Pages

Sunday, April 12, 2015

87-ittaarkku ittapadi


இட்டார்க்குஇட்டபடி
-----------------------------



விதை ஒன்று போட செடி ஒன்று முளைப்பதில்லை;
வினை விதைத்தவன் திணை அறுப்பதில்லை ;

நமக்கு என்ன கிடைத்ததோ , அது நாம் கேட்டது;
ஆம்; அது பிறருக்கு நாம் செய்தது ; எதை நாம் செய்கி
றோமோ அதுதானே நமக்கும் வேண்டும், என்று பொருள் ?
வேண்டும் என்றால் கேட்கத்தானே செய்வோம் ? என்றால்
நாம் கேட்டது தானே?  நமக்குக் கிடைத்திருக்கிறது!
நான் ஒரு ரூபாய் கொடுத்தால், அந்த ஒரு ரூபாய் தான்
எனக்குத் திரும்பக் கிடைக்கும் !
நூறு ரூபாய் கொடுத்திருந்தால் நூறு ரூபாய் வந்தி
ருக்கும்!   இதைத்தான் , இன்னார்க்கு இன்னபடி என்கிறோம்!
இன்னார் ஒரு ரூபாய் கொடுத்தார் !
இன்னார் நூறு ரூபாய் கொடுத்தார் ;
ஒரு ரூபாய் கொடுத்தவருக்கு ஒரு ரூபாய் ;
நூறு ரூபாய் கொடுத்தவருக்கு நூறு ரூபாய்!

வேட்டைக்குப் போன தசரதன் , தூரத்திலிருந்து பார்த்து
விலங்கு ஒன்று நீர் அருந்துகிறது என்று எண்ணி அம்பு
எய்தான். அந்த அம்பு வயதான பார்வையற்ற ,தன் ,
பெற்றோருக்கு ,நீர் மொண்டுகொண்டிருந்த ,சிரவணன்
என்ற சிறுவன்மேல் பாய்ந்தது! பதறிப் போன தசரதன்
அவனை அவனுடைய பெற்றோரிடம் தூக்கிச் சென்றான் !

புத்திர சோகத்தால் துடித்த அவர்கள், தசரதனும் தன் கடைசி
நாட்களில் புத்திர சோகத்தால் துடிக்கவேண்டும் என்று
சாபமிட்டார்கள் . அந்தச்சாபத்தின் விளைவாகவே  பின்னாட்



களில் முடிசூடச் சென்ற ராமனைக்  காட்டுக்கு அனுப்பி
பிரிய நேர்ந்து ,புத்திர சோகத்தால் துடித்து அவன் இறக்க
நேர்ந்தது.


ராமாயணத்தில்,ராமன் வாலியை மறைந்திருந்து கொன்றான் !
மகாபாரதத்தில் கிருஷ்ணனாக  வந்த ராமன் வேடனாக வந்த 
வாலியால் மறைந்திருந்து கொல்லப்பட்டான் !  

விஷம் தோய்ந்த அப்பத்தைக் கொடுத்து ,பட்டினத்தாரை,அவ
ருடைய சகோதரியே கொல்ல முயன்றாள் ! அந்த அப்பத்தை 
வீட்டின் மேல் எறிய வீடு எரிந்து சாம்பலானது !
தன்வினை தன்னைச்சுடும் ;ஓட்டப்பம் வீட்டைச் சுடும் ;
என்றார்! பட்டினத்தார்!

நான் என் தந்தையின் ஈமச் சடங்கில் கலந்துகொள்ள முடிய 
வில்லை, எனும்போது என் சாவுக்கு மட்டும் என்மகன் வருவான் 
என்று எப்படி நான் எதிர்பார்க்க முடியும் ? என் தந்தைக்கு ஒரு 
நீதி!எனக்கு ஒரு நீதியா?அது என்ன நீதி? இதில் யாரையும் 
நோவதில் என்ன நியாயம் ? 
என்ன நடக்கிறதோ அது முன்பே தீர்மானிக்கப் பட்ட ஒன்று!
அதை மாற்றுவதற்கு நமக்கு அதிகாரமில்லை!
அதிகாரமெல்லாம் அவன் கையில்! நம் கையில் ஒன்றுமில்லை!






No comments:

Post a Comment