரே" என்றெல்லாம், பிசிராந்தையாரைப்போல் சொல்ல இது அக்காலமல்ல! எனக்கு ஒரு குறிக்கோள் இருந்தது! மனதில் உறுதி இருந்தது! இறைவனின்
அருள் இருந்தது! மனைவி மக்களின் துணை இருந்தது!அதை அடைய, எனக்கு முயற்சி இருந்தது! அது நேர்மையானதாக இருந்தது! இன்னல்களும் பல இருந்தன! அது இல்லா வாழ்க்கை எங்கிருக்கிறது?
யாரையும் நாம் ஏமாற்றவில்லை என்ற நிறைவு, எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது! படுக்கையில் சாய்ந்தால் உறக்கத்தைத் தருகிறது! இந்த நேரான பாதைக்கு முன் மாதிரியாக எனக்குப் பலர் இருந்தனர்! அந்தப் பலர் எனக்கு உரமேற்றினர்! "இடிப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பாரிலானும் கெடும்" என்பது குறளன்றோ? நான் நன்றாக உறங்கி எழுகிறேன்! அதற்காக அவர்களுக்கு என் நன்றியைக் கூறக் கடமைப் பட்டிருக்கிறேன்! என்னை இந்த நிலையிலாவது வைத்திருக்கின்றானே இறைவன்! அவனுக்கும் என் நன்றி உரித்தாகும்!
அவனுக்கும் நன்றி எனக் கூறுவது, ஏதோ போனால் போகிறது என்ற பொருளைக் கொடுத்து விடும்! இறைவனை வேண்டுவது கட்டாயம்! நாம் முயல்வதோ, அதைவிடக் கட்டாயம்! இறைவன், தானே நேரில் வருவதில்லை! நமது முயற்சியின் வழியாகத்தான் வருகிறான்! இறைவன் இருக்கிறான்; அவன் பார்த்துக் கொள்வான் என்று முயலாதிருப்பவனைப் பார்த்து இறைவனே நகைப்பான்! "இலமென்று அசையி இருப்பாரைக் காணின் நிலமென்னும் நல்லாள் நகும்" என்பது இதைத்தான்! இறைவனின் அருள் இருப்பதாலேயே, ஐந்தில் விழுந்தேன்; ஐம்பதில் விழுந்தேன்! குறைவான உயரத்திலிருந்து விழுந்ததால், அடி ஒன்றும் பலமாகப் படவில்லை! அதிக உயரத்திலிருந்து விழுந்தால் தான் ஆபத்து! எனக்குத் துணையாக இறைவன் இருக்கிறான் என்று சொல்லிக்கொண்டே, தவறு செய்வது ஆணவம்! இறைவன் இல்லை என்று சொல்லிச் சொல்லி, தவறு செய்வது பித்தலாட்டம்! இரண்டையும் மன்னிக்க முடியாது! நடை பயிலும் குழந்தையைப்போல், விழுந்து பழகியதால், எழுபதிலும் எழுவது, எனக்கு எளிதாக இருக்கிறது!... கீழே உள்ள கோபுரம், குப்பை மேடாக இருந்த நான், கோபுரமாக உயர்ந்துவிட்டேன் என்பதைக் காட்டவில்லை! கோபுரத்தின் நிழலில் நான் பாதுகாப்பாக இருக்கிறேன் என்பதையே காட்டுகிறது! இன்னல்கள் என்னும் வெய்யிலின் அருமையை அமைதி என்னும் கோபுரத்தின் நிழலில் உணர்கிறேன்!...................
உடலை வளர்த்தேன்! உயிர் வளர்த்தேனே என்றார் திருமூலர்.
இப்போது நான் விழுந்து விட்டேன்! இனி அந்தக் கோபுரம் என்ன செய்யப் போகிறதோ?
ஆம்!ஆண்டுகள்எழுபதில்விழுந்தேன்!இனிஎழுவதுஇயலுமாஅறியேன்!

No comments:
Post a Comment