Pages

Sunday, August 24, 2014

83-engO sellum iLaiya thalai muRai

எங்கோ செல்லும்  இளைய தலைமுறை!
---------------------------------------------------- ----------



இந்தியாவின் எதிர்காலம் இளைஞர்களை நம்பி இருக்கிறது ,என்றார் சுவாமி
விவேகானந்தர் !




இந்நாட்டு  இளைஞர்களால் 2020-ல் இந்தியா வல்லரசாகும் என்றார், முன்னாள்  ஜனாதிபதி டாக்டர் A.P.J.அப்துல் கலாம் ! 









இளைஞர்களின்  கையில் நிர்வாகம் இருக்கவேண்டும் என்கிறார் ,பிரதமர் மோடி !





எல்லாம் சரிதான் ; ஆனால் இவர்களைப் போன்ற ஒருசிலரால் ,ஒட்டுமொத்த
இளைஞர்களின் பெயரல்லவா கெட்டுப்  போகிறது! இவர்களுக்கு யார் புத்தி
சொல்வது?

1


இடம் ஒன்று வாங்கிப் போட்டிருந்தேன் ! சிறிதாக வீடுகட்டி, தற்சமயம்

குடியிருந்து கொள்ளலாம் ; பெரிதாகப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் ,
என்று சுற்றிலும் மூன்றடிவிட்டு ,வீடுகட்டி குடியேறினோம்! அரசுப்பணி
யில் இருந்தபடியால், மாற்றலில் வெளியூர் செல்ல நேர்ந்தது; நண்பர் ஒருவரின் மேற்பார்வையில் விட்டுச் சென்றோம்;  இருந்தும்  திரும்ப
வந்தபோது , எங்கள் மனைக்குப் பின்னால்    இடம் வாங்கிய இளைஞன்,
பின்னால் இருந்த சர்வே கல்லையும் தாண்டிவந்து ,எங்கள் நிலத்துக்குள்
சுவரெடுத்து ,இடமெதுவும் விடாமல் வீடு கட்டிக் கொண்டான் ! கேட்டால்
"பின்னால்தான் காலி இடம் இருக்கிறதே ,அது போதாதா? என்கிறான் !
போகும்போது தலையில் தூக்கிக் கொண்டா போகப் போகிறாய் ?" என்
கிறான்! நீதிமன்றம் சென்றால் எப்போது முடியும்? எவ்வளவு செலவாகும் ?
இவனை என்ன செய்ய?

2


டூ வீலரில் சென்று கொண்டிருந்தேன் ! என்னை, நகரப்பேருந்து ஒன்று கடந்தது ! பேருந்தின் இடது ஓரத்தில் அமர்ந்திருந்த இளைஞன் ஒருவன், தலையை வெளியே நீட்டி, புளிச்சென்று துப்பினான்; பறந்துவந்த எச்சில், என்முகத்தைப் பதம்பார்த்தது ! அவன்  என்னைப்பார்த்து, கையை

ஆட்டிக்கொண்டு, ஏதோ சொல்லிக்கொண்டே சென்றான் ! எதற்காக ஆட்டினான் ? என்ன சொன்னான், என்று தெரியவில்லை!  இவர்களைத் திருத்துவது எப்படி?

3


நெரிசல்  மிகுந்த சாலை ! டூவீலரில்,  சாலையின் இடது ஓரத்தில், சென்று

கொண்டிருந்தேன் ! சர்ரென்று ,எனக்கு இடதுபுறத்தில் ஒரு இளைஞனும், வலதுபுறத்தில் ஒரு இளைஞனுமாக ,ஒரேநேரத்தில் என்னை உரசுவதுபோல் ஓவர்டேக் செய்தார்கள்! "இடப்பக்கமாக ஓவர்டேக் செய்யலாமா?" என்று கேட்டேன்! "பின்னால் வருகிறார்களா? என்று நீதான் பார்த்துவரணும்" என்று இளக்காரமாகக் கூறிக் கொண்டே  பறந்து விட்டார்கள்! இவர்களை என்ன செய்ய?

4

அண்மையில் ஒரு தொலைக்காட்சியில் ஒரு டாக் ஷோ பார்த்தேன் !
திருமணமாகாத இளம்பெண்களும், மற்றும் வயதான பெண்களும் கலந்து கொண்ட நிகழ்ச்சி அது!எல்லாரும், அவரவர் ஆசை மற்றும் எதிர்காலத் திட்டங்கள் பற்றிப் பேசினார்கள். ஓரு யுவதி தான் ஒருவனைக் காதலிப்பதாகவும் ,காதலிப்பவனை மணந்து, அவனை அழைத்துக்கொண்டு எங்காவது வெகுதூரம் சென்று வாழவேண்டும் என்பதுவும் தான் தனது ஆசை என்றாள் .பையனைப் பெற்றவர்களுக்கு ,யார் ஆதரவு? என்று கேட்டதற்கு ,
அவர்களைப்பற்றி தனக்கென்ன கவலை? என்றாள் .இவள் பிறப்பின் பயன் என்ன?


படிக்கும் வயதில் அடிதடியில் இறங்கும் மாணவ சமுதாயம்!

கூடாநட்பு கொண்டு கொள்ளையில் இறங்கும் , இளைஞரில் ஒரு பிரிவினர் !


மது போதையில் ,பாலியல் வன்முறையில் இறங்கும் ,இளைஞர்கள் கூட்டம்!


கொலை செய்யவும் தயங்காத ஒரு சிலரால் குலை நடுங்க வைக்கும் இவர்களை எப்படித் திருத்துவது?


நமது முன்னோர் எவ்வளவோ சொல்லிவிட்டுப் போய்விட்டார்கள் 

பெற்றோரும் ஆசிரியர்களும் காகமாகக் கத்திக் கொண்டிருக்கிறார்கள் !


காதிலேதான் ஏறவில்லை  ஒருவருக்கும் !




2 comments:

  1. ஒரு அயல் நாட்டில்... ஒரு ரஷ்யன்.. ஒரு சீனன்.. ஒரு தமிழன்..மூவரும்
    மது அருந்திய.. குற்றத்திற்காக கைது
    செய்யப்பட்டனர்...!
    அவர்களுக்கு 50 சவுக்கடிகள்.. தண்டனையாக அளிக்க உத்தரவிடப்பட்டது..!
    ஆனால்.. அதற்கு முன்.. அவர்கள்
    வேண்டுவது 'இரண்டு' செய்யப்படும்
    என சொல்லப்பட்டது..!
    முதலில்.. ரஷ்யன்..!!
    "எனக்கு.. 50 சவுக்கடிகளில் பாதியாக
    குறைத்து.. 25 ஆக கொடுங்கள்..!" என்றான்..!
    ஒப்புக்கொள்ளப் பட்டது..!
    இரண்டாவது என்ன..? என்று கேட்டனர்..!
    "என் முதுகில்.. ஒரு பெரிய தலையணை..ஒன்றை கட்டுங்கள்..!"
    என்றான்..! அவ்வாறே செய்யப்பட்டது..!!
    பத்து சவுக்கடியில்.. தலையணை கிழிந்து அவன்.. பலமான காயத்துக்கு..ஆளானான்..!
    அடுத்து... சீனன்..!!
    "எனக்கும் 50 சவுக்கடியில்.. பாதியாக குறைத்து 25 அடி கொடுங்கள்" என்றான்..!
    ஒப்புக்கொள்ளப்பட்டது..!! இரண்டாவது...
    "என் முதுகில்..இரண்டு தலையணைகளை கட்டுங்கள்..!"
    என்றான்..!
    அவ்வாறே செய்யப்பட்டது..!
    15 சவுக்கடிகளில்..தலையணைகள்
    கிழிந்து அவன்.. முதுகு பிளந்தது..!!
    அடுத்து.. தமிழன்..!
    அமைதியாக சொன்னான்..
    "எனக்கு 50 சவுக்கடியை... 75 ஆக உயர்த்துங்கள்..!" என்றான்..!
    அங்கிருந்த அனைவரும்.. அதிர்ச்சியுடன்.. அவனை பார்த்தனர்.!
    ஒப்புக்கொள்ளப்பட்டது..!
    இரண்டாவது என்ன..? என்று கேட்கப்பட்டது..!!
    சொன்னான்....
    "எனக்கு தண்டனை கொடுத்த.. நீதிபதியை.. என் முதுகில் தூக்கி கட்டுங்கள்..! என்றான்..!!!

    AtheepoL:
    Namaal avarkazhukku thandanai vithikka mudiyavidilum..avaravar seyum thavarukku thakka theerppu kandippaga undu endra achil than ulagam suzhalukirathu..!!!

    ReplyDelete
  2. தங்கள் விமர்சனத்திற்கு நன்றி.இளைய தலைமுறையைப்பற்றி
    நன்றாக புரிந்து வைத்திருக்கிறீர்கள்.

    ReplyDelete