சிந்தலக்கரை அருள்மிகு வீரபையம்மாள்
----------------------------------------
கணமும் நிலையாத கனவுகளை நிஜமென்றோம்;
கண்ணால் கண்டாலும் நிகழ்வுகளை நிழலென்றோம்;
கானல் நீராகும் ஆசைகளை மெய்யென்றோம்;
கருத்தால் அறிந்தவிதி யாவையுமே பொய்யென்றோம்
காரண மாய்நின்ற கடவுளையே இல்லையென்றோம்;
கண்ட படிநடந்து வருவதனைத் தொல்லையென்றோம் ;
மண்ணாய்ப் போகின்ற மேனியினை அழகென்றோம்;
மமதைத் தலைக்கேறி மேதினியில் அழிகின்றோம்;
மரணம் தனையெண்ணி மதியிழந்து வாடுகிறோம் ;
தருணம் தெரியாமல் தருக்கினிலே ஆடுகிறோம்;
கிலியில் நாள்தோறும் கிடந்தே உழல்கின்றோம்;
கீரிப் பாம்பெனவே இடரினிலே புரள்கின்றோம்;
குதர்க்கம் பேசுகிறோம்; குற்றம் கூறுகிறோம்;
குறிக்கோள் இல்லாமல் கூனிக் குறுகுகிறோம் ;
மதிமயங்கி நிற்காமல் மயக்கம் தவிர்த்திடுவோம்
கதிகலங்கி வருந்தாமல் கருத்தில் புகுத்திடுவோம் ;
ஆடும் மனமடக்கி ஆசைகளைப் புதைத்திடுவோம் ;
ஓடும் கால்நிறுத்தி உயர்வதையே விதைத்திடுவோம் ;
நெறியில் கருத்தூன்றி நிலைகாண வழிகாண்போம்;
நீடு வாழ்வதற்கு நிலையான ஒளிகாண்போம் ;
அன்னை கதியென்றே அவள்நோக்கிக் கைகுவிப்போம்
அனைத்தும் அவளென்றே அடிபணிந்து தினம் துதிப்போம்;
எல்லாம் அவளென்றே எண்ணிச் சரணடைவோம் ;
ஏற்க எமைஎன்றே எந்நாளும் பண்ணிசைப்போம் ;
அல்லல் தமையகற்றி ஆறுதலைத் தந்திடுவாள்;
ஆதரவுக் கரம்நீட்டி அன்பருக்கே முந்திடுவாள்.
இல்லம் இனிமைபெற எண்ணியன முடித்திடுவாள்;
ஈட்டிய வளம்சேரத் தடுப்பனவை தடுத்திடுவாள்.
உள்ளம் வலிமையுற உற்சாகம் சேர்த்திடுவாள்;
ஊக்கம் ஊற்றெடுக்க ஒவ்வாமை தீர்த்திடுவாள்.
என்றும் துணை நிற்பாள், எதிர்ப்பாரை வென்றிடுவாள்;
ஏகும் வினைமாய எதிர்நிற்கச் சென்றிடுவாள்.
ஐயம் நீக்கிநமை ஆற்றலுறச் செய்திடுவாள்;
ஒளியாய் வழிகாட்டி, அருள்மழையே பெய்திடுவாள்.
ஓடம் எனக்கடலாம் வாழ்விற்கரை சேர்ப்பதற்கு ,
ஔடதமாய் பையம்மாள் அருகிருக்க பயமெதற்கு?

No comments:
Post a Comment