Pages

Thursday, May 21, 2015

89-nidhaanam thEvai


நிதானம் தேவை
=============
பெண்கள் வன்கொடுமை மற்றும் வரதட்சிணைத் தடைச் சட்டத்தை மாற்றி
யமைக்க இருப்பதாக செய்திகள் கூறுகின்றன. அதில் ஆண்களுக்குச் சாதக
மாகச் சில அம்சங்கள் சேர்க்கப் படுமாம். ஆணாதிக்கம்  நிறைந்த நமது சமு
தாயத்தில், அதுவும் பெண்களே பெண்களுக்குப்  பாதகமாக நடந்துகொள்ளும்
நமது வாழ்க்கை முறையில், வஞ்சகமாகச் செயல்படும் பல ஆண்களுக்கே 
மேலும் பலனளிப்பதாக இந்த மாற்றம் அமையும். பெண்கள் முழு விடுதலை
பெற்று, ஆண்களுக்கு நிகராக, அவர்கள் சமுதாய அந்தஸ்து பெறும்போது 
மட்டுமே அவ்வாறு மாற்றுவதைப் பற்றி  யோசிப்பது பொருத்தமாக இருக்
கும். எடுத்தேன், கவிழ்த்தேன் போய்விட்டது ,என்று ஆகிவிடக் கூடாது.



No comments:

Post a Comment